ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கொழும்பு டயரி !

கொழும்பு டயரி !

மறைந்த எனது இலக்கிய நண்பர்" திரு.திக்கவயல் தர்மு" சிரித்திரன்  ஆசிரியரின் சிஷியன் அவர்களோடு பல நாள்கள் நாட்டின் பயங்கரமான சூழ் நிலைகள் நிலவியபோது ரவுண்டப் நேரங்களில்  பாதை தடைப்பட்டு ,பயணங்கள் முடிவடையாது போகும்போது,எங்கும் அசையமுடியாத சூழலில் இருவரும் சந்தித்து, சந்தி சிரித்த அரசியலை நாங்கள் இருவரும் சேர்ந்து ரசித்து கடித்துக் குத்றியவைகளில் சிலது உங்களின் வெறுப்புக்கு!

ஜெனிவா: இலங்கை அரசாங்கத்தின் பொழுதுபோக்கு மேசை.

பேச்சு வார்த்தை : ஓட்டைப் பாத்திரம் ஒன்றைவைத்திருந்து தண்ணீர் விடுக எனக்கூறப்படும் இடம்.

திருமலை:முன்பு தமிழ்மன்னர்களின் வீரம் விளைந்த பூமி.தமிழர்கள் ஆண்ட மண்.இப்போது தமிழர்கள் அகதியாக தமிழ்நாடு போகும் பூமி.

கிளை மோர் :once more,no more   சொல்ல  முடியாத பொருள்

இராமேஸ்வரம்:இலங்கை அகதிகளால் புண் பட்டுப்போன     மண்.

இந்தியா:இலங்கையின் பார்வையில் இலங்கைக்கு அருகில் இருக்கும் சிறிய
நாடு.

லொட்ஜ்:பயங்கரவாதிகள் அதிகம் கூடுவதால்.இலங்கைப் படைகள் கஷ்டப்பட்டுக் கைது செய்யும் இடம்,

ஒஸ்லோ :ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்தல் தீர்வு வந்து விடுமோ என்ற பயத்தால்,பார்வையாலே தீ மூட்டும் இடம்.#இன்னும் வரும்#