ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பகிரங்க இனவாதிக்கு சிறையில் பிறந்த ஞானம்..! - தேரர்களும் சிங்கள அமைப்புகளும் ஆபத்தில்..!


பகிரங்க இனவாதிக்கு சிறையில் பிறந்த ஞானம்..! - தேரர்களும் சிங்கள அமைப்புகளும் ஆபத்தில்..!


அனைவரின் தலையிலும் இடி விழும், என்னை விற்று பிழைக்க யாரும் முயலவேண்டாம் என இன வாதம் பரப்பிய குற்றச்சாட்டில் சிறை சென்று வந்த டான் பிரசாத் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார். காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
இது வரையில் பகிரங்கமாக வெட்டுவேன், கொல்லுவேன் என கருத்து வெளியிட்டு வந்த டான் பிரசாத் விடுதலையான பின்னர் வெளியிட்டுள்ள கருத்துகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அவர் குறித்த காணொளியின் தேரர்களுக்கு எதிரான ஆதாரமும் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்துகளாவன,
ஜினாநந்த தேரர் இராவணபலய உட்பட பல அமைப்புகளுடன் என்னை விடுதலை செய்ய பாரிய உதவிகளைச் செய்ததாக தெரித்துள்ளார். தேரரே தயது செய்து பொய்களை பரப்பாதீர்கள், எப்போது எனக்கு உதவி செய்தீர்கள்.
ஒன்றை கூறுகின்றேன் என்னை விற்று மட்டும் பிழைக்க முயல வேண்டாம், அனைத்து பக்கமும் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். மேலுள்ளவன் பார்த்து கொண்டு தான் இருக்கின்றான் ஏமாற்றியவர்கள் தலையில் இடி விழும் என்பது நிச்சயம்.
அதே போன்று அனைத்து சிங்கள அமைப்புகளுக்காக பல சேவைகளைச் செய்தவன் நான். சிங்க லே அமைப்பிற்காக சிவனொளி பாத மலையில் சிலை வைக்கவும் சென்றேன்.
ஆனால் நான் சிறை சென்றபோது எந்த அமைப்பும் என்னை பார்க்கக் கூட வரவில்லை. என்னை வைத்து பணம் பார்க்கவே அனைவரும் முயன்றார்கள்.
என்னை சாதகமாக பயன்படுத்தி என்ன சாதித்து கொள்ள நினைக்கின்றீர்கள், உங்கள் திட்டம் என்ன என்பது மட்டும் எனக்கு தெரியவில்லை. என்னை வைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டீர்கள் என்றால் அப்படியே நிறுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் என்னை வைத்து வீரர்களாக எவரும் முயற்சி செய்ய வேண்டாம். இனிமேல் என்னை வைத்து விளையாடாதீர்கள். இனி யாரும் எனது புகைப்படங்களையோ பெயரையோ உபயோகிக்க வேண்டாம்.
உங்கள் அமைப்புகளால் தான் நான் சிறை சென்றேன் அதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன எனவும் டான் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இவர் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் தேரர்களுக்கு எதிராகவும், இனவாதத்தினை தூண்டியவர்கள் யார் எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக நல்லாட்சி இனவாதிகளை முற்றாக அழித்து அகற்ற திட்டமிட்டு விட்டதாகவே குறிப்பிடப்படுகின்றது.
இப்போது புதிதாக பௌத்தம் காக்க புறப்பட்டுள்ள சிங்கள அமைப்புகளுக்கு எதிராக அரசு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.