சாதித்தவர் ரே க்ரோக். நீங்கள் இன்று சுவைக்கும் மெக்டொனால்ட் பாஸ்ட்
புட் உணவுக்குச் சொந்தக்காரர்.வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை,
அப்பா,பாட்டன் சொத்து எதுவுமில்லை.கல்வியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கும் படிக்கவில்லை.உழைத்தால்தான் சாப்பாடு, என்ற,ஏழைகளின்
தாரக மந்திரத்துடன் இருந்த குடும்பத்தில் பிறந்தவர்.பதினைந்து வயதுவரை
காலத்தை கடத்தினார்.கட்டுப்படியாகாமல், தன் வயதைக் கூட்டிச் சொல்லி
முதலாம் உலகப் போர் ஆரம்பித்த நேரத்தில், செஞ்சிலுவைச் சங்கத்தில்
அம்புலன்ஸ் சாரதியாக வேலைபார்த்தார்.ஆனால் அந்த வேலையும்
நிலைக்கவில்லை.போர் முடிந்ததும்,வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்,
தொடர்ந்து வேலை தேடும் படலம்.
பியானோ இசைக்கத் தெரிந்ததால்,அந்தத் திறமையை வைத்து உள்ளூர்,
வானொலியொன்றில்இசைக்கலைஞராக வேலையேற்றார்.அதிலும்
பிரச்சனை,வரும் வருமானம் பற்றவில்லை, வேலையும் இரவில்த்தான்.
பகல் பொழுதுகளில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை.அந்த வேலையையும்
துறந்தார்.
பேப்பர் கப் தயாரிக்கும்,லில்லி டுலிப் என்ற கம்பனியில்,விற்பனையாளராக
சேர்ந்தார்.அங்கும் அதே பல்லவிதான்,வருமானம் போதவில்லை.கிடைக்கும்
வருமானத்தை வைத்துத்தான்,குடும்பத்தை ஓட்டவேண்டி இருந்தது.வரவு
எட்டணா,செலவு பத்தணா,மீதம் ரெண்டனா,கடைசியில் துந்தனா ...
மிக்ஸி கம்பெனியில் விற்பனையாளர் ஆனார், பதினேழு வருடங்கள்
அமெரிக்கா முழுவதும் அலைந்தார், இதில் கிடைத்த வருமானம் ஓரளவு திருப்தியைக் கொடுத்தது.வருமானத்தைவிட மக்களுடன் கலந்து, அதன்
மூலம் கிடைத்த அனுபவம், மக்களின் தேவை,அவர்களின் விருப்பு வெறுப்புகள்,தான் அன்றாடம் சந்திக்கும் பல தரப்பட்ட மக்கள் மூலம்
தெரிந்து கொண்டார். எத்தனையோ விற்பனையாளர்கள் நாடு முழுவதும்
அலைந்தாலும்,தனது பொருட்களை சந்தைப்படுத்துவதும்,தனக்குரிய
வருமானத்தைச் சேர்ப்பதிலும்தான் கண்ணாக இருப்பார்கள்.மக்களைப் பற்றிச் சிந்திக்க முயற்சி செய்வதில்லை, ஆனால், ரே க்ரோக், வித்தியாசமாக
மக்களை அவதானிக்கத் தொடங்கினார்.அந்த அனுபவங்கள் தான் பிற்
காலத்தில் வியாபாரத்தில் நிலையான ஒரு இடத்தை அவருக்கு ஏற்படுத்திக்
கொடுத்தது.
மிக்ஸி வியாபாரத்திற்காக ஊர் ஊராய், அலைந்து திரிந்தபோது,
கலிபோர்னியா மாநிலத்தில் இரு சகோதரர்கள் ஒரு சிற்றுண்டிச்
சாலையை,வித்தியாசமான முறையில்,நடத்துவதை அவதானித்தார்.
அவர்களும் இவரின் வாடிக்கையாளர்கள் என்பதால் இவர் அந்தச்
சிற்றுண்டிச் சாலைக்கு விஜயம் செய்வது வழக்கம்.அங்கு உணவு
வகைகள், பெரிதாக எதுவும் கிடையாது.இரண்டு, மூன்று வகை
ஹம்பர்கர்கள், குளிர் பானங்கள், சிப்ஸ் வகைகள் இவ்வளவுதான்,
ஆனால் மிகவும் சுத்தமாகவும்,வேகமாகவும்,விலை குறைவாகவும்
வரும் வாடிக்கையாளருக்கு வழங்கினார்கள். இவர்களிடம் வரும்
வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை.
நுழைந்த ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விடலாம்.
இந்தச் சுறுசுறுப்பான வியாபாரம் ரே க்ரோக்குக்குப் பிடித்திருந்தது.
அவரின் அனுபவத்தில்,மக்களுடன் பகிர்ந்து கொண்ட நாட்களில்
மக்களின் தேவைகளை இனம் கண்டிருந்தார்.வேகமான உலகத்தில்
அவசரமான தேவைகளை ஆற அமர இருந்து அனுபவிக்க நேரம்
யாருக்கும் கிடைப்பதில்லை. அது உணவாக, இருந்தாலும், உடையாக
இரிருந்தாலும் சரி. தரமான உணவு,வேகமாகக் கிடைத்தால்,மக்களுக்குக்
கிடைத்தால், அதை வரவேற்பார்கள் என்பது அவருக்கு அனுபவம் கற்றுக்
கொடுத்திருந்தது.மக்களின் இந்தத் தேவையை அந்தச் சகோதரர்கள்
கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணந்தார்.
ரேய்க்கு ஒரு ஐடியா உத்தித்தது. இந்த உணவு முறையை அமெரிக்கா
முழுவதும் அறிமுகப் படுத்தி.நல்ல இலாபம் சம்பாதிக்க நினைத்தார்.
அந்தச் சகோதரர்களிடம் ரே தனது திட்டத்தை வெளியிட்டார், அவர்களுக்கு
இதன் தாற்பரியம் பிடிபடவில்லை,ரே விடவில்லை தான், இந்த முறையில்
ஒரு உணவுச்சாலை ஆரம்பிக்க அவர்களிடம் அனுமதிபெற்று, பக்கத்து நகரத்தில் உணவுச்சாலை ஆரம்பித்தும் விட்டார்.இன்று உலகம் முழுவதும்
பரவிக் கிடக்கும் மெக்டோனல்ட்ஸ் பாஸ்ட் பூட் கடையின் சரித்திரம் இதுதான்.
இரண்டு மக்டோனல்டு உணவுச் சாலைகளாக இருந்தது,மெல்ல மெல்ல வளர்ந்து நான்கைந்தாக மாறியது, அந்தநேரத்தில், அதன் உரிமையாளர்களாக இருந்த இரு சகோதரர்களிடம் பேசி,அவர்களின் பெயரில் இருந்த உரிமைகளை
விலைக்கு வாங்கிவிட்டார்.அவர்களும் பாஸ்ட் பூட் உணவுவகைகளின்
எதிர்காலம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவர்களும் அவைகளை ரேய்க்கு விற்றுவிட்டனர்.
"ஒரு உணவுச் சாலைக்குள்,ஒரு வாடிக்கையாளன் நுழைந்தால்,கண்களும்,
மூக்கும்தான் தொழிற்படும்.மூக்கு வாசனையைத் தேடும், கண்கள் அந்த
இடம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கவனிக்கிறது.கண்களுக்கும்
மூக்கிற்கும் அந்த இடம் பிடித்து விட்டால். வாடிக்கையாளன் தொடர்ந்து
அச் சிற்றுண்டிச் சாலையை நாடிவருவான்." இது ரேயின் கணிப்பு. இதுதான்
மக்டோனால்டின் தாரக மந்திரம்.சுத்தத்திற்கும்,ருசிக்கும் முக்கியத்துவம்
என்றும் மக்டோனால்ட்டில் வழங்கப் பட்டிருக்கும்.ஆரம்பித்து ஐந்து வருடங்களில் ஐநூறு மக்டொனால்ட் உணவுச் சாலைகளைத் திறந்து விட்டார்.
எங்கு மக்கள் அதிகமாகவும், அவசரமாகவும் காணப்படுகிறார்களோ, அங்கு
ஒரு மக் டொனால்ட் உணவுச் சாலையைத் திறந்து விடுவார் ரே.
1984ல்,தன்னுடைய என்பத்தினாலாவது வயதில் ரே க்ரோக் மறைந்தார்.இன்றும், அவரது மக்டொனால்ட் உணவுச் சாலைகள் கோடி
கோடியாகப் பணத்தை சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஒரு உணவு சம்பந்தமான படிப்புகளுக்காக ஒரு பல்கலைக்
கழகத்தையும் இந்த மக் டொனால்டின் பெயரில் திறந்து வருடத்தில் ஆயிரக்
கணக்கான இளைஞ்ஞர்கள் பயிற்சி பெற்று வெளியேறுகிறார்கள்
ஒரு நேர்காணலில் ரே க்ரோக் சொன்னது,"நான் இந்த நிறுவனத்தை
ஆரம்பித்தபோது, எனக்கு வயது ஐம்பத்து இரண்டு,சர்க்கரை நோயால்
பீடிக்கப்பட்டு,மூட்டு வலியால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தேன்,ஆனாலும்
நான்,சோர்ந்து விடவில்லை.இன்மேல்தான் என் ஒளிமயமான எதிர்காலம்
காத்திருக்கின்றது என என் உள்மனம் அறிதியிட்டுச் சொன்னது,அது அப்படியே பலித்தது." இது பற்றியறிய.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள