புதன், 30 நவம்பர், 2016

பாம்பும் குட்டிக் குரங்கும்

Puradsifm
படித்ததில் பிடித்தது !!!
🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.
பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.
எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.



செவ்வாய், 29 நவம்பர், 2016

கர்மா என்றால் என்ன?



இந்து மதத்தில் கர்மா என்ற சொல் மிகப் பிரபலம். நமது பேச்சு முதல் செயல் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எதிர்வினை அல்லது கர்மா உண்டு. அது என்னவென்று பின்வரும் கதையின் மூலமாகப் பார்க்கலாம்.

முன்னொரு காலத்தில், அரசன் ஒருவன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. எவரும் அதை கவனிக்க வில்லை.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்ரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. யாருக்கு இந்த கர்மவினையைக் கொடுப்பது? கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது; அது அதன் தவறு இல்லை. இறந்து போன பாம்பின் விஷம் அதன் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் இல்லை. அரசனும் இதை வேண்டுமென்றே செய்ய வில்லை. அது அவனை அறியாமல் நடந்த விஷயம்.

'சரி தன் எஜமானான எமதர்மனிடமே கேட்கலாம்,' என்று தன் குழப்பத்தைக் கூறினான் சித்திரகுப்தன். இதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்றும், காலம் வருமவரை பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தினான்.

அதற்கான நாளும் வந்தது. சில அந்தணர்கள் உதவி கேட்டு, அந்த அரசனைக் காணச் சென்றார்கள். அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அவளும் சரியான பாதையை அவர்களுக்கு விளக்கி விட்டு அவர்களிடம் “ ஒரு விஷயம். சற்று எச்சரிக்கையாக இருங்கள். இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன்” என்று கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்த்தும், சித்ரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை இந்தப் பெண்மணிக்கே என முடிவு செய்தான்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருக்குமானால் பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும். பழி சொன்னதற்காக; நடந்த எதையுமே உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கே கர்மவினை அனைத்தும் வந்து சேரும்.

எனவே, மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும். பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

இலங்கைத் தமிழர் வரலாறும் இன்றைய நிலையம்



நூலின் பெயர்:  இலங்கைத் தமிழர் வரலாறும் இன்றைய நிலையம்  
ஆசிரியர் பெயர்  பூ .ம .செல்லத்துரை 
வெளியீடு :மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின்  ஒன்றியம் 

வெளியீட்டுத் திகதி 1999



சனி, 26 நவம்பர், 2016




தோண்டத் தோண்ட ஆச்சரியங்கள்... முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த குடி நம் தமிழ்குடி! பகிருங்கள்
==================================================================================================================
உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்று நாம் காலரைத் தூக்கி பெருமைபட்டுக்கொள்ள மேலும் ஓர் ஆதாரம் கிடைத்துள்ளது. சென்னையிலிருந்து 58 கிலோமீட்டர் தூரத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது நடந்துவரும் அகழ்வாராய்ச்சியில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும், உலகம் முழுக்க தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான சான்றுகளும் நம் வணிகச் சிறப்பை பறை சாற்றுகின்றன. பட்டறைப் பெரும்புதூர் சென்று இறங்கினோம்.
சுற்றுமுற்றும் ஆளரவமற்ற பொட்டல் வெளி. தூரத்தில் விறகுகட்டை தூக்கிக் கொண்டு வந்த ஒருவர் அகழ்வாராய்ச்சி நடைபெறுமிடத்திற்கு வழி சொன்னார். ஊர் மக்கள் எல்லோருக்குமே அகழ்வாராய்ச்சி பற்றி தெரிந்திருக்கிறது. பெரும்பாலான ஊர் மக்கள் அங்கேதான் கூடி அகழ்வாய்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரை சந்தித்துப் பேசினோம்.
ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வோம். இதுவரையிலும் தமிழ்நாட்டில் மட்டும் எங்கள் குழு 38 இடங்களில் ஆராய்ச்சி செய்திருக்கிறது. கடந்த வருடம் ராமநாதபுரம் அழகன்குளத்தில் களஆய்வு நடத்தினோம். இந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் தேதியிலிருந்து இங்கே ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த மாவட்டம் கற்கால வரலாற்றில் முக்கியமான மாவட்டமாக விளங்குகிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் மட்டுமே இதுவரையிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட கற்கால வாழ்விடங்கள் கண்டறியப்பட்டிருக்கிறது.
கொசஸ்தலை ஆறு ஓடும் பகுதியாக பட்டறை பெரும்புதூர் இருப்பதால் இந்த ஊரிலும் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சூழல்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், கடந்த ஆண்டு இங்கே முதற்கட்ட ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த ஊரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த ஊரிலுள்ள ஆணைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய மூன்று இடங்களில் ஆய்வுகள் செய்வதற்கான 12 குழிகள் அமைக்கப்பட்டது.
இதில் கற்கால மனிதர்கள், இரும்புக்கால மனிதர்கள் மற்றும் சங்ககால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், மெருகூட்டப்பட்ட மண்பான்டங்கள், காவி வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்கள், வழவழப்பான மண்பாண்டங்கள், பாறை ஓவியங்களில் வரையக்கூடிய மண்பாண்டங்கள், கல்மணிகள், சுடுமண்ணாலான மணிகள், செம்புப்பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், கூம்பு வடிவ ஜாடிகள், யானை தந்தத்தினாலான ஆபரணங்கள் ஆகியவையும் தமிழ்பிராமி எமுத்துகள் கொண்ட பானை ஓடுகளும் ரௌலட்டட் மண்பானைகளும் துளை கொண்ட கூரை ஓடுகளும் கிடைத்தன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பழங்கற்காலம், இடைக்கற்காலம் மற்றும் புதிய கற்காலம் ஆகிய மூன்று பண்பாடுகளையும் கொண்ட கற்கருவிகளும் கற்கோடாரிகளும் இந்த ஊரில் ஒன்றாக கிடைத்திருப்பதுதான்.
மேலும் சுடுமண்ணாலான உறை கிணறுகள் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்திலேயே மிக அதிகஎண்ணிக்கையிலான உறைகிணறுகள் இங்குதான் கிடைத்திருக்கிறது.
இதுவரையிலும் முப்பத்தி இரண்டை தாண்டிக் கொண்டே போகிறது. தண்ணீர் ஊற்றெடுப்பதால் மற்ற ஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுமே என்று அதை அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறோம்.
தமிகத்திலேயே மிக அரிதாக கிடைக்கக்கூடிய இரண்டு பக்கமும் கூர்மையான முனைகளைக் கொண்ட கத்தி இங்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் கடைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சுவடு கிடைத்திருக்கிறது.
இதுவரை தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில்தான் ரோமானிய மட்பாண்ட வகைகள் கிடைத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக இங்கு கிடைத்திருக்கிறது.
30 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தை கடைக்கற்காலம் என்றும் 10 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை முன்கற்காலம் என்றும் 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலத்தை புதிய கற்காலம் என்றும் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை இரும்புக் கற்காலம் என்றும் வரையறுக்கிறோம். அதன் அடிப்படையில் பார்த்தால் இங்கு தொடர்ச்சியாக மனித இனம் வாழ்ந்து வருவதற்கான அனைத்து சான்றுகளும் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே இந்த ஆராய்ச்சி குறிப்பிடத்தக்க முக்கியமான ஆராய்ச்சியாகத் திகழும். இன்னும் ஒருசில தினங்களில் இந்த ஆராய்ச்சிப்பணிகளை முடித்துவிட்டு தமிழக தொல்பொருள் ஆராய்ச்சித் துறையிடம் ரெக்கார்டு கொடுத்துவிடுவோம். அதன்பிறகு, திருவள்ளுரிலுள்ள மியூசியத்தில் இந்த பொருட்கள் அனைத்தையும் மக்கள் பார்வைக்காக வைத்து விடுவோம் என்கிறார் பாஸ்கர்.
தமிழக தொல்பொருள் ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி இயக்குனரான துளசிராமனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது,
திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள பூண்டிக்கு அருகே அள்ளிக்குழி என்ற மலைத்தொடரில் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல் திருவள்ளுரைச் சுற்றிலும் பல இடங்களில் பல தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. தற்போது கொசஸ்தலை ஆறு ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் பாலாறுதான் ஓடிக்கொண்டிருந்தது. காலப்போக்கில் அது தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு காஞ்சிபுரம் வழியில் சென்றுவிட்டது. இப்போதும் கூட கொசஸ்தலை ஆற்றை பழைய பாலாறு என்று அழைப்பார்கள்.
சங்ககாலத்தில் காஞ்சிபுரம் பெரிய தலைநகரமாக விளங்கியது. தொண்டைமான் இளந்தரையன் எனும் மன்னன் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வணிகர்களும், வழிப்போக்கர்களும் வடநாட்டிலிருந்து காஞ்சிக்கு பண்பாடு மற்றும் வணிகப் போக்கிற்காக வருவார்கள். அந்த வழியாக வருபவர்கள் வடுகப்பெருவழி அதாவது பட்டறை பெரும்புதூரில் தங்கிச் செல்வார்கள். வடுகப்பெருவழி என்று சொல்லக்கூடிய இடத்தில் குடியிருப்புகளும், உறைகிணறுகளும் அமைந்திருக்கும்.
நான் தொல்பொருள் ஆய்வாளராகப் பணியாற்றியபோதே பட்டறைப் பெரும்புதூரில் மேற்பரப்பு ஆராய்ச்சி செய்தோம். அப்போதே 2 ஆயிரம் ஆண்டிற்கு முந்தைய கருப்பு மற்றும் வெள்ளைப் பானைகள் கிடைத்தன. தற்போது கொசஸ்தலை ஆறு ஓடும் பகுதிகளில் 12 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டன. ஒரு அகழாய்வுக்குழி என்பது 4 க்கு 4 மீட்டர் அளவாகும். இதில் அடுக்கடுக்காக குழிகள் தோண்டப்படும். முதல் அடுக்கில் சோழர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்தன. இரண்டாம் அடுக்கில் பல்லவர்கள் வாழ்ந்த சுவடுகளும் மூன்றாம் அடுக்கில் சங்ககாலத்தைச் சேர்ந்த சுவடுகளும் நான்காம் அடுக்கில் கற்காலத்தைச் சேர்ந்த சுவடுகளும் ஐந்தாம் அடுக்கில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்த சுவடுகளும் கிடைத்தன.
இந்த ஆராய்ச்சியில் மிகவும் ஆச்சரியமான பல சுவடுகள் கிடைத்தன. அதில் கண்ணிற்கு மை தீட்டக்கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட செப்புத்தகடு ஒன்றும் கார்நீலியன் எனும் விலையுயர்ந்த அலங்காரம் செய்யப்பட்ட மணிகளும், கார்நீலியன் கண்ணாடி மணிகளும், சங்கு வளையல் துண்டுகளும் முக்கியமானவை.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி அணிந்திருக்கும் சங்கினாலான வளையத்தை போன்ற சங்கு வளையல்கள் அதிகமாக கிடைத்தன. இதுபோன்ற மணிகளையும் அணிகலன்களையும் செல்வந்தர்கள் மட்டும்தான அப்போது உபயோகித்திருக்கிறார்கள். இங்கே அது ஏராளமாக கிடைத்திருப்பதால் அந்த காலகட்டத்தில் எல்லோரும் நல்ல வசதி படைத்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சுடுமண்ணால் ஆன சதுரங்க காய்கள் கிடைத்தன. வழிப்போக்கர்களாக வருபவர்கள் பொழுதுபோக்குவதற்காக அப்போது சதுரங்கம் விளையாடி இருக்கிறார்கள்.
கொசஸ்தலை ஆற்றில் படகுமூலமாக வாணிபம் செய்ய வந்தவர்கள் தாங்கள் உபயோகப்படுத்திய மண்பானைகளில் பாய்மரப் படகின் உருவத்தையும் துடுப்பையும் வரைந்திருக்கிறார்கள். அந்தப்பானைகளும் இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது.
எப்போதும் ஆற்றிற்கு சென்று தண்ணீர் எடுத்து வர முடியாது என்பதற்காக தங்களது குடியிருப்பிற்கு அருகிலேயே குழி தோண்டி சுடுமண்ணையிட்டு உறை கிணறுகள் அமைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் காஞ்சிபுரம், மாமல்லபுரம் அருகேயுள்ள வசவசமுத்திரம், பாண்டிச்சேரி அருகேயுள்ள அரிக்கைமேடு, மதுரை அருகேயுள்ள கீழமேடு, தூத்துக்குடியிலுள்ள கொற்கை மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் மட்டும்தான் உறைகிணறுகள் இருந்தன. இவற்றிற்கடுத்தபடியாக பட்டறை பெரும்புதூரில் கண்டெடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இங்குதான் அதிகளவில் உறைகிணறுகள் கிடைத்திருக்கிறது.
நாங்கள் மிகவும் வியந்துபோன தமிழகத்திலேயே முதன்முதலாக கிடைக்கப்பெற்ற ஒரு பொக்கிஷம் என்பது நறுமணப் புகைக்கலம்தான். 2 அடி நீளமுள்ள கூம்பு வடிவிலான குடுவை. அதன் மீது சிறிய துளைகள் போடப்பட்டிருக்கின்றன. சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை உள்ளே வைத்து புகைமூட்டும்போது துளைகள் வழியாக வெளிவரும் புகையில் நறுமணம் வீசும் விதமாக இது செய்யப்பட்டிருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.
மேலும், தமிழ்நாட்டுடன் ரோமானியர்கள் கொண்டிருந்த தொடர்பினை வெளிப்படுத்தும் விதமாக ரோமானியர்கள் பயன்படுத்தும் ரௌலட்டட் மண்பானைகள் கிடைத்திருக்கின்றன.
தமிழகத்திலேயே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் முக்கியமானதாக பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி இருக்கும். காரணம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆராய்ச்சி நடந்தபோது அங்கே சோழர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் மட்டும்தான் கிடைத்தது. கீழடியில் ஆராய்ச்சி நடத்தியபோது அங்கே சங்ககாலத்தைச் சேர்ந்த மனிதர்களின் சுவடுகள்தான் கிடைத்தது. இதுபோலத்தான் தமிழகத்தில் நடந்த ஆராய்ச்சிகள் எல்லாவுமே. ஆனால், பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சியில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடைக்கற்கால மனிதர்களில் தொடங்கி, முன்கற்காலம், புதியகற்காலம், இரும்புக்கற்காலம் வரையிலான மனிதர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் அனைத்தும் ஒன்றாக இங்குமட்டும்தான் கிடைத்திருக்கிறது. அதனால், பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையிலேயே முக்கியமானதாகத் திகழப்போகிறது என்கிறார் துளசிராமன்.
திருவள்ளுர் மாவட்டத்தில் இதற்கு முன்னதாக நடைபெற்ற பல ஆராய்ச்சிகளில் இதுபோன்ற மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான தடயங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. இப்போது கிடைத்திருக்கும் சுவடுகள் தமிழகத்தில் உள்ள வேறுசில இடங்களிலும் கிடைத்திருக்கிறது. கொற்கை, அழகன்குளம், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பல்வேறு ஊர்களில் நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சிகள் நமக்கு உணர்த்துவது ஒன்றை மட்டும்தான்.
அவை நகரம் முழுவதும் ஒரே மாதிரியான கலாசாரம், பண்பாடுகளை நம் முன்னோர்கள் கொண்டிருந்தார்கள் என்பதுதான். தமிழக அரசின் தொல்லியல் துறையானது இந்த ஆராய்ச்சியை இத்தோடு நிறுத்திவிடாமல் மேலும் தொடர்ந்தால் நம்மால் 50 மற்றும் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பான மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைச் சென்றடைய முடியும். அதன் மூலம் மனித இனத்தின் நீண்ட பாரம்பரியத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்.



வெள்ளி, 25 நவம்பர், 2016


நளன்_தமயந்தி_கதை
★ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.
★தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.
★சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான்.
★நளனின் அழகைக் கண்ட பறவை, "உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்" என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.
★இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.
★தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.
★ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. "இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?" என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
★இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.
★பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
★தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.
★அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.
★திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். "சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது" என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.
★நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்!!! சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்.




வியாழன், 24 நவம்பர், 2016

KNOW YOUR OWN IQ




ஐம்பது  IQ கேள்விகள் முடிந்தவர்கள் தங்கள் திறமையைக் காட்டலாம் 
நேரம் முக்கியம் எத்தனை நிமிடத்தில் செய்து முடித்தீர்கள் எத்தனை கேள்விகள் சரியாகச் செய்தீர்கள் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் உங்கள்IQ எவ்வளவு என்பதை நான் சொல்கிறேன் 










 















21.UNDERLINE THE ODD-MAN OUT

A.32576  B.35893  C.36149  D.37625


22. ☹☹☹     ☹☹☹      ☹☹☹
      ☹☹☹     ☹☹☹
      ☹☹☹

      ☹☹           ☹☹        ☹☹
      ☹☹           ☹☹
      ☹☹

      ☹               ☹             ?
      ☹               ☹
      ☹

23.INSERT THE TWO MISSING NUMBERS.

       6,9,18,21,42.45, __, ___

24.INSERT THE TWO MISSING NUMBERS.

       25,20,15,10,___

25.INSERT THE TWO MISSING NUMBERS.

      3,7,16,35,____

26. INSERT THE MISSING NUMBER
        14   9   5
        21  8   13
        28   9   ?

27.   7  14  12
        4  12    9
        6  24    ?

28.   36,30,24,18, ___


29. 4,9,17,35,___,139


30.188 (300) 263
      893 (     ) 915

31.      48                         56
     72  73  26              84   ?  38

32.       C,V,H,O,Q ___


33.   2,5,9,19,37, ?


34.    4    6   3   8
         2    8   4   4
         6    5   _   10

35    C  4  K  2  O  3  __

36.     6   8   7
        36  64  49
        24  48   __

37.    848  210  967              680 ___ 738
                 489                             582


38.      3              4               5
         552   ,       992     ,       ?     .

39,      8,  12 ,  10 , 16,  12,  ?

40.      164(225)286
           224(      )476

41. UNDERLINE THE ODD-MAN-OUT.
       837,612,549,422,342

42.
       8   3  21
       6   5  25
      12  2  __

43. UNDERLINE THE ODD-MAN-OUT.
           9,25,36,78,144,196


44. UNDERLINE THE ODD-MAN-OUT.

       739,1341,522,1862

45.UNDERLINE THE ODD-MAN-OUT.
      837,612,549,422,342

46.UNDERLINE THE ODD-MAN-OUT.
       9,25,36,78,144,196

47.UNDERLINE WHICH OF THESE NUMBERS DOES NOT BELONG WITH OTHERS.
     625, 361, 256 ,197 ,144.

48.INSERT THE MISSING NUMBER
      28.33,31,36,34,___

49.♈♉♊♋ ?

50.





Related image