நுளம்புத் தொல்லை தங்கவும் முடியவில்லை, தூங்கவும் முடிய வில்லை,
நுளம்புத்திரி வைத்தால்,நுளம்பு மயங்கி நம்மளைக் கடிக்காது என்று பார்த்த
நுளம்புத் திரியில் நாம் மயங்கி,நன்றாக நித்திரை போனவுடன்,அதன் விருப்பத்திற்கு,ஆற அமர இருந்து அமுக்கித்துப் போகிறது,காலையில்
எழுந்தவுடந்தான் தெரிகிறது.வலைக்குள் படுத்தால், எப்படியோ நுழைந்து
வந்துவிட்டேன்,பார் என்று சங்கராபரணம் பாடுகிறது.ஒருவழியாலும்,இதை
அழிக்க முடியவில்லை.இந்த ஆதங்கத்தின் விளைவுதான் இது.
நித்திரையைக் குலைத்து,நிம்மதியைக் கெடுத்து -எமக்கு
சத்திராதியாய் வந்து,சாமத்தில் எழுப்பி
பத்தியத்தை கெடுக்கும்,பயங்கரவாத நுளம்பே!-உன்னை
சத்தியமாக என்ன செய்ய வேண்டும் சொல்!
சந்துக்குள் புகுந்து நுளம்பு வலைக்குள் -எப்படி
சிந்து பாடுகின்றாய்,வம்புக்கு வந்து எங்களை,
நொந்து நூடுல்ஸ்சாக்கி ,வெம்ப வைக்கிறாய் -கிட்ட
வந்து பார்த்தால்,பஞ்சு பஞ்சாக பறக்கின்றாய்.
வம்புக்கு வலிய வந்ததுவும் இல்லாமல்-எங்களை
நம்ப முடியாத, நோய் நொடிக்குள்ளாக்கி
வெம்ப வைத்து வேடிக்கை காட்டுகிறாய்-மாட்டினால்
பாம் வைத்துக் கொல்ல துடிக்கிறது மனது
நுளம்புச்சுருள்,நுளம்புவலை எல்லாம் உனக்கு -தூசு
கிளம்புகின்றபோதே தனியாக வந்து தாக்கி,
அலம்ப வைத்தாய் மனித குலத்தை நடுங்கி-என்னை
புலம்பவைத்தாய் உன் புகழை இணையத்தில் புகுந்து.
சினிமாவில்தான் பாடல்கள் எல்லாம் தண்டம்-உன்
இனியபாடல்களால் எங்கள் நித்திரையும் கண்டம்.
பணியவைக்காமல் விடமாட்டேன் உன்னை இப்பாரில் -நானும்
துணிவாய் இறங்கி, தொலைக்காமல் விடமாட்டேன் இப்போரில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள