இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் பல கல்லூரிகள் நிறுவி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர்களின் புலமைசார் மரபு ஆகியவை அவர்கள் கல்வியில் சிறப்புற ஏதுவாக்கின. ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களை விட அதிக விழுக்காடு தமிழ் மாணவர்கள் உயர் கல்வி கற்றனர். இதை சீர் அற்ற ஒரு நிலையாக கருதிய சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்ற கல்வி தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தார்கள். இந்த சட்டங்கள் 1967, 1971, 1979 ஆண்டுகளில் மாற்றப்பட்டன.
இலங்கையில் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் இலங்கையில் இனப்பிரச்சினை தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்று. இந்த சட்டம் உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது. அதாவது அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர்.
இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் ஒரு பார்வையில் சீர்திருத்த செயலாக்கங்கள் ஆகும். அதாவது காலனித்துவ சட்டங்களால் பின்தள்ளப்பட்ட சிங்கள மாணவர்களுக்கு கூடிய வாய்ப்புக்கள் வழங்கி இலங்கையில் தமிழ் சிங்கள மக்களின் கல்வி நிலையில் ஒரு சீர் நிலையை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டதாக சிலர் வாதிடுவர். இருப்பினும் இதை அரசு நிறைவேற்றிய முறை தமிழ் மாணவர்களுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியது. தனிச் சிங்கள சட்டம், இனக் கலவரங்கள் பின்புலத்தில் பார்க்கையில் இது தமிழ் மாணவர்களின் கல்வி வளங்களை வழிமாற்றும் செயற்பாடு என்றும் தோன்றுகின்றது.
இலங்கையின் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ தாபிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் :
1 .கொழும்பு பல்கலைக் கழகம்.2 .பேராதனைப் பல்கலைக் கழகம் 3 .ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் 4 களனி பல்கலைக் கழகம் 5 மொரட்டுவை பல்கலைக் கழகம் 6 .யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 7 உறுகுணை பல்கலைக் கழகம்.8 .கிழக்குப் பல்கலளைக் கழகம் 9 .இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக் கழகம் 10 இலங்கை ரஜரட்ட .பல்கலைக் கழகம் 11 .இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகம் .12 இலங்கை வயம்ப பல்கலைக் கழகம்.13 .இலக்கை உவா வெல்லச பல்கலைக் கழகம்.14 .கட்புல, அரங்கேற்றுக் கலைகள் பல்கலைக் கழகம்.15 .சுதேச மருத்துவ நிறுவகம்.16 .கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத நிறுவகம் 17 .கொழும்பு பல்கலைக்கழகக் கணனிக் கல்லூரி.18 .சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம்
2009ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரிட்சையில் பகலைகழ்க அனுமதிக்கு மொத்த உத்தேசமான அனுமதி 20835 மொத்த தகுதியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 125000 பேர்.அண்ணளவாக.
இலங்கைச் சனத் தொகையில் இனங்களின் அடிப்படையில்,
இலங்கைச் சிங்களவர்..... 74 %இலங்கைத் தமிழர் ...............18 %இலங்கை முஸ்லிம் .............7%ஏனையவர்.................................1 %
இலங்கையின் மொத்த சனத் தொகை 2009ஆம் ஆண்டு 21,128,772 இந்த விகிதாசாரப் படி பார்த்தால் மாவட்டத்திற்கு எவ்வளவுபேர்,உயர் கல்விக்குத் தகுதி பெறுவார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதிலும் தமிழ் மக்கள் உயர் கல்விக்குத் தெரிவாவார்கள் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்,ஒரு பல்கலைக் கழக ஆண்டில் தெரிவாகும் இருபதாயிரம் பேரில் மூவாயிரம் தொடக்கம் நான்காயிரம் பேர்களுக்குள் தமிழ் மக்கள் அடங்குவார்கள்.இதன் புள்ளி விபரம் கீழ் உள்ளது.
இலங்கைப் பல்கலைகழக அனுமதிக்கான மூலப் பிரமாணம்:
கலைப்பிரிவு கற்கை நெறிகளைப் பொறுத்த அளவில்,ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திலிருந்து அனுமதிக்கப்படும் மொத்த எண்ணிக்கையானது அடிப்படைக்கல்வியாண்டான 1993 /1994 இல் அம்மாவட்டத்திலிருந்து அனுமதிக்கப்பட்டமொத்த எண்ணிக்கையைவிட குறைவானதாக இருக்க மாட்டாது.என்ற நிபந்தனைக்கு உட்பட்டு ,தீவளாவிய திறமை அடிப்படையில் அனுமதி வழங்கப் படும் .
யுனானி ,ஆயுர்வேதம்,மற்றும் சித்த வைத்தியம் ஆகியவற்றுக்கான,அனுமதிகள் தீவளாவிய திறமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
மேற் கூறப்பட்டுள்ள கற்கை நெறிகளைத் தவிர,சகல் கற்கை நெறிகளுக்கும் இரட்டை மூலப் பிரமாணஅடிப்படையில் அனுமதிகள் மேற்கொள்ளப்படும்.அவையாவன
*தீவளாவிய திறமை .*மாவட்ட அடிப்படையிலான திறமை.
தீவளாவிய திறமை அடிப்படையில் .தீவளாவியஅடிப்படையில் "Z " புள்ளி நிரலின் வரிசை ஒழுங்கில்,கிட்டுகின்ற ஒழுங்கில் 40 % வரை நிரப்பப்படும்.
மாவட்ட அடிப்படையில் திறமை
ஒவ்வொரு கற்கை நெறிக்கும் உள்ள 55 % வரையிலான இடங்கள்,மொத்சனத்தொகைவிகிதாசாரப்படி,அதாவது,நாட்டின் மொத்த சனத்தொகையில் சம்மந்த்தப்பட்ட மாவட்ட மானது கொண்டுவந்துள்ள சனத்தொகையின் விகிதாசாரப்படி,25 மாவட்டங்களுக்கும்ஒதுக்கப்படும்.
ஒவ்வொரு கற்கை நெறிக்கும் உள்ள இடங்களில் 5 % வரை விசேட ஒதுக்கீடாக,கீழே குறிப்பிடப்படும் கல்வியில் பின்தங்கிய 16 மாவட்டங்களுக்கு,சனத் தொகையில் அடிப்படையில்,விகிதாசாரப்படி ஒதுக்கப்படும்.
1 .நுவரெலியா 2 ஹம்பாந்தோட்டை 3 .யாழ்ப்பாணம்
4 .கிளிநொச்சி
5 .மன்னார்
6 .முல்லைத்தீவு
7 .வவுனியா
8 .திருகோணமலை
9 .மட்டக்களப்பு
10௦ .அம்பாறை
11 .புத்தளம் 12 .அனுராதபுரம்13 .பொலன்னறுவை 14 .பதுளை 15 .மொனராகலை 16 .இரத்னபுரி
யாழ்ப்பாண மாவட்டம் 1993 /1994 கல்வியாண்டுக்கு முன்னர்,கல்வியில் முன்னேறிய மாவட்டமாக இலங்கையரசால் பிரகடனப்படுத்தப்பட்டு,கல்வித் தரப்படுத்தலை அங்குஇருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது,அல்லது தமிழர்களின் உயர் கல்வியில் கை வைத்தது.
இலங்கையின் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ தாபிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் :
1 .கொழும்பு பல்கலைக் கழகம்.
2 .பேராதனைப் பல்கலைக் கழகம்
3 .ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம்
4 களனி பல்கலைக் கழகம்
5 மொரட்டுவை பல்கலைக் கழகம்
6 .யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
7 உறுகுணை பல்கலைக் கழகம்.
8 .கிழக்குப் பல்கலளைக் கழகம்
9 .இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக் கழகம்
10 இலங்கை ரஜரட்ட .பல்கலைக் கழகம்
11 .இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகம் .
12 இலங்கை வயம்ப பல்கலைக் கழகம்.
13 .இலக்கை உவா வெல்லச பல்கலைக் கழகம்.
14 .கட்புல, அரங்கேற்றுக் கலைகள் பல்கலைக் கழகம்.
15 .சுதேச மருத்துவ நிறுவகம்.
16 .கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத நிறுவகம்
17 .கொழும்பு பல்கலைக்கழகக் கணனிக் கல்லூரி.
18 .சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம்
2009ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரிட்சையில் பகலைகழ்க அனுமதிக்கு மொத்த உத்தேசமான அனுமதி 20835 மொத்த தகுதியடைந்த மாணவர்களின்
எண்ணிக்கை 125000 பேர்.அண்ணளவாக.
இலங்கைச் சனத் தொகையில் இனங்களின் அடிப்படையில்,
இலங்கைச் சிங்களவர்..... 74 %
இலங்கைத் தமிழர் ...............18 %
இலங்கை முஸ்லிம் .............7%
ஏனையவர்.................................1 %
இலங்கையின் மொத்த சனத் தொகை 2009ஆம் ஆண்டு 21,128,772
இந்த விகிதாசாரப் படி பார்த்தால் மாவட்டத்திற்கு எவ்வளவுபேர்,உயர் கல்விக்குத் தகுதி
பெறுவார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதிலும் தமிழ் மக்கள் உயர் கல்விக்குத் தெரிவாவார்கள் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்,ஒரு பல்கலைக் கழக ஆண்டில் தெரிவாகும் இருபதாயிரம் பேரில் மூவாயிரம்
தொடக்கம் நான்காயிரம் பேர்களுக்குள் தமிழ் மக்கள் அடங்குவார்கள்.இதன் புள்ளி விபரம் கீழ் உள்ளது.
இலங்கைப் பல்கலைகழக அனுமதிக்கான மூலப் பிரமாணம்:
கலைப்பிரிவு கற்கை நெறிகளைப் பொறுத்த அளவில்,ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திலிருந்து அனுமதிக்கப்படும் மொத்த எண்ணிக்கையானது அடிப்படைக்கல்வியாண்டான 1993 /1994 இல் அம்மாவட்டத்திலிருந்து அனுமதிக்கப்பட்டமொத்த எண்ணிக்கையைவிட குறைவானதாக இருக்க மாட்டாது.
என்ற நிபந்தனைக்கு உட்பட்டு ,தீவளாவிய திறமை அடிப்படையில் அனுமதி வழங்கப் படும் .
யுனானி ,ஆயுர்வேதம்,மற்றும் சித்த வைத்தியம் ஆகியவற்றுக்கான,அனுமதிகள் தீவளாவிய திறமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
மேற் கூறப்பட்டுள்ள கற்கை நெறிகளைத் தவிர,சகல் கற்கை நெறிகளுக்கும் இரட்டை
மூலப் பிரமாணஅடிப்படையில் அனுமதிகள் மேற்கொள்ளப்படும்.அவையாவன
*தீவளாவிய திறமை .
*மாவட்ட அடிப்படையிலான திறமை.
தீவளாவிய திறமை அடிப்படையில் .
தீவளாவியஅடிப்படையில் "Z " புள்ளி நிரலின் வரிசை ஒழுங்கில்,கிட்டுகின்ற ஒழுங்கில்
40 % வரை நிரப்பப்படும்.
மாவட்ட அடிப்படையில் திறமை
ஒவ்வொரு கற்கை நெறிக்கும் உள்ள 55 % வரையிலான இடங்கள்,மொத்சனத்தொகை
விகிதாசாரப்படி,அதாவது,நாட்டின் மொத்த சனத்தொகையில் சம்மந்த்தப்பட்ட மாவட்ட
மானது கொண்டுவந்துள்ள சனத்தொகையின் விகிதாசாரப்படி,25 மாவட்டங்களுக்கும்
ஒதுக்கப்படும்.
ஒவ்வொரு கற்கை நெறிக்கும் உள்ள இடங்களில் 5 % வரை விசேட ஒதுக்கீடாக,கீழே
குறிப்பிடப்படும் கல்வியில் பின்தங்கிய 16 மாவட்டங்களுக்கு,சனத் தொகையில்
அடிப்படையில்,விகிதாசாரப்படி ஒதுக்கப்படும்.
1 .நுவரெலியா
2 ஹம்பாந்தோட்டை
3 .யாழ்ப்பாணம் 4 .கிளிநொச்சி
5 .மன்னார்
6 .முல்லைத்தீவு
7 .வவுனியா
8 .திருகோணமலை
9 .மட்டக்களப்பு
10௦ .அம்பாறை
11 .புத்தளம்
12 .அனுராதபுரம்
13 .பொலன்னறுவை
14 .பதுளை
15 .மொனராகலை
16 .இரத்னபுரி
யாழ்ப்பாண மாவட்டம் 1993 /1994 கல்வியாண்டுக்கு முன்னர்,கல்வியில் முன்னேறிய
மாவட்டமாக இலங்கையரசால் பிரகடனப்படுத்தப்பட்டு,கல்வித் தரப்படுத்தலை அங்கு
இருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது,அல்லது தமிழர்களின் உயர் கல்வியில் கை வைத்தது.
ஆண்டு /ப.ஆண்டு/தோற்றி/தகமை/விண்ணப்பித்தோர்/தெரிவானோர்
1993 1994/95 144,573 59,292 21,799 9,460 6.5 15.9 43.3
1994 1995/96 148,883 56,740 19,021 9,787 6.6 17.2 51.4
1995 1996/97 136,728 70,379 26,011 11,200 8.2 15.9 43.0
1996 1997/98 141,161 71,846 26,970 11,658 8.3 16.2 43.2
1997 1998/99 142,336 73,570 26,829 11,901 8.4 16.2 44.3
1998 1999/2000 147,853 73,422 27,049 11,821 8.0 16.1 43.7
1999 2000/2001 16 9,679 73,561 24,461 12,040 7.0 16.3 49.2
2000 2001/2002 214,189 91,676 37,122 12,132 5.7 13.2 32.6
2001 2002/2003 218,441 98,432 35,852 12,654 5.8 13.0 35.2
2002 2002/2003 (A) 210,141 92,252 25,704 13,036 6.2 14.1 50.7
2003 2003/2004 247,755 93,353 30,193 14,260 5.8 15.3 47.2
2004 2004/2005 199,937 108,357 34,002 14,850 7.4 13.8 43.6
2005 2005/2006 204,030 118,770 35,684 17,287 8.5 14.6 48.4
2006 2006/2007 201,686 119,955 36,465 17,248 8.6 14.4 47.3
2007 2007/2008 198,183 121,421 38,603 20,069 10.1 16.5 51.9
2008 2008/2009 207,436 130,236 46,010 20,270 9.7 15.5 44.0
2009 2009/2010 205,249 125,284 47,613 21,547 10.5 17.2 45.3
மொத்தச் சனத் தொகையில் 1 % வீத மாணவர்கள் கூட,உயர் கல்வியை எட்ட முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயம். அதில்,தமிழ் மக்களின் உயர்கல்வி,எப்படித்தான் தலை கீழாக
நின்றாலும் கேள்விக்குறிதான்
இனி மேலாவது,தமிழ் மக்கள் தங்களது பிள்ளைகளின் உயர் கல்விக்கு,அரசாங்கத்தை மட்டும்
நம்பிக்கொண்டிராமல்,தங்களது சகல் முயற்சிகளையும் ஒன்று திரட்டி,வளமான கல்வியைக்
கொடுப்பதற்கு முன்வரவேண்டும்.அறிவு ஜீவிகள்,புத்தி ஜீவிகள்,இதற்கான வாய்ப்புகளையும்
சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
எதிர் காலத்தில் இன்னும் பலவகையான தரப்படுத்தல்களை இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.உதாரணமாக மாவட்டங்களின் குடிசன மதிப்பீடு, 2011ம்
ஆண்டு நடைபெற இருக்கிறது.இதனால் முழுமையாக பாதிக்கப் படப் போகிறவர்கள் தமிழ்
மக்கள் தான்.திரு கோணமலை இன்னொரு அம்பாறையாக மாறிக்கொண்டிருக்கிறது.இன்னும்
ஒரு இருபத்தைந்து வருடத்திற்குள் இந்த நிலைமையை எதிர்பார்க்கலாம். இதில் நான் சொல்ல நினைத்தவைகள் எல்லாம் எழுத முடியவில்லை என்பது மிகவும் மனவருத்தமான விஷயம்.
வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள்,வசதிகளை ஏற்படுத்தக் கூடியவர்கள்,தங்களது பிள்ளைகளை
உயர் கல்வி பெறுவதற்கு,வெளி நாடுகள் இந்தியா உட்பட ஏதாவது நாட்டுக்கு அனுப்பிப் படிப்பிப்பது காலத்தின் கட்டாயம். தமிழ் நாட்டை விட ஏனைய மாநிலங்களில் கல்விக்குரிய
கட்டணம் குறைவாகக் காணப்படுவது,நான் நேரடியாகக் கண்ட உண்மை.உயர் கல்வி பெறத்
தகுதி பெற்றவர்களை,தகுதி பெற்றவுடன்,காலங் கடத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தை வீணாகச் செய்யாமல் நமது பிள்ளைகளுக்குச் செய்யும் பெரிய நன்மையாக முடியும்.
தகவல்கள் ,தமிழ் விக்கிபீடியா
என்னுடைய இப்போதைய வேண்டுதல் எல்லாம் இங்கே உள்ள போலி அரசியல்வாதிகள் சிங்கள அரசை கோபமூட்டாமல் இருக்கும் மக்களையாவது நிம்மதியாக வாழ வழிவகுக்கவேண்டும் என்பதுததான்.
பதிலளிநீக்குநண்பரே உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுவதிலும், ஒட்டுப்பட்டையில் வக்களிப்பதிலும் சிரமம் உள்ளது. டெம்ப்ளேட் கோளாறு என்று நினைக்கிறேன் சரி செய்யவும். நீங்க காபி செய்யாமல் இருக்கத்தான் அப்படி செய்தீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பின்னூட்டம் இட முடியவில்லை
பதிலளிநீக்குஅன்பு நண்பா!தங்களது பதிவுகளை,முடிந்தவரையில் படிக்கின்றேன்,தங்களது ஆதங்கங்களை மதிக்கிறேன்,நீங்கள்
பதிலளிநீக்குஎங்கள் மக்கள் மீது வைத்திருக்கும் மரியாதைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டது, என்பதும் யாம் அறிவோம்.முட்டையிடும் கோழிக்குத்தான் வலி தெரியும்.அரசியியல் வாதிகள் சேவல் போன்றவர்கள்,எப்பொழுதும்
கூவிக் கொண்டுதான் இருப்பார்கள். நீங்கள் முட்டையிட்ட கோழியையும் கொஞ்சம் கவனியுங்கள் .