சனி, 13 மார்ச், 2010

இணையத்தில் இலவச ஜோதிடம்.

இணையத்தில் இலவச ஜோதிடம் 




ஜோதிடம் என்றாலே நம்பிக்கைதான்,இவைகளையெல்லாம் நம்புவது யார்? என்று கேட்டவர்கள் கூட,தனக்கோ அல்லது தனது குடும்பத்தவர்க்கோ கஷ்டம் என்று வந்தால்,கையில் பிறந்த குறிப்புடன் அலைபவர்களை,நாம் அன்றாடம் காண்கிறோம்,கணனிகள் உருவாகியும்,மனிதன் அன்றாட அலுவல்களை கணனி மூலம்,நிருவகித்தாலும்,அந்தக் கணனியைமுதன் முதல் இயக்குவதற்கு நல்ல நேரம் பார்ப்பவர்கள்  இன்றும் இல்லாமல் இல்லை. இன்னும் சொல்லப் போனால்,சில பதிவர்கள்  நல்ல நேரம் பார்த்துத்தான்,பதிவுகளை எழுதுகிறார்கள்,வெளியிடுகிறார்கள்,

உங்கள் பலன்களை சரியாக அறிந்து கொள்வதற்கு,சில விடயங்கள் அடிப்படையாகத் தெரிந்து இருக்க வேண்டும், அவை,உங்கள் பிறந்த நேரம்,பிறந்த ஊர்,பிறந்த திகதி,இவ்வளவும் சரியாகத் தெரிந்து இருந்தால்,இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்  அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை இட்டு calculate என்பதை அழுத்தினால்,உங்கள் இராசி,லக்கினம்,நட்சத்திரம்,நட்சத்திர பாதம்,நடப்பு திசை இவை எல்லாம் அட்சர சுத்தமாக வழங்குகிறார்கள்.இவைகள் எல்லாவற்றையும் குறித்துக் கொள்ளுங்கள்,இவைதான் சோதிடத்தின் ஆரம்பம்,இதை வைத்துத்தான் இன்னும் பல 
இனைய தளங்களில்,உங்கள் எதிர் காலத்தை நீங்களே அறிந்து கொள்ளலாம்.நீங்கள் பிறந்த இடத்தின் நேர அமைப்பும்,அதுதாங்க GMT இது தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் 
ஒன்றுதான்.போய்ப்பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இதனை  அடிப்படையாக  
வைத்து அடுத்ததாக ஒரு தமிழ் இணைய தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்,
இது சம்பந்தமான கேள்விகளை,பின்னூட்டத்தில் கேட்கலாம்,பிறந்த திகதி தெரியாதவர்களுக்கும்,இணைய தளம் தயாராக இருக்கிறது.                                                                                                            அன்புடன்.!

வெள்ளி, 12 மார்ச், 2010

கணனியின் வேகத்தை அதிகரிக்க.!




கணனியின் வேகத்தை அதிகரிக்க,எந்த வொரு மென் பொருட்களும் இல்லாமல்,உங்கள்
கணனியின் வேகத்தை அதிகரிக்கலாம்,அதற்கு முதல் தேவை பொறுமை,மைக்ரோ
சொவ்ட் நிறுவனம் அதற்குரிய பதிவுகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே  இருக்கிறது.அதைப் பொறுமையுடன் வாசித்து அதன்படி செயற் பட்டால்,நமது கணனி தரமுடன் இயங்கிக் கொண்டிருக்கும்.கணனியுடன் தொடர்புடைய எல்லோராலும்
இந்த முயற்சியில் வெற்றியடையலாம்.

எல்லோரும் கணனி வாங்கும் போது விடுகின்ற பெரிய பிழை ஹார்ட் டிஷ்க்கைத் தெரிவு
செய்வதிலேயே,கழஞ்சிய வசதிகள் குறைவாகக் கொண்ட ஹார்ட் டிஸ்க்கை  வாங்குவதே நாம் விடும் முதலாவது பிழையாகக் காட்டப்படுகிறது.இதன் மூலமே கணனிக்கு தலைவலி ஆரம்பித்து,வருட முடிவதற்குள் கணனியின் செயல்ப்பாடு
கொச்சிக்காய் அரைக்கும் கிரைண்டரின்,சத்தத்துடன் முடிவுக்கு வரும்.பணத்தைக்
கொடுத்து வாங்கும் நாம், சரியான வழிகாட்டி,சரியான தெரிவுடன் இவைகழை வாங்க
முயற்சி செய்யவேண்டும்



மைக்ரோசொப்ட் வழங்கும் இந்த இலவச ஆலோசனையை சரியாகப் பின்பற்றுங்கள்
கணனியின் வேகம் அதிகரிக்கும்,இவைகளை நான் செய்து பார்த்து சரியாக இருந்தால்தான் வெளியிடுகிறேன்.முதலாவது பக்கம் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கிறது,இலகுவாக எல்லாம் அறிந்து கொள்ளலாம்.இரண்டாவது பக்கத்திற்குச் சென்ன்றால்,திறந்தவுடன் இது சம்பந்த்தமான பதிவுகளை காணமுடியாது, கொஞ்சம்
சிரமம் பாராமல் கிழே சென்றால் சகலதையும் அறிந்து கொள்ளலாம் இது சம்பந்த மாக ஏதாவது என்னிடம் கேட்க வேண்டும் என்றால் தயங்காமல் பின்னூட்டத்தில் கேட்கலாம். சகல கேள்விகளுக்கும் பதில் அளிக்கக் காத்து இருக்கிறேன். தயங்காமல் கேள்விகளைப் பின்னூட்டத்தில் கேளுங்கள்..மைக்ரோ சொவ்டின் கணனியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?என்ற இலவச ஆலோசனை மையம் செல்ல, உங்கள் மௌசை,
                                                                இங்கு அழுத்தவும்.


அன்புடன்,!.......

வியாழன், 11 மார்ச், 2010

யாகூவும் நானும்.



எனது "ஊர்பெயரைக் காணோமுங்க"என்ற பதிவில்,அதைப் படியாதவர்கள் முதலில் அதைப் படியுங்கள்.வரைபடத்தில் வட கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தலை நகரங்களின் பெயர்களை ஆங்கிலத்தை அகற்றிவிட்டு,சிங்களப் பெயர்களை இட்டிருந்த்தது.இது சம்பந்த்தமாக யாகூவுக்குச் செய்த முறைப்பாட்டுக்கு,பதில் கடிதம் கிடைத்தது.அதை பத்தும் பலதும் வாசகர்களுக்குச் சமர்ப்பித்துள்ளேன்.வாசித்துப் பார்த்து உங்கள் கருத்தைக் கூறுங்கள் 

RE: Live Traffic Questions (KMM163957252V63635L0KM)‏
அனுப்புநர்:கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா (kvrudra@hotmail.com)
அனுப்பப்பட்டது:11 மார்ச் 2010 04:54:44
பெறுநர்:maps-feedback@cc.yahoo-inc.com
Cc:email@manyandten-rudra.blogspot.com
தங்களின் மின் அஞ்சல் மடலுக்கு,நன்றிகள்!
பல கோடித் தமிழ் மக்கள உங்கள் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை நீங்கள்,மீண்டும் கட்டி எழுப்பியுள்ளீர்கள்.உங்களின் பொறுப்பு வாய்ந்த பதிலுக்கு, நன்றிகள்,

நான் தங்களின் மின் அஞ்சல் தளத்தில் ஒரு நீண்டகால உறுப்பினர்,தமிழ் மக்கள் எல்லோரும் முதல் கண்ட மின்னஞ்சல்  தளம்,இன்றுவரையிலும் 
நாங்கள் அதைக் கைக்கொள்கிறோம்,மீண்டும் இப்படியான தவறுகள் இடம் பெற்று தங்கள்,தளத்தின் நன்மதிப்பைக் கெடுப்பதற்கு இடம் கொடுக்கவேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்,

இலங்கை வரைபடம் சம்பந்தமாக தரவுகள்,உங்களது தளத்திலேயே அதிகம் உள்ளது,சரி பார்த்துக் கொள்ளவும்.

அன்புடன்!...

கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா  

> Date: Tue, 9 Mar 2010 12:54:43 -0800
> To: kvrudra@hotmail.com
> Subject: Re: Live Traffic Questions (KMM163957252V63635L0KM)
> From: maps-feedback@cc.yahoo-inc.com
>
> Hello,
>
> Thank you for writing to Yahoo! Maps.
>
> I understand that you are unable to find the locations within Yahoo!
> Maps. I apologize for the inconvenience this has caused you.
>
> At this time, it would help us greatly if you could provide a more
> detailed description of the issue. Please include the following
> information.
>
> - The Complete address along with the city, state and the zip code
> - The Exact issue for which you need assistance
> - Any other feedback/ observation that you think can help resolve the
> issue
>
> Once we have the information, we will be able to help, troubleshoot your
> issue.
>
> We look forward to your reply.
>
> Thank you again for contacting Yahoo! Maps.
>
> Regards,
>
> Dean
>
> Yahoo! Maps Customer Care
> Maps Feedback
>
> For assistance with all Yahoo! services, please visit:
>
> http://help.yahoo.com/
>
> New and Improved Yahoo! Mail - better than ever!
>
>
>
> Original Message Follows:
> -------------------------
>
> Mail-Id:
> w1.help.ch1.yahoo.com-/l/us/yahoo/maps/general.html-1268145624-2664
>
> 1. What is your name and Yahoo! ID?
> ------------------------------------
> Name: K.V.Rudra
>
> Yahoo! ID: kvrudra
>
> 2. What is your email address?
> -------------------------------
> Email Address: kvrudra@hotmail.com
>
> 3. What are you writing about?
> -------------------------------
> Subject: Live Traffic Questions
>
> 4. What is the address you are trying to map?
> ----------------------------------------------
> where is the Batticaloa? This city is very ancient city,in
> Srilanka. what happened to this name?
> Not only Batticaloa,There is
> another,Vavuniya,Trincomalee,Kalmunai,Jaffna,and Mannar also. check
> your old map and correct it Please,
>
> 5. Destination Address for Driving Directions issues
> -----------------------------------------------------
> Batticaloa,Trincomalee,Mannar,Jaffna,Vavuniya,Kalmunai.
>
> 6. Enter additional information here:
> --------------------------------------
> PLease,correct the error and inform to this e-mail.
>
> While Viewing:
>
> Last URL: ://
>
> Form Name: http://help.yahoo.com/l/us/yahoo/maps/general.html
>
> Yahoo ID: kvrudra : Yahoo id from cookie
> "https://amt.yahoo.com/amt/dosearch?.token=zHdLFs5Mzehbk9etQlRzExlF.WLMf
> QgefHtghgo-"
>
>
> Other ID:
>
> Machine: Unknown
>
> OS: unknown
>
> Browser: Default Browser 0
>
> REMOTE_ADDR: 112.135.13.52
>
> REMOTE_HOST: 112.135.13.52
>
> Date Originated: Tuesday March 9, 2010 - 06:40:24
>
> Cookies: disabled
>
> AOL: no
>
> -------
>
>


அன்புடன்.!.......

உயிரினங்களின் உறவு!




"யாரப்பா? தூக்கத்தைக் கெடுக்கிறது?"





"சரியான, குளிரா,இருக்குது"  






"சரி! இப்ப, பார்க்கலாம் ?





"அச்சாக், குட்டி!  





எப்படி? இருக்கு?





நல்லா இருக்கிறதா,படங்கள், வெளி நாட்டு,இறக்குமதி. ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக,
இருப்பதுபோல்,இருந்தது.உங்க மனதில் தோன்றுவதை, பின்னூட்டமாக இடுங்க,.



அன்புடன்!......


புதன், 10 மார்ச், 2010

Clean your computer





என்னை பல நாட்கள் கணனியுடன் அலையவைத்த,கணனி திருத்துநர்கள் அனைவருக்கும், இந்தப் பதிவு சமர்ப்பணம்.

நமது கணனி வாங்கியதற்கு பிறகு எவ்வளவு நாளாகியும் கழட்டித் துப்பரவு செய்யாமல்
வைத்திருப்போம் அல்லவா,அதைக் கட்டாயம் கழட்டி எப்படி துப்பரவு செய்ய வேண்டும்
என்பதை மைக்ரோ சொவ்ட் நிறுவனம் ஒரு பதிவு போட்டிருக்காங்க,நீங்கள் கழட்டித் துப்பரவு செய்யாவிட்டால்,உபகரணங்கள் தூசுகளால் மூடப்பட்டு,அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டு,பராமரிப்புச் செலவு கைக்கு அடங்காமல் போவதைத் தடுக்க இந்த முறை உங்களுக்கு உதவி செய்யும்.  கழட்டுவதற்கு முதல் என்ன செய்ய வேண்டும்,கழட்டுவதற்கு என்ன கருவிகளைப் பாவிக்க வேண்டும்.எதைக் கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என்பதை விளக்கமாக பதிவு இட்டிருக்கிறார்கள்.நீங்களும் படித்து பயனடையுங்கள் பதிவுக்குப் போக இங்கே அமத்துங்கள்.

இனி யாரும் கணனி,  சூடாகுது,செயற்பாட்டை நிறுத்த முடியவில்லை,என்பதற்காக திருத்துனர்களைத் தேட வேண்டியதில்லை.கணனியைத் துப்பரவாக வைத்திருந்தால்,
இவைகளைத் தடுக்கலாம்.



அன்புடன்.!...


செவ்வாய், 9 மார்ச், 2010

ஊர் பெயரைக் காணோமுங்க.







இலங்கை வரைபடத்தில் எங்க ஊர் பெயரைக் காணோமுங்க,நான் எனதுவெளி நாட்டு  நண்பர் ஒருவருக்கு மின் அஞ்சல் அனுப்பியிருந்தேன்.அவர் அதில் இருந்த எனது இலங்கை விலாசத்தை யாஹு வரைபடத்தில் தேடியிருக்கிறார்,அதில் காணப்படவில்லை,எனக்கு எடுத்துச் சொன்னார்,என்னப்பா சரித்திரத்தில் எல்லாம் இடம்
பெற்ற பெயர் என்று சொல்கிறீர்கள்,இந்த வரை படத்தில் Batticaloa என்ற பெயர் எங்கேயும்
காணோம்,நீங்களும் வேணும் என்றால் தேடிப்பாருங்கள் என்று இந்தப் படத்தை அனுப்பியிருந்தார்,நானும் பார்த்தேன் Batticaloa வைக் காணோமுங்க.

அண்ணன் வடிவேல் ஒரு திரைப்படத்தில்,கிணத்தைக்கானோமுங்க என்ற ரேன்ஞ்சில்
யஹுவிடம் முறையிட்டேன்,முறைப்பாட்டைப் பெற்றவர் இருபத்து நான்கு மணித்தியாலத்தில்,கண்டுபிடித்துத் தருவதாகவும்,இல்லையேல், உடுப்பைக் கழட்டிஓரமாய் வைத்துவிட்டு ஓடிவிடுவேன் என்றார்,பதிவு எழுதும் வரை,எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.எங்க ஊரின் பெயருடன்,சேர்ந்து போன ஊர்கள் Jaffna ,Trnicomalee ,kalmunai ,mannar ,இவைகளைக் கண்டால்,உடனடியாக அருகிலுள்ள,யாஹு
பொலிசாருக்கு அறிவிக்கவும்.தகுந்த சன்மானம் வழங்ககப்படும்..

காணாமல் போன ஊர்.பற்றிச் செய்த முறைப்பாட்டுக்கு,யாஹுவால், எனக்கு
வந்த பதிலை அறிய இங்கே அழுத்தவும்

அன்புடன்.!......
                                                                                      

கலைஞரின் சாதனை.!

கலைஞரின் சாதனை.!



 நன்றி:-வீரகேசரி 


இதை விட வேறென்ன வேண்டும்.-என்
இனிய தமிழ் மக்களுக்கு யாண்டும்
பாதை சொல்லி விட்டிருக்கிறார்-கலைஞர்
பழி முடித்து விட்டார் மகிந்தர்,

ஆடு புலியாட்டம் அவர்களுக்குள்ளே -சாமி
ஆடி முடிந்ததெல்லாம் அப்பாவிகள் மேலே,
சூடு சொரனையற்ற துண்டுக்கார மாமா -நீ
ஆடியதும் பாடியதும் தமிழனைக்  கொல்லத்தானா?

மனமது பொறுக்குதில்லை யுன் வஞ்சகத்தை-அது 
மறுபடி எதையும் நினைக்கிதில்லை 
திருவடி சரணம் என்று இருந்தபேர்க்கு-நல்ல 
ஒருவழி பண்ணிவிட்டாய் ஓரகத்தாலே

வீரபாண்டிய கட்டப் பொம்மனை மாட்ட  -வெகு  
துரமா இருந்து வந்தான் எட்டப்பன் எதிரி 
தன்குடும்பம்,தனதாட்சி நிலைக்க -சொந்த
தமிழனையே பலி கொடுத்தான்  முதல் மந்திரி  

அன்புடன்!...

ஞாயிறு, 7 மார்ச், 2010

நெஞ்சம் மறப்பதில்லை.!



நமது பாடசாலை நாட்களில்,தினமும் கடவுளை வணங்குகிறமோ?இல்லையோ?தவறாமல் கோயில் திருவிழாக்கள்,கலை விழாக்கள்,இவைகளில் பங்குபற்றாமல் தவற விட்டது கிடையாது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் எமது ஊரில் அருகில்  உள்ள திரோபதை அம்மன் ஆலயம் விசேடமானது,எந்த வருடமானாலும் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு முதல் வரும் மூன்று நாட்கள் அனேகமாக,புதன்,வியாழன்,வெள்ளி விசேடமாகப் பூசைகளும் இடம்பெறும்,அதேபோல் எங்களது திருவிளையாடல்களும் அதிகரித்துக்
காணப்படும்.தொடர்ந்து சனி,ஞாயிறு வரைக் கடைத்தெரு இருக்கும்.பாட சாலை இல்லாத சந்தோசம்,கட்டுப்படுத்த எவரும் இல்லாத சூழல்,பதினாறு பதினேழு வயதுப் பருவம் ஓரளவு கையில் பணம்,பாடசாலை மானவர்கள் குழாம்.எப்படிஇருக்கும்.சந்தோசக் காடு அந்த ஐந்து நாட்களும்,சொல்லி,வேலைஇல்லை.

நான் அந்தக் கோயிலில் ஒரு சிறிய விளையாட்டுப் பொருள் வாங்கி,அதைக் கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன்.அதன் பெயர் என்னவென்று தெரியாது,தகரத்தால் செய்யப்பட்டிருக்கும்.இரண்டுவிரல்களால் இயக்கலாம் அமர்த்துப் பட்டவுடன் "டிச்"என்று சத்தம் வரும் பெரிய உருவமும் கிடையாது.எவ்வளவு விரைவாக அமைத்துகிறோமோ ,அவ்வளவு விரைவாக சத்தம் வரும்,எனது நண்பன் ஒருவனுக்கு இந்தச் சத்தம் அலர்ஜியாகிவிட்டது.இதுபோதும் எங்களுக்கு,அவனை வெறுப்பேற்றுவதற்காகவே,தொடர்ந்து "டிச்""டிச்""டிச்"என்று அடித்து அவனை ஒரு வளி பண்ணி விட்டோம்.

அடுத்த நாள் திங்கட் கிழமை,பாடசாலை ஆரம்பம்,பாடசாலை போகும்போது மறவாமல் அந்த "டிச்" "டிச்" "டிச்" சையும் எடுத்துப் போனேன்.இன்றும் எனது நண்பனை கலாய்ப்பதற்குத்தான்.

எங்களது வகுப்பறை அமைந்திருப்பது,ஒரு மண்டபத்தில்,மேடையில் ஒரு வகுப்பு மண்டபத்தில் இரு வகுப்புகள்.மொத்தம் மூன்று வகுப்புகள். எமது வகுப்பறை மண்டபத்தின் வாசலில் அமைந்திருந்தது.ஆசிரியர்கள் இருந்தால் அமைதி அங்கு குடி
கொண்டிருக்கும்,இல்லாவிட்டால் அமிர்தகழி திமிர்த களம்தான்.ஒரு வகுப்பில் நாற்பதுக்கு குறையாத மானவர்கள்,நாங்கள் பத்து பண்ணிரண்டுபேர்,படிப்பிலும் கெட்டிக்காரர்கள்,குறும்பிலும் கெட்டிக்காரர்கள்,இது சில ஆசிரியர்களுக்குப் பிடிக்கும்,
சில ஆசிரியர்களுக்குப் பிடிக்காது.இது எங்களது அந்நேரத்து நினைப்பு.குற்றம் செய்தவன்,
தன் குற்றங்களை மறைப்பதற்காக,சிலரை விரோதியாகப் பார்ப்பது வாழக்கம்தானே.

அந்த நேரம் ,இரண்டு நேர வகுப்புக்கள் நடக்கும். காலையில்  இருந்து மதியம் வரை  ஒருபகுதியாகவும்,மதியம் இருந்து மாலை வரை ஒருபகுதியாகவும்,வகுப்புக்கள் நடக்கும் .காலை நேர வகுப்புக்கள்,நேரம் போவது தெரியாமல் நடக்கும்,மாலை நேர வகுப்புக்கள்
படு கஷ்டமாக இருக்கும்.காரணம்,தொடர்ந்து ஆங்கிலமும் கணிதமும் மாலை நேர
வகுப்பாக இருப்பதாலும்,வரும் ஆசிரியர்கள் இருவருமே கண்டிப்பானவர்கள் என்பதாலும்.

சாப்பாட்டு நேரம் முடிந்து பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும் நெருங்கியது.எல்லோரும்
வகுப்பறையை அடைந்து ,அவரவருக்குரிய இருக்கையில் அமர்ந்துவிட்டோம்.நான் இருப்பது "டிச்" "டிச்" "டிச்"பிடிக்காத நண்பனுக்கரிகில் இடது பக்கத்தில் அடுத்து ஒரு நண்பன், வலது பக்கத்தில்,நடுவில் "டிச்" "டிச்" "டிச்"பிடிக்காத நண்பன். ஒரு வரிசையில் ஐந்து பேர் இருப்போம்.மணி அடித்ததும்,ஆங்கில ஆசிரியயை எதிர்பாத்து காத்திருந்தோம்,ஆசிரியை வகுப்பறையை நெருங்கி வந்துவிட்டார்.எழும்பி வணக்கம்
சொல்லுவதற்கு முன்,எனது பக்கட்டில் இருந்த  "டிச்" "டிச்" "டிச்" அருகில் இருந்த அதைப்
பிடியாத நண்பனின் காலடியில் விழுந்து  விட்டது.அதை எடுக்க குனிந்தால் ஆசிரியை
கண்டுவிட்டால் ஒரு கதையும் இல்லை,பொருள் பறிமுதல்,பாடம் முடியுமட்டும் ,வகுப்புக்கு வெளியே அனுப்பி விடுவார். வெளியே நின்றால் பாடசாலை அதிபரின் காரியாலயம் எதிரே,வெளியில் நிற்பதைக் கண்டால்,அடித்துச் சம்பல் போட்டுவிடுவார்,
இந்த இக்கட்டை உணர்ந்த   "டிச்" "டிச்" "டிச்" நண்பன் அதை தனது செருப்புக்கும் காலுக்கும்
இடையில் ஒழித்து வைத்துக் கொண்டான்.சந்தர்ப்பம் கிடைக்கும் போது,எடுத்து தருவதாக சொல்லிக்கொண்டு,.

ஆசிரியர் தனது மேசையருகை நெருங்கியதும், எல்லோரும் ஒருமித்த குரலில் ''குட் ஆவ்ரநூன், ரீச்சர்" என்று சொல்லி முடிப்பதற்குள்,  "டிச்" "டிச்" "டிச் என்ற சத்தமும்
தொடர்ந்து வர,ஆசிரியை அமரவில்லை,குட் ஆவ்ரநூன்,சிற்டவுன் என்றும் சொல்லவில்லை.திரும்பி நின்று தனது மேசைக்கு முன்னால் வந்து நின்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,திரும்பவும் வணக்கம் சொல்லும்படி கூறினார்.மாணவ, மாணவிகள் முகத்தில் கலவரம்.அடுத்து என்ன நடக்கப் போகுது
என்ற பீதி.

மீண்டும்   ''குட் ஆவ்ரநூன், ரீச்சர்"என்று சொல்லி,ஆசிரியையும் பதிலுக்கு,"குட் ஆவ்ரநூன்,சிற்டவுன்"சொல்லி அமரும்போது    "டிச்" "டிச்" "டிச்"என்ற சத்தமும் தொடர்ந்து
வர,ஆசிரியை கடுப்பாகி எல்லோரையும் எழுப்பி நிறுத்தி,"யார் இந்த வேலைசெய்தது?
என்று அதட்ட ,மண்டபத்துக்குள் இருந்த,மூன்று வகுப்பும் அமைதியாகி,ஏதோ நடக்கக்
கூடாத ஒன்று நடப்பதற்கு,கட்டியம் கூறுவது போல் இருந்தது.அடுத்த இரண்டு வகுப்புகளும் எங்கள் வகுப்பையே புதினம் பார்க்கத் தொடைக்கியது, அமைதி என்றும் இல்லாதவாறு குடிகொண்டது.இந்தச் சூழ்நிலை ஆங்கில ஆசிரியரின்,ஆத்திரத்தை இன்னும் அதி கூட்டியது,

எனது நிலையோ திரிசங்கு சொர்க்கத்திற்குப் போனதுபோல்,இருந்தது,என்ன காரணமென்றால்,எனது நண்பனின் நம்பிக்கையான,துரோகக் குணம்தான்.எந்த நேரமும்
என்னை நோக்கி கையைக் காட்டுவான்,பாடசாலை விட்டுப் போகும்போது அவனது துவிச்சக்கர வண்டியில்தான் போகவும் வேண்டும்,இது எனது மனதில்,சிலோ மோசனில்
என்,மனதுற்குள்,அடிக்கடி ஓடிக்கொண்டிருந்தது,ஆங்கில ஆசிரியையின் கட்டளையும்,
கோபமான பார்வையும்,வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.

நொடிகள்,வினாடிகளாகி,நிமிடங்கள் கரைந்ததுதான் மிச்சம்,ஆங்கில ஆசிரியையின்
கேள்விக்கு,பதில் கிடைக்காததால்,அவமானப் பட்டதாகவே,கருதினார்,பத்திர காளியின்
உருவத்திற்கு மாறுவது,அவரது கண்களில் தெரிந்தது,மீண்டும் அமைதியைக் கிழித்தது,
அவரது குரல்."இந்த,வேலையைச் செய்தவர் யாரென்று,கூறாவிட்டால்,இன்று இந்தவகுப்பில்,பாடம் நடத்தமாட்டேன்,செய்தவரைக் கண்டுபிடித்து,சரியான தண்டனை
வழங்க்கப்போறேன்"என்று கூறி முடிப்பதற்குள் "டிச்" "டிச்" "டிச்" தொடர்ந்தது.ஆசிரியை
பத்திர காளியாகவே மாறிவிட்டார்,

மானவ தலைவனை,அழைத்து பிரம்பு எடுத்து வரக்கட்டளையிட்டார்,நான் பயத்துடன்
எனது நண்பனை நோக்கினேன்,அவன் தன் கள்ளச் சிரிப்பால் என்னைக் கலவரப் படுத்தினான். நான் பயத்தின் உச்சியில் நின்றேன்,நண்பனோ கல்லுளி மங்கனாகக்  காட்சி
கொடுத்தான்.

பிரம்பு வந்தது,அத்துடன் ஆசிரியையும் ஒவ்வொருவராக சோதனையிடத் தொடங்கி
விட்டார்,காரியம் கெடப்போவதை உணர்ந்த நண்பன்,கண் இமைக்கும் நேரத்தில்,அதை எடுத்து,வலது புறம் இருந்த நண்பனின்,புத்தகத்தினுள் மறைத்தான்.நான் நினைத்தேன் ,
இத்தோடு பிரச்சனை முடிந்ததென்று,ஆனால்,அடுத்து அவன் செய்ததுதான் எல்லாவற்றையும்,விடப் பயங்கரமானது.

"ரீச்சர்,இந்தா,இதற்குள் இருக்கு ரீச்சர்" என்று கத்தவும்,ஆசிரியை பாய்ந்து வந்து,அவனை
வெளியில் இழுத்து அடிக்கத்தொடங்கினார்,தொடர்ந்து அதிபர் வரை இவ் விடயம் சென்று,அந்த அப்பாவி மாணவன் கடுமையாகத்  தண்டிக்கப் பட்டான்,நான் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று,நினைத்தேன்.ஆசுவாசப்பட்டேன், ஆனால் சகலதும் அறிந்த நபனோ! எங்களைப் பற்றியோ,நடந்த விடையங்கள் பற்றியோ அவன் மூச்சு விடவில்லை,இன்றும் அவனது
பெருந்தன்மையை, நண்பர்கள் ஒன்று சேரும்போது,சிலாகிப்பதுண்டு.

தற்பொழுது,அடிவாங்கிய  நண்பர் லண்டனில் இருக்கிறார்,அடுத்தவர் 1983 ஜூலைக் கலவரத்தில்
வெலிக் கடையில்,இடம் பெற்ற படு கொலையில் உயிரிழந்தார்.நான் இலங்கையில்
பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்.   
  



பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும்,எதையாவது எழுதுங்கப்பா,



அன்புடன்!...


பெருமை சேர்க்கும் படங்கள்.

இந்தப் படங்களைச் சிறைப்பிடித்தவர் ஒரு ஜெர்மனியர்,அவர் இந்தப் படங்களை ஏன்?
எடுத்தார்,என்பதை அறிய இங்கு சென்று பார்த்துப் பெருமைப் படுங்கள்,









































என்னங்க எதுவுமே சொல்லாமல் போறிங்க?எதையாவது சொல்லிட்டுப் போங்க!





அன்புடன்!....

ஒழுக்க நியதிகளைத் துறப்பதால் குழப்பங்கள் அதிகரிக்கின்றன











அன்புடன்!........