திங்கள், 27 மார்ச், 2017

“நான் சாப்பிடட்டுமா ? வேண்டாமா..? ” .

Saravana பகிர்ந்துள்ளார்.
John Durai Asir Chelliah
“நான் சாப்பிடட்டுமா ? வேண்டாமா..? ”
.
# சாப்பாட்டு இலை முன் அமர்ந்து கொண்டு ,
இந்த ஒரே ஒரு சாமர்த்திய கேள்வியை மட்டுமே வஜ்ராயுதமாக பயன்படுத்தி
தான் நினைத்ததை முடித்தவர் எம்.ஜி.ஆர். !
.
அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் மறைந்து விட ...
அடுத்த முதல்வர் யார்..? என நாலா திசைகளிலிருந்தும் குரல் வர...
நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர ..
உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி...
.
அதற்கு ராஜாஜி, “ உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்....எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார் ” என்று அனுப்பி வைக்க....
உடனடியாக கருணாநிதி எம்.ஜி.ஆரைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும் தமிழ், தமிழ்... என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். “என்று எதுகை மோனையுடன் எம்.ஜி.ஆரிடம் பேச ...இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.சொன்னார் இப்படி:
“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்..”
.
உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த எஸ்..எஸ். ராஜேந்திரனுக்குப் போன் செய்த எம்.ஜி.ஆர்....
, “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார் ...
.
சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு எஸ்.எஸ்.ஆரின் இல்லம் வருகிறார் எம்.ஜி.ஆர்.
. இலை போட்டு இனிய முகத்துடன் எஸ்.எஸ்.ஆரின் தாய் , எம்.ஜி.ஆருக்கும்..எஸ்.எஸ்.ஆருக்கும் பரிமாற....
இந்த நேரத்தில் எஸ்.எஸ்.ஆர்...எம்.ஜி.ஆரிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுங்க….!” என்கிறார்....
“கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று எம்ஜிஆர் விளக்குகிறார்.
திகைத்துப் போன எஸ்.எஸ்.ஆர். நிறைய விளக்கங்கள் சொல்லி.., “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.
எம்.ஜி.ஆர். வாதம் செய்யவில்லை..வற்புறுத்தவில்லை...
எஸ்.எஸ்.ஆரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்
, “நான் சாப்பிடட்டுமா ? வேண்டாமா..?”
எஸ்.எஸ்.ஆர். வெகு நேர யோசனைக்குப் பின் ..வேறு வழியின்றி சொல்கிறார்...
“சரி.. நீங்க சாப்பிடுங்க..”
அதன் பின்.. முதல்வராகக் கருணாநிதி பொறுப்பேற்கிறார்.
அப்புறம் ..நடந்ததை நாடே அறியும்...!
நண்பரின் பதிவு ஒன்று என் நினைவுக்கு வருகிறது..
.
# “யானைக்கு பாகனைவிட சிறந்த நண்பன் யாருமில்லை.
ஆனால்...மதம் பிடித்தால், யானைக்கு பாகனை விட மோசமான எதிரி யாரும் இல்லை.
சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!”
# இது ஏனோ...எம்.ஜி.ஆர். – கருணாநிதி நட்பைப் பற்றி படித்தபோது , எனக்குள் தோன்றியது...!
.
(மீள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள