வார்த்தைகள் கூட்டத்தை தூள் கிளப்புது
யாரும் இருந்ததில்லை சொந்தத் தொகுதியில்-இவர்கள்
இருந்ததெல்லாம் இலங்கைக்கு வெளியில்.
குடும்பம் இருப்பது பெரிய பிரித்தானியாவில்-ஐயா
கூடி இருந்தவர்கள் குடியிருப்பது அவுஸ்திரேலியாவில்
வீடு முழுவதும் விட்டிருப்பது பெரிய வாடகைக்கு-தேர்தலில்
வெண்டால் போயிருவார், ஐயா! ஐரோப்பாவுக்கு
நாடாளவேண்டும் இந்த நாடு நமதாகவேண்டும் -இது
மேடையில் எங்கள் வேட்பாளர் பேசிய பேச்சு ,
போடவேண்டும் இவருக்கல்லோ பொன்னான வாக்கு -அவர்
போய்வர வேண்டும் ஒய்யாரமாய் உலகையே சுற்றி,
எத்தனை வருடமாய் இதுதான் இவர்கள் பேச்சு -இருந்தும்
எவரும் இன்னும் திருந்தவில்ல நடைமுறை யாச்சு
சிந்தனை செய்து பார் செந் தமிழ்த் தமிழா -நாம்
சீராக வாழ்வதெப்போ சீர் தூக்கிமுடிவெடு தமிழா
கவிஞர்,கவியரசு கண்ணதாசன்,அதில் சில வரிகள்,படித்துப் பாருங்கள்
மேடையேறிப் பேசும்போது,
ஆறுபோலப் பேச்சு !
கீழ இறங்கிப் போகும்போது,
சொன்னதெல்லாம் போச்சு!
காசை எடுத்து நீட்டு !
கழுதை பாடும் பாட்டு!
ஆசை வார்த்தை காட்டு!
உனக்கும் கூட ஒட்டு !
எனக்கும் போடுங்க ஒட்டு, இது அரசியலுக்கு இல்ல,எனது இந்தப் பதிவுக்கு!
அன்புடன்.!.....
மேடையேறிப் பேசும்போது,
பதிலளிநீக்குஆறுபோலப் பேச்சு !
கீழ இறங்கிப் போகும்போது,
சொன்னதெல்லாம் போச்சு!
காசை எடுத்து நீட்டு !
கழுதை பாடும் பாட்டு!
ஆசை வார்த்தை காட்டு!
உனக்கும் கூட ஒட்டு !
கண்ணதாசன் கண்ணதாசன் தான்
எப்படியான வரிகள்
இன்னும் எவளவோ நாடகங்கள் அரங்கேற இருக்கின்றன இந்த தேர்தல் மேடையில் பொருத்து இருந்து பாப்போம்
நாம் அடுத்த தேர்தலுக்கும் ஏமாறவே போகிறோம். அப்போ யார் தவறு!
பதிலளிநீக்குஉங்கள் கருத்துடன் ஒத்து வருகிறதா என்று பாருங்கள் (கேளுங்கள்).
பதிலளிநீக்குhttp://www.tubetamil.com/view_video.php?viewkey=8dd67da25a2dcab4ac8f
ஒவ்வொரு தேர்தலிலும் இதுதான் நடக்கிறது ஒருவரும் திருந்தியதாகத் தெரிய இல்லை
பதிலளிநீக்குஒவ்வொரு தேர்தலிலும் இதுதான் நடக்கிறது.
பதிலளிநீக்கு