புதன், 7 டிசம்பர், 2016

துக்ளக்!

மறைந்த ஹாஸ்ய நடிகர்,நகைச்சுவை எழுத்தாளர்,அரசியல் விமசகர்,அரசியல் சாணக்கியன் இன்னும் எவ்வளவோ இவரைப் பற்றிச் சொல்லலாம்,ஆனால் எனக்குப் பிடித்தது,எதைப்பற்றியும் பயமில்லாமல் இவர் எழுதும் விமர்சனம்,துக்ளக் பத்திரிக்கை தொடங்குவதற்கு முதல்,ஆனந்த விகடன் பத்திரிக்கை இவரைப் பேட்டி கண்டது அதன் தொகுப்பு வாசித்துப் பாருங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நமது இதய அஞ்சலிகள். 1970 ஜனவரியில் துக்ளக் இன்னும் ஆரம்பிக்காதபோது சோவை விகடனில் எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!
பத்திரிகை ஆசிரியர் ஆகிறார் ‘சோ’!
நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர் சொல்கிறார்களே, உண்மையா?
சோ: யாரெல்லாம் சொன்னார்கள்?
நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காண வந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் பேட்டி காணப் போகிறீர்களா?
சோ: நான் உங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து நானும் ஒரு பத்திரிகைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லையா?
நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?
சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி!
நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?
சோ: ஒரு சகலகலா வல்லவர்!
நிருபர்: யார் அது?
சோ: நான்தான்.
நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம், லட்சியம் என்ன?
சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்றவேண்டும்; ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு, இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும். இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது என் தவறல்ல! பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!
நிருபர்: உங்கள் பத்திரிகை எப்போது வெளிவரும்?
சோ: பொங்கல் ரிலீஸ்!
நிருபர்: முதல் இதழில் உங்கள் பத்திரிகையில் என்னென்ன வரும் என்று சற்று விளக்கமாகக் கூற முடியுமா?
சோ: ஏன்? துக்ளக்கை யாரும் வாங்கக் கூடாது, உங்கள் ஆனந்த விகடனையே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்க்கிறீர்களா?
நிருபர்: சரி! உங்கள் பத்திரிகையின் அமைப்பைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?
சோ: எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறதோ அவற்றையெல்லம் பார்த்து மக்களையும் சிரிக்க வைக்க முயலப் போகிறேன். I am going to look around me and also make my readers look around themselves.
Yes you did it
RIP Cho sir...
நேர்மை உறங்கிய நேரமிது-
Vijayakumar Arunagiri

சோ சார்என்றும் நல்லதையே நினைப்பார் நல்லதையே செய்வார் என்பதற்கு பிரதமர் மோடி அவர்களை அவர் தொடர்ந்து ஆதரித்து எழுதியதும் மோடி குஜராத் மாநில முதல்வராக இருக்கும் பொழுதே தமிழ்நாட்டுக்கு மோடியை அழைத்துவந்து அறிமுகப்படுத்தி துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வைத்ததும் அவரு க்கு இந்த தேசம் யார் தலைமையில் பின்னால் செல்லும் என்கிற தீர்க்க தரிசனம் இருந்ததை அறிந்து கொள்ள லாம்.
எமர்ஜென்சி காலத்தில் எந்த வித சமரசமும் இல்லாமல் துணிந்து எதிர்த்து நின்ற ஒரே தமிழ் பத்திரிக்கை துக்ளக்
மட்டுமே..வாசகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையே
பத்திரிக்கைகள் கொடுத்து வரும் நிலையில் பத்திரிக்கை ஆசிரியருக்கு என்ன பிடிக்குமோ அதையே வாசகர்கள்
படிக்க வேண்டும் என்று ஒரு இதழ் இந்தியாவிலேயே வருகிறது என்றால் அது துக்ளக் மட்டுமே..
நிறைய விஷயங்களில் ஆசிரியருடன் வாசகர்கள் முர ண்பட்டாலும் இன்றும் துக்ளக் பத்திரிக்கையின் வாச
கராக இருப்பதையே என்னைப் போன்றநிறைய பேர் பெருமையாக கருதுகிறார்கள்..ஆசிரியர் என்பவர் அவர் விருப்பபடியே பாடம் நடத்துவார்.நடத்த வேண்டு ம்.மாணவர்கள் விரும்பிய பாடங்களை தான் ஆசிரியர் எடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் அவர் ஆசிரியராக இருக்க முடியாது..
துக்ளக்க்கை படிக்கும் பொழுது பழைய குருகுல கல்வி யே நினைவுக்கு வரும்.ஏனென்றால்ஆசிரியர் என்பவர்
சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்விஷயங்களையே
மாணவர்களுக்கு போதித்து வந்தார்கள் என்று பழைய குரு குல கல்வியை பற்றி கேள்விப்பட்டிருப்போம்
ஆனால் அதை இப்பொழுதும் துக்ளக் வாயிலாக பார்த்து க்கொண்டு இருக்கிறோம்
சோ அவர்கள் என்னைப் போன்ற வாசகர்களுக்கு குரு மட்டுமல்ல. ஜெயலலிதாபோன்றவர்களுக்கு அரசியலில் ராஜகுருவாகவும் இருந்தவர்.ஒரு பத்திரிக்கையாளர்
இந்தியாவில் இருந்த அனைத்து உயர்மட்ட அரசியல் வாதிகளிடையே நெருக்கமான நட்பு இருந்தும் அவர்
நேர்மையாக இருந்தார் என்றால் அவர் சோ மட்டுமே.
என்னுடைய 12 வயதிலேயே துக்ளக் படிக்க ஆரம்பித்த
நான் அப்போழுது அதை கோபத்துடனே படித்து முடிப் பேன். ஏனென்றால் கூவம் நதிக்கரையிலேயே வரும் பொழுது நான் கூவத்திலேயே இருந்துள்ளேன்..அதாவது திமுக வில் என்று சொல்கிறேன். ஏன் கருணாநிதியை
மட்டும் திட்டி எழுதுகிறீர்கள் என்று அந்த காலத்திலேயே
துக்ளக்கிற்கு லட்டர் எழுதியவன் நான்..
இன்னொன்று தெரியுமா?
1976 ல் திமுக அரசு எமர்ஜென்சியின் பொழுது டிஸ் மிஸ் செய்யப்பட்டப் போது சோ அவர்கள் நேரடியாகக் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தன் தார் மிக ஆதரவைத் தெரிவித்ததை அன்றைய திமுக எடுபிடி
பத்திரிக்கை ஆசிரியர்கள் செய்ய வில்லை.இதற்கு மேல்
ஒரு பத்திரிக்கையாருக்கு என்ன நடுநிலைமை வேண் டும் சொல்லுங்கள்...
ஜெயலலிதா தவறு செய்த பொழுது 1996ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கி திமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி அத ற்கு தொகுதி பங்கீடு பேச அறிவாலயம் சென்று கருணா நிதியுடன் நேரிடையாக பேசி இறுதி செய்து வந்து ரஜினியை ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக குரல் கொடு க்க வைத்து ஒரு மாநில ஆட்சியையே மாற்றி தமிழக
அரசியல் கொஞ்சமாவது நல்லதாக இருக்க உதவியர்
சோ சார் தான்..
ஏனென்றால் அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி ரஜினிக்கு
தூண்டில் போட்டு தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து அதன்
மூலம் தமிழகத்தில் தலையெடுக்க நினைத்து இருந்தது.
அதனால் ரஜினியை நேரடியாக அழைத்துஅப்போதைய பிரதமர் நரசிம்மராவ் பேசிக்கொண்டு இருந்த பொழுது
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் அது
வாக்கு பிரிவு ஏற்பட்டு மீண்டும் அதிமுகவே ஜெயிக்கும்
என்று சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் அதிமுக
ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற ஒரே குறிக்கோ ளில் திமுகவை பலமாக்கி வெற்றி பெற வைத்து அன்றைய சூழ்நிலையில் மாற்றம் கொண்டு வந்தார்.
கம்யூனிசம் ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று அடிக்கடி சொல்லும் சோ அவர்கள் ஒரு முறை அரசிய லில் இன்றும் நேர்மையானவர்கள் இருக்கிறார்களா என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு...இருக்கிறார்களே கம்யூனிஸ்ட் கட்சியில் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லியிருந்தார்.
பாருங்கள்.அரசியலில் நேர்மை இருக்கிறது ஆனால்அது அவர் ஓட்டுப் போட சொல்லும் பிஜேபி அதிமுகவை விட
கம்யூனிஸ்டுகளிடம் தான் இருக்கிறது என்று சொல்வத ற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் தெரியுமா? இது தான் மனசாட்சி..
என்னுடைய தந்தை படித்த புத்தகங்களில் நான் ஒன்றை
எடுத்து படித்துள்ளேன் என்றால் அது துக்ளக் மட்டுமே.. நான் வாங்கும் துக்ளக் ஜூனியர் விகடன் குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற புத்தகங்களில் என் மகன் துக்ள க்கை தடவி எடுக்கும் பொழுது மனசுக்குள் தலைமுறை உணர்வுகள் இடம் பெயரும் ஒலி கேட்கிறது..
இதை மாதிரியே சோ சார் இல்லையென்றாலும் துக்ளக்
அவர் காட்டிய பாதையில் சென்று தலைமுறைகள் கடந்து நிலைத்து நின்று அவரின் புகழ் பாடிக்கொண்டே
இருக்கும்..