திங்கள், 19 டிசம்பர், 2016

ட்ரம்புக்கு வந்த சிக்கல்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரிக்கு வாய்ப்பு

ட்ரம்புக்கு வந்த சிக்கல்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரிக்கு வாய்ப்பு


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 8ம் திகதி நடைபெற்றது.
இதில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
ஹிலாரி கிளிண்டன் 26 லட்சம் ‘பாப்புலர் ஓட்டு’ எனப்படும் மக்கள் ஓட்டுகளை பெற்றிருந்தாலும், காலேஜ் எனப்படும் தேர்வாளர்களின் வாக்குகளை அதிகம் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.
டிரம்புக்கு 306 தேர்வாளர்களும், ஹிலாரிக்கு 232 தேர்வாளர்களும் வாக்களித்தனர்.
டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் தேர்வாளர்கள் ஓட்டுகள் தான் அதிகாரபூர்வமான ஜனாதிபதியை முடிவு செய்கிறது. இதற்கான தேர்தல் நாளை (20ம் திகதி) நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்வாளர்கள் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், ஹிலாரியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பிரசாரம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், பொதுமக்களிடம் இருந்து குடியரசு கட்சி தேர்வாளர்களுக்கு நூற்றுக்கணக்கான இ-மெயில்கள் மற்றும் டெலிபோன் கால்கள் மூலம் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
ஒருவேளை மக்களின் கோரிக்கையை ஏற்று 38 தேர்வாளர்கள் மாற்றி வாக்களித்தால் 270 ஓட்டுகளை பெற்று ஹிலாரி ஜனாதிபதி ஆகி விடலாம். இந்த பிரச்சினையால் டிரம்ப்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள