நியூசிலாந்தில் இலங்கையருக்கு காத்திருந்த சோகம்!! குடும்பமே பலியான பரிதாபம்...
நியூஸிலாந்தில் இடம்பெற்ற தீ விபத்து காரணமாக இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது.
தென் ஆக்லாந்து பகுதியில் இன்று இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் ஒரு முக்கிய குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை நியூஸிலாந்து அகதி வழக்கறிஞர் இழந்துள்ளதாக நியூஸிலாந்து ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த கைலாஷ் தனபாலசிங்கம் என்பவரின் ஐந்து வயது மகன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைலாஷை காப்பாற்ற வைத்தியர்கள் போராடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மூன்று தலைமுறையினர் உயிரிழந்துள்ளதாக கைலாஷின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம் தெரிவித்துள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான கைலாஷ் தனபாலசிங்கம் தற்போதுவரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது நண்பர் குறிப்பிட்டுள்ளார்.
தனபாலசிங்கம் தற்போது நியூஸிலாந்து அகதிகள் சபையின் ஒரு நிர்வாக அதிகாரியாக செயற்படுகின்றார். இந்த நிலையில் அவர் அந்த நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கு உதவி செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பனித்துள்ளார்.
பாடசாலை மாணவரும் 39 மற்றும் 66 வயதுடைய இரண்டு பெண்களும் Flat Bush பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக இன்று பிற்பகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குறித்த பாடசாலை மாணவின் சகோதரியும் 69 வயதுடைய தாத்தாவும் சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
47 வயதுடைய தந்தை இன்னமும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள