திங்கள், 19 டிசம்பர், 2016

யாருக்கும் தெரியாத பிரபாகரனின் மறுமுகம்..! மூத்த ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு

யாருக்கும் தெரியாத பிரபாகரனின் மறுமுகம்..! மூத்த ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து மூத்த ஊடகவியலாளர் சாத்தான்குளம் S.M. அப்துல் ஜபார் அவர்கள் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளரும், ஊடக துறையில் பல விருதுகளை பெற்றுக்கொண்டவருமான S.M. அப்துல் ஜபார் அவர்கள் புலம் பெயர் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வி ஒன்றிலேயே இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.
66 ஆண்டுகள் ஊடக துறையில் பணியாற்றி S.M. அப்துல் ஜபார் அவர்களுக்கு வாழ் நாளில் மறக்க முடியாத பாராட்டு எதுவென்று நெறியாளர் கேள்வி தொடுத்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய அவர், 66 ஆண்டுகளாக ஊடக துறையில் பணியாற்றி வரும் தனக்கு பல பாராட்டுகளும், 25க்கும் மேற்பட்ட விருதுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும், தன்னுடைய வாழ் நாளில் மறக்க முடியாத பாராட்டு என்று குறிப்பிடும் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பாராட்டை தன்னால் மற்றக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிற்கு சென்ற போது, நிகழ்வின் முடிவில் தனக்கு வெளியில் செல்லவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இன்று மாலை தலைவர் பிரபாகரனை சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மாலை பொழுதானதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வன் அவர்கள் தன்னை வந்து சந்தித்ததாகவும், நீங்கள் போய் தலைவரை சந்திப்பது மரியாதை இல்லை. எனவே தலைவரே உங்களை சந்திப்பதற்கு வருகின்றார் என குறிப்பிட்டதாக S.M. அப்துல் ஜபார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பின்னர் புதிய வேன் ஒன்று வந்ததாகவும், இந்த வேன் நிச்சயமாக கொழும்பு வழியில் வந்திருக்காது எனவும், குறிப்பிட்ட அவர், துப்பாக்கி சகிதம் இரண்டு வீரர்கள் வேனில் இருந்து இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வேனில் இருந்து தலைவர் பிரபாகரன் கம்பீரமாக இறங்கியதாகவும், அவரை கண்டவுடனேயே ஓடிப்போய் கட்டிப்பிடிக்க ஆசையாக இருந்தாகவும் கூறியுள்ளார்.
எனினும், பாதுகாப்பு காரணம் கருத்தி அது முடியாமல் போனதாக அவர் தெரிவித்தார். இருந்தும் தன்னை நெறுங்கிய தலைவர் அவர்கள் தன்னை கட்டித்தழுவி பாராட்டியதாகவும், அது தன் வாழ் நாளில் மறக்க முடியாத பாராட்டு எனவும் கூறியுள்ளார்.