செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்-3


3,வது, அதிகாரம்
துஷ்ட கைமுனு அரசனாபது முதல்;ஸ்ரீ சங்காபன் மரணபரியந்தம்.
கி.பூ-151 -கி.அ-218 
இப்படி எல்லாளன்,இங்கிருந்தரசியியற்ற அங்கே உருகுணையில் மகாநாகனுக்குப்
பின் அவன் வமிசத்தவனாகிய கவன்தீசன் அரசனாகி அரசு செய்து வருகையில்,
அவன் புத்திரருள் மூத்தவனாகிய (GAMMUNU ) கைமுனு என்பவன்,பாலப் 
பிராயந்த்தொட்டு தமிழர் கையினின்றும் இலங்கையை அபகரித்துக் கொள்ள
வேண்டுமென்ற,பேரவாலும்உள்ளக் கடுப்பு முடையவனாயுமிருந்தான்.
ஓர் நாள் அவன் தன் கால்களை மடித்துக் கொண்டு படுத்திருந்ததைக் கண்ட 
கவந்தீசன்,அவனை நோக்கி,"அப்பா,என் பாலா,நீ,நீட்டி நிமிர்ந்து படுக்கலாகாதோ?"
என்று கேட்க,அதற்கு கைமுனு,"தந்தாய்,கால் நீட்டிப் படுக்கப் போந்த; இடம் தேடி 
வைத்தீரோ? ஒரு பக்கத்தை ஆற்றுக்கப்பால்,தமிழர் கட்டிக் கொண்டார்,மற்றொரு
பக்கத்தையோ, சிறிதும் பின்வாங்காத சமுத்திரங் கொண்டது. பின்னே எனக் 
கிடமெங்கையோ"வென் தூத்தரமாய்க் கூறினான். அதைக்கேட்டு தந்தை வெட்கி ,
அப்புறம் போயினான்.சிலநாட் சென்ற பின்,கைமுனு யுத்த வீரர் சிலரைச் சேர்த்துக்
கொண்டு,தந்தையிடஞ்சென்று எல்லாளனுடன் போர் செய்யப் போகத் தனக்கு
விடைதரும்படி கேட்க, அதற்கு உடன்படாது மறுத்தான்.இப்படிச் சின்னாள் இடை
இடையே,விட்டு கைமுனு, மும்முறை போயிரந்துகேட்க,அம்முறையும் அவன்
தந்தை,யுடன்பட்டானில்லை,அதனால் கைமுனு மிகுந்த கோபாவேசனாய்,
உடனே அந்தப்புரஞ்சென்று,பெண்ங்களணியும் ஓர் ஆபரணத்தை வாங்கி,
அதை ஓர் தூதனிடம் கொடுத்து,"என் தந்தை,ஆண் பிள்ளையல்லனாக,இதை
அவன் அணியத்தகும்."என யான் சொன்னதாகச் சொல்லி,தந்தையிடம் கொடுத்து,
வாவென்று  அனுப்பினான்.அம் மரியாதைக் குறைவான செயலுக்காக
கவந்தீசன்,தன்மைகனைத் தண்டித்தல் வேண்டுமென்று முயல,கைமுனு
அதற்கஞ்சி அவ்விடம் விட்டு மலை நாடு தேடி யோடித்,தந்தை இறக்கும்
வரையில்,ஊருக்கு மீளுவதில்லை என்னும் விரதத்தோடு,அங்கிருந்தான்,
இவ்வகைப் படிவின்மை காரணமாக,அவனுக்கு,அவன் தந்தையே "துஷ்டன்"
என்னும் பட்டப் பெயரைக்கொடுத்தான்.இது நிகழ்ந்து சில நாளில்,கவந்தீசன்
இறந்துபோக, "நெயக்குடமுடைந்தது  நாய்க்கு வாய்ப்பான "பான்மைபோல்,
கைமுனு,தன் எண்ணங்களை முடித்தற்கு நல்ல சமயமாயிற்று.உடனே
அவன் போரில் வல்ல,கஜதுர கபதாதிகளுடன் ஓர் சேனையச் சேர்த்துக்கொண்டு,
மகாவலி கங்கையைத் தாண்டி *உச்சித புரத்தை யடைந்து,அதனை வனைந்தான்.
அப்படி வளைந்தும், அவ்வரண்,அதி தீரராற் காக்கப்பட்டிருந்தமையால்,
அநேக மாசங்கள் வரையில் அவன் அப்பட்டனத்தை,கைப்பற்ற இயலாதவனாக,
இருக்கும்,நாளில், ஓர் நாள்,அவன் யானைகளில் ஒன்று அந்நகரத்து,இரும்புக்
கபாடங்களில் ஒன்றைத் தகர்த்து,உள்ளே நுழைய,அவ்வழியாய் மற்றைய
சேனாவீரரும் பிரவேசித்து,உள்ளிருந்த காவல் வீரரை வாளுக்கிரையாக்கித்,
தங்கொடியை யுயர்த்தினர்.இவ்வாறு துஷ்ட கைமுனு கீழ்த்தரமான பல
இடங்களைக் கவர்ந்து கொண்டு,அநுரதபுரத்தை நோக்கிச் சென்று, அதற்கயலிலுள்ள
வோரிடத்தைப் பிடித்து,அதைத் தனக்குப் பாசறை ஆக்கி, அதை மேலும் பலபித்தற்
பொருட்டு அங்கு 32 ,உப அரண்களையும் அமைப்பித்தான்.



இதனை ஒற்றராலறிந்த, எல்லாளன், தன் சேனைகளை அதிதீத சேனாதிபதியாகிய,
தீக்கசவந்தனால் நடத்திக்கொண்டு,தானுங்க் கஜாருடியாகப் புறப்பட்டு, எதிர்த்து
வந்த கைமுனு சேனையோடு முட்டினான்.இப்படி முட்டிய இரு திறச் சேனைகளில்
தமிழர் சேனை தீவிரத்தோடு ஆராவரித்து,யுத்தஞ்செய்ய,சிங்களர்  சேனை,புறங்க்
கொடுத்து, தன் அரண் தேடியோட அங்கும் ஒன்றன்பின் ஒன்றாய்,அரண்களை
தீர்க்க சவந்தன் போய் அழித்தொழித்து, சிங்களரைக்,காற்றின் முன் பஞ்சுபோல்,
ஊதிவருஞ்சமயத்தில்,கைமுனுவுடைய சேனாபதி ஒருவன் தீக்க சயந்தனைச் சாடி
அவன் வலி ஒழித்தான்.இதனால் தமிழ்ப் படை கலங்கிப் புறங் காட்டவும்.சிங்களர்
படை முழங்கித் திறன் காட்டவும் தொடங்கியதை எல்லாளன் கண்டு, புறங்
கொடுத்தோடும்,தன் சேனைகளைத் திரட்டும்படி, தனக்குகந்த வீரர் சிலரோடு
செல்கையில்,கைமுனுவும் போரில் வல்லவோர் யானையின் மேலேறி
எதிர்த்து வந்து,தனிப்போர் செய்யத் தலைப்பட்டான்.அப்போது எல்லாளனும்
யானை மேல் தவிசினிளிருந்தபடி தன் ஈட்டியை எடுத்து கைமுனு பேரில் விட்டு
எறிந்தான்.அவ் வல்லயத்திற்கு கைமுனு,உபாயமாய் நகர்ந்து தப்பிக் கொண்டு,
தன் யானையை,அவன் யானை மேல் தூண்டி விட,அவ் யானையானது மற்ற
யானையைத் தாக்கிக் கீழே தள்ளலும்,எல்லாளன் விழுந்து அதன் காலால் அரை
பட்டிறந்தான்.அப்பால் கைமுனு வெற்றிச் சிறந்தவனாய்ச் சய பேரிகை முழங்க
நகரத்துள் பிரவேசித்துச் சிங்காசனாதிபதி யாகிய வழி, மீண்டும் சிங்க வமிசத்தை
நிலை நிறுத்தினானாயினான்.

[இது நிகழ்ந்தது கிறிஸ்த பூர்வாப்தம்,161ல், எல்லாளன் அரசு செய்த காலம்,நாற்பத்து
நான்கு வருடம்.]

அதுநிற்க,துஷ்ட கைமுனு அரசர் இயல்புக் கேற்பப் போர் முகத்தில் எல்லாளன் மேல்
வன்கண்மை கொண்டு நின்றானாயினும்,அவன் விழுந்து மடிந்தவுடன் பெருந்
தண்ணளி கொண்டு, அவன் தைரியத்தை வியந்து,அவன் விழுந்த விடத்திற்றானே,
பேராடம்பரத்துடன்,அவனைத் தகனஞ்செய்வித்து, அன்று முதல்,அவ்வழியால்
செல்வோர்,பிரசைகளாயின் அவ்விடத்தில் தக்க வணக்கத்தோடும்,
அரசாங்கத்தவராயின் வாத்தியங்களை நிறுத்திக் கால் நடையாயும்,செல்லுதல்
வேண்டுமென்று ஆஞ்ஞாபித்தான்.

இது நிகழ்ந்து,சிலகாலம் கழிந்தபின்,துஷ்ட கைமுனு,தன்மனத்தில்,தான்
போர்முகத்தில் எண்ணிறந்த சிவராசிகளைக் கொன்றது பாவமெனவும்,
அப்பாபத்தின் பயனாகப் பரலோகத்தில் தனக்குக் கிடைக்கும் கதி இதுவெனவும்
உணர்வு தோன்ற,அப்பாவ நிவர்த்தியின் பொருட்டு,பள்ளிகளும்,ஆலயங்களும்
கட்டுவதிலேயே,தன் சம்பத்து முழுவதையும் போக்குவனாயினான்.அப்படி
அவனால் இயற்றுவிக்கப்பட்ட, பணிகளுள் மிகப் பெரியது, அநுரதபுரத்திலுள்ள,
மகா லோக பவனம் என்னும் அரமனை.மகாலோகபவனம் என்பதன் பொருள்,பெரிய செப்பு மாளிகை என்பது.அது நிரை யொன்றுக்கு நாற்பது தூனகச் சதூராகாரமாய்
நாட்டப்பட்ட,1600கற்  தூண்களின் மேல்,தொள்ளாயிரம் அறைகளுள்ள ஒன்பது
நிலை மாடமாய் அகல நீள,  உயரங்களால் தனித்தனி, 270அடி,யுள்ளதாய்
அமைக்கப்பட்டு,செம்புத் தகட்டால்,வேயப்பட்டுமிருந்தது மெனச் சொல்லுவர்.
இவ்வரண்மனையின் மத்தியில் ஓர் பெரிய,சபா மண்டபமும்,அதிலே தங்க
வர்ணமிட்ட,சிங்கப் பிரதிமைகள்,யானைப் பிரதிமைகள் முதலிய, அலங்கார
வஸ்துக்களும், தந்தத்தாலாய வோர் அழகிய சிம்மாசனமும் இருந்த்தனவாம்.
இப்போது,அவ்வரண்மனை,"எழுநிலை மாடங் கால் சாய்ந்துக்குக் கழுதை மேய்
பாழாகினுமாகும்."என்றபடி அழிந்துபோகத் தூண்கள் மாத்திரஞ்சில 12அடி.
யுயரமுள்ளனவாய் நிருவியபடி நிற்கின்றன.


    [இந்தப் படம் தம்புல்லைக் குகையொன்றிலிருந்து,புத்த பிக்கு ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டு,அவரால் வலையேற்றப் பட்ட படம்,தமிழில் உள்ள சரித்திரத்தில்
எல்லாளன் யாணையின் காலால் மிதி பட்டு இறந்தான் என்றுதான் உள்ளது.ஆனால்
இந்தப் படத்தில் வேல் எறிந்து  கொல்லப்பட்டதுபோல், வரையப் பட்டுள்ளது.] 

மற்றொன்று,உறுவனவல்லி சமாதி, அதுவும் ஏறக்குறைய 270அடி,உயரமும்,2000 ,
அடிச் சுற்றளவும்,உடையவோர் கருங்கற் கட்டிடம்.அதனைச் சூழ்ந்து,70அடி,
அகலமுள்ள,  அகழியொன்று,கிடந்தது.இச் சமாதியைக் கைமுனு கட்டத் தொடங்குகையில்,திருப் பணி வேலைகளைக் கூலியாட்களாற் கட்டுவித்தலே
புண்ணியமெனவெண்ணி,அவ்வாறே, அநேக கூலியாட்களை ஏற்படுத்தி,அவ்,
வேலையை, நடத்தி வந்தான். அப்படி நடத்தியும், "தடியடி மிண்டனுக்குத் தயிரும்
சோறும் தண்ணளியுடையானுக்குக் கூழுந்தண்ணீரும் " என்றபடி,அவனுடைய
இளக்கங்கண்ட கூலியாட்களுடைய அசட்டையால் திருப்பணிவேலை சீக்கிரத்தில்
முடியாது,நெடுக,கைமுனுவுக்கும் எமதூதர் ஓலை கொண்டு கடுகினர். அது கண்டு
அவன் சகோதரன், அக் கோயிலின் மேல் வேலையைப் போலி வேலையாய்
மரத்தினாற்  கட்டி வஸ்த்திரங்க்களால்  வேய்ந்து ஒருவாறு முடித்து விட்டுத்
தமையனாகிய, கைமுனுவை,ஓர் சிவிகையில் ஏற்றி வீதி வலங்கொணர்ந்து
ஓரிடத்தில் நிறுத்தி,"அதோ பாரும் உம் எண்ணப்படி சமாதிவேலை சமாப்தியாயிற்று"
என்று அவனுக்குரைத்தான். அப்போது கைமுனு,தன்னிடத்தில் முன்னே
சேனாதிபதியாயிருந்து பின்னர் குருத்துவம் பெற்ற ஒருவனைக் கூவியழைத்து,
அவனை விழித்து 'என் கௌமார பருவத்தில் யுத்த வீரரைத் துணைக் கொண்டு
யுத்தங்கள் செய்தேன்; இப்போதோ,ஒன்றியாய் யார் துணையுமின்றி,
வெல்லுதற்கரிய கொடுங் கூற்றுவனோடு,அமர் தொடங்குகிறேன்.  அந்தோ".
என்றிரங்குகையில், அவனாலியற்றப்பட்ட தருமங்களின் நாமவலி வாசிக்கப்
பட்டது அதனைக் கைமுனு கேட்டு மீண்டும் சொல்லுவான்,"உலகத்தில்,
பலத்தினாலும், செல்வத்தினாலும் ஓங்கியிருந்த நாள் இவற்றை எல்லாஞ்செய்து
முடித்தேன்,செய்தும் அவை எனக்கித்தருணத்தில் ஈந்த சகாய மொன்றுமில்லை
ஆயினும்,என் மரணவஸ்தையில், ஆரம்ப காலத்தில் யான் செய்த பூசாபலிகளே,
எனக்கித்துணைத் தேறுதலைத் தந்தன"என்று இவ்வாறு, சொல்லி அச் சமாதி மேல்
வைத்த கண்ணுங் காதுமாய்க் கைமுனு உயிர் துறந்தான்.
{இது நிகழ்ந்த்தது கி-பூ 137  ல் துட்ட கைமுனு 24  வருடங்கள் ஆட்சி செய்து இறந்தான்.}  


    
தொடரும்.....,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள