வியாழன், 8 செப்டம்பர், 2016

நான் சொல்லவில்லை !


நான் சொல்லவில்லை !
வரிக்கவிதைகள் 


எழுத்தாளர் ராஜேஷ் குமார்.


1." எல்லோருக்கும் உதவி செய்து ஏமாந்து விடாதே!
எல்லோரிடமும் உதவியைப் பெற்று ஏமாற்றி விடாதே !!


2."நமது வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் இல்லையென்றால்,இனிப்பான வாழ்க்கையை உணர முடியாது"

3."எதற்கும்,
 துணிவு இல்லாதவன்.
எதையும்,
எதிர்பார்க்கக் கூடாது."

4".காதலும் சிகரெட்டும் ஒண்ணுதான்,இரண்டுமே உதட்டோடு உறவாடி இருதயத்தைப் புண்ணாக்கிவிடும்."

5."உன்னால் முடியாது என்று என்னி நீ கைவிட்ட ஒரு விசயத்தை,இந்த உலகத்தின் ஏதாவது ஒ ரு நாட்டின் ஒரு மூலையில் இருக்கும்  யாராவது  ஒருவன் ஏற்கனவே செய்து  முடித்திருப்பான்."
இந்த உலகில் எதுவுமே சுலபமில்லை -ஆனால் எல்லாமே சாத்தியந்தான்.

6."பூமிக்கு அடியில் இடம் பிடிக்க பூமிக்கு மேல்
 நடக்கும் போராட்டம்தான்
-வாழ்க்கை"

7"காதல் என்பது பபிள்கம் மாதிரி!
ஆரம்பத்தில்  டேஸ்ட் அப்புறம் வேஸ்ட்
 கடைசியில் துப்பவேண்டியதுதான்."

8."நதிபோல
நகர்ந்து கொண்டே இரு!
ஒரு நாள் கடல்போல்
பெறுவாய் பலன்.
நகர்ந்தால் கடற்கரை,
நின்றால் சாக்கடை."

9."நம் நாட்டில் நல்ல அரசியல் வாதிகளும்,தலைவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள்,கடற்கரையோரங்களிலும்
முற் சந்திகளிலும் சிலைகளாக நிற்கிறார்கள்."

10"பணத்தால் வாங்கமுடியாத,
தகுதி
உன்னிடம் வரும்போதுதான்
உண்மையிலேயே
நீ,
மதிப்பு மிக்க மனிதன்."


11,"அனுபவம் ஒரு மனிதனுக்கு
எப்படிக் கிடைக்கிறது என்பது
முக்கியமில்லை.
அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான்
என்பதே முக்கியம்."

12."பலர்
செய்வதைச் சொல்வதில்லை,
சிலர்
சொல்வதைச் செய்வதில்லை.
இந்த இரண்டும்,
இல்லாதவர்கள்
இந்த உலகிலேயே
யாருமில்லை."

13."சிறிய தவறுகள் மன்னிக்கப் படாத போது,
அவைகள்,
பெரிய தவறுகளாக  மாறி,
விஸ்வரூபம் எடுப்பதைத்
தவிர்க்க முடியாது.

14."நாம் தேடும் விஷயங்கள்
தேடும்போது கிடைப்பதில்லை.
அது கிடைக்கும்போது
நமது தேடல்
அதுவாக இருப்பது இல்லை"


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள