'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
செவ்வாய், 28 ஜூலை, 2015
ஞாயிறு, 19 ஜூலை, 2015
பைந் தமிழாய் பாரெல்லாம்,யாவரையும் பாடவைத்தாய்!
வந்து விழுந்த வார்த்தைகளை கோர்த்து இசைப் பரிசளித்தாய்! -யாரும்
வெந்து வேதனையில் வாடும்போது கூடப் பாடவைத்தாய்!
பந்த பாசமில்லாத வொரு சொந்தமாகி உலகத் தமிழனுக்கு -நீ
வெந்தும் வீசு புகழ் விசுவ நாதனென்று பாடுகிறாய் ..
லேபிள்கள்:
.மெல்லிசை மன்னர்,
M.S.V
ஞாயிறு, 5 ஏப்ரல், 2015
நிகரில்லா இளமைப் பாடகி ஜெசிக்கா ஜூட் !
su
நிகரில்லா இளமைப் பாடகி ஜெசிக்கா ஜூட் -பார்
புகழும் இலங்கைத் தமிழ் ஈழக் குயில்
நினைவில் வைத்துப் போற்ற வேண்டிய பொக்கிஷம்-முழு
நிறைவான இன்பத் தமிழுக்குப் பாக்கியம்
பெருமைப் பட வைத்த ஈழத்துத் தமிழ் மகள் -உலகைத்
திரும்பிப் பார்க்கவைத்த தமிழ் ஈழக் குயில்
பாடட்டும் பல்லாண்டு, நீடு வாழாட்டும் நெஞ்சில் நிறைந்து -சேர்ந்து
பாராட்டுவோம் எல்லோரும் படைதிரண்டு !
செந்தமிழில் பாடி சிறப்பு நீ பெற்று - இனிய
சொந்தங்களைத் தேடி சீர் தனம் கொடுத்த
தங்கத்தமிழ்க் குயிலே தலை வணங்குகிறோம்-இந்த
தரணியில் நீ இன்னும் சிறக்க!
தன்மானத் தமிழ் ஈழக்குயில் -செந்
தமிழுக்குத் தலை வணங்கும் நீல மயில்
வான் பரப்பும் இல்லை, இவளுக்கு எல்லை-இனி
வாழ்த்துங்கள் வாழட்டும் நூறாண்டு !
நிகரில்லா இளமைப் பாடகி ஜெசிக்கா ஜூட்டின் ,விஜய் ரீ வி சூப்பர் சிங்கர் கடைசிப் பரிசுப் போட்டி நிகழ்ச்சியைப் பார்வையிட இந்த லிங்கை அழுத்துங்கள்
https://www.youtube.com/watch?v=XEv6o9T_viI
செந்தமிழில் பாடி சிறப்பு நீ பெற்று - இனிய
சொந்தங்களைத் தேடி சீர் தனம் கொடுத்த
தங்கத்தமிழ்க் குயிலே தலை வணங்குகிறோம்-இந்த
தரணியில் நீ இன்னும் சிறக்க!
தன்மானத் தமிழ் ஈழக்குயில் -செந்
தமிழுக்குத் தலை வணங்கும் நீல மயில்
வான் பரப்பும் இல்லை, இவளுக்கு எல்லை-இனி
வாழ்த்துங்கள் வாழட்டும் நூறாண்டு !
நிகரில்லா இளமைப் பாடகி ஜெசிக்கா ஜூட்டின் ,விஜய் ரீ வி சூப்பர் சிங்கர் கடைசிப் பரிசுப் போட்டி நிகழ்ச்சியைப் பார்வையிட இந்த லிங்கை அழுத்துங்கள்
https://www.youtube.com/watch?v=XEv6o9T_viI
லேபிள்கள்:
சூப்பர் சிங்கர் 4,
தமிழ் ஈழக் குயில்,
விஜய். ரீ. வி,
ஜெசிக்கா ஜூட்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)