சனி, 27 மே, 2017

*100 மருத்துவக் குறிப்புகள்*

*100 மருத்துவக் குறிப்புகள்*
****************************
1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.*
*2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.*
*3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.*
*4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.*
*5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.*
*6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.*
*7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.*
*8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.*
*9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.*
*10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.*
*11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.*
*12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.*
*13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.*
*14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!*
*15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.*
*16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.*
*17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.*
*18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.*
*19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.*
*20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.*
*21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.*
*22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.*
*23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.*
*24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.*
*25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.*
*26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.*
*27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.*
*28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.*
*29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.*
*30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.*
*31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.*
*32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!*
*33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.*
*34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.*
*35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.*
*36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.*
*37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.*
*38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.*
*39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.*
*40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.*
*41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.*
*42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.*
*43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.*
*44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.*
*45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.*
*46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.*
*47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.*
*48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.*
*49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.*
*50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.*
*51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.*
*52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.*
*53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.*
*54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.*
*55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.*
*56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.*
*57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.*
*58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.*
*59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!*
*60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.*
*61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.*
*62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.*
*63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.*
*64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.*
*65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.*
*66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.*
*67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.*
*68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.*
*69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.*
*70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.*
*71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.*
*72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.*
*73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.*
*74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்*
*75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.*
*76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.*
*77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.*
*78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.*
*79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.*
*80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.*
*81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.*
*82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.*
*83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.*
*84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.*
*85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.*
*86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.*
*87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.*
*88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.*
*89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.*
*90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.*
*91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.*
*92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.*
*93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.*
*94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.*
*95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.*
*96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.*
*97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.*
*98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.*
*99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. …ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.*
*100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*
*அன்பான இனிய வணக்கம் நட்பே*
*வாழ்க வளமுடன்*

செவ்வாய், 23 மே, 2017

ஆர்டிக்கில் உள்ள உலக விதை களஞ்சியத்திற்கு வெள்ள ஆபத்து

ஆர்டிக் ஸ்வால்பார்ட் தீவுகளில் உள்ள உலக விதை களஞ்சிய சுரங்கப்பாதை வாயிலில் நீர் நுழைந்ததால் அதன் வெள்ளப் பாதுகாப்பை நோர்வே பலப்படுத்தியுள்ளது.
எதிர்கால பேரழிவுகளில் இருந்து உலகின் பயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விதை களஞ்சியத்தில் மலை ஒன்றுக்குக் கீழ் மிக ஆழத்தில் சேமிப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும் கடந்த ஆண்டின் அசாதாரண உயர் வெப்பநிலை காரணமாக பனி உருகியதால் சுரங்கப்பாதை வாயிலில் நீர் கசிந்துள்ளது. விதைகளுக்கு பாதிப்பு ஏற்படாதபோதும் இந்த களஞ்சிய வசதியின் சுரங்கப்பாதை மற்றும் வெளியில் உள்ள வடிகால் துளைகளில் புதிதாக நீர்புகா சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த காப்பறைகளில் உலகெங்கும் இருந்து 5,000 பயிர் இனங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இங்கு நிலவும் நிரந்தர பனி காரணமாக, உலகின் ஏனைய கிடங்குகளில் விதைகள் அழிந்துபோனாலும் இங்கு அவை உயிர்ப்புடன் பல நூறு ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இங்கு பெரும்பாலான உலக நாடுகள் முக்கியமான விதைகளை சேமித்து வைத்துள்ளன.
இயற்கை பேரழிவு அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் தமது பயிர்களை இழக்கும் நாடுகள் ஆர்டிக்கில் உள்ள களஞ்சியத்தில் இருந்து விதைகளை பெற்று அவைகளை மீளுருவாக்கம் செய்ய முடியும். இந்த விதை களஞ்சியத்தை உலகின் மிக முக்கியமான அறை என்று விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர்.
13,000 ஆண்டு விவசாய வரலாற்றை பிரதிநிதித்துவப் படுத்தும் விதை மாதிரிகள் உலக விதைக் களஞ்சியத்தில் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ளன. உருளைக்கிழங்கு, நெல், கோதுமை, பார்லி, கடலை, பருப்பு முதலியவற்றின் விதைகள் இந்த களஞ்சியத்தில் பிரதானமாக சேமிக்கப்படுகிறது. இது வரை 100 நாடுகளில் இருந்து 20000 வகையான விதைகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன
யுத்தத்தால் சீரழிந்த சிரியாவின் அலெப்போவில் 141,000 விதைகள் கொண்ட விதை வங்கி பாதிக்கப்பட்ட போது, ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியத்திலிருந்து விதைகளை சர்வதேச ஆராய்ச்சி மையம் 2015இல் சிரியாவிற்கு வழங்கியது. அவற்றில் 15000 விதைகள் உலக களஞ்சியத்தில் திரும்ப சேர்க்கப்பட்டன. இங்கு 2.1 பில்லியன் விதைகள் சேமிக்கப்பட வசதி உண்டு.
எனினும் 2016 ஒக்டோபரில் பதிவான உயர் வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்தன. இதனால் விதை களஞ்சியத்தின் நுழைவாயிலில் 15 மீற்றர் அளவுக்கு நீர் கசிந்து. 

வெள்ளி, 19 மே, 2017

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி?

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி?
ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.
ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.
மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாயை எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்.
மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார்.
மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது, மகன் தாவி அதை அணைத்தான். 'அப்பா என்ன செய்கிறீர்கள்?' என்று அலறினான்.
அவர் சொன்னார் : ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’
ஆச்சரியமடைந்த அவன்,' எப்படி கண்டு பிடித்தீர்கள் ?'என்றான்.
'நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.
இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.
விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்குத் தெரியவில்லை.
இரண்டாயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.
ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.
குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.
படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா?
இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.
அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள்:
100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டுக் கொடுங்கள்.
கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.
பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.
காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதைப் புரிய வையுங்கள். பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றைத் தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.
மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது.
தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவைப் பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.
எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது?
100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).
இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்கக் காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.

தமிழன் என்றொரு இனமுண்டு!

தமிழன் என்றொரு இனமுண்டு
நாமக்கல் கவிஞர் 

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அவனே மாந்தன் முதலேடு
அளித்தான் உலகப் பண்பாடு
ஒன்றே குலமெனும் உயர்வோடு
உரைத்தான் தெய்வம் ஒன்றென்று
யாதும் ஊரே என்றுரைத்தான்
யாவரும் கேளிர் என்றழைத்தான்
அறமே வாழ்வின் நெறியென்றான்
அருளே பொருளின் முதலென்றான்
அன்பின் வழியது உலகென்றான்
ஆசைப் பெருகின் அழிவென்றான்
ஒழுக்க வாழ்வே உயர்வென்றான்
அழுக்கா றின்றி வாழென்றான்
ஒன்று பட்டால் வாழ்வென்றான்
ஒற்றுமை இன்றேல் தாழ்வென்றான்
பணிதல் யார்க்கும் நன்றென்றான்
பகையே வாழ்வின் இருளென்றான்
சினமே உயிர்க்குப் பகையென்றான்
சீற்றம் தவிர்ப்பது சிறப்பென்றான்
இன்சொல் யார்க்கும் அணியென்றான்
இன்னா செய்தல் பழியென்றான்
வாய்மை வாழ்வின் நெறியென்றான்
தூய்மை வாழ்வின் விளக்கென்றான்
அமிழ்தின் இனிய பண்பெல்லாம்
அணியாய்க் கொண்ட தமிழன்தான்
தன்னை இழந்து வாழ்கின்றான்
தமிழை மறந்து அழிகின்றான்
ஆங்கில மொழியின் தாக்கத்தால்
ஆன்ற பெருமை இழக்கின்றான்
கற்றோர் கொண்ட கலக்கத்தால்
கல்விச் சிக்கல் எழுந்திங்கே
ஆங்கில வழியில் கற்றால்தான்
அறிவைப் பெறலாம் என்றவர்கள்
உலகைப் புரிந்து கொள்ளாமல்
உளறி வைத்தனர் மக்களிடம்
ஓங்கிய தமிழ்வழி இல்லாமல்
ஆங்கில மொழிவழிக் கல்வியினால்
ஈங்குநம் குழந்தைகள் இழந்தார்கள்
இயல்பாய் படைக்கும் ஆற்றலினை
கருத்தறி வில்லாக் கல்வியினால்
காரிருள் சூழ்ந்தது இம்மண்ணில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கத் தாலே இம்மண்ணில்
படிக்கா தவரும் ஆங்கிலத்தின்
பிடிக்குள் ளானார் படிப்படியாய்.
ஆங்கில மொழியின் அடிமைகளாய்
ஆயினர்  தமிழர்  அதனாலே
வழக்குச் சொற்கள் பலயிழந்தோம்
வாழ்வின் நெறிகளும் மறந்துவிட்டோம்
தமிங்கில மக்களாய் வாழ்கின்றோம்
தமிழ்வழி மாறிச் செல்கின்றோம்.
இந்நிலை தடுத்து நிறுத்தோமேல்
எந்நிலை யாகும் இந்நாடு
மண்ணின் மக்கள் தமிழர்களாய்
மாறுவ தெப்போ திந்நாட்டில்.
தமிழைத் தமிழாய்ப் பேசும்நிலை
தழைப்ப தெப்போ திந்நாட்டில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கம் மாறின் நிலைமாறும்
துறைகள் தோறும் தமிழாட்சி
தொடங்கின் நாட்டின் நிலைமாறும்
கல்வி மொழியும் தமிழாயின்
கடிதில் இம்மண் கதைமாறும்
கோயில் மொழியும் தமிழாயின்
குடிகள் மாறும் தமிழ்வழியில்
ஆயின் இவற்றைச் செய்வதற்கு
ஆரே யுள்ளார் இம்மண்ணில்
மக்கள் எழுச்சி பெறவேண்டும்
மண்ணில் மாற்றம் எழவேண்டும்
மக்கள் புரட்சி எழுமானால்
மாற்றம் விரைவில் உண்டாகும். 

வியாழன், 18 மே, 2017

“வாழை இலை"

“வாழை இலை"




அன்புடன் உச்சி
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
😀😃

புதன், 17 மே, 2017

55முதல் 65 வயதாகிவிட்டதா?

உங்களுக்கு 55முதல் 65 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.
நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.
போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை
ஆகவே சிக்கனமாக
இருக்காதீர்கள்.
செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.
உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!
யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !
உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.
நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!
அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மனைவி, மக்கள்,
நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளைமையாகவும்,
அனைவரும் விரும்புபடியாகவும் வைத்துக்கொள்வார்கள்!!!!
வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!

செவ்வாய், 16 மே, 2017

சாரதிப் பயிற்சி உத்தியோகத்தருக்கான போட்டிப் பரீட்சை 2016/2017

சாரதிப் பயிற்சி உத்தியோகத்தருக்கான போட்டிப் பரீட்சை 2016/2017
மாதிரி வினா விடை


Image result for road signs in sri lanka

01.நீங்கள் ஒரு சந்தியை நெருங்குகிறீர்கள் சந்தியிலுள்ள சைகை விளக்குகள்
தொழிற்பட வில்லை?
எந்தச் சூழ்நிலையிலும்  (போக்கு வரத்து )வாகனத்தைநிறுத்துவற்கு தாயாராக இருக்க வேண்டும்

02.எந்த மூன்று இடங்களில் வாகனங்கள் தரித்து நிற்க்கக் கூடாது?
1.பேருந்து தரிப்பு நிலையம் ,2.வலது குறைந்தோர் தரிப்பு நிலையம் 3.மலை  மறைவு உள்ள வளைவுகளில்

03.நீங்கள் ஒருபக்கச் சாலையில் இடது பக்கமாக உங்கள் வாகனத்தைத் திருப்புகிறீர்கள்,அந்த வேளையில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய து  இதில்?
பாதசாரிகள்

04. காற்றழுத்தம் குறைந்த சக்கரங்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் இரண்டு?
எரிபொருள் பாவனை கூடல், சக்கரம்  தேய்தல் நிறுத்தம் தவறுதல்.

05.சாலைப்பரப்பில் ஏன் இடப்பெயர்கள் முன் கூட்டியே காட்ச்சிப் படுத்தப் படுகிறது?
உங்கள் பிரயாணத்திற்கு ஏற்ற வழிகளின் ஒழுங்குகளைச் சரியாகத் தீர்மானிப்பதற்கு

06.வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள்  ஏன் குவிவாக வளைந்து காணப்படுகின்றது?
ஒரு பரந்த பார்வையை வெளிக்காட்டுவதற்காக

07.வீதிப் பாதுகாப்புக் குறித்த தேசிய சபையின் தலைவர் யார்?
டாக்டர் சிசிர கொத்தாக கொட 

08.மஞ்சள் நிற வீதிக் கடைவைகள் வெள்ளை  நிறமாக மாற்றப்படக் காரணம்?
பனிப்பொழிவுள்ள நாடுகளுக்கு ஏற்றவை மஞ்சள் நிற வீதிக்கடவைகள்.இலங்கையில் பனிப்பொழிவுகள் இல்லாதபடியால்.

09..வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்?
நிகால் சூரிய ஆராய்ச்சி

10.இலங்கையில் சாதாரண வாகனமொன்று சராசரியாக மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கலாம்?
70 கிமீ

11.பின்பக்கச் சில்லு வழுக்கினால் நீர் கடடாயமாகச் செய்ய வேண்டியது?
எந்தப் பக்கம் வழுக்கியதோ அதற்கு எதிர்த் திசையை நோக்கி நகர்த்த வேண்டும்.

12..தேசிய போக்கு வரத்து ஆணைக்குழு.

மாகாணங்களுக்கிடையில்  போக்குவரத்து வழித்தட அனுமதிப் பத்திரம்
வழங்கல்.

பிரயாணிகள் போக்குவரத்தை உறுதிப்படுத்தல்.

பணம் அறவிடுதல்.

13..போக்குவரத்து சிவில் விமானப் போக்குவரத்து அமைசசர் ?
நிமல் சிறி பால சில்வா

14.08.04/04/2017ல்  தேசிய போக்குவாரத்துச் சட்ட மூலம் எதற்காகத் திருத்தப்
பட்டது?
வழித்தட அனுமதி பத்திரம் இல்லாமல் செலுத்தப்படும் பிரயாணிகள் வண்டிகளை தடை செய்வதற்காக 10000/=இருந்த தண்டத்   தொகை
200000/=மாக அதிகரிக்கப் பட்டது.

15..மாகாணங்களுக்குள்ளான பேருந்துப் பயணத்திற்கு வழித்தட அனுமதிப்
பத்திரம் வழங்குவது?
மாகாண பயணிகள் போக்கு வரத்து அதிகார சபை.

16.மாகாணத்தில் இருந்து வேறு மாகாணத்திற்கு வழித்தட அனுமதிப் பத்திரம்
வழங்குவது?
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு.

17.2009ஆம் ஆண்டின் மோட்டர் போக்குவரத்துத் திருத்தச் சட்டமூலம்
மோட்டார் வாகனங்களைப்  பதிவுசெய்தலும்,உடைமையில் வைத்திருத்தலும் பயன் படுத்தாலும்.

18.பழகுநர் அனுமதிப் பத்திரம் வைத்துள்ளவர் எத்தனை மாதங்களுக்குள் கிராமமான சாரதி அனுமதிப் பத்திரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்?
மூன்று மாதத்திற்கு மேல்.

19.பழகுநர் சாரதி  அனுமதி பத்திரம்,   கிரமமான  சாரதி அனுமதிப் பத்திரம்
பெற விண்ணப்பிக்கும்போது  விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணம் எது?
மருத்துவச்  தகுதிச்  சான்றிதழ்


20.நீங்கள் ஒரு வழிப் பாதையால் சென்றுகொண்டு வலது பக்கம் வாகனத்தைத் திருப்புவதற்கு நீங்கள் எடுக்கும் வழிவகை என்ன?
வலது புற ஒழுங்கையைத் தெரிவு செய்யவேண்டும்


21.முதியோர் ஒருவர் செலுத்தும் வாகனமொன்றைப் பித்தொடர்கிறீர்கள்  நீங்கள் அவர் சம்பந்தமாக என்ன முடிவு செய்வீர்கள்?
வாலிபர்கள் போல் திடகாத்திரமாக,வேகமாக செயல் பட மாட்டார்கள்

22.கடுகதி பாதையில் பயணிக்க அனுமதிக்காத வாகனங்கள்?
டிராக்டர்,100 CC ற்கு குறைந்த மோட்டார் சைக்கிள் மிதி வண்டி முற்சக்கரவண்டி

23.பனி விழும் பிரதேசங்களில் உள்ள பாதைகளில் வாகனங்களைச் செலுத்தும்
போது சாரதி
சாதாரண நிலைமையை விட பத்து மடங்கு வாகன இடைவெளியைக் கொண்டதாக வைத்திருத்தல் வேண்டும்.

24.முதல் வாகன விபத்து ?
150 வருடங்களுக்கு முன் அயர்லாந்தில் ஒரு பெண்ணின் மோதலுடன் ஆரம்பமானது.

25.வாகன விபத்து  ஏற்படுவதற்கான காரணங்கள்?
வேகம்,பாதகமான கால நிலை,சாரதிகளின் கவலையீனம் வசதிகளற்ற பாதையமைப்பு, சாலை விதி மீறல்கள்.

26.ஒரு வழிப் பாதையில் பிரயாணிக்கும் நீங்கள் வலதுபக்க பாதைக்கு மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
வலதுபுற ஒழுங்கையைத் தெரிவு செய்ய வேண்டும்.

பின்புற சக்கரச் சறுக்கலைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
அதை நோக்கி சமம் செய்ய வேண்டும்


27.ஒரு பாத சாரி வெள்ளைப் பிரம்பும் சிவப்புப் பட்டியும் அணிந்திருந்தாள்?
செவிடும் குருடும் உடையவர்.

28.சாலைகளில் மிருகங்களைக் கடக்கும்போது நினைவில் வைத்திருக்க வேண்டியவை?
போதியளவு இடைவெளிகளை அனுமதியுங்கள்.
வாகனத்தை மெதுவாகச் செலுத்திடுங்கள்.
எந்த வினாடியும் வாகனத்தை நிறுத்தத் தாயார் நிலையில்
இருங்கள்.

29.கிளச் எங்கு அமைந்துள்ளது?
பரிமாற்ரிக்கும் இயந்திரத்துக்கும் இடையில்


30.எந்த வகைப் பாதசாரிக் கடவை தானாக பாத சாரிகளை அடையாளம் கண்டு கொள்ளும்?
Puffin

31.உங்கள் வாகனத்தின் வானொலிப் பெட்டி திருடு போவதைத் தடுக்க?
பாதுகாப்புக் குறீயீட்டு வசதியுள்ளதை நிறுவவும்

32.ஒரு பாடசாலை ரோந்து நடவடிக்கையை எப்படி அறீவீர்கள்?
நிறுத்து,அடையாளாச் சைகை மூலம்.

33.மாநகர எல்லைக்கு அப்பால் ஒரு மோட்டார் காரினதும் மோட்டார் சைக்கி   ளினதும் வேகம் எவ்வளவு?
70 K M /

34.ஒரு முற்சக்கர வண்டியின் அதிகபட்ச வேகம்  எல்லா இடங்களிலும் ?
40KMPH

35.வைத்தியசாலை, பாடசாலை, நீதிமன்றம் இவைகளை நெருங்கும் போது
வாகனத்தின் வேகம் எத்தனை  km க்கு மேல் செலுத்தக் கூடாது?
30km

36.மோட்டார் வாகனப் பயிற்சியின் போது மாணவர்கள் விட்ட  தவறுகளை அவதானித்து
அதையே பாடத்தின் முக்கிய எடுகோள்களாகப் பாவித்து வாகன ஆசிரிய
ஆலோசகர் செயல்பட வேண்டும்.

37.வாகனத்தை தரித்து வைப்பதற்கு முதல் வாகனத்திலிருந்து வாகன ஆவணங்களைப் பத்திர படுத்த வேண்டும் வாகனத்  திருடர்களின் கைகளில் சிக்காமல்

38.ஒரு மாணவன் தங்களது ஒரு  கேள்விக்கு பகுதியளவான சரியான  விடையை
தந்தால் என்னசெய்ய வேண்டும்?
சரியான விடையை விளக்கி அந்த மாணவனையும் பாராட்ட வேண்டும் . இது
மாணவர்களின் நம்பிக்கையையும் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தலையும் அதிகரிக்கும்.

39.மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மிகவும் பிராகாசமான ஆடைகளை அணிவார்கள் இவர்களை இலகுவில் அடையாளம் காண பாதையை பயன்படுத்துபவர்கள் விசேடமாக சந்திகளில்


40.வாகனச் செலுத்தற் பயிற்சியின் போது வாகனத்தை பின்னால் செலுத்துவது
சம்பந்தமாக அதி கூடிய கவனம் செலுத்தல் ?
பின்னால் ,இரண்டு தோள்பட்டைப் பக்கமும்

41.பாட வேளையின் போது வாகன செலுத்தற் போதனையாளர்,மாணவர்களின்
முன்னேற்றத்திற்கு தான் அறிந்துவைத்துள்ளதை அவர்களுக்கு புரியும்
வகையிலும் பரீட்சசைக்கு உறுதுணையானவகையிலும் போதிக்க வேண்டும்.

42.பாதையில் வாகனச்  சாரதி தங்களை நோக்கி தனது வாகனத்தின் தலை விளக்கை உயிரூட்டிக்காட்டுவது?
தங்களது வருகையை அறிவிற்பதற்காக  


43.தலை விளக்குகள் பயன் படுத்துவதை சாரதி பயிற்சி மாணவர்கள் மனதில் பதியும்படி விளக்க வேண்டும்?
மற்ற சாரதி தான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை உணர்த்தல்.

44.எங்கிருந்து பாடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதை மாணவர்களின் அறிவைவைத்தே தீர்மானிக்க வேண்டும்.அதற்கு  அவர்களின் அறிவுத் திறனை  அறிந்திருப்பது அவ சியம்.

45.வீதியால் வாகனத்தில் விரைந்து கொண்டிருக்கும் நீங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
பின் கண்ணாடி இரு சைட் கண்ணாடிகளையும் பார்க்கவேண்டும்

46.ஒரு மாணவனுக்கு உதவும் வகையில் நீங்கள் எவ்வாறு பயனுள்ள கருத்துக்களை வழங்க முடியும்?
பாட வேளையின் போது அவர்களின் முன்னேற்றத்தை அவர்களுக்கு அறிவிப்பதன் மூலம்.


47.உங்கள் வாகனத்தில் அளவுக்கு அதிகமான சுமைகளை ஏற்றுவதால்
பாதிக்கப்படுவது?
வாகனத்தைக் கையாளுதல்,வாயு வளையம்

48.கற்பித்தல் முறையாக  செயல் விளக்கம் கொடுத்துப் படிப்பித்தல் வளமையாகத் தொடர்ந்து வருகிறது
நடைமுறை மூலம் திறமைகளை ஒருங்கிணைத்தல்

49.நீங்கள் ஒரு வீதியில் இருந்து வெளியேறக் காத்திருக்கிறீர்கள் அவ் வேளையில் ஏன் மோட்டார் சைக்கிள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்?
மோட்டார் சைக்கிள் காரை விட ஒரு சிறிய வாகனம் சில நேரங்களில் கண்களுக்குத் தென்படுவதில்லை

50.உங்கள் வாகனம் அதிக எரிபொருள் பயன்படுத்தப் படுவதன் காரணம் தங்களது வாகனத்தின் வாயு வளையங்களில் குறைந்தளவு வாயு அழுத்தம்
காணப்படுவதனால்,

51.வாகனத்தின் சைகை காட்டிகள் தேவை முடிவில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும் ஏன்னெனில் ?
பாதையைப் பயன் படுத்தும் ஏனையவர்களை பிழையான முடிவுகளை
எடுப்பதற்கு தூண்டுகோலாக அமையும்,

52.ஒரு வாகனச் சாரதியாக, இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில் எவ்விதம் உதவ முடியும்?
போக்கு வரத்தை முன் கூட்டியே திட்டமிடுவதால்.

53.பொதுவாக வாகனத்தின் விளக்குகள் நிறுத்தல் விளக்கு உட்பட எப்பொழுதுபரிசீலிக்கப் படவேண்டும்?

தினமும்.

54.ஒரு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வாகனத்தை பின்புறமாகச் செலுத்திடுவதற்கு யாது செய்ய வேண்டும்?
ஒரு பொழுதும் செய்ய முடியாது.

55.மழை  அதிகமாகப் பெய்து கொண்டிருக்கும்பொழுது,சாதாரண காலநிலையில் இருந்ததைவிட   உங்களது வாகனத்திற்கும்  முன்னால்  செல்லும் வாகனத்திற்கும் எவ்வளவு இடைவெளி
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?
வழமையைவிட இரு மடங்கு


56.வாகனமொன்றை முந்துவதற்கு தவிர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய இரு
சந்தர்ப்பங்கள்?
சந்தியை அண்மிக்கும் பொழுது, முன்னால் பாதை சரியாக   தெரியாமல்
இருக்கும்பொழுதும்

57.பாதையில் பனிப்பொழிவு இருக்கும் பொழுது உங்கள் கவனம்?  வாகனத்தின் செலுத்தற் சக்கரத்தை கூடிய கவனத்துடன் கையாள

58.வரிக்குதிரை( சீப்ரா) பாதசாரிக் கடவையில் நீங்கள் கடக்க முனைகையில் வயது போன மூதாட்டி கடப்பதற்கு காத்திருக்கிறாள் நீங்கள் என்ன செய்வீர்கள் ?

நிறுத்தி வழி  விடுவேன்

59.உங்கள் வாகனத்தின் இயந்திரத்தை (பிறேக்) நிறுத்தற் கருவியாகப் பயன் படுத்தலாம்?
குறைந்த  வேகமுள்ள  (lower gear)வேகமாற்றியை பாவிப்பதன் மூலம்

60.கட்டுக்கடங்காத காற்று வீசும்போது , வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை அண்மிக்கும் பொழுது, ஏன்  அதிகமான இடைவெளியை அனுமதிக்கிறீர்கள்?
காற்றினுடைய தாக்கத்தால் நான் செல்லுத்தும் பாதைக்குள் தள்ளப்படலாம்
 
61.1991ஆம்  ஆண்டின் 37ம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச்  சட்டத்த்தை,  போக்குவரத்து  சிவில் விமான சேவைகள் அமைச்சர்  2017,பெப்ரவரி 26ந் திகதியன்று பாராளுமன்றில்  திருத்தமொன்றைச் சமர்ப்பித்தார் எதற்க்கான  திருத்தம் ?
பேருந்து பயணத்தில் வழித்தட பத்திரம்  இல்லாத வண்டிகளின் தண்டப்பணம் 10,000/= ரூபாவாக இருந்ததை 200,000/=ஆகாத திருத்த

62.மின்கலத்தின் திரவ மட்டம் குறைந்து காணப்பட்டால் எதனை ஊற்றி சமன் செய்யப்பட்ட வேண்டும்?
காய்ச்சி வட்டி கட்டிய நீர்

63.ஒரு வண்டியின் பிரதானமான நான்கு பாகங்கள் எவை?
1.முண்டம்  11.செலுத்தல் தொகுதி 111. என்ஜின் 1v அடிச்சட்டப் பரல்

64..வாயு வளையங்களை ஏன் நல்ல நிலைமையில் வைத்திருக்க வேண்டும்.?
வண்டியின் பாதுகாப்பும் வண்டியிலுள்ளவர்களின் பாதுகாப்பும், தெருவில் செல்வோர்களின் பாதுகாப்பும் வாயு வளையங்களிலேயே தங்கியுள்ளது.

65..செலுத்தல் பகுதியிலிருந்து என்னை ஒளிகினால் என்ன செய்யவேண்டும்?
இணைப்புக்கள் இறுக்கப் பூட்டப்படல் வேண்டும்; அல்லது இணைப்புக்கள் மாற்றப்பட்டல் வேணடும்.தேவையானால் இரண்டுமே செய்யப்பட்டால் வேண்டும்.

66..அதிற்சியுறிஞ்சிகள்{shock  absorb er  } ஏன் பொருத்தப் படுகின்றன?
வாகனத்தின் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தி வாகனத்திற்கும் பிரயாணம் செய்பவர்களுக்கும் பாதையிலுள்ள அதிர்வுகளை, தாக்கங்களை பிரதி பலிக்காமல் செய்வதற்கு.

66..அமைதியாக்கியில் ஏற்படும் துவாரம் அல்லது உடைவு ஏற்பட்டால்  உடனடியாக சீர்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?
எஞ்சின் இயங்கும்போது உருவாகும் சத்தம்.எரிபொருட்களின் கழிவுகள் வெப்பத்துடன் அகற்றியின்  மூலம்  அமைதியாக்கியினூடாக  வெளியேற்றப் படும் போது, அமைதியாக்கியின்  குழாய்கள் சேதமடைந்து. புகையும் சத்தமும் வாகனத்திற்குள்ளிருக்கும் பிரயாணிகளையும் தாக்கும்,எரிபொருட்களின் கழிவும் புகையும் மனிதர்களின் சுவசாத் தொகுதியத் தாக்கும்.


67...கதிர் வீசியில் {Radiator] நீர் இல்லாமால் வாகனத்தைச் செலுத்திச் செல்வதால் ஏற்படும் தீமை என்ன?
இயந்திரம் {Engine} சூடாகும்.

68.{.Differential} டிஃபரென்சல்  வேற்றுமைப் படுத்தி மூலம் நிகழ்வது என்ன?
இரு சில்லுகளினதும் வேகத்தைக் கட்டுப்படுத்தல்

69..விசிறிப் பட்டியைச் சீர் படுத்துவது எப்படி?
எஞ்சினுடன் இணைக்கப் பட்டுள்ள மின்னாக்கியுடன் சேர்த்து சரிசெய்யும் கருவி உள்ளது (Adjuster} இதன் மூலம் மின்னாக்கியின்  முற்புறத்திலும்  பிற புறத்திலும் உள்ள ஆணிகள் மூலம்

70வீதிக் குறியீடுகள் போக்குவரத்து சமிக்கைகள், குறியீடுகள்  பற்றிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது எப்போது?
 Gazette Extraordinary No. 444/18 of March 13, 1987,

71.வீதிக் குறியீடுகள் போக்குவரத்து சமிக்கைகள், குறியீடுகள்  பற்றிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் மறு  சீரமைக்கப்பட்டது எப்போது?
No. 1779/17 — WEDNESDAY, OCTOBER 10, 2012

72.வீதி போக்குவரத்தில் தடை செய்யப்பட்ட, கட்டுப்பாடான கட்டாய ,முன்னுரிமை அறிகுறிகளை அனுசரித்து வாகணங்களைச் செலுத்தாமல் விடுவதால் ஏற்படுவது?.

வாகன விபத்து.


73.வீயன்னா வாகனப் போக்குவரத்து உடன்படிக்கை செய்யப்பட்ட காலங்கள்?
1968, நவம்பர் 08,1995 `நவம்பர் 30.

74.எல்லாவகையான வாகனங்களும் வைத்திய சாலை,பாடசாலைகளை
அண்மிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வேகம் என்ன?

30KM க்கும் குறைவாக

75.இக்குறியீட்டால் நீர் அறிந்து கொள்வது என்ன?


76.சிறிதளவு மது அருந்திய ஒரு சாரதிக்கு நீங்கள் கூறும் அறிவுரை?
வாகனம் செலுத்தக் கூடாது


77.கடுகதிப் பாதையில் செலுத்த அனுமதிக்கப் படாத வாகனங்கள்?
ட்ராக்டர், சாரதிப்  பயிற்சிவாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள்

78.இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையின் பெயர்?
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

79.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நீளம் ?
.
80.நீங்கள் செலுத்தும் வாகனத்தின் முன் வாயு வளையம் வெடித்தால்
உடனடியாக நீங்கள்  என்ன செய்ய வேண்டும்?
செலுத்தல் சக்கரத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ,வாகனத்தை மெதுவாக ஓடவிட்டு இடது பக்கம் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் .

81.நீங்கள் ஈரலிப்பான ஒரு நெடுஞ்சாலையில் பனிப்பொழிவு உள்ள வேளையில் என்ன செய்வீர்கள்?
தலை வெளிச் சத்தை மங்கலாக  இட்டு எனது வருகையைத் தெரிவிப்பேன்.

82.நீங்கள் வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பதால் உங்கள் வாகனத்தின் மீதுள்ள   கட்டுப்பாட்டை  இளக்கிண்றீர்கள்

83.வாகனத்தில் (roof rack)பொதி சுமப்பான் ஒன்றை இணைப்பதால்,  ஏரி  பொருள் பாவனையை அதிகரிக்கிறீர்கள்.

84.உமக்கு முன்னால்  சென்று கொண்டிருக்கும் வாகனம்,வாகனச் சைகை
ஒன்றை வலது புறமாக  இயக்கியதை கவலையீனமாக மறந்து விட்டார்,
இச் சந்தப்பர்த்தில் நீங்கள் அவ் வாகனத்தை முன்திச் செல்ல முடியுமா?
இல்லை,பொறுமையுடன் பின்தொடரலாம்.

85.நீங்கள் ஒரு பெருவளியில் இருந்து சிறிய பாதைக்கு உங்கள் வாகனத்தைத் திருப்ப முனைகையில் பாதசாரிக் கடவையில் பாத சாரிகள் கடக்க ஆரம்பிக்கிறார்கள்,நீங்கள் என்ன செய்வீர்கள்?
பாத சாரிகளை கடக்க அனுமதிப்பேன்

86.60 Km வேகத்தில் சீரான பாதையில் பயணிக்கும் ஒரு வாகனம் தீடீரென்று
நிறுத்த வேண்டுமென்றால் எத்தனை மீற்றர் தூரம் இழுபட்டுப் போகும்?
73 மீற்றர்

87.பின்பக்க வாயு வளையம் சறுக்கினால் skid ?
அதை நோக்கி செலுத்தும் வளையத்தை விரைவாக செலுத்த வேண்டும்.

88.ஒரு நகர் புறத்தின் வெளிப்புறத்தில் இலகு  வாகனங்களின் வேக அளவு
எவ்வளவு?
70 Km

89.பரந்த வெளிப் பாதையில் வீசும் காற்றின் தாக்கத்தால் பாதிக்கப் படும் வாகனம் எது?
மோட்டார் கார்

90.சாலைகளின் இடப்பரப்புகளில் ஊர் பெயர்கள் காட்சிப்படுத்துவதன் நோக்கம்வயத்துக்குட்பட்டோர் ?
தேவைக்கு ஏற்ற வகையில் வாகனச் சாலைகளைத் தெரிவு செய்து வீண்
 குறைப்பதற்கு

91.உமது வாகனத்தில்பெறுமதியான    பொருட்களை பத்திரப்படுத்த என்ன
செய்ய வேண்டும்?
வெளியில் தெரியாத முறையில் மறைத்து வைக்க வேண்டும்.

92.விபத்துக்களைத் தேடிப்போய் சந்திக்கும் பருவ வயதினர் யார்?
17வயதிலிருந்து 25 வயத்துக்குட்பட்டோர்

93.ஒற்றைவழிப் பாதையில் வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும் நீங்கள்
வலது பக்க வளைவில் திரும்ப என்ன செய்ய வேண்டும்?
வலது பக்க ஒழுங்கையை எடுக்கவேண்டும்  தெரிவு செய்து

94.மிருகங்கள் நடமாடும் பகுதியில் வாகனங்களைச்  செலுத்தும் போதுகைக்கொள்ள வேண்டிய நடைமுறை?
வேகத்தைக் குறைத்தல்,போதியளவு இடப்பரப்பை நிறுவகித்தல்
எந்த வேளையிலும் வாகனத்தை நிறுத்த தயார் நிலையில் இருத்தல்

95.வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது களைப்பை யுணர்ந்தால்?
பாதுகாப்பான இடதத்தைத் தெரிவு செய்து ஓய்வை எடுக்கலாம்

96.வாகனத்தில் தடுப்பான்களில்  ஏற்படும் முக்கிய  பிரச்சனை ஒன்று?
தடுப்பு சூடாகுதல்,தடுப்புத் தவறுதல்

97.விபத்தில் சிக்கிய    ஒருவரை ஆசுவாசப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி
என்ன?
தகுதி வாய்ந்த உதவி கிட்டும்வரை தேவையான முதலுதவியை வழங்கல்

98.எந்தப் பாதசாரிக்கடவையின் மூலம் சைக்கிள்  வண்டிகளும் கடக்கலாம்?
டௌகன் கடைவைகள்  மூலம் 

99.வாகன மோதலின்போது கழுத்தில்  ஏற்படும் ஆபத்தான   தாக்கத்தை
தவிர்த்துக் கொள்ள?
ஒழுங்காக  சரி  செய்யப்பட்ட தலைக் காப்பான்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

100.மூன்று வளிப்  பாதையுள்ள  ஒரு நெடுஞ்சாலையில் வலதுபக்க சாலையை எதற்குப் பாவிக்க வேண்டும்?
வாகனங்களை முந்துவதற்கு

101.ஒரு நீண்ட வாகனம் ஒன்றை முந்துவதற்கு சிறிய வாகனத்தைச் செலுத்துபவர்கள் செய்யவேண்டியது?
நீண்ட இடைவெளியை ஏற்படுத்தி வாகனத்தின் சாரதிக்கு விளங்கத்தக்கதாக  தங்களின் கோரிக்கையை சைகை மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

102.மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் ஏன் கலர் மேலாடைகள் அணிய வேண்டும்?
இலகுவாக மற்றைய சாரதிகள் அடையாளம் காண்பதற்கு.

103. ஒரு வாகனத்தை பின்னோக்கி ஒரு பொழுதும் செலுத்த முற்படக்கூடாது
அவசர தேவையேற்பட்டாலொழிய

104.புதிய பெற்ரோலில் இயங்கும் கார்கள் இயந்திரத்துடன் வினையூக்கிகளைப் பொருத்துதல் வேண்டும் ?
பெற்ரோலில்  இருந்து வெளியாகும் தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளை தீங்கில்லாமல் வேலையற்ற.

105.நீங்கள் ஈரமான சாலையில் நிறுத்த முனைந்தபோது வாகனம் சறுக்கிச்
செல்ல ஆரம்பிக்கிறது உங்கள் வாகனத்தில் (anti-lock brakes)  எதிர் இழுவைத் தடைகள்  இல்லை  சமாளிக்க என்ன செய்யலாம்?
உடனடியாக கைத்தட்டுப்பானைப் பாவிக்க வேண்டும்.



106.இதனால் அறிவது ?
பேருந்தும் சைக்கிளும் அனுமதிக்கப்பட்டது.





107..

சந்திக் குறுக்குகளில் காணப்படும் குறுக்கு வரிகளின் நோக்கம்?
சந்நிதிகளை ஏற்படும் நெரிசல்களைத் தடுக்க.

108.கால் தடுப்பானின் திரவத் தாங்கியின் (fluid in the brake fluid reservoir)அளவில் ஏற்படும் குறைபாடு?
கால்தடுப்பான் முற்றாக செயல்பட முடியாத நிலமையைக் காட்டும்..

109.நெடுஞ்சாலை ஒன்றில் வாகனத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஒன்று?
எல்லா சிவப்பு விளக்குகளும் ஒரு சேர எரிந்தால்.

110.எரிபொருள் நிரப்பும்போது ஏன்?அதி கூடிய கவனம் செலுத்தப் பாடல் வேண்டும்?
சிந்தும் டீசலால் தரை வழுக்கும், விரைவில் தீப்பிடிக்கும்

111.ஒரு இரட்டைத் தடுப்பு முறை (A dual-braking system) முழுத் தடுப்புத் தோல்வி முறையைத் தடுக்கிறது.

112.சாலை ஓரத்தில் காணப்படும் ஒற்றை வெள்ளைக்கோடு?
சார்த்திகளுக்கு சாலையின் ஓரத்தை அறிவுறுத்துகிறது.

113.இது  எதைப்  குறிக்கிறது ?

தடை செய்யப்பட்ட வாகனங்களை

114.வாகனமொன்றை சாதாரணமாக நிறுத்துவற்கு தடுப்பானை எப்படி உபயோகிக்க வேண்டும்?
வாகனத்தை ஓய்வுநிலைக்குக் கொண்டுவருவதற்கு முற்றாக தடுப்பானை
அமர்த்தி ,பின்னர் சீராக அழுத்தவேண்டும்.

115.நீங்கள் தானியங்கி செலுத்தலுடன் கூடிய காரைப்பற்றி விளக்கம் கொடுக்கிறீர்கள் அவ் வாகனத்தை தரித்து நிறுத்திவைக்க என்ன வேக மாற்றியைப் பாவிக்க வேண்டும் ?
தரித்தல்(பார்க்கிங்) மாற்றியைப் பாவிக்க வேண்டும்

115.மூன்று வழிப்பாதையுள்ள நெடுஞ்சாலையின் வலது புறத்தால்  செல்ல அனுமதிக்கப்படாத  வாகனம் எது?
 ட்ரையிலர்