10 இலட்சம் சீனர்கள் இலங்கைக்கு படையெடுப்பு..! சிக்கலாகும் எதிர்காலம்..!
சர்வதேச கேந்திர நிலையமாக திகழும் இலங்கையில் இப்படி வல்லரசுகளின் ஆதிக்கத்தால் பொருளாதார யுத்தம், நாடுகளின் யுத்தமாக மாறி எதிர்காலத்தில் பாரிய ஆபத்து ஏற்பட்டு இரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படும் என்பது உறுதி.
இவ்வாறு உலகில் பொருளாதார யுத்தம் இருக்கின்றது என்பது தெரிந்த விடயமே. அது வலுப்பெற்று மிகப்பெரிய யுத்தங்கள் ஏற்பட வழிசமைத்துவிடும். இவை தொடர்பில் அரசு கவனம் எடுப்பதோடு உண்மை நிலையை மக்களுக்கு அறியத்தர வேண்டும்.
இதேவேளை அம்பாந்தோட்டையில் சீன நாட்டுக்கு கொடுக்கும் 15 ஆயிரம் இடத்தின் காரணமாக என்ன செய்யப்போகின்றார்கள் என்பது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும்.
அம்பாந்தோட்டைக்கு கொடுக்கப்படும் இடத்திற்கு சீன நாட்டினர் 10 இலட்சம் பேர் இலங்கைக்கு வருவதற்கான ஆயத்தபாடுகள் நடைபெற்றுள்ளதாகவும்.,
அதற்காக இலங்கைக்கான விசாக்கள் அந்நாட்டு அரசின் மூலமாக கோரப்பட்டுள்ளதாகவும் எமக்கு அறியக்கிடைத்துள்ளது.
இவ்வாறு வருகின்றதன் உள்நோக்கம் என்ன? இதனால் இலங்கைக்கு கிடைக்கும் இலாபம் என்ன? போன்றவற்றோடு அம்பாந்தோட்டையின் உண்மை நிலவரம் பற்றி அரசு மக்களுக்கு அறியத்தருவது இப்போது மிக முக்கியம்.
மேலும் புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் விஷேட கவனம் செலுத்த வேண்டும் அதனை விடுத்து செய்யும் செயற்பாடுகளினால் இப்போதைய ஆட்சியின் முடிவை அண்மைக்கு கொண்டு வர வேண்டாம்.
எனவே எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு செயற்பட வேண்டும் என பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் என நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள