ஞாயிறு, 2 அக்டோபர், 2016

இலங்கை அரசியல் யாப்பு வரலாற்றுச் சுருக்கம்(01)- மாணவர்களுக்காக



இலங்கை அரசியல் யாப்பு வரலாறு..
இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கி.மு 6 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது.
எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.
16ஆவது நூற்றாண்டில் நாட்டின் சில கடலோரப் பகுதிகள் போர்த்துக்கேய, ஒல்லாந்திய பிரித்தானியப் பேரரசுகளின் கீழ் இயங்கின.
அனுராதபுரத்திலிருந்து கண்டி வரை 181 அரசர்களும் அரசிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்துள்ளனர்.
1815க்குப் பிறகு முழுமையான நாடும் பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியின் கீழ் வந்தது.
இலங்கை இந்து சமுத்திர பிராந்தியத்தின் கீழ் இருக்கும் ஒரு சிறிய நாடடு என்றாலும், இது மிக நீண்ட காலமாக வெளிநாட்டவர்கலினால் ஆட்சி செய்யபட்டது.
  • 1505-1658 வரை போர்த்துகேயரினாலும்
  • 1658-1796 வரை ஒல்லந்தரினாலும்
  • 1796-1948 வரை ஆங்கிலேயரினாலும் ஆட்சி செய்யப்பட்டது.
போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தரை பொறுத்த வரை அவர்கள் பெரும்பாலும் அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை.

ஆனால் ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் அரசியலில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.
இந்த வகையில் இலங்கையில் அவர்களே அரசியல் யாப்பினை முதலில் இலங்கைக்கு அறிமுகம் செய்தவர்கள் ஆவார்கள்.
இலங்கையில் ஆங்கிலேயரினால் அறிமுகப்படுத்த பட்ட அரசியல் யாப்புக்கள்

1.கோல்புறுக் (1833)
2.குறு மக்கலம் (1912)
3.மனிங் (1921)
4.மனிங்-டிவன்சயர் (1924)
5.டொனமூர் (1931)
6. சோல்பரி (1947)
இலங்கையறினால் உருவாக்க பட்ட அரசியல் யாப்புக்கள்.
1.1ம் குடியரசு அரசியல் அமைப்பு (1972)
2.2ம் குடியரசு அரசியல் அமைப்பு (1978)


தொடர்ச்சி அடுத்த வாரம்...நன்றி தமிழ் வின் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள