இனத்துவேசமும் பிக்குகளும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%
ராஜபக்சவின் இனத்துவேசமும் பிக்குகளும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%
ராஜபக்சவின் தந்தையார் டி. எம். ராஜபக்ச கிறிஸ்தவ மதத்திலிருந்து பௌத்தத்தைத் தழுவினார்
ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க ஆகியோர் அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தவரே .
ரனில் கூட ஒரு கிரித்தவரே
ஆட்சி அமைக்க வேண்டின் பின்னாளில் ஆட்சியைப் பெறும் நோக்கிலேயே பௌத்தத்தை தழுவினர்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம் நூல் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. மகாநாம தேரர் துட்டகைமுனு மன்னனை நாயகனாகக் கொண்டு இந்நூலை எழுதியிருந்தார்.
எழுதப்பட்ட காலத்திலும் பார்க்க 1000 ஆண்டுகள் முன்னோக்கிய வரலாற்றைக் கூறத் தொடங்கும் இந்நூல், கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த துட்ட கைமுனு என அறியப்பட்ட துஷ்ட காமினி அல்லது காமினி அபய என்ற மன்னன் வரலாற்றையே முக்கியமாகக் கூறுகிறது. காரணம், திஸ்ஸமகரகம (இன்றைய அம்பாந்தோட்டை) இராச்சியத்தை ஆட்சி செய்த இவன் வடக்கில் - அனுராதபுரத்தில் ஆட்சி செய்த எல்லாளனை போரில் சூழ்ச்சியால் வென்றே ஆட்சியைக் கைப்பற்றினான் எனக் கூறுகிறது. மேலும் 32 தமிழ் மன்னர்களை போரில் வென்று இலங்கையை ஒருங்கிணைத்தான் எனக் கூறுகிறது.
போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் இந்த மன்னன் மனங்கலங்கியபோது, “ஒருவர் பௌத்த தர்மத்தை சரணந்து விட்டார் இன்னொருவர் மும்மணிகளை ஏற்றுள்ளார். ஆகவே நீ கொன்றது ஒன்றரைப் பேரைத்தான். மற்றவர்கள் எமது மார்க்கத்தை ஏற்காதவர்கள். அவர்கள் மிருகங்களை விடக் கீழாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என பிக்குகள் தேற்றினர்” எனக் கூறுகிறது. மகாவம்சம் கூறும் இந்தக் கருத்து இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஒத்தது. ஆனால், இங்குதான் பௌத்த அடிப்படைவாதம் தோற்றம் பெறுகிறது. காலாகாலமாக மகாவம்சத்தின் இந்த அடிப்படையையே சிங்கள - பௌத்த ஆட்சியாளர்கள் அது மன்னர்களாயினும் - ஜனநாயக வழிவந்த ஆட்சியாளர்களாயினும் சரி ஏற்றுக் கொ்ண்டே ஆளத் தொடங்குகிறார்கள்.
மகாவம்சத்தின் அடிப்படை அம்சங்கள் முற்றுமுழுதாகக் கற்பனைக் கதைகளே. உதாரணம் சிங்கத்தின் வழிவந்தவர்களே தங்கள் இனம் என்பதைக் கூற சிங்கமும் - இளவரசியும்கூடியே சிங்கபாகு பிறந்ததாகவும் அவனுக்குப் பிறந்தவனே விஜயன் என்றும் அவனும் அவனது 700 தோழர்களும் உருவாக்கிய இராச்சியமே இலங்கை - அவன் வழிவந்தவர்களே சிங்களவர்கள் என்றும் மகாவம்சம் கூறுகிறது. இயக்கர் குலப் பெண்ணான குவேனியே இவன் இராச்சியம் அமைக்க உதவினான் என்றும் அவளைத் துரத்தி விட்டு, பாண்டிய நாட்டில் இருந்து இளவரசியை அழைத்து வந்து திருமணம் செய்கிறான். விஜயனுக்கும் தமிழ் இளவரசிக்கும் பிறந்த வம்சமே சிங்களவர்களாகத் தங்களை அடையாளம் காட்டுகிறது.
தவிர, சிங்கள ஆட்சியாளர்களாக வேண்டுமானால், அவர்கள் பௌத்தர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. இன்றிருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் தந்தையார் டி. எம். ராஜபக்ச கிறிஸ்தவ மதத்திலிருந்து பௌத்தத்தைத் தழுவினார். இதுபோல ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க ஆகியோர் அடிப்படையில் கிறிஸ்தவ வழிவந்தவர்களே. பின்னாளில் ஆட்சியைப் பெறும் நோக்கிலேயே பௌத்தத்தை தழுவினர்.
ஆக, இனத்துவேசத்தை ஆட்சியாளர்கள் கையில் எடுக்கக் காரணம் பௌத்த பிக்குகளும் - அவர்களின் வரலாற்றுக் கற்பனை நூலான மகாவம்சமுமே.
மகாவம்சம் என்பது கி.பி 3ம் ஆண்டளவில் இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைபெற்றப் பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில் இந்தியாவில் இருந்து வருகைத் தந்த பௌத்தப் பிக்குகளும், அப்போதைய அனுராதபுர இராசதானியப் பௌத்தப் பிக்குகளும், ஏனைய விகாரைகளில் இருந்த பௌத்தப் பிக்குகளும், பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகஞ்செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வடயிந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும், மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி கதைகள் அட்டக்கத்தா எனும் பெயரில், பௌத்தத்துடன் வருகைத் தந்த வடயிந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில் பாடப்பட்டு வந்தன.
அவை ஒருகட்டத்தில் காலவரிசையாக ஒருங்கிணைக்கப்பட்டு அட்டகத்தா-மகாவம்சம் எனும் பெயரில் தொகுக்கப்பட்டது. அந்த அட்டகத்தா-மகாவம்ச செய்யுள்களை ஆதாரமாகக் கொண்டு இரண்டு பழம்பெரும் நூல்கள் தொகுப்பாக்கம் பெற்றன. கி.பி. 4ம் நூற்றாண்டில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டில் மகாவம்சமும் அவைகளாகும். இதில் மகாவம்சம் நூலை தொகுத்தவர் மகாநாம தேரர் எனும் பௌத்தப் பிக்குவாவார்.
அவரும் அத்தொகுப்பு நூலை பாளி மொழியிலேயே தொகுத்தார். எனவே மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரர் எனக்கொள்ளப்படுகிறது.
இந்த நூலை வில்ஹெம் கெய்கர் என்பவர் 1908ல் ஜேர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார்.
அதன் பின்னர் 1912ம் ஆண்டில் மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்ப்பு செய்தார். இதன் தமிழாக்க வடிவமே இந்த நூலாகும்.
மகாவம்சம் பௌத்த சிந்தனைகளுடன், பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி, தற்கால அறிவியலுடன் ஒப்பிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத கற்பனைகள், கட்டுக்கதைகள், தொன்மங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ள போதும்; பௌத்தத்தின் வரலாறு, இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைப்பெற்றதன் காலவரிசை, பௌத்ததிற்கு மன்னர்கள் ஆற்றிய பணிகள் போன்றவற்றை முதன்மைப் படுத்தி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்களை ஆதரித்து; இலங்கையில் பௌத்தம் தோன்றுவதற்கு முன்னர் கி.மு. 6ம் நூற்றாண்டு வரையான நம்பகமற்ற தொன்மக் கதைகளை உள்ளடக்கி, இலங்கையின் முதல் மன்னனான விஜயன் முதல், கி.பி. 4ம் நூற்றாண்டு ஆட்சி செய்த மகாசேனன் வரையான வரலாற்றையும் கொண்டுள்ளது.
இதனால் இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்ய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும், பௌத்தமத வரலாற்றை அறிய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும் மகாவம்சம் எனும் நூலை மீளாய்வு செய்தல் அவசியமாகின்றது. அதேவேளை இலங்கையின் வரலாற்றை அறிய முற்படும் எவருக்கும் மகாவம்சம் குறித்த போதிய தெளிவு இருத்தலும் முக்கியமாகின்றது. மகாவம்சம் இலங்கையின் பௌத்த பிக்குகளால், பௌத்தம் சார்ந்து தொகுக்கப்பட்ட நூல் என்பதால், அது இலங்கை பௌத்த சிங்களவருக்கு ஆதரவான நிலையிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இலங்கை தமிழரின் வரலாற்று தொன்மைப் பற்றிய எழுத்தாவணங்கள் அற்ற நிலையில், அவற்றை ஓரளவுக்கு என்றாலும் அறிந்துகொள்ள மகாவம்சம் நூலே உதவுகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே அதைத் தேடி வாசித்தல் அவசியம்
வில்ஹெம் கெய்கர் என்பவர் 1908ல் ஜேர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார்.அல்லவா ?அதை பெர்லின் நூலகத்தில் தேடி வாசியுங்கள் .வரலாறு புரியும் .
மகாவம்சம் மறைமுகமாகத் தருகின்ற மற்றைய முக்கியமான செய்தி, இலங்கைத் தீவு சிங்கள மக்களது மட்டுமல்ல, தமிழ் மக்களது பாரம்பரிய பூமியும் கூட என்பதுதான்.அது சிங்களவருக்கு ஆங்காங்கே முன்னுரிமை கொடுக்க முயலுகிறது
மகாவம்சம் 5 ஆம் நூற்றாண்டில் மகாநாம என்ற பௌத்த தேரோவால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் ஆகும். மகாவம்சம் என்றால் “பெருங்குடியினர்” என்பது பொருளாகும். இது இலங்கைபற்றிய செவிவழிக் கதையோடு தொடங்கி மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334 – 362) முடிவுறுகிறது. இலங்கைத் தீவிற்குப் பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பௌத்தத்துக்குரிய அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்டகைமுனுவும் மகாசேனனும் வர்ணிக்கப்படுகிறார்கள். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகையை விபரிக்கின்றது.
இதன் இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பௌத்ததேரோவால் எழுதப்பட்டது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டன் கைமுனு என்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். (கி.பி. 1137-1186).
பவுத்தத்துக்குரிய தகைமையை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்ட கைமுனு போர்புரிந்து எல்லாள மன்னனைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின் கதை நாயகனாக துட்ட கைமுனு (கிமு 101 – 77) புகழப் ப்படுகிறான்.
துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான்.
கி.மு 2௦7-247 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு மகாவிகாரை நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேசியும் வந்துள்ளனர். அவை அட்டகத்தா என்றழைக்கப்பட்டது. பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை அட்டகத்தா மகாவம்சம் என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே கி.பி 4ம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப் பட்டுள்ளன.
தீபவம்சம் 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம் 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் “விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்” தீபவம்சத்தில் இல்லை
மகாவம்சத்தின் மூன்றில் ஒரு பாகம் துட்ட கைமுனு மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 – 137
.
று தொன்மைப் பற்றிய எழுத்தாவணங்கள் அற்ற நிலையில், அவற்றை ஓரளவுக்கு என்றாலும் அறிந்துகொள்ள மகாவம்சம் நூலே உதவுகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருந்த போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது என்ற கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளது.
இதுவே இனத்துவேசத்திற் கான காரணம்
Manikkavasagar Vaitialingam
அன்பே சிவம் டி. எம். ராஜபக்ச கிறிஸ்தவ மதத்திலிருந்து பௌத்தத்தைத் தழுவினார்

அன்பே சிவம்my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள