ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

உங்கள் கனணி மிகவும் மெதுவாகச் செயல்படுகிறதா?



உங்கள் கனணி மிகவும் மெதுவாகச் செயல்படுகிறதா? கவலையே வேண்டாம்.மைக்ரோசொப்ட் உங்களை அரவணைத்து ஆறுதல் சொல்கிறது.பின்வருவனவற்றை,சரியாகக் கடைப் பிடியுங்கள்.நிச்சயம் உங்கள்  கனணி,புத்துயிர் பெற்று,புதுப் பொலிவுடன் இயங்கும். 

எல்லாம் வாசித்தபின், கடைசியில் காணப்படும் மல்வெயர் வைரஸ் செண்டருக்குப் போய்,இலவச வைரஸ் கிளினரைத் தரவிறக்கி பயன் பெற்றுக்கொள்ளுங்கள்.

.

Slow PC? Optimize your computer for peak performance

The following tips can help improve your computer's performance and help make your computer run faster. The examples in this article are for Windows 7, Windows Vista, and Windows XP. However, these procedures work for all versions of the Windows operating system, with some slight variations from version to version.
Photo of man and a desktop computer
These tasks use utilities provided within Windows, so you can run them—free of charge and as often as you’d like—to help you achieve the best system performance and to help improve computer speed.
Note: This article does not address or recommend tinkering with the registry files. Such activities can be detrimental to your computer and should only be attempted by properly trained professionals.

சனி, 26 பிப்ரவரி, 2011

இப்படி இருந்தா?எப்படி இருக்கும்!


இப்படி இருந்தா?எப்படி இருக்கும்! உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.
எத்தனை பேர் நினைக்கிறீர்கள்,இது,நல்ல புத்திசாலித்தனம் என்று.வாய்ப் பூட்டு என்று சொல்கிறார்களே அது இதுதானா?இப்படி இருந்தா உலகம் எப்படி இருக்கும்.   


வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

மைக்ரோசொப்ட் அறிமுகப் படுத்தியுள்ள பொது எழுத்துப் பலகை விரைவுச் சுட்டிகள்


மைக்ரோசொப்ட் அறிமுகப் படுத்தியுள்ள பொது எழுத்துப் பலகை விரைவுச் சுட்டிகள்,உங்கள் நேரத்தையும்,கனணி பாவிப்பதையும்,சுருக்கிக் கொள்ளலாம்,எல்லோருக்கும் விளங்கக் கூடிய'இலகு ஆங்கிலத்தில். 




செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

52 வயதில் ஒரு சாதனை.



சாதித்தவர் ரே க்ரோக். நீங்கள் இன்று சுவைக்கும் மெக்டொனால்ட் பாஸ்ட் 
புட் உணவுக்குச் சொந்தக்காரர்.வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை,
அப்பா,பாட்டன் சொத்து எதுவுமில்லை.கல்வியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கும் படிக்கவில்லை.உழைத்தால்தான் சாப்பாடு, என்ற,ஏழைகளின் 
தாரக மந்திரத்துடன் இருந்த குடும்பத்தில் பிறந்தவர்.பதினைந்து வயதுவரை 
காலத்தை கடத்தினார்.கட்டுப்படியாகாமல், தன் வயதைக் கூட்டிச் சொல்லி 
முதலாம் உலகப் போர் ஆரம்பித்த நேரத்தில், செஞ்சிலுவைச் சங்கத்தில் 
அம்புலன்ஸ் சாரதியாக வேலைபார்த்தார்.ஆனால் அந்த வேலையும் 
நிலைக்கவில்லை.போர் முடிந்ததும்,வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள், 
தொடர்ந்து வேலை தேடும் படலம்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

நீங்களும் குடிக்கலாம் பாம்பு வைன்.

நம்ம நாட்டில இல்லங்க.

ஆரம்பித்து வைத்தவர்கள் சவ் சீனா வம்சத்தினர்.இவர்களைப்பற்றி 

சவு வம்சம் சீனாவை அதிக காலம் ஆண்ட வம்சம் (ஆட்சி மரபு) ஆகும். இந்த வம்சம் 1045 கிமு 256 காலப் பகுதியில் சீனாவை ஆண்டது. இவர்களின் காலப் பகுதியில் இரும்பு சீனாவுக்கு அறிமுகமானது. செப்பு சிற்பவேலை உச்சங்களைக் கண்டது. சீன மொழியின் எழுத்துமுறை விரிவு பெற்றது.
சவு வம்சக் காலத்தில்தான் பிற்காலத்தில் சீனாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய பல மெய்யியலாளர்கள் வாழ்ந்தார்கள். கன்பூசியசுலா ஒசிமோகி, Han Fei, மென்சியசு போன்றோர் இன்றுவரை சீன சிந்தனையின் அடிப்படைகளாக விளங்குகிறார்கள்.

இவர்கள் காலத்தில் இருந்தே,இந்த பாரம்பரியமான மருத்துவமுறை,ஆரம்பிக்கப்பட்டதாக 
சீனாச் சரித்திரம் கூறுகிறது.இன்று,கொரியா, வியட்னாம் என்று ஆசிய நாடுகளையும் 
வலம்வரத் தொடங்கிவிட்டது,நீங்களும் இதைத் தயாரிக்க விரும்பினால்,இங்கு சென்று 
தேவையான பொருட்களைக் குறித்துக் கொள்ளுங்கள்.தயாரித்து முடித்து எனக்கும் ஒரு
"பெக்" முடிந்தால் அனுப்புங்கள். 


வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

பல் குத்தும் ஈக்கிலை வைத்து, புதுமையான படைப்புகள்.திறமை மட்டும் போதாது, பொறுமையும், மிக அவசியம். எப்படி இருக்கிறது? எம்மால் பார்த்துக் கூட,வரையமுடியாது.மின் அஞ்சலில் வந்தது. 

வியாழன், 17 பிப்ரவரி, 2011

இலங்கையில் இந்தியாவின் தரத்தில்,

இலங்கையில் இந்தியாவின் தரத்தில், ஒரு கோயில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெரிய போரதீவு,அருள்மிகு,ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தின்எழில் மிகு தோற்றங்கள்.இந்தியச் சிற்ப சாஸ்திரிகளின் கைவண்ணத்தில், மிளிரும் இக் கோயிலின் கட்டிடடப் பணிகள் முடிவுறும் தறுவாயிலுள்ளது.பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகிவரும் இத் தலத்தில்,வழங்கப்படும் பஞ்சாமிர்தம்,இங்கு வரும் பக்தர்களிடம்     
நல்லவரவேற்பைப்  பெற்றுள்ளது.



புதன், 16 பிப்ரவரி, 2011

உலகிலேயே பெரிய பாலம்.

மின் அஞ்சலில் வந்த படங்கள்,நீங்களும் பாருங்கள். உலகத்திலேயே மிகப் 
பெரிய பாலம்,பிரான்சின் தெற்குப் பகுதியில் 14ந் திகதி டிசம்பர் மாதம் 2004ஆம்
ஆண்டில் திறந்து வைக்கப் பட்டது.நம்ம நாட்டில கட்டினால் பாலத்தைவிட பெரிதாக ஊழல் இருக்கும்.   

The Millau Viaduct (French: le Viaduc de Millau) is a cable stayed road bridge that spans the valley of the River Tarn near Millau in southern France. Designed by British master-architect Lord Foster in collaboration with French bridge engineer Michel Virlogeux, it is the tallest vehicular bridge in the world, with one piers summit at 1,118 ft (341 metres), slightly higher than the Eiffel Tower and only 132 ft (40 m) shorter than the Empire State Building.
Worlds tallest vehicular bridge
The Millau Viaduct (French: le Viaduc de Millau) is a cable stayed road bridge that spans the valley of the River Tarn near Millau in southern France. It was formally opened on 14 December 2004 and opened to traffic on 16 December 2004. Designed by British master-architect Lord Foster in collaboration with French bridge engineer Michel Virlogeux, it is the tallest vehicular bridge in the world, with one piers summit at 1,118 ft (341 metres), slightly higher than the Eiffel Tower and only 132 ft (40 m) shorter than the Empire State Building.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்-3


3,வது, அதிகாரம்
துஷ்ட கைமுனு அரசனாபது முதல்;ஸ்ரீ சங்காபன் மரணபரியந்தம்.
கி.பூ-151 -கி.அ-218 
இப்படி எல்லாளன்,இங்கிருந்தரசியியற்ற அங்கே உருகுணையில் மகாநாகனுக்குப்
பின் அவன் வமிசத்தவனாகிய கவன்தீசன் அரசனாகி அரசு செய்து வருகையில்,
அவன் புத்திரருள் மூத்தவனாகிய (GAMMUNU ) கைமுனு என்பவன்,பாலப் 
பிராயந்த்தொட்டு தமிழர் கையினின்றும் இலங்கையை அபகரித்துக் கொள்ள
வேண்டுமென்ற,பேரவாலும்உள்ளக் கடுப்பு முடையவனாயுமிருந்தான்.
ஓர் நாள் அவன் தன் கால்களை மடித்துக் கொண்டு படுத்திருந்ததைக் கண்ட 
கவந்தீசன்,அவனை நோக்கி,"அப்பா,என் பாலா,நீ,நீட்டி நிமிர்ந்து படுக்கலாகாதோ?"
என்று கேட்க,அதற்கு கைமுனு,"தந்தாய்,கால் நீட்டிப் படுக்கப் போந்த; இடம் தேடி 
வைத்தீரோ? ஒரு பக்கத்தை ஆற்றுக்கப்பால்,தமிழர் கட்டிக் கொண்டார்,மற்றொரு
பக்கத்தையோ, சிறிதும் பின்வாங்காத சமுத்திரங் கொண்டது. பின்னே எனக் 
கிடமெங்கையோ"வென் தூத்தரமாய்க் கூறினான். அதைக்கேட்டு தந்தை வெட்கி ,
அப்புறம் போயினான்.சிலநாட் சென்ற பின்,கைமுனு யுத்த வீரர் சிலரைச் சேர்த்துக்
கொண்டு,தந்தையிடஞ்சென்று எல்லாளனுடன் போர் செய்யப் போகத் தனக்கு
விடைதரும்படி கேட்க, அதற்கு உடன்படாது மறுத்தான்.இப்படிச் சின்னாள் இடை
இடையே,விட்டு கைமுனு, மும்முறை போயிரந்துகேட்க,அம்முறையும் அவன்
தந்தை,யுடன்பட்டானில்லை,அதனால் கைமுனு மிகுந்த கோபாவேசனாய்,
உடனே அந்தப்புரஞ்சென்று,பெண்ங்களணியும் ஓர் ஆபரணத்தை வாங்கி,
அதை ஓர் தூதனிடம் கொடுத்து,"என் தந்தை,ஆண் பிள்ளையல்லனாக,இதை
அவன் அணியத்தகும்."என யான் சொன்னதாகச் சொல்லி,தந்தையிடம் கொடுத்து,
வாவென்று  அனுப்பினான்.அம் மரியாதைக் குறைவான செயலுக்காக
கவந்தீசன்,தன்மைகனைத் தண்டித்தல் வேண்டுமென்று முயல,கைமுனு
அதற்கஞ்சி அவ்விடம் விட்டு மலை நாடு தேடி யோடித்,தந்தை இறக்கும்
வரையில்,ஊருக்கு மீளுவதில்லை என்னும் விரதத்தோடு,அங்கிருந்தான்,
இவ்வகைப் படிவின்மை காரணமாக,அவனுக்கு,அவன் தந்தையே "துஷ்டன்"
என்னும் பட்டப் பெயரைக்கொடுத்தான்.இது நிகழ்ந்து சில நாளில்,கவந்தீசன்
இறந்துபோக, "நெயக்குடமுடைந்தது  நாய்க்கு வாய்ப்பான "பான்மைபோல்,
கைமுனு,தன் எண்ணங்களை முடித்தற்கு நல்ல சமயமாயிற்று.உடனே
அவன் போரில் வல்ல,கஜதுர கபதாதிகளுடன் ஓர் சேனையச் சேர்த்துக்கொண்டு,
மகாவலி கங்கையைத் தாண்டி *உச்சித புரத்தை யடைந்து,அதனை வனைந்தான்.
அப்படி வளைந்தும், அவ்வரண்,அதி தீரராற் காக்கப்பட்டிருந்தமையால்,
அநேக மாசங்கள் வரையில் அவன் அப்பட்டனத்தை,கைப்பற்ற இயலாதவனாக,
இருக்கும்,நாளில், ஓர் நாள்,அவன் யானைகளில் ஒன்று அந்நகரத்து,இரும்புக்
கபாடங்களில் ஒன்றைத் தகர்த்து,உள்ளே நுழைய,அவ்வழியாய் மற்றைய
சேனாவீரரும் பிரவேசித்து,உள்ளிருந்த காவல் வீரரை வாளுக்கிரையாக்கித்,
தங்கொடியை யுயர்த்தினர்.இவ்வாறு துஷ்ட கைமுனு கீழ்த்தரமான பல
இடங்களைக் கவர்ந்து கொண்டு,அநுரதபுரத்தை நோக்கிச் சென்று, அதற்கயலிலுள்ள
வோரிடத்தைப் பிடித்து,அதைத் தனக்குப் பாசறை ஆக்கி, அதை மேலும் பலபித்தற்
பொருட்டு அங்கு 32 ,உப அரண்களையும் அமைப்பித்தான்.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

கணனியை வைத்து உபயோகிப்பது எப்படி?



கணனியை  வைத்து உபயோகிப்பது எப்படி? 

கணனிக்கும் நமக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்.எழுத்துப் பலகை எங்கே இருக்க வேண்டும்.எழுத்துப் பலகையை நமது கைகளால் எந்தக் கோணத்தில் உபயோகிக்க வேண்டும்.கையை 
எப்படி உபயோகிக்க வேண்டும்.இதுபோன்ற பிரயோசனமான தகவல்கள். கணனியைக் கையாள்பவர்கள் 
கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை 

வியாழன், 10 பிப்ரவரி, 2011

யார் செய்த பாவம்?.

யார் செய்த பாவம்?.






யார் செய்த பாவம், இவர் செய்த பாவமா? இல்லை இவர் எமது தமிழ் மக்களுக்குச் செய்த பாவமா?
அண்ணன் தம்பி, இவருக்குச் செய்த பாவமா?, யார் செய்த பாவம்? இவரை இப்படி நிக்கவைத்தது.
மனிதர்களைவிட, ஏதோ ஒரு சக்தி, உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது, சிலர் கண்களின் நீருக்கும்,
வலிமை இருக்கத்தான் செய்கிறது.காலமாற்றங்களின் தீர்ப்புகளை எல்லோரும் சந்திக்கத்தான்,
வேண்டும் என்பதற்கு, இது நல்லதொரு உதாரணம்,வரும் காலம்  இன்னும் எவ்வளவு மாற்றங்களை அரங்கேற்றக் 
காத்திருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்


புதன், 9 பிப்ரவரி, 2011

கோடீஸ்வரனாக்கும்-இ- மெயில்,நம்பாதிங்க.!


  • கோடீஸ்வரனாக்கும் இ- மெயில்-நம்பாதிங்க. 


    இணையத்தில் திருடர்கள் சரி பாதி என்பது போல், அடிக்கடி,இப்படியான இ-மெயில்களை 
    அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள், பொது மக்களே கவனம்,அடுத்த இலக்கு நீங்களாகவும் இருக்கலாம்.இவ்வளவு தொகையை இரண்டாகப் பிரித்து நீ பாதி, நான் பாதி, கேட்கிறத்துக்கு நல்லாத்தான் இருக்கு, நடை முறைக்குச் சாத்தியமா? இதற்கு, நீங்கள் பதிலிறுத்தால், நீங்களும்  ஒரு கோடீஸ்வரந்தான் 


செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

பாடசாலை செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு

வேப்பங்காயாக இருக்கும் கணித பாடத்தை விரும்பிய பாடமாக்குங்கள். 



நமது பிள்ளைகள் பாடசாலையில் கணக்குப் பாடத்தில் திறமை அற்றவர்களாய் 
இருந்தால்,எல்லாப் பெற்றோர்களுக்கும் மனக் கவலை கூடுதலாக இருக்கும்.
இதை நிவர்த்தி செய்ய பெற்றோராகிய நாம் பல முயற்சிகளை எடுக்கிறோம்,நாம் எடுக்கும் முயற்சியில் பத்து வீதம் கூட நமது பிள்ளைகள் எடுக்கிறார்களா என்பது 
கேள்விக்குறி. இருந்தும் இந்த இலகு கணக்கு உத்திகளை உங்கள் பிள்ளைகளுக்குக் 
காட்டிப் பாருங்கள். கணக்குப் பாடத்தில் ஒரு முன்னேற்றம் தெரிய,வாய்ப்புண்டு    

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

ஹிரோஷிமா, நாகசாகி, இன்று


ஹிரோஷிமா நாகசாகி-1945 - 08 - 06/09 

1945ஆம், ஆண்டு,இரண்டாம் உலகப்போரில்,கடைசிக் காலகட்டத்தில் அமெரிக்காவின் 
அணு ஆயுத வீச்சுக்கு,இலக்கான   ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் படங்கள்தான் 
இவை.௦06ந்த் திகதி ஆகஸ்ட், 1945ல்  ஹிரோஷிமாவில் அமெரிக்காவால் வீசப்பட்ட அனு குண்டின் பெயர், நமது பாசையில் கூறுவதானால், சின்னப் பொடியன்,( Litle Boy ),09 ,ஆகஸ்ட்,1945ல்   நாகசாகியில் வீசப்பட்ட 
அனுகுண்டின் பெயர் தடியன் (Fat Man ) இந்த இரண்டு அனுகுண்டுகள்தான்,உலகில் 
முதலும் கடைசியுமாக இடம்பெற்ற அனுகுண்டுத்தாக்குதல்.இதைக் காட்டிக் காட்டி 
இன்றுவரையும் உலக நாடுகள்,இதைத் தயாரித்துக் கொண்டிருப்பதும், தயாரிக்கும் நாடுகளைக் கண்டிப்பதும், இதன் பெயரைச் சொல்லியே ஒரு நாட்டையும், அந்த 
நாட்டின் தலைவரையும் கொன்றது, நாம் எல்லோரும் அறிந்த கதை.இந்த அணுகுண்டுத் 
தாக்குதல் நடந்து, நாலு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,ஹிரோஷிமா 90 ,000 -166 ௦000௦. நாகசாகி 60 ,000௦,௦௦௦.-80 ,000 இவ்வளவு மனித 
அழிவுகளையும், எண்ணிலடங்காத பொருளாதார இழப்புகளையும்  சந்தித்த இந்த இரண்டு நகரங்களும், இன்று எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கின்றன.



அமெரிக்கா விசா நம்பாதிங்க.!

முதலில் வந்த கடிதம்,இதில்தான் நான்,தெரிவு செய்யப் பட்டுள்ளதாகவும், அதை உறுதிப் படுத்த, அடுத்த கடிதம் தொடரும் என்றும் எழுதப்பட்டுள்ளது 
இன்று எனக்கு வந்த இ-மெயிலில் கிடைத்த ஒரு கடிதம் நீங்ககளும்,வாசித்துப் பாருங்க.
இ-மெயிலில் வந்த கடிதம்,  இதற்கு முதல் கூகுளால் ஒரு எச்சரிக்கை வந்தது,உங்கள் மெயிலை,
அமெரிக்காவிலிருந்து,இனம் தெரியாதவர்கள்,கண்காணிக்கிறார்கள் என்று.நான் யோசித்தேன்,அமெரிக்காவிலிருந்து கண்கானிக்குமளவுக்கு நாம என்ன அப்படி பெரிய 
விஷயங்களை எழுதிக் கிளிச்சிட்டம் என்று யோசிச்சுப் பார்த்தேன்,ஒன்றுமே புரியவில்லை,சில வேளை"விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் நம்மளையும்,எதுக்கும் உதவிக்குப் பக்க பலமாக இருக்கட்டும் என்று மாட்டி விட்டாரோ என்றும் ஒரு யோசனை,

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயத்தாள்கள். ,

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயத் தொடர்கள்.இன்றுமுதல் இலங்கையின் நாணயற்  சுழற்சியில் ஈடுபடும்
வகையில்,  இலங்கை மத்திய வங்கியால் அதிகார பூர்வமாக,
வெளியிடப்பட்டது.இந்த நாணயத் தாள்களின் சிறப்பம்சமாக, பார்வையற்றவர்கள் 
கூட இலகுவாக அடையாளம் காணக் கூடிய வகையில்,அச்சிடப் பட்டுள்ளது.

ஒவ்வொரு நாணயத் தாளினதும்,பாதுகாப்பு நீர்வரி அடையாளமாக நாணயத் தாளின் முகப்பில் காணப்படும் உள்ளூர்  பறவையின்,வெவ்வேறு  முழு உருவம்,நீர்வரிப். படமாக 
அச்சிடப்பட்டுள்ளது.அத்துடன் நாணயத் தாளின் முகப் பெறுமதியும் நிலைக்குத்தாக 
நீர்வரி அடையாளமாக இடப்பட்டுள்ளது.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

தமிழக உறவுகளே உண்மையா?




தமிழக மீனவர் மீதான இந்திய மத்தியஅரசின் திடீர் அக்கறை,
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நாடகம்
தேசப்பற்றுள்ள .தேசிய  இயக்கம் தெரிவிப்பு,
தமிழக மீனவர்கள் மீது, இந்திய மத்திய அரசாங்கம் காட்டும் அக்கறையானது,
வரும் சட்டசபைத் தேர்தலுக்கு, மத்திய அரசாங்கம் நடத்தும், நாடக 
அரங்கேற்றமாகும், என இலங்கையின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் 
தலைவர், திரு.டாக்டர்,குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:-2

அநுரத புரத்திலுள்ள எல்லாளன் சமாதி .

இரண்டு தமிழர்கள் கொலை செய்யப் பட்டதற்கே எல்லாளன் என்ற சிற்றரசன்,தமிழகத்தில் இருந்து படைதிரட்டி  வந்து சண்டையிட்டது 
பழைய வரலாறு. ஆயிரக் கணக்கில் தமிழர்கள்,துடி துடித்துச் சாக 
கொலை செய்யத் தூண்டியவனுடன், சேர்ந்து கைகுலுக்கி, சேர்ந்து  
வாழுங்கள் என்று கடிதம் எழுதியது இன்றைய தமிழகத்தின், 
,சாதனையுடன் கூடிய வரலாறு. என்ன நடந்ததது இன்றையத் 
தமிழருக்கு 
முதலிருந்து  படிக்க.. 
௨.அதிகாரம்
தேவப்பிரிய தீசன் அரசனானது முதல்; எல்லாளன் வெற்றிபரியந்தம்.

முத்த சிவராஜனுக்குப்பின்,அதாவது கி.பூ. 307ம் வருசத்தில் அவன் மகன் 
(Devananpiatissa ) தேவப்பிரியன் என்னும் பட்டப்பெயருடைய தீசன் அரசனானான்.
இவன் சிம்மாசன மேறியவுடன்,பூமியில் புதைந்து கிடந்த பொன், வெள்ளி,
இரத்தினாதிகள் வெளி யெழும்பின வென்றும், மூங்கில்கள் தாமே வளர்ந்து 
புஷ்பங்கள், மிருகங்கள், பலவர்ணப் பஷிகள் முதலியவற்றை ஈன்றன 
வென்றும் சிங்கள் புராணம் கூறும்.இது மங்கள வருணனையன்றி,
உண்மையாய் நடந்ததன்று.