வெள்ளி, 7 அக்டோபர், 2016

இலங்கையின் வரலாறு








இலங்கையின் வரலாறு விருப்பமானவர்கள் இந்த லிங்கிற்குச் சென்று படிக்கலாம்.கேள்வி பதில்களாக தொகுக்கப்பட்டுள்ளது





படிப்பதற்கு இங்கு செல்லவும்  

அடா லவ்லேஸ்









அடா லவ்லேஸ் இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலாளர் ஆவார். சார்லஸ் பாப்பேஜின் அனலிடிக்கல் இஞ்சின் என்னும் கருவி  முதன்  முதல் கண்டுபிடிக்கப்பட்ட கணனி (computer)  ஏற்கக்கூடிய படிமுறைத் தீர்வு ஒன்றை எழுதினார். இதனால் உலகின் முதல் கணினி மொழி நிரலாளராகக் கருதப்படுகிறார்.
ஓவியர்: ஆல்பிரட் எட்வர்ட் சலோன்

வியாழன், 6 அக்டோபர், 2016

விதியும்! மதியும் !!

விதியும் மதியும் 


நாம் மனிதனாகப் பிறந்தது,
விதி.
நாம் பிறந்தவுடன்  
மாத, பிதா, குரு ,தெய்வம் ,
எல்லோரும்  
தலையெழுத்தை 
அறிந்து,
நம்மை 
இப்படி நட,
அதைப் படி 
அவனோடு கூடாதே!
சொல்வதுதான் 
மதி 

கேட்பவன்
விதியை வெல்கின்றான்.
கேளாதவன்,
விதியோடு 
மடிகின்றான்.

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் 




நான் சிறுவயதில் 3ம் வகுப்பில் படிக்கும் போது 3ம் வகுப்பா  4ம் வகுப்பா என்பது எனக்கு சரியாக நினைவில்லை தமிழ் பாடப் புத்தகத்தில் ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு பற்றி  ஒரு அதிகாரம் இருந்தது.அது கஷ்டத்துடன் படிக்கும் பிள்ளைகளுக்கு ஒரு உந்துசத்தியாக இருக்கும்.இவரே இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்துள்ளார் நாம் எம்மாத்திரம் என்ற சிந்தனையை ஊட்டியது இதை வாசித்து தமது கஷ்டங்களை மறந்து படித்து 
பட்டம் பெற்று நன்றாக வாழ்ந்தவர்களை நாமறிவோம் 

இவரின் சரித்திரம் முழுவதும் தமிழில் நீங்களும் வாசித்துப் பாருங்கள்  ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். 1865 இவர் வாஷிங்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.

புதன், 5 அக்டோபர், 2016

உணர்வின் வலிகள் l




உணர்வின் வலிகள்

உணர்வின் வலிகள்
இலங்கையின் பார்வையில்  .
இனவெறி!
இந்தியாவின் கணிப்பு,
தமிழ் நாட்டில் இல்லாதது
இவர்களுக்கும்
இருக்கக் கூடாது.
ஐக்கிய நாடுகளின்
கண்டுபிடிப்பு
இலங்கையில்
இன்னும்
சமாதானம்.

செவ்வாய், 4 அக்டோபர், 2016

புத்தகம்






தெரிந்ததைச் சொல்வதற்கு புத்தகமா?
தெரியாததைச்  சொல்வதற்குப் புத்தகமா?   
முன்னையது இலக்கியம் 
பின்னையது விஞ்ஞானம் 

-புதுமைப் பித்தன் -


ஜப்பான் ஆராய்ச்சியாளருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

ஜப்பான் ஆராய்ச்சியாளருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

இலங்கை அரசியல் யாப்பு வரலாற்றுச் சுருக்கம்(01)- மாணவர்களுக்காக



இலங்கை அரசியல் யாப்பு வரலாறு..
இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கி.மு 6 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது.
எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.
16ஆவது நூற்றாண்டில் நாட்டின் சில கடலோரப் பகுதிகள் போர்த்துக்கேய, ஒல்லாந்திய பிரித்தானியப் பேரரசுகளின் கீழ் இயங்கின.
அனுராதபுரத்திலிருந்து கண்டி வரை 181 அரசர்களும் அரசிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்துள்ளனர்.
1815க்குப் பிறகு முழுமையான நாடும் பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியின் கீழ் வந்தது.
இலங்கை இந்து சமுத்திர பிராந்தியத்தின் கீழ் இருக்கும் ஒரு சிறிய நாடடு என்றாலும், இது மிக நீண்ட காலமாக வெளிநாட்டவர்கலினால் ஆட்சி செய்யபட்டது.
  • 1505-1658 வரை போர்த்துகேயரினாலும்
  • 1658-1796 வரை ஒல்லந்தரினாலும்
  • 1796-1948 வரை ஆங்கிலேயரினாலும் ஆட்சி செய்யப்பட்டது.
போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தரை பொறுத்த வரை அவர்கள் பெரும்பாலும் அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை.

ஆனால் ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் அரசியலில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.
இந்த வகையில் இலங்கையில் அவர்களே அரசியல் யாப்பினை முதலில் இலங்கைக்கு அறிமுகம் செய்தவர்கள் ஆவார்கள்.
இலங்கையில் ஆங்கிலேயரினால் அறிமுகப்படுத்த பட்ட அரசியல் யாப்புக்கள்

1.கோல்புறுக் (1833)
2.குறு மக்கலம் (1912)
3.மனிங் (1921)
4.மனிங்-டிவன்சயர் (1924)
5.டொனமூர் (1931)
6. சோல்பரி (1947)
இலங்கையறினால் உருவாக்க பட்ட அரசியல் யாப்புக்கள்.
1.1ம் குடியரசு அரசியல் அமைப்பு (1972)
2.2ம் குடியரசு அரசியல் அமைப்பு (1978)


தொடர்ச்சி அடுத்த வாரம்...நன்றி தமிழ் வின் 




சனி, 1 அக்டோபர், 2016

பொது விவேகம்,பொது உளர்ச் சார்பு,பொது அறிவு


பொது விவேகம்,பொது உளர்ச் சார்பு,பொது அறிவு



பொது விவேகம்,பொது உளர்ச் சார்பு,பொது அறிவு ,இப்படி  பரீட்சைகளுக்கு 
ஆயத்தம் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று நேரம் ஒன்றரை மணித்தியாலங்களுக்குள் முழுக் கேள்விகளுக்கும் விடை இறுக்க வேண்டும்
கூடுதலானவர்கள் பரிட்சைப் பேப்பரை வாசிப்பதற்கே நேரம் காணாது என்பர்  உங்களுக்கு பயிற்சி செய்வதற்கு என்றே ஒரு தளம் உள்ளது அதில் 
பொது அறிவு கூடுதலாகவும் தமிழ் அறிவும்  கொட்டிக் கிடக்கிறது   நேரமும் உங்களுக்கு அறியக் கூடியதாக உள்ளது உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டால் உங்களுக்கு ஒரு கடவுச் சொல் கிடைக்கும் அதை அந்ததளத்திற்  நீங்கள் உள்  செல்வதற்கு பயன்படுத்தினால் போதும் இதற்கு 
குறுக்கெழுத்துப் போட்டி அனுபவம் கட்டாயம் தேவை 


பொது உளர்ச் சார்பு

பொது உளர்ச் சார்பு 







பொது உளர்ச் சார்பு மின் புத்தக வடிவில் விருப்ப மாணவர்கள் கீழ்க் காணும் இணைப்பில் சென்று வாசிக்கலாம்  வருங்கால பரிட் சைகளுக்கு ஏற்ற ஒரு அருமையான புத்தகம் ஆக்கியோன் ASM பலீல் அனுசரணை நூலகம் 

மொழி மூலம் தமிழ் மேற்படி, புத்தகம் எங்காவது விற்பனைக்கு இருக்குமானால் தயவு செய்து பின்னூடடமிடுங்கள் தரமான ஒரு புத்தகம்,நான் வாசித்த தமிழ் பொது உளர்ச் சார்பு புத்தகங்களில் 


இதை கிளிக் செய்யுங்கள்