ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இலங்கையில் மனிதஉரிமைகள்

1.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

பாராளுமன்றத்தினால் 1996ம் ஆண்டின் 21ம் இலக்க மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 1996ம் ஆண்டில் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

2.இலங்கையில் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவை நிறுவுவதன் நோக்கம் யாது?

பரிஸ்கோட்பாடுகளின் அடிப்படையில் தேசிய மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இது தாபிக்கப்பட்டது.

3.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் “மனிதஉரிமைகள்” என்பது எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது?

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம் ஆகியவற்றின கீழ் முன்மொழியப்பட்ட உரிமைகளே இவையாகும்.்

4.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் “அடிப்படை உரிமைகள்” என்றால் என்ன?

அடிப்படை மனிதஉரிமைகள் எனப்படுபவை, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட சட்டங்கள் ஆகும்.

5.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான செயற்பாடுகள் யாவை?

• அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளும் புலனாய்வும்
• இலங்கை அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படைஉரிமைகளுடன் அரசின் நடைமுறைகள் ஒத்திசைந்து செல்வதை உறுதிப்படுத்தல்
• அடிப்படை உரிமைகளுடன் இணங்கிப் போகக்கூடியவாறு சட்டவாக்கங்கள், நிர்வாக நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கல்
• இலங்கையின் சர்வதேச மனிதஉரிமைகள் கடப்பாட்டிற்கு உட்பட்டதாக தேசிய சட்டங்களையும் நிர்வாக நெறிமுறைகளையும் உருவாக்குவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு சிபாரிசு வழங்கல்
• சர்வதே மனித உரிமை உடன்படிக்கைகளையும் ஏனைய சர்வதேச கருவிகளையும் ஏற்று அங்கீகரிப்பது என்பது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கல்
• நாட்டில் மனிதஉரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்

6.ஆணைக்குழுவுக்கு ஒருவர் எத்தகைய முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்?

அரசியலமைப்புச் சட்டத்தின் 3ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அல்லது அவை மீறப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தால் முறைப்பாடு தெரிவிக்கலாம்.

7.ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டைத் தெரிவிக்கக்கூடிய நபர்கள் யார்?

• பாதிக்கப்பட்ட நபர்
• குழுவினர்
• பாதிக்கப்பட்ட நபரை அல்லது குழுவினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் நபர் அல்லது குழுவினர்

எந்த மொழியிலும் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாமா?

சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்.

8.சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்காவிட்டாலும் அது தொடர்பாக ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா?

ஆம், தன்னுடைய சொந்தப் பிரேரணையின் அடிப்படையில் ஆனைக்குழு அடிப்படை மனிதஉரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை விசாரணை செய்யலாம்.

9.உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆற்றுப்படுத்த முடியுமா?

ஆம், சிலவேளைகளில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தும்.

10.முறைப்பாடு ஒன்றில் எத்தகைய தகவல்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும்?

• எத்தகைய உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
• யாருடைய உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
• மீறலுக்குக் காரணமானவர்கள்
• எந்தவிதமாக உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
• எப்பொழுது, எவ்விடத்தில் மீறல்கள் இடம்பெற்றுள்ளன?
• எத்தகைய பரிகாரங்களை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

11.விசாரணைகள் இடம்பெறும்பொழுது சட்டப் பிரதிநிதிகளைக் கூட்டி வருவது கட்டாயமானதா?

இல்லை. சட்டப் பிரதிநிதிகளைக் கூட்டி வருவது கட்டயமல்ல

12.மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் ஆணைக்குள் உள்ளடங்காத முறைப்பாடுகளின் நிலை என்ன?

அரசாங்கத்தினால் தாபிக்கப்பட்ட உரிய பரிகார நிறுவனங்களுக்கு இந்த முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்படும்.

13.காலம் கடந்த மிகவும் பழைய அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளமுடியுமா?

தகுந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டே காலம் கடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்

14மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சேவைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியுமா?

ஆம், அனைத்து சேவைகளையும் ஆணைக்குழு இலவசமாகவே வழங்குகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள