வியாழன், 3 பிப்ரவரி, 2011

தமிழக உறவுகளே உண்மையா?




தமிழக மீனவர் மீதான இந்திய மத்தியஅரசின் திடீர் அக்கறை,
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நாடகம்
தேசப்பற்றுள்ள .தேசிய  இயக்கம் தெரிவிப்பு,
தமிழக மீனவர்கள் மீது, இந்திய மத்திய அரசாங்கம் காட்டும் அக்கறையானது,
வரும் சட்டசபைத் தேர்தலுக்கு, மத்திய அரசாங்கம் நடத்தும், நாடக 
அரங்கேற்றமாகும், என இலங்கையின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் 
தலைவர், திரு.டாக்டர்,குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.



இந்த நாடகத்தின் ஒரு அங்கமே,  இந்திய வெளியுறவு 
அமைச்சின், செயலாளர் நிருபாமா ராவின் இலங்கை விஜயம்.
என்றும், இவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழக மீனவர்கள் மீதான 
தாக்குதல்கள் தொடருமானால், இலங்கையுடனான உறவுகள் 
பாதிக்கப்படுமென,அண்மையில்  இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் 
கிருஷ்ணா தெரிவித்த கருத்துத் தொடர்பாக, டாக்டர்,குணதாச அமரசேகர
கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.இது தொடர்பாக 
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் 
சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது, மீண்டும் திமுக -காங்கிரஸ் 
வெற்றிபெற்று, ஆட்சியமைக்கப் படவேண்டுமானால், தமிழகத்தின் 
வாக்குகள் அவசியமாகும், அதற்காகவே "தமிழக மீனவர் பிரச்சினை"
நாடகம், அரங்கேறுகிறது.

தமிழக மக்களை ஏமாற்றி,வாக்குகளைப் பறிப்பதற்காக, இந்திய வெளியுறவு 
அமைச்சின், செயலாளர் நிருபாமா ராவ், இலங்கைக்கு விஜயம் செய்தார்.
இது போன்ற நாடகங்கள் தொடர்ந்தும் அரங்கேற்றப்படும். இவை தொடர்பில் 
இலங்கையர்கள் யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.தேர்தல் 
முடிந்ததும் தானாக இவைகள் அடங்கிவிடும்.தமிழக மீனவர்கள் யாரும் 
இலங்கைக் கடற்படையால் கொல்லப்படவும் இல்லை, தாக்கப்படவுமில்லை 
தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் வெளியான செய்திகள் விடுதலைப் 
புலிகளின் ஆதரவளர்களான வைக்கோ போன்றோர்களால் பரப்பப்படும் வீண் 
வதந்திகள், என்றார்.

எப்படி இருக்குதுங்க செய்தி,இது இலங்கைத் தமிழ் நாளேடான வீரகேசரியில் 
இன்று வெளியான செய்தி, தமிழக மக்கள்தான், இதற்கான பதிலைச் சொல்ல 
வேண்டும். இதே நிலைமை மாறிச் சிங்கள் மீனவரொருவருக்கு,  இந்தக் 
கதி ஏற்பட்டிருந்தால்,இலங்கையின் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பதை 
இந்திய மக்கள் அறிய மாட்டார்கள், இலங்கைத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்,தனது இன நலனுக்காக எப்படியெல்லாம். இவர்கள்
அரசியல் செய்கிறார்கள் என்று, நமது தலைவர்களோ, அறிக்கையுடனும்
கடிதத்துடனும், கதையையே முடித்து விடுவார்கள்.

 நன்றி வீரகேசரி. செய்தியைப் படிக்க.
,
   
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள