திங்கள், 26 ஜூன், 2023

பிறந்த நாள் வாழ்த்துகள்.!,


Happy birthday to you.!

26-06-2023


 அன்பு  நிறை மகள்,இலாவண்ய சஜீவ்.!

ஆண்டுகள் ஆயிரம்,அன்புடன் வாழ.!

எல்லாம் வல்ல,எமையாளும் இறைவன்.!

அல்லும் பகலும், அருள்மழை பொழியட்டும்.,!!

அன்புடன்.அப்பா,அம்மா.


Bostan #US#Happy birthday.#Arulmoli#Rudra#


வெள்ளி, 23 ஜூன், 2023

 ஓரம் சொன்னால் உதிர்ந்து போவாய்!





ஆரம் பூண்ட அணிமார்பா அயோத்திக் கரசே அண்ணாகேள்,
ஈரம் மிக்க மரமிருக்க இலைகள் உதிர்ந்த வாறேது,
வாரங் கொண்டு வழக்குரைத்து மண்மேல் நின்று வலிபேசி,
ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே.

மாலைகளை அணிந்த அழகிய மார்புடைய அயோத்தியின் அரசே (ராமா), பசுமையாக மரம் இருக்க அதில் உள்ள இலைகள் காய்ந்து உதிர்ந்தது ஏன் அண்ணா? (என்று தம்பிகள் கேட்க), இவர் நமக்கு வேண்டியவர், இவர் வேண்டாதவர் என்று வரம்பு வைத்து வழக்கை விசாரித்து ஒருதலைப்பட்சமாக தீர்ப்புச் சொன்ன நீதியரசர்கள் வாழ்க்கையைப் போல உதிர்ந்து கிடக்கின்றன தம்பிகளே! (என்று ராமர் பதில் சொன்னார்.)

செவ்வாய், 20 ஜூன், 2023

 . பயனில்லாதன


திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி,
இரப்பர்க்கு ஈயாக்கைகள் இனிய சொல் கேளாக்காது,
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத்தேகம்,
இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் பயனில்தானே.

இறைவன் வாழும் திருத்தலங்களை - திருக்கோயில்களை - மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள், பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.

(ஆகவே, இவற்றை செய்து, வாழ்வைப் பயனுடையதாக்கு.)


#விவேகசிந்தாமணி#பாகம்#இரண்டு#

சனி, 17 ஜூன், 2023

கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா? ஒளவையார்.


 

#ஒளவையார்#கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா? #?...................

ஞாயிறு, 11 ஜூன், 2023

87வது பிறந்த தின,நினைவு நாள்.

 

87வது பிறந்த தின,நினைவு நாள்.


                                                      திருமதி.  வள்ளியம்மை    தெய்வநாயகம்.

      

                                                                  (11-06-1936)                      (11-06-2023)


காலங்கள் தோறும் உன் மடி தேடி!

கலங்கும் என் மனமே!

வரும் காற்றினிலும் பெரும் கனவிலும்!

நான் காண்பது உன் முகமே!

நான் காண்பது உன் முகமே .!


#வள்ளியம்மை#தெயவநாயகம்# அருள்மொழி# உருத்திரா#

திங்கள், 5 ஜூன், 2023

நல்லவர்களும் கெட்டவர்களும்.

நல்லவர்களும் கெட்டவர்களும்.





 



 அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு

சுட்டாலும் வெண்மை தரும்


பாலைக்காய்ச்சினாலும் தனது சுவையால்,இம்மியளவும் குறையாது.காய்ச்சக்காய்ச்ச சுவை அதிகமாகும்.சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.மேலும் சுட்டாலும் மிகுந்த வெண்மை தரும்.இன்னும் அதிகமாகச் சுட்டால்சங்கானது இன்னும் அதிக வெண்மையாகி நீறாகிப் போகும். இவை போலத்தான் நல்லவர்களை கெட்டவர்களாக (கெட்டவர்களாகக் காட்ட முற்பட்டால்) இன்னும் அவர்கள் நல்லவர்களாகவே காணப்படுவார்கள்,இன்னும் அவர்களால் நன்மையே நடக்கும். கெட்டவர்கள் இன்னும்,கெட்டு அழிந்து போவார்கள்.

#வாக்குண்டாம்#ஒளவையார்# 

வியாழன், 1 ஜூன், 2023


 புத்திரருக்குப் பகை





தீதுநன் றறிகிலாச் சேய ரென்செய்வார்,
கோதற அவரைநன் னெறியிற் கூட்டிடா(து),
ஏதங்க ளவர்முன் செய்(து) இழிவைக் கற்பிக்கும்,
தாதைதாய் புதல்வர்க்குச் சத்து ருக்களே.

தீயது எது என்றும் நல்லது எது என்றும் அறியாத குழந்தைகள் என்ன செய்வார்? குற்றம் நீங்குமாறு அவரை நன்னெறியில் வளர்க்காமல், அவர் முன்னாலேயே தாங்கள் குற்றங்கள் பல செய்து தவறான விஷயங்களைக் கற்பிக்கும் பெற்றோர்களே அவர்களுக்கு எதிரிகள்.