ஞாயிறு, 6 டிசம்பர், 2009

இனிய தமிழ் மக்கள்தான்.









இராமன் ஆண்டாஎன்ன?
இராவணன் ஆண்டாஎன்ன?
கூடவந்த குரங்கு ஆண்டா நமக்கு என்ன?
இறுதியில் அடி வாங்கப் போவது,
இனிய தமிழ் மக்கள் தான்.


விடுதலைப் புலிகளை ஆதரித்தால் என்ன?
தமிழ் மக்கள் ஆதரிக்காவிட்டால் என்ன?
மொத்தமாக அடிவாங்கப் போவதும்,
இனிய தமிழ் மக்கள்தான்.

தமிழர் கூட்டமைப்பு கதைத்தால் என்ன?
தமிழர் விரோத அமைப்புகள் சேர்ந்தால் என்ன?
பத்தோடு பதினொன்று அத்தோடு இவர்களுமேன்று
போட்டுத்தள்ளி புதுக்கதை சொல்லி,
அடிவாங்கப்போவதும்,என்
இனிய தமிழ் மக்கள்தான்.

சர்வதேசம் பேசியது விளங்கவில்லை?
சர்வதேசத் தலைமை கூறியதும் புரியவில்லை?
இந்தியா சொல்லியது இலங்கை சொன்னதை,
எவர் சொல்லியும் கேட்காத இவர்களுக்கு,
இந்தத் தேர்தலும், இன்னமும் சொல்லும்
அடிவாங்கப் போவது இனிமேலும்,
என் இனிய தமிழ் மக்கள்தான்

சனி, 5 டிசம்பர், 2009

வல்லாரைக் கஞ்சி- Gordon Ramsay


நாங்க வல்லாரைக் கஞ்சி செய்வது எப்படி என்று சொன்னால் சிலபேருக்கு விளங்காது.இவர்கள் சொன்னால் விளங்கும்

வல்லாரையும் மருத்துவகுணமும்






வல்லாரை (Centella asiatica) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையதாவரமாகும்ஆசியாஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்


வல்லாரைக்கு மருத்துவ பெயர்கள் பல வழங்கப்படுகிறது அவற்றில்   சரஸ்வதி கீரை, பிண்டீரி, யோகவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்து குளத்தி, அசுர சாந்தினி போன்ற வேறு பெயர்களும் உண்டு. வல்லாரையில் அதன் இலைதான் மருத்துவ பயன் மிகுதியாக கொண்டது.இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள்உணவாகப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. சரசுவதிக் கீரையென்றும்  அழைக்கின்றனர்

சத்துக்கள்

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்குதேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்       

மருத்துவ குணங்கள்

  • இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
  • உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
  • தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
  • மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
  • இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
  • சளி குறைய உதவுகிறது.

உண்ணும் முறை

  • காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.
  • காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
  • காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.
  • இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.
  • இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரைபாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
  • புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.
  • சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
  • இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார
  • வல்லாரையை காயவைத்து பொடிசெய்து தேநீருடன் கலந்து அல்லது தனியாக சாப்பிட்டுவர ஞாபகமாக மறதி,நீரழிவு போன்றவைகள்  கட்டுக்குள் வரும
  • வல்லாரையை மிக எளிமையாக சாப்பிட,பச்சையாக இலைகளை மட்டும் தெரிவு செய்து,தேவையான அளவு உப்பு,மிளகு, வெங்காயம் சேர்த்து அரைத்து தேசிக்காய்ப் புளியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.        

வெள்ளி, 4 டிசம்பர், 2009

பப்பாளிப் பழமும் பயனும்



பப்பாளி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள்ஆப்பிரிக்காஆஸ்திரேலியாதென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரிமார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்
அடங்கியுள்ள சத்துக்கள்

  • பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.
  • விற்றமின் ஏ அதிகமாக உள்ளது.
  • கனியக் கனிய விற்றமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விற்றமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விற்றமின் பி1, விற்றமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.
  • பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்புஉணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

மருத்துவப் பண்புகள்

  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தெண்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
  • மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
  • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
  • பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
  • பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
  • இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். * உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
  • இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
  • ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
  • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
  • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.



பப்பாளியில் (BETA CARO TIN) பீட்டா கரோட்டின் என்ற பொருள் நிறைய இருக்குது. இது புற்று நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடம்புக்குத் தருகின்றது. இந்த கரோட்டின் நமது உடலில் ஏ வைட்டமினாக மாறுது. பார்வைக் கோளாறு ஏற்படாமல் இருக்க ஏ வைட்டமின் அவசியம் தேவை.


. வாழை போல இதனுடைய மரத்தின் எல்லாப் பாகங்களுமே மனிதனுக்குப் பயன்படுகின்றது. பப்பாளிக் காயில் இருந்து பால் போல ஒரு திரவம் காயை அறுத்தால் வெளியே கசியும். அந்த திரவத்தில் பப்பாயின் சிமோ, பப்பூயின் என்று இரண்டு வகை என்ஜைம்கள் உள்ளது. அதாவது நொதிமங்கள் .இந்த இரண்டு நொதிமங்களும் உணவில் இருந்து நமக்கு கிடைக்கும் புரதங்களைச் செரிக்க உதவுகின்றன. இவ்வாறு புரதம் செரிக்கும் போது பல்வேறு அமினோ அமிலங்கள் நம் உடம்பில் சுரக்கின்றன. அவற்றிலே முக்கியமானது ஆர்ஜினைன் என்னும் அமினோ அமிலம். இது உடலின் தசைகளை வலுப்படுத்தி கொழுப்பைக் குறைக்கக் கூடியது.
35 கிராம் இறைச்சியைச் செரிப்பதற்கு ஒரு கிராம் பப்பாயின் போதும் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள். அதனாலதான் மாமிச உணவுத் தயாரிப்புக்களை மென்மைப்படுத்த பப்பாயின் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த நொதிமங்கள் பழுக்காத பப்பாளிக் காயில் நிறைய இருக்குது. பப்பாளி இலை, தண்டு போன்றவற்றில் கொஞ்சம் இருக்குது. குடல் புண், அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் பப்பாளிக்காய் சாப்பிடலாம். மேலும் உணவுச் சத்துக்களை உறிஞ்சக் கூடிய ஒரு வகையான ஒட்டுயிரிகள் நமது குடலில் சிலசமயம் வளர்கின்றன. அவற்றை இந்தப் பப்பாயின் நொதிமம் கட்டுப்படுத்துகின்றது.

? கறுப்பு முத்து போன்ற பப்பாளி விதைகளில் "கார்பெய்ன்"என்று ஒரு ரசாயனப் பொருள் உள்ளது. அது இதயத்தின் வேகமான துடிப்பை நிதானப்படுத்தக் கூடியது. குடலில் அமீபா மூலம் ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தக் கூடியது.
பப்பாளிப் பூ பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சீர்படுத்தக் கூடியது. மேலும் சுவாசக் குழாய் நோய்களையும் குணப்படுத்துகின்றது. 
 100 கிராம் எடையுள்ள பப்பாளி பழத்தில் 32 கலோரிதான் உள்ளது. இவ்வாறு இனிப்புக் குறைவாக இருப்பதால்தான் உடல் பருமனைக் கட்டுப்படுத்துகின்றது. 


வெள்ளி, 27 நவம்பர், 2009

இலங்கைச் சரித்திரம் -22


Posted by Picasaபுதிதாகப் படிப்பவர்கள் முதலில் உள்ள பழைய  பதிவுகளை படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடருங்கள்,எழுத்துகள் பெரிதாகத் தெரியபக்கத்தின் மேல்  மௌசை அழுத்திக் கிளிக்கவும் பக்கம் பெரிதாகத் தெரியும் படித்ததும் உங்கள் சிந்தனையில் 
உதிப்பதைப் பதிவாக பின்னூட்டமிடுங்கள்.பக்கம் 23 க்குப் போக  

திங்கள், 16 நவம்பர், 2009

கணவனுக்கேற்ற மனைவி.....!






பத்தாவுக் கேற்ற பதிவிரதை யுன்டானால் எத்தாலுங் கூடியிருக்கலாங் -சற்றேனுங் ஏறு மாறாக விருப்பாளே யாமாயிற் கூறாமற் சன்யாசங் கொள்


சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப்போல் வடிவு கொண்டாளைப் பெண்டேன்று கொண்டாயே -தொண்டர் செருப்படிதான் செல்லாவுன் செல்வேமென்ன செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுத நேர்





மேலேயுள்ள பாடல்கள் இரண்டும் ஔவையார் பாடிய பாடல்கள்,எப்படியான மனைவியுடன் எப்படி வாழலாம் என்பதை தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளார். முதலாவது பாடலில் சரியான மனைவி வாய்க்கவில்லை என்றால் ஒருவரிடமும் சொல்லாமலே சன்யாசங்கொள்ளலாம் என்றும், இரண்டாவது பாடலில்,இப்படியான மனைவியுடன் வாழ்வதைவிட, நெருப்பிலே வீழ்வது மேல் என்றும் பாடியுள்ளார்.ஔவையார் சொன்னதை நான் ஏன்? சொல்கிறேன் என்றா கேட்கிறிங்க. அக்கம் பக்கம் நடந்தவைகளைப் பார்த்தேன், இந்தப் பாடல்கள் நினைவு வந்தது.இன்னும் ஒன்று நினைவு வந்தது அதுதான், பாடிய புலவரும் ஒரு பெண்தான் என்று,இல்லாவிட்டால் வசை பாடியே கொன்றுவிடுவார்கள்.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

களுதாவளை கு.பாக்கியராஜா அறிமுகம்


களுதாவளை கு. பாக்கியராஜா அறிமுகம் அன்மையில் இவரது பக்தி பாமாலை அல்பம் வெளியீட்டில் இடம்பெற்றது நமது கலைஞர்களை நாமும் பாராட்டுவோம்

வெள்ளி, 6 நவம்பர், 2009

ஊரான ஊரிழந்தோம்..

                                                          




"ஊரான ஊரிழந்தோம்...
ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம்.
பாராள வந்தவரே!
உம்மையும் தான் நாமிழந்தோம்.
கடலே நீ இரையாதே!
காற்றே நீ வீசாதே!
நிலவே நீ அவியாதே!
நெஞ்சமெல்லாம் தீயாச்சே!
ஆற்றோரம் மணல் மேடு.
மணல் மேட்டில் பட்டிபூ!
பட்டிப் பூ பூத்திருக்கு.
யார் வரவைக் காத்திருக்கு"
ஈழத்துக் கவிஞ்ஞர் சேரன்
இணைய வலையில் தேடியபோது கிடைத்தது. தலையிடியும் காய்ச்சலும் தனக்குவந்தால்தான் தெரியும்.அனுபவம்தான் அருமையான கவிதைகளையும், காவியங்களையும் தந்திருக்கிறது,அதை மீண்டும் நிருபித்திருக்கிறார் ஈழத்துக் கவிஞர் சேரன் அருமையான கவிதைக்கும் அவருக்கும் நன்றிகள் கோடி.