வெள்ளி, 23 டிசம்பர், 2022

அமுதே! தமிழே.!





அருமையான சந்தர்ப்பம்  

திங்கள், 19 டிசம்பர், 2022

நகைச்சுவை.



 

பரதேசவாசம்.(வெளிநாட்டு வாசம்)

பல வகையான சாதக அமைப்புகள் வெளிநாட்டு வாழ்க்கை  விபரங்களை தெளிவு

படுத்தியுள்ளது,இது "சாதக சிந்தாமணி" எனும் சோதிட நூலின் விளக்கம் இப்படி உள்ளது. 



 சோதிபூராடமசு வினியிலிராகிருக்கச் 

சொல்லுமகம் பூசமதில் சனியிருக்கு மேனும் 
மேதில்பூரட்டாதி ஆயிலியம் அதனில் 

இராகுநிற்கச் சித்திரையில் சனியிருந்திட்டாலும் 
மோதியபத்துடையோனும் அங்கிசத்து ளோனும் 

ஓங்குசர ராசிதனில் உகந்திருக்கு மேனும் 
கோதிலாச்சரராசி வியத்தில்பல மின்றி 

கொடும்பகைஞருடன்சாமி கூடில்பர தேசம் . ( 431 ) 

( இ - ள் . ) சுவாதி , பூராடம் , அசுவனி நட்சத்திரக் 
கால்களில் இராகு இருக்க , மகம் , பூச நட்சத்திரக் கால்களில் 
சனி இருந்தாலும் பூரட்டாதி , ஆயிலிய நட்சத்திரக் கால்களில் 
இராகு இருக்க , சித்திரை நட்சத்திரக்காலில் சனி இருந்தாலும் , 
பத்தாமிடத்திற்கு அதிபதியும் அவன் அங்கிசத்தில் 
இருப்பவனும் சர இராசியில் இருந்தாலும் சர இராசி அல்லது 
பன்னிரண்டாமிடத்தில் பலமின்றி பாவக்கோளுடன் 
இலக்கனாதிபதி கூடி இருந்தாலும் வேறு நாட்டிற்குச் செல்வான்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

வெளிநாட்டு யோகம், இந்த ஜாதகத்தில் உண்டா?

 



இலக்கினாதிபதி  12ம் இடத்தில்  ஸ்திர ராசியிலுள்ளார்.சந்திரன் சர இராசியில்
இருப்பதைத்தவிர வேறு வழிகளைக் கானமுடியவில்லை, வெளிநாடு  என்பது
மத்திய  கிழக்கு  நாடுகள் கைகொடுக்கும்.இறைவனின்  ஆசீர்வாதமும், சகோதரங்களின் உதவியுடனும்,மனைவியின் பலனாலும் ஐரோப்பிய நாடுகளில்
வாசம் செய்யலாம். இது நன்பர் ஒருவர் தந்து நான் பலன் சொன்ன ஜாதகம். 
,



உங்கள் மனைவி

கடவுள் அமைத்து வைத்த மேடை-இணைக்கும்

கல்யாண மாலை,

இன்னார்க்கு இன்ணார் என்று

எழுதி வைத்தான் தேவன் அன்று. 

அதைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இறைவன் அருளிய சாதக சிந்தாமணியில்  இப்படியான சாதகனுக்கு எப்படியான

பெண் வாய்ப்பாள், என்பதை உங்களது சாதகத்துடன்,இணைத்துப் பாருங்கள்




விரவேழின் மதிநிற்கில்  சமவயதை உடையாள் 

வெள்ளி நிற்கில் தனக்கிளையாள்,சனிராகு நிற்கில்,

பரவுவயததிகமென்பார் மதிபொன்சனி கூடிற்,

பகர்விருத்தை வெள்ளி சனி சேய்கூடினாலும்

திரவுதய லக்கினத்திற் சனிஇருக்கு மேயும்

சேருதயம் இரண்டேழிற் சனி இராகு மாந்தி

வரவிசைசைந்தொன்றாய்க்கூடி மகிழ்ச்சியாய் நிற்கின்

மையலாம் விதவைதனை மகிழ்ந்தணைவன் மாதே.


சென்ம இலக்கனத்திற்கு ஏழாமிடத்தில் சந்திரன் இருக்க, இச் சாதகனும்   இவன் மணைவியும் ஒத்த வயது உடையவர்கள். வெள்ளி நிற்கில், சாதகனை விட இளையவளாக இருப்பாள். சனி இராகு இருந்தால் சாதகனைக் காட்டிலும் அதிக வயதுள்ளவளாக இருப்பாள்.சந்திரன், குரு,சனி,ஆகிய மூன்று கிரகங்களும்  ஒன்றாகக் கூடின்,இவன் மனைவி மூத்தவளாக இருப்பாள்.சனி,செவ்வாய்,சுக்கிரன்,ஆகிய மூன்று கிரகங்கள் கூடி இருந்தாலும்,

சன்மலக்கினத்தில்,சனி தனியாக இருந்தாலும்,இலக்கம்,இரண்டாமிடம்,ஏழாமிடம் 

ஆகியவற்றில்,சனி,மாந்தி,இராகு மூன்று  கிரகங்கள் ஒன்று கூடி இருந்தாலும்,

இச் சாதகன் விதைவைகளைச் சேர்வான். முறையற்ற விதத்தில்.

 

வெள்ளி, 16 டிசம்பர், 2022

பெண்களின் பருவம் ஏழு

 



பெண்களின் பருவம் ஏழு.

பேதை:(வயது) 5-7

பெதும்பை: (வயது:)8-11

மங்கை:(வயது)12-13

மடந்தை:(வயது)14-19

அரிவை:(வயது)20-25

தெரிவை:(வயது)26-31

பேரிளம் பெண்:(வயது)32-40



புண்ணியம்:நான்கு வகை.

தானம்,கல்வி,தவம்,ஒழுக்கம்.

புண்ணியத்தை நாம் அடைய இந்த நான்கு வகைகளைக் கைக்கொண்டே.பெற 

வேண்டும்.


திங்கள், 12 டிசம்பர், 2022