வெள்ளி, 26 மார்ச், 2010

டீலா? நோ! டீலா!!

நகைச்சுவை, கற்பனைக் கதை.




"இலங்கையிலுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது,வேலையில்லாப் பிரச்சனை,இதை முதல் இல்லாமல் செய்துவிட்டால்,ஏனைய பிரச்சனைகளையெல்லாம்,கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்,வேலையற்றிரு ப்போரின்,கணிசமான அளவினரின்,தொகையைக் குறைத்தால்,இலங்கையின் இருப்போர்களின் வாழ்க்கை வளம்பெறும்,இலங்கையில் மிதமாக உள்ள ஊழியத்தை இருக்கின்ற வளத்தோடு இணைத்து,வேலையில்லாப்
பிரச்சினைக்கு முடிவுகாணலாம்" என்று தனதுரையை முடித்தார் இலங்கையின் சனாதிபதி.



சனாதிபதியின் செயலர் எழுந்து,"இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள்,தங்களிடமுள்ள,திட்டங்களை முன் வைக்கலாம்" என்றார்,வந்திருந்தவர்கள் பல யோசனைகளை முன்வைத்தும் கடைசியாக நீரேந்தும் ஏரி
ஒன்றை பெரிதாகப் புனரமைத்து,அதன் மூலம் விவசாயத்தை முழு மூச்சாகஅபிவிருத்தி செய்து, நன்னீர் மீன் வளப்பில் இளைஞர்களை ஊக்குவிப்பதென்றும்,இதன் மூலம்
வேலையில்லாத் திண்ட்டாடம் ஓரளவேனும் குறைவடையும் என்று  முடிவெடுக்கப்பட்டு
திட்ட மதிப்பீட்டுக் குழுவுக்கு,அறிவிக்கப் பட்டு  ஜனாதிபதியால்   அறிக்கை கோரப்பட்டது .மேற்படி, திட்டத்திற்கு எவ்வளுவு செலவாகுமென்று? அத்துடன் அன்றைய கூட்டத்தொடர் முடிவடைந்தது.


 தொடர்ந்து, திட்ட மதிப்பீட்டுக் குழு தேவையான நிபுணர்களுடன் கலந்துரையாடியும்,விவாதித்தும் ஆராய்ந்தும்,நன்னீர் ஏரித் திட்டத்தை,கட்டி முடித்துச் செயலாக்க, மூன்றரைக் கோடி
அமெரிக்க டொலர்கள், இத் திட்டத்தை முடிப்பதற்கு செலவாகும் மென்று,திட்ட மதிப்புக்
குழுவால் மதிப்பீடு செய்து  முடிவெடுக்கப்பட்டது.மந்திரி சபை இதை ஏற்றுக் கொண்டு,
இதை உடனடியாக செயல்படுத்தத் தொடங்கியது.


"நன்னீர் ஏரித் திட்டம்" விலை மனுக் கோரல்,சர்வதேசங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
மனுக்கோரல் கடைசி நாளும் வந்தது.சகலதையும் எடுத்து,அலசி ஆராய்ந்து,கடைசியாக
ஐந்து நாடுகள் தெரிவு செய்யப்பட்டு,ஒரு நாளைக்கு ஒரு நாடு வீதம்,ஐந்து நாடுகளுக்கும்
ஐந்து நாட்கள் ஒதுக்கப் பட்டது.ஐந்தாவதாக இலங்கையைத் தெரிவு செய்தது நிபுணார்கள்
குழு,தகமைகள் குறைவாக இருந்தாலும் உள்ளூர் நிறுவனம் ஒன்றை ஊக்குவிப்பதன்
அடிப்படையில்,அந்த நிறுவனத்தை தெரிவு செய்தார்கள் நிபுணர்கள் குழு,

முதல் நாள் அமெரிக்கக் கம்பெனியின் நேர்காணல் நடந்ததது, அவர்களிடம்  நேர்காணலில் இருந்த நிபுணர்கள் கேட்டார்கள்,"இந்த நன்னீர் ஏரித் திட்டத்தை
எங்களால் ஒதுக்கப் பட்டுள்ள பணத்தைக் கொண்டு, உங்களால்  கட்டி முடிக்க முடியுமா?"

அமெரிக்க நிபுணர் சொன்னார்," பணம் எங்களுக்குப் பிரச்சனையில்லை, இலங்கையில்
எங்கள் நாட்டின் பெயர் சொல்ல ஒரு கட்டிடம்,இருக்க வேண்டும்,இலங்கை மக்கள்,  அதை காணும் போதெல்லாம்,அமெரிக்க நாட்டின் எண்ணம் வந்தால் போதும்,அதற்கு ஏற்றாற்போல்,எங்களது பணத்தையும் சேர்த்து இந்தத் திட்டத்தை முடித்து தருவதற்கு எண்ணியுள்ளோம்."அன்றார் அவர்
.

அடுத்த நாள் ரசியாவின் நேர்காணல் இடம் பெற்றது,அவரிடமும் அதே கேள்வி கேட்கப்பட்டது.ரசியாவின் நிபுணர்,"தங்களது நாட்டின் கட்டிடக் கலை,உலகறிந்த ஒன்று,
இன்றும் எங்களது நாட்டின் பழைய கட்டிடங்கள் எங்கள் சிறப்பைக் கூறிக் கொண்டே
உள்ளது,அதே போல்,இந்தத் திட்டமும் எங்கள் நாட்டின் பெயர் சொல்லும்.நீங்கள்
உங்களது திட்டத்தை எங்களிடம் பயமில்லாமல் ஒப்படைக்கலாம்."என்று கூறி முடித்தார்

அடுத்தநாள் சீனாக்காரரின் முறை,அழைக்கப்பட்டார் அவரிடமும் இதே கேள்வி கேட்கப்
பட்டது,"தாங்கள்,தற்பொழுதும்,இலங்கையில்,பாலங்கள்,வீதிகள்,விமான ஓடுபாதைகள்,
அமைத்துக் கொண்டிருப்பதாகவும்,நன்னீர் ஏரித் திட்டத்தை தங்களிடம் ஒப்படைத்தால்,தரமாகவும்,திறமாகவும் செய்து முடிக்கப்படும் என்று உறுதி கூறினார்,

அடுத்தநாள்,இந்தியாவின் முறை,அவரிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது,இந்தியர் சொன்னார்," நாங்கள் இலங்கையின் நட்பு நாடு.இலங்கையின் முன்னேற்றத்தில் எங்களின் பங்களிப்புக் கட்டாயம் இருக்க வேண்டும்,இந்தத் திட்டத்தில் நாங்கள் ஈடு
படுவதால், இரு நாட்டின் எதிர்கால உறவுகள்,மேம்படும், இதன் மூலம் வட கிழக்கு,
மக்களும் பயனடைவார்கள் என்னும் போது,நாங்களும் எங்களது பங்களிப்பைச் செய்ய
வேண்டும் என்பதே எங்களது எண்ணம்," என்றார்.

கடைசியாக இலங்கை நிறுவனத்தின் நாள் வந்தது, அவரிடமும் இதே கேள்வி கேட்கப்
பட்டது.வந்த நபர் நன்னீர் ஏரித் திட்டத்தின் படத்தை விரித்து விளக்கம் சொல்பவதற்கு
தயார் ஆனவர்போல் அதிகாரிகளைப் பார்த்தார். அதிகாரிகள், "நீங்கள் சொல்ல நினைப்பதைச் சொல்லுங்கள்,நமது சிறிய இலங்கையில்,பெரிய நாடுகளின் தொழில் நுட்பத்தை எல்லாம், பயன் படுத்தி,நீங்கள் செயல்படுத்தப் போகும் திட்டத்தை விளக்கமாகக்  கூறுங்கள்," என்றார்கள்.

வந்தவர் செருமிக்கொண்டே,சொல்லத் தொடங்கினார்.எனக்குச் சுற்றி வளைத்து எல்லாம்,பேசத் தெரியாது,நேரடியாக விசயத்திற்கு வருகிறேன்,மொத்தமாக ஒதுக்கியிருக்கும் பணம் மூன்று அரைக்கோடி அமெரிக்க டாலர்கள். நாங்கள் ஒன்றரைக்கோடி அமெரிக்க டாலருக்குள் நன்னீர் ஏரித் திட்டத்தை  செய்து முடிப்போம் ,ஒருகோடி அமெரிக்க  
டாலர்கள்
உங்களுக்கு,மீதி ஒரு கோடி அமெரிக்க டலார்கள் எங்களுக்கு.டீலா! நோ! டீலா!! என்றார் 
இலங்கையின் பிரதி நிதி.   

எப்படி இருக்கிறது கதை, பின்னூட்டத்தில் சொல்லுங்கள்,உங்கள் விமர்சனங்களை.


அன்புடன்,!.....

4 கருத்துகள்:

  1. //////மொத்தமாக ஒதுக்கியிருக்கும் பணம் மூன்று அரைக்கோடி அமெரிக்க டாலர்கள். நாங்கள் ஒன்றரைக்கோடி அமெரிக்க டாலருக்குள் நன்னீர் ஏரித் திட்டத்தை செய்து முடிப்போம் ,ஒருகோடி அமெரிக்க டாலர்கள்உங்களுக்கு,மீதி ஒரு கோடி அமெரிக்க டலார்கள் எங்களுக்கு.டீலா! நோ! டீலா!! என்றார் இலங்கையின் பிரதி நிதி.///////

    அருமையான வரிகள்!!
    சரியாக சொன்னீர்கள் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  2. நம்மவர்கள் என்றால் சும்மாவா? வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  3. கட்டாமலே காசு எப்படி எடுக்கலாம் என்ற போட்டி வைத்தால் நாங்கதான் முதல் இடம்

    பதிலளிநீக்கு
  4. ஐக்கிய நாடுகள் சபைக்கே, தண்ணி காட்டிறவங்க, நாங்க,எங்கட்ட முடியுமா?

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள