கடவுள் அமைத்து வைத்த மேடை-இணைக்கும்
கல்யாண மாலை,
இன்னார்க்கு இன்ணார் என்று
எழுதி வைத்தான் தேவன் அன்று.
அதைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
இறைவன் அருளிய சாதக சிந்தாமணியில் இப்படியான சாதகனுக்கு எப்படியான
பெண் வாய்ப்பாள், என்பதை உங்களது சாதகத்துடன்,இணைத்துப் பாருங்கள்
விரவேழின் மதிநிற்கில் சமவயதை உடையாள்
வெள்ளி நிற்கில் தனக்கிளையாள்,சனிராகு நிற்கில்,
பரவுவயததிகமென்பார் மதிபொன்சனி கூடிற்,
பகர்விருத்தை வெள்ளி சனி சேய்கூடினாலும்
திரவுதய லக்கினத்திற் சனிஇருக்கு மேயும்
சேருதயம் இரண்டேழிற் சனி இராகு மாந்தி
வரவிசைசைந்தொன்றாய்க்கூடி மகிழ்ச்சியாய் நிற்கின்
மையலாம் விதவைதனை மகிழ்ந்தணைவன் மாதே.
சென்ம இலக்கனத்திற்கு ஏழாமிடத்தில் சந்திரன் இருக்க, இச் சாதகனும் இவன் மணைவியும் ஒத்த வயது உடையவர்கள். வெள்ளி நிற்கில், சாதகனை விட இளையவளாக இருப்பாள். சனி இராகு இருந்தால் சாதகனைக் காட்டிலும் அதிக வயதுள்ளவளாக இருப்பாள்.சந்திரன், குரு,சனி,ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாகக் கூடின்,இவன் மனைவி மூத்தவளாக இருப்பாள்.சனி,செவ்வாய்,சுக்கிரன்,ஆகிய மூன்று கிரகங்கள் கூடி இருந்தாலும்,
சன்மலக்கினத்தில்,சனி தனியாக இருந்தாலும்,இலக்கம்,இரண்டாமிடம்,ஏழாமிடம்
ஆகியவற்றில்,சனி,மாந்தி,இராகு மூன்று கிரகங்கள் ஒன்று கூடி இருந்தாலும்,
இச் சாதகன் விதைவைகளைச் சேர்வான். முறையற்ற விதத்தில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள