'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
புதன், 5 அக்டோபர், 2016
செவ்வாய், 4 அக்டோபர், 2016
ஞாயிறு, 2 அக்டோபர், 2016
இலங்கை அரசியல் யாப்பு வரலாற்றுச் சுருக்கம்(01)- மாணவர்களுக்காக
இலங்கை அரசியல் யாப்பு வரலாறு..
இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கி.மு 6 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது.
எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.
16ஆவது நூற்றாண்டில் நாட்டின் சில கடலோரப் பகுதிகள் போர்த்துக்கேய, ஒல்லாந்திய பிரித்தானியப் பேரரசுகளின் கீழ் இயங்கின.
அனுராதபுரத்திலிருந்து கண்டி வரை 181 அரசர்களும் அரசிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்துள்ளனர்.
1815க்குப் பிறகு முழுமையான நாடும் பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியின் கீழ் வந்தது.
இலங்கை இந்து சமுத்திர பிராந்தியத்தின் கீழ் இருக்கும் ஒரு சிறிய நாடடு என்றாலும், இது மிக நீண்ட காலமாக வெளிநாட்டவர்கலினால் ஆட்சி செய்யபட்டது.
- 1505-1658 வரை போர்த்துகேயரினாலும்
- 1658-1796 வரை ஒல்லந்தரினாலும்
- 1796-1948 வரை ஆங்கிலேயரினாலும் ஆட்சி செய்யப்பட்டது.
போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தரை பொறுத்த வரை அவர்கள் பெரும்பாலும் அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை.
ஆனால் ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் அரசியலில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.
இந்த வகையில் இலங்கையில் அவர்களே அரசியல் யாப்பினை முதலில் இலங்கைக்கு அறிமுகம் செய்தவர்கள் ஆவார்கள்.
இலங்கையில் ஆங்கிலேயரினால் அறிமுகப்படுத்த பட்ட அரசியல் யாப்புக்கள்
1.கோல்புறுக் (1833)
2.குறு மக்கலம் (1912)
3.மனிங் (1921)
4.மனிங்-டிவன்சயர் (1924)
5.டொனமூர் (1931)
6. சோல்பரி (1947)
இலங்கையறினால் உருவாக்க பட்ட அரசியல் யாப்புக்கள்.
1.1ம் குடியரசு அரசியல் அமைப்பு (1972)
2.2ம் குடியரசு அரசியல் அமைப்பு (1978)
தொடர்ச்சி அடுத்த வாரம்...நன்றி தமிழ் வின்
லேபிள்கள்:
இலங்கை அரசியல் யாப்பு வரலாற்றுச் சுருக்கம்
சனி, 1 அக்டோபர், 2016
பொது விவேகம்,பொது உளர்ச் சார்பு,பொது அறிவு
பொது விவேகம்,பொது உளர்ச் சார்பு,பொது அறிவு
பொது விவேகம்,பொது உளர்ச் சார்பு,பொது அறிவு ,இப்படி பரீட்சைகளுக்கு
ஆயத்தம் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று நேரம் ஒன்றரை மணித்தியாலங்களுக்குள் முழுக் கேள்விகளுக்கும் விடை இறுக்க வேண்டும்
கூடுதலானவர்கள் பரிட்சைப் பேப்பரை வாசிப்பதற்கே நேரம் காணாது என்பர் உங்களுக்கு பயிற்சி செய்வதற்கு என்றே ஒரு தளம் உள்ளது அதில்
பொது அறிவு கூடுதலாகவும் தமிழ் அறிவும் கொட்டிக் கிடக்கிறது நேரமும் உங்களுக்கு அறியக் கூடியதாக உள்ளது உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டால் உங்களுக்கு ஒரு கடவுச் சொல் கிடைக்கும் அதை அந்ததளத்திற் நீங்கள் உள் செல்வதற்கு பயன்படுத்தினால் போதும் இதற்கு
குறுக்கெழுத்துப் போட்டி அனுபவம் கட்டாயம் தேவை
லேபிள்கள்:
பொது அறிவு,
பொது உளர்ச் சார்பு,
பொது விவேகம்
பொது உளர்ச் சார்பு
பொது உளர்ச் சார்பு
பொது உளர்ச் சார்பு மின் புத்தக வடிவில் விருப்ப மாணவர்கள் கீழ்க் காணும் இணைப்பில் சென்று வாசிக்கலாம் வருங்கால பரிட் சைகளுக்கு ஏற்ற ஒரு அருமையான புத்தகம் ஆக்கியோன் ASM பலீல் அனுசரணை நூலகம்
மொழி மூலம் தமிழ் மேற்படி, புத்தகம் எங்காவது விற்பனைக்கு இருக்குமானால் தயவு செய்து பின்னூடடமிடுங்கள் தரமான ஒரு புத்தகம்,நான் வாசித்த தமிழ் பொது உளர்ச் சார்பு புத்தகங்களில்
இதை கிளிக் செய்யுங்கள்
லேபிள்கள்:
உளர்ச்,
சார்பு மொழி மூலம்,
தமிழ்,
பொது
வெள்ளி, 30 செப்டம்பர், 2016
தமிழ் கடல் திரு நெல்லைக் கண்ணன் ஐயா அவர்களின் பேச்சு
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் தமிழ் கடல் திரு நெல்லைக் கண்ணன் ஐயா அவர்களின் பேச்சு கேட்டுப் பாருங்கள்
திங்கள், 26 செப்டம்பர், 2016
ஞாயிறு, 25 செப்டம்பர், 2016
கண்ணீர் விட்ட ஒரு திரைப் படம் கர்ணன்
கண்ணீர் விட்ட ஒரு திரைப் படம் கர்ணன் நான் மாணவனாக இருந்தபோது
எதுவும் அறியாத வயது என்றாலும்,எதோ ஒன்று பாடசாலை மாணவர்கள் அனைவரையும் அன்று அழ வைத்த திரைப் படம்.இன்னும் என் நெஞ்சில் நிறைந்துள்ளதுநீங்களும் பாருங்கள் பழைய நினைவுகள் என்றும் பசுமையானது.
லேபிள்கள்:
கண்ணீர் விட்ட ஒரு திரைப் படம் கர்ணன்
இலங்கையில் மனிதஉரிமைகள்
1.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
பாராளுமன்றத்தினால் 1996ம் ஆண்டின் 21ம் இலக்க மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 1996ம் ஆண்டில் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
2.இலங்கையில் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவை நிறுவுவதன் நோக்கம் யாது?
பரிஸ்கோட்பாடுகளின் அடிப்படையில் தேசிய மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இது தாபிக்கப்பட்டது.
3.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் “மனிதஉரிமைகள்” என்பது எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது?
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம் ஆகியவற்றின கீழ் முன்மொழியப்பட்ட உரிமைகளே இவையாகும்.்
4.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் “அடிப்படை உரிமைகள்” என்றால் என்ன?
அடிப்படை மனிதஉரிமைகள் எனப்படுபவை, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட சட்டங்கள் ஆகும்.
5.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான செயற்பாடுகள் யாவை?
• அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளும் புலனாய்வும்
• இலங்கை அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படைஉரிமைகளுடன் அரசின் நடைமுறைகள் ஒத்திசைந்து செல்வதை உறுதிப்படுத்தல்
• அடிப்படை உரிமைகளுடன் இணங்கிப் போகக்கூடியவாறு சட்டவாக்கங்கள், நிர்வாக நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கல்
• இலங்கையின் சர்வதேச மனிதஉரிமைகள் கடப்பாட்டிற்கு உட்பட்டதாக தேசிய சட்டங்களையும் நிர்வாக நெறிமுறைகளையும் உருவாக்குவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு சிபாரிசு வழங்கல்
• சர்வதே மனித உரிமை உடன்படிக்கைகளையும் ஏனைய சர்வதேச கருவிகளையும் ஏற்று அங்கீகரிப்பது என்பது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கல்
• நாட்டில் மனிதஉரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்
6.ஆணைக்குழுவுக்கு ஒருவர் எத்தகைய முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்?
அரசியலமைப்புச் சட்டத்தின் 3ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அல்லது அவை மீறப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தால் முறைப்பாடு தெரிவிக்கலாம்.
7.ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டைத் தெரிவிக்கக்கூடிய நபர்கள் யார்?
• பாதிக்கப்பட்ட நபர்
• குழுவினர்
• பாதிக்கப்பட்ட நபரை அல்லது குழுவினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் நபர் அல்லது குழுவினர்
எந்த மொழியிலும் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாமா?
சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்.
8.சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்காவிட்டாலும் அது தொடர்பாக ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா?
ஆம், தன்னுடைய சொந்தப் பிரேரணையின் அடிப்படையில் ஆனைக்குழு அடிப்படை மனிதஉரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை விசாரணை செய்யலாம்.
9.உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆற்றுப்படுத்த முடியுமா?
ஆம், சிலவேளைகளில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தும்.
10.முறைப்பாடு ஒன்றில் எத்தகைய தகவல்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும்?
• எத்தகைய உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
• யாருடைய உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
• மீறலுக்குக் காரணமானவர்கள்
• எந்தவிதமாக உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
• எப்பொழுது, எவ்விடத்தில் மீறல்கள் இடம்பெற்றுள்ளன?
• எத்தகைய பரிகாரங்களை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
11.விசாரணைகள் இடம்பெறும்பொழுது சட்டப் பிரதிநிதிகளைக் கூட்டி வருவது கட்டாயமானதா?
இல்லை. சட்டப் பிரதிநிதிகளைக் கூட்டி வருவது கட்டயமல்ல
12.மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் ஆணைக்குள் உள்ளடங்காத முறைப்பாடுகளின் நிலை என்ன?
அரசாங்கத்தினால் தாபிக்கப்பட்ட உரிய பரிகார நிறுவனங்களுக்கு இந்த முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்படும்.
13.காலம் கடந்த மிகவும் பழைய அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளமுடியுமா?
தகுந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டே காலம் கடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்
14மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சேவைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியுமா?
ஆம், அனைத்து சேவைகளையும் ஆணைக்குழு இலவசமாகவே வழங்குகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






