ஞாயிறு, 1 ஜனவரி, 2017

தொகுதிவாரி முறைத் தேர்தல் அறிமுகம்தொகுதிவாரி முறைத் தேர்தல் அறிமுகம்


நம்மில் பலருக்கு நன்கு பரிச்சயம் இல்லாத தொகுதிவாரி தேர்தல் முறை இனிவரும் காலங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதற்கான சட்டத் திருத்தம், அரசியல் யாப்பு மாற்றம் அல்லது திருத்தம் இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை எதிர்த்து பிக்குகள் நாட்டில் குழப்பத்தை உருவாக்கப் பார்க்கின்றார்கள். இந்த பிக்குகளின் பின்னால் சட்டம் தெரிந்த அமைச்சர் ஒருவர் இயங்கி வருகின்றார்.
இந்த புதிய சட்ட திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போது ஒரு குழப்பத்தை உருவாக்க மீண்டும் பிக்குகள் முயல வாய்ப்புள்ளது.
இந்த தொகுதிவாரி தேர்தல் முறை மூலம் தற்போது நடைமுறையில் இருக்கின்ற 225 எம்பிக்கள் 275 ஆக அதிகரித்து மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் சற்று அதிகரித்து எம்.பி.க்களும் அதிகரிக்கப்படவுள்ளனர்.
இந்த தொகுதிவாரி முறைமையை கொண்டு வரும் நோக்கோடு தொகுதி நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்படவுள்ளது.
இந்தக் குழு விரைவில் செயலில் ஈடுபடவுள்ளது. இதில் ஒரு உயர் தகவல் தொகுதி நிர்ணயம் செய்யப்படும் போது சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தொகுதிவாரி முறைமையால் சிறுபான்மை மக்களின் வாக்குச் சிதறாமல் அவர்களின் எம்.பி.க்கள் ஆசனம் உறுதிப்படுத்தப்படும்.
அந்த வகையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத் தொகுதிவாரி முறைமை அதன் சாதக பாதகம் பற்றிய ஒரு ஆய்வை நாம் செய்துள்ளோம்.
பொதுவாக கிழக்கு மாகாணத்தில் மட்டும்தான் சில சிக்கல்கள் வரலாம். அந்த சிக்கல்களை முஸ்லிம் காங்கிரஸ் தான் உருவாக்கும். பொத்துவில், கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் தமிழர் தரப்பு கோரும் தொகுதி பங்கீட்டில் ஹக்கீம் தரப்பு குறுக்கே நிற்கும்
தொகுதிவாரி முறைமை பற்றிய ஆய்வை அம்பாறையில் இருந்து ஆரம்பித்து பார்ப்போம். கல்முனையில் ஹக்கீம் தரப்பு தமிழர்களுக்கு குறுக்கே நிற்காமலும் தமிழ் கூட்டமைப்புடன் மோதிக் கொள்ளாமலும் ஒரு சமரசம் இருந்தால் கிழக்கில் முஸ்லிம்களுக்கு நன்மை உண்டு.
தனக்கு கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் தமிழர் தரப்புக்கு கிடைக்க கூடாது என்கின்ற எண்ணம் மாற வேண்டும்.
நமக்கு நமது பங்கு கிடைத்தால் சரிதானே. இந்த நிலைமாற வேண்டும் என்ற நோக்கில்தான் முன்கூட்டியே இந்த ஆய்வை மக்கள் மத்தியில் கொண்டு வரவுள்ள