புதன், 31 மார்ச், 2010

.நீங்களும் ஒரு சாமியாராக?





.நீங்களும் ஒரு சாமியாராக? என்ன தலைப்பே,ஒரு வித்தியாசமாக இருக்கா,வேறு ஒன்றுமில்லை.நம்ம நாட்டில் செய்தா அருள், வெளி நாட்டில் செய்தா தந்திரம்.நமது நாட்டில் இப்படிச் செய்தா ஒரு கூட்டமே, அவர் பின்னால்,மதிப்பு பல கோடிகள் தேறும்.
நீங்களும் முயற்சி செய்யுங்க,சாமியா? ஆசாமியா? உங்களைப் பின்தொடர்பவர்கள்
தீர்மானிக்கட்டும். எக்க சக்கமான தந்திரங்கள், முயற்சி பண்ணிப் பாருங்கள், நீங்களும்
ஒரு ........இணைப்புக்கு  


பிடிச்சி இருந்த பின்னூட்டத்தில் தெருவியுங்க.


அன்புடன்,!......

செவ்வாய், 30 மார்ச், 2010

அமெரிக்காவின் பார்வையில்,கூகுளும் சீனாவும்.



அமெரிக்காவின் பார்வையில்,கூகுளும் சீனாவும். 


மூடிற்றுப், போய்யா! 






எல்லாம் சரியாத்தான் இருக்கு,இருந்தும், ஏதோ ஒரு!.......






நல்ல சுருட்டு,ஆனா,புகைதான் ஜாஸ்தி .......






 எல்லாம் செய்து முடிச்சி,நம்ம கிட்ட வந்துதான் ஆகணும்


எப்படி படம் புடிச்சிருக்கா?போடுங்க பின்னூட்டத்தை




அன்புடன்,!.
       

திங்கள், 29 மார்ச், 2010

இலங்கைக் சரித்திரம்.-29A


தவறுக்கு வருந்துகிறேன், புதிய பக்கத்திற்குப் பதிலாக பழைய பக்கமே,இடுகையிடப்
பட்டுவிட்டது.


அன்புடன்,!.....

Posted by Picasa

இலங்கைக் சரித்திரம்.-29


இலங்கைக் சரித்திரம்.1883   ஆம்  ஆண்டு  யாழ்ப்பாணம்.மானிப்பாய் திரு.ஆ. முத்து தம்பிப்
பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப் பட்டது.இதை முதல் பக்கத்தில் இருந்து
வாசிக்க  இங்கே அழுத்தவும்.எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய பக்கத்தில் மேல் மௌசை
வைத்து அழுத்தவும்.எப்படி இலங்கையின் சரித்திரம் இருந்தது என்பதை இலங்கை வாழ்
தமிழர்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.யாழ்ப்பாண நூலகம் எரியாமல் இருந்திருந்தால் இவைகளை நமது இளம் சந்ததியினர் அங்கு போய் வாசித்து அறிந்திருக்கலாம்.இப்படியான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே யாழ்.
நூலகம் திட்டமிட்டு அழிக்கப் பட்டதோ?

தொடர்ந்து வாசியுங்கள்.உங்கள் எண்ணத்தை பின்னூட்டமாக இடுங்கள்.

அன்புடன்,!.....

Posted by Picasa

ஞாயிறு, 28 மார்ச், 2010

ஆங்கிலம் பயில அரியதோர் இணையதளம்!








ஆங்கிலம் பயில அரியதோர் இணையதளம் 
ஆங்கிலத்தை பயில்வோருக்கும்,தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற 
வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும்,தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தைப் பட்டை தீட்டிக்கொள்ள நினைப்பவர்களுக்கும், சிறந்ததோர் இணைய தளம்.இலகு ஆங்கிலத்தில்,
சகலருக்கும் எளிதில்  விளங்கக்கூடிய முறையில்,எளிய விளக்கங்களுடன்.B ,B .C .உலக சேவையில் இருந்து,உங்கள் காலடியில் விரும்பினால்  தரவிறக்கமும்  செய்து கொள்ளலாம்.
இணைய தளத்திற்குச் செல்ல இங்கு அழுத்தவும்.
எல்லோருக்கும் இந்தச் செய்தி பிடித்திருக்கும் என நினைக்கிறேன். 




அன்புடன்,!......... 
                                    

வெள்ளி, 26 மார்ச், 2010

டீலா? நோ! டீலா!!

நகைச்சுவை, கற்பனைக் கதை.




"இலங்கையிலுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது,வேலையில்லாப் பிரச்சனை,இதை முதல் இல்லாமல் செய்துவிட்டால்,ஏனைய பிரச்சனைகளையெல்லாம்,கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்,வேலையற்றிரு ப்போரின்,கணிசமான அளவினரின்,தொகையைக் குறைத்தால்,இலங்கையின் இருப்போர்களின் வாழ்க்கை வளம்பெறும்,இலங்கையில் மிதமாக உள்ள ஊழியத்தை இருக்கின்ற வளத்தோடு இணைத்து,வேலையில்லாப்
பிரச்சினைக்கு முடிவுகாணலாம்" என்று தனதுரையை முடித்தார் இலங்கையின் சனாதிபதி.

வியாழன், 25 மார்ச், 2010

உங்கள் ஜாதகம் தமிழில்.

உங்கள் ஜாதகம் தமிழில்








செவ்வாய், 23 மார்ச், 2010

தேர்தல் பேச்சு.



தேர்தல் கூட்டங்கள் தூள் எழும்புது -தேறுதல் 
வார்த்தைகள் கூட்டத்தை தூள் கிளப்புது 
யாரும் இருந்ததில்லை சொந்தத் தொகுதியில்-இவர்கள்   
இருந்ததெல்லாம் இலங்கைக்கு  வெளியில். 

திங்கள், 22 மார்ச், 2010

இலங்கைசரித்திரம் -28

இலங்கைக் சரித்திரம்.1883   ஆம்  ஆண்டு  யாழ்ப்பாணம்.மானிப்பாய் திரு.ஆ. முத்து தம்பிப்
பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப் பட்டது.இதை முதல் பக்கத்தில் இருந்து
வாசிக்க  இங்கே அழுத்தவும்.எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய பக்கத்தில் மேல் மௌசை
வைத்து அழுத்தவும்.எப்படி இலங்கையின் சரித்திரம் இருந்தது என்பதை இலங்கை வாழ்
தமிழர்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.யாழ்ப்பாண நூலகம் எரியாமல் இருந்திருந்தால் இவைகளை நமது இளம் சந்ததியினர் அங்கு போய் வாசித்து அறிந்திருக்கலாம்.இப்படியான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே யாழ்.
நூலகம் திட்டமிட்டு அழிக்கப் பட்டதோ?

ஞாயிறு, 21 மார்ச், 2010

இலங்கை தந்த இலக்கியம்.



இலங்கையின்,தமிழ் இலக்கிய வரலாற்றை, மு.வரதராசனார் ஐயா ஆராய்ந்து  
இருக்கிறார்.அவர் பார்வையில் "இலங்கை தந்த இலக்கியம்".இந்த இலங்கை இன்று இருந்தால் எப்படி இருக்கும்? வாசிப்பவர்களின் எண்ணங்களின் இந்தக் கேள்வி கட்டாயம் 
எழும்.இலங்கையில் இருப்பவர்களின் மனதில், நமது, இலங்கையில் இப்படி இருந்த
தமிழனுக்கா இந்தக் கெதி? என்ற ஆச்சரியம் தொக்கி நிக்கும்    


இலங்கை
பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்து வருகிறது இலங்கையின் வட பகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் கிழக்குப்
பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார்.அவர் இயற்றிய ஏழு பாட்டுக்கள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன (ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழைய தமிழச்சொல்.)இலங்கையின் ஆட்சி மொழியாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழே இருந்து வந்தது.
சிங்களவரும் தமிழ் கற்று வந்த்தனர்.சிங்களவரில் சிலர் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளனர்.சிங்கள அரசர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலத்திலும் தமிழிலேயே கையெழுத்து இட்டனர்.ஆகையால்
நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியம் இலங்கையிலும் வளர்ச்சி பெற்று வந்ததில் வியப்பு இல்லை.

இலங்கையின் தமிழ் நூல்களும்,புலவர்களும்.
வட மொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத்தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பவரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும்.ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.
தமிழ் நாட்டில் தல புராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும்
அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன.தமிழ் நாட்டில் கோவை,உலா,
கலம்பகம்,சதகம்,தூது அந்தாதி,முதலான நூல்வகைகள் பெருகிய காலத்தில்
இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன.தக்கினா கைலாச
புராணம்,கோனாசல புராணம்,புலியூர்ப் புராணம்,சிதம்பர சபாநாத புராணம்,
முதலியன இயற்றப்பட்டன சிவராத்திரிப் புராணம்,எகாதாசிப் புராணம் என்பனவும் அங்கு பிறந்தவைகளே. சூது புராணம்,வலைவீசு புராணம் என்பன புதுமையானவை.கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.
கிறிஸ்தவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன.முருகேசு பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை
இயற்றினார்.சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார்.ஊஞ்சல் ஆடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.நவாலீயூர் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப்
பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார்.ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்
முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார்.
அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார்.
கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளை பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகின்றார்கள்.