வெள்ளி, 16 டிசம்பர், 2016

இனவாதத்திற்கு அஞ்சமாட்டோம்!


போராட்டங்களை நடத்துவோர் இலங்கை வரவேண்டும் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு
(கோலா­லம்பூ­ரி­லி­ருந்து ரொபட் அன்­டனி)
எமது அர­சாங்கம் இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­வி­ல்லை. இன­வாதிகள் பய­மு­றுத்­தி­னாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. அது­ மட்­டு­மன்றி கடந்த காலத்தில் நாங்கள் இன­வா­தி­க­ளுக்கு அஞ்ச  
வில்லை என்­ப­தனை நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்ளோம். இந்த விடயத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உறு­தி­யாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றனர். கடந்த இரண்டு வரு­டங்­களில் இதனை எமது அர­சாங்கம் நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்­ளது. இன­வா­தத்­துக்கும் அடிப்­படை வாதத்­துக்கும் எவ்­வி­த­மான இட மும் எமது நாட்டில் இல்லை என்­ப­தனை தெளிவாக கூறு­கின்றேன் என்று வெளி வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.  
வெளிநா­டு­களில் வீதி­களில் ஆர்ப்­பாட்டம் செய்யும் குழுக்­க­ளிடம் ஒரு கோரிக்கை விடுக்­கின்றேன். இன­வாத குழுக்­களின் கைப்­பொம்­மை­யாக மாறாமல் இலங்­கைக்கு வந்து என்ன நட­க­கின்­றது என்று பாருங்கள். இன்னும் குறை­பா­டுகள் இருக்­கலாம். அவற்றை எமக்கு சுட்­டிக்­காட்­டுங்கள். வீதி­க­ளுக்கு அருகில் இருந்து கூச்­ச­லி­டு­வதன் மூலம் எத­னையும் சாதிக்­கவோ வெற்­றிக்­கொள்­ளவோ முடி­யாது என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.
இன்று தெற்­கிலும் இன­வா­தத்தை கையில் எடுத்து அர­சியல் செய்ய முயற்­சிக்கும் சாத்­தான்கள் உள்­ளன. அதே­போன்று வட­க­கிலும் இன­வா­தத்தை கையில் எடு:த்து அர­சியல் செய்ய சிலர் முயற்­சிக்­கின்­றனர். முஸ்லிம் மக்­க­ளுக்­குள்ளும் இன்று ஒரு சிலர் இன­வா­தத்தை கையில் எடுத்­துள்­ளனர் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் உத்தியோகபூர்வ விஜயத்தையடுத்து மலேஷியாவுக்கு வந்துள்ள அமைச்சர் மங்களசமரவீர கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் மங்­கள சம­ர­வீர குறிப்­பி­டு­கையில்
மலேஷியாவில் எதிர்ப்பை வௌிக்­காட்­டு­வ­தாக கூறு­கின்­ற­வர்கள் புலம்­பெ­யர்ந்தோர் என்று கூற முடி­யாது. புலம்­பெ­யர்ந்தோர் என்ற வார்த்­தையை பயன்­ப­டுத்­து­வது அநீ­தி­யாகும். புலம்­பெ­யர்ந்தோர் என்­பது வெளிநா­டு­களில் வாழும் இலங்­கை­யர்கள் ஆவர். அது தமி­ழர்களாக இருக்­கலாம். அல்­லது சிங்­க­ள­வர்களாக இருக்­கலாம்.
ஆனால் இலங்­கையை சேர்ந்த புலம்­பெ­யர்ந்தோர் அனை­வரும் இலங்கை முன்னெடுக்கும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை வர­வேற்­கின்­றனர். இன்று பெரும்­பா­லான புலம்­பெ­யர்ந்தோர் இலங்­கை­யுடன் இணைந்து நல­லி­ணக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவும் எம்­முடன் இணைந்து செயற்­ப­டவும் முயற்­சிக்­கின்­றனர்.
அது தெளிவாக இருக்­கின்­றது. ஆனால் தற்­போது மலே­ஷி­யாவில் ஆர்ப்­பாட்­டம செய்­பவர்கள் குறைந்த பட்சம் இலங்கை புலம்­பெயர் மக்கள் அல்ல. அதிக­மானோர் இந்­திய தமிழ் பின்­ன­ணியைக் கொண்­ட­வர்கள்.
இந்­நி­லையில் அவர்­க­ளிடம் ஒரு விட­யத்தை கூறு­வ­தற்கு விரும்­பு­கின்றேன். இன­வாத குழுக்­களின் கைப்­பொம்­மை­யாக மாறாமல் இலங்­கைக்கு வந்து என்ன நட­க­கின்­றது என்று பாருங்கள். இன்று இலங்­கை­யா­னது அனைத்­து­ககும் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. தெய்வேந்திர முனை­யி­லி­ருந்து பருத்­தித்­துறை வரை மக்கள் அனை­வரும் எங்கும் போகலாம். வரலாம். பேசலாம். கட்­டுப்­பா­டுகள் இல்லை. பத்­தி­ரிகை தணிக்கை இல்லை. பத்­தி­ரி­கை­யா­ளர்­களின் பின்னால் யாரும் செல்­வ­தில்லை. அச்­சுறுத்த இல்லை. இதுதான் இலங்­கையின் நிலைமை. எனவே பொய்­யான ஆர்ப்­பாட்­டங்­களை இங்கு செய்­யாமல் இலங்­கைக்கு வந்து உண்மை நிலை­மையை பாருங்கள்.
இன்­னும் குறை­பா­டுகள் இருக்­கலாம். அவற்றை எமக்கு சுட்­டிக்­காட்­டுங்கள். வீதி­க­ளுக்கு அருகில் இருந்து கூச்­ச­லி­டு­வதன் மூலம் எத­னையும் சாதிக்­கவோ வெற்­றிக்­கொள்­ளவோ முடி­யாது.
கேள்வி நல­லி­ணக்­கத்­துக்­காக நீங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் கஷ்­டப்­ப­டு­கின்­றீர்கள். ஆனால் பாரிய தடைகள் இருப்­ப­தாக தெரி­கின்­றதே?
பதில் நாட்­டுக்குள் அவ்­வாறு பாரிய தடைகள் இல்லை. இன­வா­தத்தை தூண்­டுவோர் சிறிய குழு­வினர். ஆனால் அவர்­களின் குரல் உயர்த்த காட்­டப்­ப­டு­கின்­றது. அவர்கள் சிறு குழு­வி­ன­ராக இருந்­தாலும் அவர்­களின் சத்தம் பெரி­தாக இரு­க­கின்­றது. அதனால் அந்த சிறி­ய­ள­வி­லான இன­வாதம் பெரி­தாக இருக்­குமோ என பலர் எண்­ணு­கின்­றனர்.
ஆனால் இந்த சிறிய இன­வாத குழு­வினர் இலங்­கையை மீண்டும் பின்­ன­டைவை நோக்கி கொண்டு செல்ல முயற்­சிக்­கின்­றனர். இன்று தெற்­கிலும் இன­வா­தத்தை கையில் எடுத்து அர­சியல் செய்ய முயற்­சிக்கும் சாத்­தான்கள் உள்­ளன. அதே­போன்று வட­க­கிலும் இன­வா­தத்தை கையில் எடு:த்து அர­சியல் செய்ய சிலர் முயற்­சிக்­கின்­றனர். முஸ்லிம் மக்­க­ளுக்­குள்ளும் இன்று ஒரு­சிலர் இன­வா­தத்தை கையில் எடுத்­துள்­ளனர்.
ஆனால் இந்த நாட்டின் பெரும்­பா­லான மக்கள் மத்­தி­யஸ்த நிலைப்­பாட்­டுடன் அர­சாங்­கத்­துக்கு பாரிய ஆத­ரவை வழங்­கி­வ­ரு­கின்­றனர். 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் வர­லாற்றில் முதற் தட­வை­யாக அனைத்து மக்­களும் ஆத­ரவு வழங்­கிய தலைவர் ஒருவர் தெரி­வானார்.
தமிழ், முஸ்லிம், சிங்­கள பௌத்த மக்கள் அனை­வரும் இணைந்து ஜனா­தி­ப­தியை ஆத­ரித்­தனர். எனவே பெரும்­பா­லான மக்கள் இன­வாத போக்­கின்றி மிகவும் அமை­தி­யான முறையில் அர­சாங்­கத்­துக்கு பாரிய ஆத­ரவை வழங்­கி­வ­ரு­கின்­றனர். எனவே இன­வா­திகள் கத்­தி­னாலும் நாங்கள் பயப்­ப­ட­மாட்டோம். இலங்­கையில் இனங்­க­ளுக்கு இடையி­லான நல­லி­ணக்­கமும் ஒற்­று­மையும் இன்றி எதிர்­காலம் இல்லை.
சிங்­கப்பூர் போன்ற நாடுகள் எவ்­வாறு முன்­னேற்­ற­ம­டைந்­தன என்­ப­தனை நாம் சிந்­தித்துப் பார்க்­க­வேண்டும். எம்­மை­விட பின்னால் நின்ற நாடுகள் இன்று பாரிய முன்­னே­ற­றத்தை அடைந்­துள்­ளன. இதற்கு என்ன காரணம்?
நாட்டின் இன­வாத பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு முயற்­சித்­த­போதும் அனைத்து எமது தலை­வர்­களும் இன­வா­தி­களின் குர­லுக்கு அடி பணிந்­தார்கள். அது இறு­தியில் யுத்­த­மாக மாறி­யது. எனவே இப்­போ­தா­வது வர­லாற்றில் பாடங்­களை கற்று இலங்­கை­யர்கள் என்ற வகையில் தெற்­கா­சி­யாவில் சிறந்த நாடாக முன்­னே­ற­வேண்டும். நிரந்­தர சமா­தா­னத்தை நாட்டில் ஏற்­ப­டுத்த வேண்டும். இதற்கு இனங்­க­ளுக்கு இடையில் ஒற்­று­மை­யும் நல­லி­ணக்­கமும் அவ­சி­ய­மாகும். அத­னால்தான் நான் கஷ்­டப்­ப­டு­கின்றேன். காரணம் நாம் என்ன செய்­தாலும் மக்­க­ளுக்கு இடையில் ஒற்­றுமை இல்­லா­விடின் இந்த நாட்­டுக்கு எதிர்­காலம் இல்லை.
கேள்வி: ஆனால் உங்கள் அர­சாங்­கமும் இன­வா­தி­க­ளுக்கு அஞ்­சு­கன்­றதே?
பதில்: இல்லை. நாங்கள் இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­வி்­லலை.
கேள்வி பய­மு­றுத்­து­கின்­ற­னரே?
பதில் இன­வா­திகள் பய­மு­றுத்­தி­னாலும் நாங்கள் பயப்­ப­ட­மாட்டோம். பயப்­பட தேவை­யு­மில்லை. அது­மட்­டு­மன்றி கடந்த காலத்தில் நாங்கள் இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­வில்லை என்­ப­தனை நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்ளோம். நாங்கள் இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­வி்ல்லை. இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­மாட்டோம் என்­ப­தனை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இன்று உறு­தி­யாக காண்பித்துவருகின்றனர். கடந்த இரண்டு வரு­டங்­களில் இதனை எமது அர­சாங்கம் நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்­ளது. இன­வா­தத்­துக்கும் அடிப்­படை வாதத்­துக்கும் எவ்­வி­த­மான இடமும் எமது நாட்டில் இல்லை என்­ப­தனை தௌிவாக கூறு­கின்றேன்.
கேள்வி நல­லி­ணக்க செயற்­பாட்டின் இறுதி அங்­க­மாக தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விடயம் காணப்­ப­டு­கின்­றது. அந்தத் தீர்வை காண்­ப­தற்கு இன­வா­திகள் குழப்­பு­வார்கள் போன்று தெரி­கின்­றதே?
பதில் நிச்­ச­ய­மாக செல்வோம். நான் முன்னர் கூறி­ய­து­போன்று பழைய அர­சியல் சாத்­தான்கள் இன்னும் தனது வேலையை காட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இறந்த பின்­னரும் பேய்­க­ளாக வந்து தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். குழப்­பு­கின்­றனர். இன­வா­தத்தை வைத்து முன்­னேற முயற்­சிக்­கின்­றனர். ஆனால் அந்த இன­வா­தத்தை மக்கள் நிரா­க­ரிக்­கின்­றனர். அவ்­வாறு நிரா­க­ரிக்கும் மக்கள் மிக அதி­க­மாகும்.
கேள்வி தவ­றான வெளிவி­வ­கார கொள்­கையை முன்­னெ­டுப்­ப­தாக உங்கள் மீது குற்­றச்­சாட்டு உள்­ளதே,
பதில் அந்தக் குற்­றச்­சாட்டு எந்த அடிப்­ப­டையில் வரு­கின்­றது என்று தெரி­ய­வில்லை. இன்று இலங்­கை­யா­னது உலகின் அனைத்து நாடு­க­ளு­டனும் சிறந்த உறவை பேணு­கின்­றது. இலங்­கையை இன்று உலகம் நாடு­கின்­றது. சீனா, அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள், இந்­தியா, ரஷ்யா என அனைத்து நாடு­க­ளு­டனும் இணைந்து செயற்­ப­டு­கின்றோம். இந்த யுகத்தில் முதற்­த­ட­லை­யாக ஜனா­தி­பதி ரஷ்­யா­வுக்கு அரச விஜ­யத்தை மேற்­கொள்­கின்றார். எனவே இதனை ஒரு பக்கம் சார்ந்­தது என்று எவ்­வாறு கூற முடியும். இது பொறா­மையின் வௌிப்­பாடு. கடந்­த­கா­லத்தில் சர்­வ­தே­சத்­திடம் இருந்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட தரப்­பினர் இவ்­வாறு கூறு­கின்­றனர்.
கேள்வி அம்­பாந்­தோட்­டையில் 15000 ஆயிரம் ஏக்கர் காணியை சீனா­வுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பு முழு நாட்டுக்கும் பாதகமானது என்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில் இந்த எதிர்ப்பை வௌியிடுகின்றவர்கள் யார்? உறுதிபத்திரத்தின் ஊடாக அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்க முன்வந்தவர்களே இதனை கூறுகின்றனர். இந்த நாட்டு மக்களுக்கு பொருளாதார முன்னேற்றமே அவசியமாகும். அது அம்பாந்தோட்டையில் சீனாவா? திருகோணமலையி்ல் இந்தியாவா, ? இல்லாவிடின் மற்றுமொரு இடத்தில் அமெரிக்காவா? என்பது சிக்கல் அல்ல. முன்னேற்றமே அவசியமாகும்.
எமது நீதித்துறையின் சுயாதீனம் காரணமாக பொருளாதார செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுப்பது இலகுவாக இருக்கின்றது. முதலீடுகளுக்கு சிறந்த சூழல் உள்ளது. எமக்கு ஏற்கனவே இந்தியா பாகிஸ்தனுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளது. தற்போது சீனா சிங்கப்புர் மலேஷியா போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்யவுள்ளோம்.