வியாழன், 10 பிப்ரவரி, 2011

யார் செய்த பாவம்?.

யார் செய்த பாவம்?.






யார் செய்த பாவம், இவர் செய்த பாவமா? இல்லை இவர் எமது தமிழ் மக்களுக்குச் செய்த பாவமா?
அண்ணன் தம்பி, இவருக்குச் செய்த பாவமா?, யார் செய்த பாவம்? இவரை இப்படி நிக்கவைத்தது.
மனிதர்களைவிட, ஏதோ ஒரு சக்தி, உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது, சிலர் கண்களின் நீருக்கும்,
வலிமை இருக்கத்தான் செய்கிறது.காலமாற்றங்களின் தீர்ப்புகளை எல்லோரும் சந்திக்கத்தான்,
வேண்டும் என்பதற்கு, இது நல்லதொரு உதாரணம்,வரும் காலம்  இன்னும் எவ்வளவு மாற்றங்களை அரங்கேற்றக் 
காத்திருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்


.

 இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கைதி உடையில் இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது, இது இலங்கையில் உள்ள சிங்கள மக்களை 
பெரிதும்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சுதந்திர தினமான பிப்ரவரி 4-ம் தேதி வெலிக்கடைச் சிறையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்க சிறைக்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் இருந்த இடத்திற்கு அருகே திடீரென சரத் பொன்சேகா கைதி உடையில் வந்தார். இதை பத்திரிகையாளர்கள் உடனடியாக படம் பிடித்தனர். இந்த புகைப்படம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியானதால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி எதிர்க்கட்சியினனர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர் கைதி உடையில் இருக்கும் புகைப்படம் வெளியானதால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பொன்சேகா புகைப்படம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளதாக அரச பாதுகாப்புத் தகவல்கள் கூறுகின்றன.

 

1 கருத்து:

உங்களின் கருத்துரைகள