வெள்ளி, 10 நவம்பர், 2023

விவேக சிந்தாமணி. பாடலும் கருத்தும்.

அனுபவித்துப் பார்த்து,அதைச் சொல்லுவது போல் உள்ளது இந்தப் பாடலும்
விளக்கமும்.



வில்லது வளைந்ததென்றும் வேழமதுறங்கிற்றென்றும, 
வல்லியம் பதுங்கிற்றென்றும் வளர்கிடா பிந்திற்றென்றும், 
புல்லர்தஞ்சொல்லுக் கஞ்சிப்பொறுத்தனர் பெரியோரென்றும், 
நல்லதென்றிருக்க வேண்டாம் நஞ்செனக் கருதலாமே.


 வில்வளைந்து கொடுப்பதும்,யானை நித்திரை செய்கிறது என்று என்னுவதும்,புலி பதுங்குவதும் ஆட்டுக்கிடா பின் வாங்குவதும்,கீழ் மக்கள் சொல்லுக்குப் பயந்து பெரியோர் பொறுமை காப்பதும் நன்மை என்று நினைக்கக் கூடாது,ஆபத்தெனக் கருதவேண்டும். விவேக சிந்தாமணி#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள