தற்போது இவைகளைச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தற்கது.செங்
கோட்டையைப்பற்றி நான் அதிகம் எழுதத் தேவையில்லை.ஏற்கனவே கீழ்க்காணும் தளத்தில் விபரமாக எழுதியிருக்கிறார்கள் இங்கே. சென்று பாருங்கள்.பொது அறிவைக்
கொஞ்சம் கூட்டிய மாதிரியும் இருக்கும். 1638 -1648 சலவைக் கல் சரித்திரங்கள்.அந்தக் காலத்தில் பத்துவருடம் எடுத்திருக்கிறது,இதைச் செதுக்கி முடிக்க. நன்றாக உற்று நோக்கினால் திரைப்படங்கள்,சின்னத்திரைக் காவியங்கள் எல்லாவற்றிலும் இது முக்கிய
பாத்திரமேற்று நடித்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
பெரிய ஒரு சுற்றுலாவை புது டெல்லியில்,செங்கோட்டையில் தற்போது முடித்திரிக் கிறோம். நன்றாகக் களைத்து விட்டீர்கள்.சின்ன இடைவேளைக்கு அப்புறம் சந்திக்கலாம் .