வியாழன், 10 அக்டோபர், 2019

பொது அறிவு-14




1.இந்தியாவில் உத்தர பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற 59வது  சிரேஷ்ட
மெய்வல்லுனர் போட்டியில் அழைப்பு நாடாக ,கலந்துகொண்டுஆண்களுக்கான  4x 400 தொடர் ஓட்டப் போட்டியில் மூன்றாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றநாடு?

இலங்கை

2.இந்தியாவில் உத்தர பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற 59வது  சிரேஷ்ட
மெய்வல்லுனர் போட்டியில் அழைப்பு நாடாக ,கலந்துகொண்டுஆண்களுக்கான  4x 400 தொடர் ஓட்டப் போட்டியில் மூன்றாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்ற  வீரர்கள்?

1.அசங்க ரத்ன சேன  2.டிலான் பொகோட 3.ஏரங்க லக்மல் 4.தசுன் சில்வா

3'இலங்கையின் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியின்  தேசிய
சாதனைக்குச் சொந்தக்காரர் பெயர் என்ன?
நிமாலி லியனராட்சி.

4.13வது இலங்கைப் பல்கலைக்கழக விளையாட்டு விழாவில்,50 ஓவர் ஒருநாள்  கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்ற பல்கலைக் கழகம்?
ஸ்ரீ ஜய வர்த்தன புர பல்கலைக்கழகம்

5.உலகிலேயே மனிதர்கள்  வாழ்வதற்குச்  சிறந்த இடங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடுகளும் நகரங்களும்
1.ஆஸ்திரியா -வியன்னா
2.அவுஸ்திரேலியா-சிட்னி
3.அவுஸ்திரேலியா-மெல்போர்ன்
4.ஜப்பான் -ஒசாகா
5கனடா -வான்கூவர்
6.கனடா -கல்காரி

6.உலகிலேயே மனிதர்கள்  வாழ்வதற்கு அருகதையற்ற (மோசமான) இடங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடுகளும் நகரங்களும்
1.சிரியா -டமாஸ்கஸ்
2.நைஜீரிய -லாவோஸ்
3பங்களாதேஸ் -டாக்கா
4.லிபியா -திரிபோலி
5.பாகிஸ்தான் -கராச்சி

7.இலங்கை அரசியல் அமைப்பின் 19வது திருத்தத்தின் மூலம் விளங்கிக்
கொள்வது
1.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் மாற்றங்கள்,திருத்தங்கள்.
உதாரணம் பாராளுமன்றத்தை ஒரு வருட முடிவில் ஜனாதிபதியால்.
கலைக்கமுடியும்.19வது திருத்தத்தின் பின்னர்.நாலரை வருடங்களின்
பின்னரே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

2.சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல்.

3.வேறுநாட்டின் பிரஜா உரிமையுள்ளவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.(இரட்டைப் பிரஜா உரிமை)


8.இலங்கை அரசியல் அமைப்பின் 18வது திருத்தத்தின் மூலம் விளங்கிக்
கொள்வது
ஜனாதிபதியாக இருந்த ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

9.இலங்கை அரசியலமைப்பின் படி அரசகரும மொழியாக பயன்படுத்த வேண்டிய மொழிகள்?
தமிழ்/ சிங்களம்

10. இலங்கை அரசியலமைப்பின் படி அரசகரும மொழிகளுக்கு  இணைப்பு மொழியாக  பயன்படுத்த வேண்டிய மொழி?
1.அரபு  2.ஆங்கிலம் 3.சிங்களம் 4.தமிழ்

11.இலங்கை அரசியலமைப்பின் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகிக்கிகக் கூடிய அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
35

12.இலங்கை அரசியலமைப்பின் படி அமைச்சரவை அந்தஸ்து இல்லாத  அமைச்சர்களாகவும்,பிரதி அமைச்சராகவும்  பதவி வகிக்கிகக் கூடிய அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
45.

13.இலங்கை அரசியல் சாசனப்படி  "தேசிய அரசாங்கம்" என்பதன்  வரையறை என்ன?

14.இராமாயணம் பின் வரும் பெயர்களால் அழைக்கப்பட்டது?
ராமகாதைராம அவதாரம்,
கம்பராமாயணம்சித்திரம் - 

15.நாலடியார் பின் வரும் பெயர்களால் அழைக்கப்பட்டது?
.வேளாண்வேதம்நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - 

16..கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்? (கம்பராமாயணம்) 
 ராமாவதாரம்.

17.குழந்தை இலக்கியம் -.பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் என அழைக்கப்படுவது?
 பிள்ளைத் தமிழ்

18.தமிழரின் இரு கண்கள் ?
- தொல்காப்பியம் /திருக்குறள்

19..நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல்?
 - நாலடியார்.

20.சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது?
 - ஜிப்சம்.

21. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை? - டாக்டர்சாமுவேல் ஹென்மென்

22.எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் ?
- ஹாவர்ஷியன் குழாய்

23. புறாவின் விலங்கியல் பெயர்?
 - கொலம்பியா லிவியா

24. நாள் ஒன்றுக்கு மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு?
 - 1.5 - 2 லிட்டர்.

25. முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்? -கிறிஸ்டோபர்

26. மஞ்சள் காமாளை  நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம்? - கீழாநெல்லி

27.எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து -  அசிட்டோதையாமிடின் AZT

28.சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம்?
 புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்.

29. செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்

30.நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்

31.நிலவு இல்லாத கோள் வெள்ளி

32.இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன்வைரம்

33.செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர்நைலான்ரேயான்

34. நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்

35.உலகின் மிகப் பெரிய வெப்ப மண்டலக் காடு? அமேசான் காடு 

36.பூமியின் 6%மான இடப்பரப்பில் அமைந்துள்ள வெப்ப மண்டலக் காடு? அமேசான் காடு 

37,ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகர்?
பாக்கீர்  மாக்கார்

38.அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் 2019 மகளீர்  ஒற்றையர் ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ்சை  தோல்வியடையச் செய்தவர்?
கனடா  நாட்டைச் சேர்ந்த  பியங்கா ஆன்ட்ரீஸ் 
  
39.பூமியில் இருந்து சந்திரனின் தூரம்?
384,000.Km 

40.இந்திய விண்வெளி பயணத்தின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் 
சுகன்யான் =2022

41.சந்திராயன் -2 வில் இணைக்கப்பட்ட ஆராய்ச்சி  இயந்திரங்கள் ? 
1.ஆர்பிட்டர் 2.விக்கிரம் லேண்டர் 3.பிராக்கியன்  ரோவர்.

42.எட்டுத் தொகை நூல்களுள் முதன்மையானது எது?
நற்றிணை 

43.அகத்தினையும்,புறத்திணையும் இணைத்துக் கூறும் எட்டுத்  தொகை நூல் எது?
பரி பாடல் 

44.பிரித்து எழுதுக பாகல் காய் ?
பாகு +அல் +காய் 

45."செலவிட உகந்த வருமானம்" என்றால் என்ன?

46.உலகில் இயற்கை விவசாயத்தின் தந்தையாக கருதப்படுபவர்?
ஜப்பானைச்  சேர்ந்த  மகாண புகோகா 

47.உலகின் பட்டினி அட்டவணை 2019ல் இலங்கையின் நிலை?                                         
  67வது இடம்.

48. இலங்கை அரசியல் அமைப்பின்படி பிரதமருக்கான செயலாளரை நியமிக்கும் 
அதிகாரம்  யாருக்குள்ளது?
ஜனாதிபதி 

49.லண்டனில் அமைந்துள்ள மெர்ல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் (MCC)தலைவராக 
தெரிவு செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான்?
குமார் சங்காக்கர 

50.ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப் பட்டதன் முக்கிய நோக்கம்?
 நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி,மனித உரிமைகள்,மற்றும் அபிவிருத்தி மேம்படுத்தல். 

51.UNOவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி?
ஹான சிங்கர் 

52.2019ஆம் ஆண்டிற்கான தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் (NCC)27வது 
வருடாந்த ஏற்றுமதி விருது பெற்ற நிறுவனம்?
osian lanka நிறுவனம் 

53.இலங்கையில் பிரித்தானியார்களால் முதன்முதலில் இயற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்ட  அரசியல் அமைப்பு முறை என்ன 
1833  கோல்புறுக் கெமெரோன்   

54.சங்ககால நூல்களில் "மதுரைக்காஞ்சி" எனும்  நூலை எழுதியவர்?
மாங்குடி மருதனார் 

55.மழையை அளக்கப் பயன்படுத்தும் உபகரணம்?
புழுவியோ மீட்டர் 

56.ரீம் அலகைப் பயன்படுத்தி அளக்கப் பயன்படும் பொருள்?
கடதாசி 

57.லத்தின் மொழியில் "ஸ்னோ ஒயிட் "என்ற சொற்தொடரைக் தழுவிய பெயரைக்  கொண்ட  தோல்  பராமரிப்பு பிராண்டு யாது?
நீவியா 

58 ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்.
 இமய மலைத்தொடர்கள்

59. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது 
 குளுக்காஹான்

60.டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு
 ஒலியின் அளவு

61. LCD என்பதன் விரிவாக்கம் என்ன?   
 Liquid Crystal Display

62.இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
மகாத்மா காந்தி 

63.வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்.
கறுப்பு 

64. புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு 



67.வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி.

68. இணையம் என்ற  வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் .

69. தேம்பாவணி நூலின் ஆசிரியர்  வீரமாமுனிவர்

70. கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை ? ஆறு

71 பழந்தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்

72. உலகிலேயே  அதிய மழை  பெ றும் இடம்? சிரபுஞ்சி.

73. பெயர்ச் சொ ல்லின் பொருளைச் செயப்படு பொருளாய்  வேறுபடுத்துவது?
இரண்டாம் வேற்றுமை உருபு

74. தமிழின் தொன்மையை  உலகையறிச் செய்தவர் யார்?
: கால்டுவெல்

75.) போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்
 a) உலா b) பங்கு c) பரணி d) கலம்பகம்

76.நாணயக் குறியீடு JPY குறிக்கிறது.
yen

77. 2019ம் ஆண்டுக்கான .பௌதிகவியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள்?
சுவிற்சலார்ந்தைச் சேர்ந்த மைக்கல் மேயர்,மற்றும் டிடியர் கியூலசும்
கனேடிய அமெரிக்க விஞ்ஞானியுமான ஜேம்ஸ் பெப்லஸ்.

78.நோபெல் பரிசுபெற்ற முதள் பெண்மணி? 
மேரி கியூரி ஆவார். இவர் 1903இல் இயற்பியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார். முதல்முறையாக இரு நோபெல் பரிசு பெற்றவர் மேரி கியூரியே. இவர் இரண்டாவதாக 1911இல் வேதியியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார்

79.நோபல் பரிசு முதன் முதல் வழங்கப்பட்ட  ஆண்டு?
1901

80.புகையிலையை ஆசியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்?
போத்துக்கீசர்

81.எத்தகைய பங்களிப்பு மூலம் அரசாங்கத்தில் வாக்காளர்கள் மறைமுகமாக பங்கேற்கிறார்கள்?
பிரதி நிதிதத்துவ மக்களாட்சி

82.உலக நீதிமன்றம் அமைந்துள்ள நாடு?
நெதர்லாந்து- ஹேக்

83.ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம் அமைந்துள்ள நாடு?
அமெரிக்கா நியூ யோர்க்

84.சத்தியம்,சிவம்,சுந்தரம் எந்த மொழியில் இருந்து வந்தவை?
சமஸ்கிருதம்

85.இரு கட்சி முறை உள்ள நாடுகள் ?
அமெரிக்கா பிரிட்டன்

86.சொட்டு நீர் நீர்ப்பாசணத்தை முழுத்திறனுடன் பயன்படுத்தும் நாடு?
இஸ்ரேல்

87.உலகில் முதன் முதல் GST யை அறிமுகம் செய்த நாடு?
பிரான்ஸ்

88.உலகம் அளாவிய வலையைக் (world wide web .WWW) கண்டுபிடித்தவர்
யார்?
டிம் பெர்னர்ஸ் லீ

89.போ-கேரோ -கீ என்ற நூலின் ஆசிரியர் யார்?
பாகியான்

90.தலா வருமானம் சுட்டிக் காட்டுவது?
மக்களின் வாழ்க்கைத் தரத்தை

91.பணக் கொள்கையை நடை முறைப்படுத்தும் வங்கி?
மத்திய வங்கி

92.மண் பற்றிய படிப்புக்கு பெயர் என்ன?
பீடாலஜி

93.கூகுள் நிறுவனம் அதனுடைய  கெட்டிக்காரத்தனமான குறுந்தகவல்
அனுப்பும் பயன்பாட்டை -----------------என்ற பெயரில் தொடங்கியது?
அலோ

94.இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் தலைவியின் பெயர்?
சபரி அத்தப்பத்து

95.ஒரு சிறுவனின் தொண்டைப்பகுதி அகன்று குரல் மாற்றம் ஏற்படுகிறது?
மேலும் அவனுடைய முகத்தில் ரோம வளர்ச்சிகாணப்படுகின்றது .இதற்கான ஹார்மோன்  எது?
டெஸ்டோஸ்டீரோன்

96.பெரும்பாலும் குடல் புண் தோன்ற காரணமான பக்டீரியம்?
ஹெலிக்கோ பேக்ட்டர் பைலரி

97.பொருளாதாரத் திட்டமிடுதலை முதன் முறையாக  செயல் படுத்திய நாடு?
சோவியற் ரஷியா

98.உலகில் அதிகம் பேசப்படும் மொழி?
சீனம்

99.நீதிபதிகள் சட்டமன்றத்தால் தெரிவு செய்யப்படும் முறை பின்பற்றப்படும் நாடு?
சுவிற்சலார்ந்து

100.பின்வருவனவற்றுள் எந்த சேர்மம் ஆஸ்துமா மற்றும் கக்குவன் இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது?
பென்சைல் பென்சோயட்



If you have any problem or doubt regarding  General Knowledge for Competitive Exams, you can ask me in the comment section.
Like and Share with your friends.

தெற்காசியாவில் மாத்திரமல்ல உலகிலேயே பொதுஜன பெரமுன போன்றதொரு அரசியல் கட்சி கிடையாது -  பசில்  | Virakesari.lk

தெற்காசியாவில் மாத்திரமல்ல உலகிலேயே பொதுஜன பெரமுன போன்றதொரு அரசியல் கட்சி கிடையாது -  பசில்  | Virakesari.lk: தெற்காசியாவில் மாத்திரமல்ல உலகிலேயே பொதுஜன பெரமுன போன்றதொரு அரசியல் கட்சி கிடையாது -  பசில்

புதன், 9 அக்டோபர், 2019

வேதியியலுக்கான நோபல் பரிசு 2019

M. Stanley Whittingham



                                                எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம்


                                                         ஜான் குட்னொஃப்,


                                                        அகிரா யோஷினோ


செல்லுலார் தொலைபேசிகள் மற்றும் மின்சார கார்களின் நமது மொபைல் மின்னணு நாகரிகத்தை சாத்தியமாக்கிய தொழில்நுட்பமான லித்தியம் அயன் பேட்டரிகளின் வளர்ச்சியில் மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு இன்று காலை வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் குட்னொஃப், ஆஸ்டின், பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் மீஜோ பல்கலைக்கழகத்தின் அகிரா யோஷினோ ஆகியோர் பரிசுகளை  சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.

"எங்கள் முழு உலகமும் லித்தியம் அயன் பேட்டரியால் மாற்றப்பட்டுள்ளது என்பதை நாங்கள் பாராட்ட வேண்டும்," என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் கிளேர் கிரே கூறினார், அவர் குட்நொஃப் மற்றும் வைட்டிங்ஹாம் ஆகிய இரண்டிலும் பணியாற்றியுள்ளார். "இது லித்தியம் அயன் பேட்டரி ஆகும், இது முழு போர்ட்டபிள் எலக்ட்ரானிக்ஸ் புரட்சியையும் உண்மையில் ஆதரிக்கிறது, மேலும் CO2 ஐ அதிகரிப்பதை சாத்தியமாக்குகிறது."

"உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மொபைல் சாதனத்தை வைத்திருக்கிறது, இது ஒரு ஸ்மார்ட் போன், மடிக்கணினி அல்லது டேப்லெட் மற்றும் கிட்டத்தட்ட அனைத்தும் ரிச்சார்ஜபிள் லித்தியம் அயன் பேட்டரிகளால் இயக்கப்படுகிறது" என்று பொருள் அறிவியல் மற்றும் உலோகவியல் பேராசிரியர் பால் காக்சன் கூறினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஒரு மின்னஞ்சலில். "அவை மொபைல் சகாப்தத்தின் மறைக்கப்பட்ட பணிமனைகள், அவை 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு நன்றி தெரிவித்தன." இன்றைய பரிசு, குட்நொஃப், வைட்டிங்ஹாம் மற்றும் யோஷினோ ஒவ்வொருவரும் அந்த உருமாறும் வேலையில் ஆற்றிய பாத்திரங்களை மதிக்கிறது.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கியபோது, ​​உலகம் ஒரு ஆற்றல் நெருக்கடியையும் சுற்றுச்சூழலையும் எதிர்கொண்டது, இவை இரண்டும் பல தசாப்தங்களாக கட்டப்பட்டு வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மின்சார சகாப்தத்தின் விடியலில், பேட்டரிகள் ஆரம்பகால வாகனங்கள் மற்றும் பிற சாதனங்களின் பொதுவான சாதனங்களாக இருந்தன. ஆனால் அவை கனமானவை, திறமையற்றவை, அவற்றை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி தேக்கமடைந்தது. ஆட்டோமொபைல்கள் மற்றும் பிற  அமைப்புகளுக்கு சக்தி அளிப்பதற்கான முக்கிய ஆற்றல் ஆதாரமாக பெட்ரோலிய எரிபொருள்கள் விரைவாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆனால் 1960 களில், எண்ணெயை இவ்வளவு நம்பியிருப்பதன் ஆபத்துகள் தெளிவாகத் தெரிந்தன. யுனைடெட் ஸ்டேட்ஸில், எண்ணெய் பற்றாக்குறை, புகைமூட்டம் நிறைந்த நகரங்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் ஆபத்துகளுடன் இணைந்து, ஆற்றலைச் சேமிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் இன்னும் நிலையான வழிகளைக் கண்டறிய ஆராய்ச்சி (விரைவாக) தேவை என்பதை தெளிவுபடுத்தியது.

எனவே, பேட்டரிகளின் வேலை மீண்டும் வந்தது. குறிப்பாக, விஞ்ஞானிகள் லித்தியத்தைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒன்றைத் தேடினர், கால அட்டவணையில் மிக இலகுவான உலோகம் மற்றும் எலக்ட்ரான்களைக் கைவிடுவதன் மூலம் அயனிகளை உருவாக்குவதற்கு முன்கூட்டியே ஒரு பொருள். ஆனால் "ஒரு பேட்டரியில் லித்தியத்தைப் பயன்படுத்த, நீங்கள் உண்மையில் அதன் வினைத்திறனைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று லோவெலில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரும், நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினருமான ஓலோஃப் ராம்ஸ்ட்ரோம் இன்று அறிவிப்பின் போது கூறினார். "பரிசு பெற்றவர்களின் பணி அதைத்தான் அடைந்துள்ளது."

பேட்டரிகள் அடிப்படையில் இரண்டு மின்முனைகளில் நிகழும் தொடர்ச்சியான ரசாயன எதிர்வினைகள் மூலம் ஆற்றலைச் சேமித்து வெளியிடுகின்றன, நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட கேத்தோடு மற்றும் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட அனோட். நேர்மறை அயனிகள் இரண்டிற்கும் இடையில் ஒரு எலக்ட்ரோலைட் வழியாக அனோடில் இருந்து கேத்தோடிற்கு நகர்கின்றன, இதன் விளைவாக எலக்ட்ரான்கள் இணைக்கப்பட்ட சாதனத்திற்கு சக்தி அளிக்க அமைக்கப்பட்ட ஒரு சுற்று வழியாக வேறு வழியில் செல்ல தூண்டுகிறது. பேட்டரி ரீசார்ஜ் செய்யக்கூடிய வகையில் இந்த செயல்முறை தலைகீழாக மாற்றப்படுகின்றது.

கோட்டாபயவை ஆதரிக்க சுதந்திரக் கட்சி முடிவு



ஜனாதிபதி இன்று  உத்தி​ேயாகபூர்வமாக  அறிவிப்பார்
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளதாகவும் இதுபற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரும்
ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதன் பிரகாரமே இன்றையதினம் சு.கவின் இறுதி நிலைப்பாடு வெளியாகுமெனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பில் சு.க வெளிப்படையாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
இருதரப்புக்கும் இடையில் கூட்டணியை அமைப்பது தொடர்பில் இதுவரை எட்டு சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலும் பலமுறை இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
பொது சின்னம் தொடர்பிலான இணக்கப்பாட்டுக்கு வந்ததால் ஒன்றாக தேர்தலை எதிர்கொள்வதில் எவ்வித தடையும் இல்லையென சு.கவின் தரப்பில் அறிவிக்கப்பட்டுவந்த பின்புலத்திலேயே இன்று தமது இறுதி நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக தயாசிறி ஜயசேகர நேற்று அறிவித்திருந்தார்.

ஆல்பிரட் நோபல்

ஆல்பிரட் நோபல்

 
AlfredNobel adjusted.jpg
பிறப்புஅக்டோபர் 211833
Stockholmசுவீடன்
இறப்புதிசம்பர் 10, 1896 (அகவை 63)
Sanremoஇத்தாலி
கல்லறைNorra begravningsplatsenசிட்டாக்கோம்
59°21′24.52″N 18°1′9.43″E
பணிவேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளர், டைனமைட்டை உருவாக்கியவ
ஆல்ஃபிரட் நோபெல் (இந்த ஒலிக்கோப்பு பற்றி Alfred Bernhard Nobel(பிறப்பு:(சிட்டாக்கோம்சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremoஇத்தாலி, 10 December 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.


கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும் (1801-1872), கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும் (1805-1889), நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் பிறந்தார். அஜ்ஜோடி 1827 ல் திருமணம் செய்துகொண்டது .மொத்தமாக அவர்கள் எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.[1] குடும்ப வறுமையின் காரணமாக, ஆல்ஃபிரட் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் மட்டுமே குழந்தைப் பருவத்தை உயிருடன் கடந்தனர். தனது தந்தை வழியாக, ஆல்பிரட் நோபல் ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஒளுஸ் ருட்பெகின் (1630-1702) சந்ததியில் இருந்து வந்தவராகிறார்.[2] ஆல்பிரட் நோபல் இளம் வயதில் பொறியியலில், குறிப்பாக வெடிபொருட்களில் ஆர்வம் காட்டினார். தொழில்நுட்பத்தின்மீது அவர் கொண்ட ஆர்வமானது ஸ்டாக்ஹோமின் ராயல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னால் மாணவராகிய தனது தந்தையால் அவருக்கு வாய்க்கப்பெற்றதாகும்.[3]
AlfredNobel adjusted.jpg
பல்வேறு வர்த்தக தோல்விகளை தொடர்ந்து, நோபலின் தந்தை 1837 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாக வளர்ந்து வந்தார். அவர் நவீன ஒட்டு பலகையை (plywood) கண்டுபிடித்தார். மேலும் "டார்பிடோ" சம்பத்தப்பட்ட பணியை தொடங்கினார்.[4]. 1842 ஆம் ஆண்டில், அவர் குடும்பம் அவரை சேர்ந்தது. வளமான அவரது பெற்றோர்கள், தனியார் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு நோபலை அனுப்ப முடிந்தது. அதனால் அவர் வேதியியல் பாடம் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். சிறுவனாக அவர் ஆங்கிலம்பிரஞ்சுஜெர்மன், மற்றும் ரஷிய மொழிகளில் சரளம் அடைந்தார். 1841-1842 காலத்தில், 18 மாதங்கள், நோபல் அவர் வாழ்நாளில் சென்ற ஒரே பள்ளியான, ஸ்டாக்ஹோம் ஜேக்கப்ஸ் அபோலோகிச்டிக் பள்ளிக்கு சென்றார்.[1]
Alfred Nobel's death mask, at Bjorkborn, Nobel's residence in Karlskoga, Sweden.
இளமையில், நோபல், வேதியியலாளர் நிகோலாய் ஜினின் உடன் படித்தார். பின்னர், 1850 ஆம் ஆண்டில், மேற்படி வேலைக்கு பாரிஸ் சென்றார். 18 வயதில், கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் கீழ் ஒரு குறுகிய காலம் ஒத்துழைத்து, அவர் வேதியியல் ஆய்வுகளை நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் மேற்கொண்டார். ஜான் எரிக்சன் அமெரிக்க உள்நாட்டு போர்க்கான ஐயன்க்லட் USS மானிட்டரை வடிவமைத்தார். நோபல் 1857 இல், ஒரு எரிவாயு மீட்டரைப் பற்றிய , தனது முதல் காப்புரிமையை தாக்கல் செய்தார்.[1][5]
குடும்பத்தின் தொழிற்சாலை க்ரிமியன் போர்க்காக (1853-1856) ஆயுத உற்பத்தியை செய்து வந்தது. ஆனால், க்ரிமியன் போர் முடிந்ததும், உள்நாட்டு உற்பத்திற்கு மீண்டும் மாறுவதற்கு கடினமாக இருந்த நிலையில் அவர்கள் திவாலாகும் நிலை இருந்தது. 1859 ஆம் ஆண்டில், நோபலின் தந்தை தனது இரண்டாவது மகனான, லுட்விக் நோபலிடம் (1831-1888), தனது தொழிற்சாலையை விட்டுச் சென்றார். அவன் பெரிதும் வணிக முன்னேற்றத்தை பெற்றான். பிறகு நோபல் மற்றும் அவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் இருந்து சுவீடன் திரும்பினார்கள். நோபல் வெடிபொருட்களின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக நைட்ரோக்லிசெரினின் (டுரின் பல்கலைக்கழகத்தில் தியோபில் ஜூல்ஸ் பிலோசின் மாணவரான அச்கானியோவால், சொப்ரீரோவால் 1847 இல் கண்டுபிடிக்கப்பட்டது) பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். நோபல் 1863 ஆம் ஆண்டு ஒரு வெடி கண்டுபிடித்தார்; மேலும் 1865 ஆம் ஆண்டு, அவர் வெடிக்கும் தொப்பியை வடிவமைத்தார்.
3ஆம் செப்டம்பர் 1864 அன்று, ஸ்டாக்ஹோமில் ஹெலேன்போர்க்கில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொட்டகையில் வெடிவிபத்து ஏற்பட்டதால், நோபலின் இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் மரணம் அடைந்தனர். ஆனால், நோபெல், சிறிய விபத்துக்களை சந்தித்தாலும் கலக்கம் இல்லாமல் தலைமறைவாக, அவர் உருவாக்கிய வெடிபொருட்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த மேலும் தொழிற்சாலைகள் கட்ட சென்றார். நோபல் நிலையற்ற நைட்ரோகிளிசிரினைவிட கையாள எளிதாக மற்றும் பாதுகாப்பான பொருளாகிய , டைனமைட்டை1867 இல் கண்டுபிடித்தார். டைனமைட்டிற்கு, அமெரிக்க மற்றும் பிரிட்டனில் காப்புரிமை பெறப்பட்டது. மேலும் இது சுரங்கம் மற்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1875 ஆம் ஆண்டு நோபல் மேலும் நிலையான மற்றும் டைனமைட்டை விட சக்தி வாய்ந்த, கெலிக்னிட்டை கண்டுபிடித்தார்.
நோபல், பிற்காலத்தில் இரண்டு நோபல் பரிசுகளுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் நிறுவனமான அறிவியல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் 1884 ம் ஆண்டில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1893 ஆம் ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
நோபல் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி அவர்களது சொந்த உரிமையில் மிகவும் பணக்காரராக மாறினர். நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை குவித்தார் மேலும் 350 காப்புரிமை களை சர்வதேச அளவில் வெளியிட்டார். நோபல் சமாதானத்தை விரும்புகிறவராக இருந்தாலும், அவரின் மரணத்திற்கு முன்னால் 90 ஆயுத தொழிற்சாலைகள் நிறுவினார்.
1888 ஆம் ஆண்டில், அவரது சகோதரர் லுட்விக் மரணத்தை தொடர்ந்து பல செய்தித்தாள்கள் ஆல்பிரட்டின் இரங்கலை தவறாக வெளியிட்டன. ஒரு பிரஞ்சு இரங்கல் செய்தி குறிப்பிட்டதாவது "Le Marchand De La mort est Mort" ("மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார்")என்பதாகும்.[6]
1891 ஆம் ஆண்டில், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரர் லுட்விக்கின் மரணத்திற்குப் பிறகு நோபல் பாரிஸில் இருந்து இத்தாலியின் சான் ரெமோக்கு, சென்றார். மார்பு அவதியுற்று, நோபல் 1896 ல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக , வீட்டில் இறந்தார். அவரது குடும்பம், நண்பர்கள் அல்லது சக மாணவர்களுக்கு தெரியாமலேயே, அவர் நோபல் பரிசுகள் வழங்குவதற்கு தனது செல்வத்தை விட்டு சென்றார். அவர் ஸ்டாக்ஹோமில் நோராவில் புதைக்கப்பட்டார்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மக்­களை ஏமாற்ற முனை­ப­வர்கள் இறு­தியில் ஏமாற்­ற­ம­டைவர் | Virakesari.lk

வீரகேசரி பத்திரிகையின் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான செய்திக்கு
இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்

தமிழ் மக்­களை ஏமாற்ற முனை­ப­வர்கள் இறு­தியில் ஏமாற்­ற­ம­டைவர் | Virakesari.lk: தமிழ் மக்­களை ஏமாற்ற முனை­ப­வர்கள் இறு­தியில் ஏமாற்­ற­ம­டைவர்

சனி, 5 அக்டோபர், 2019

நூற்றைம்பது வருட பூர்த்தியில் இலங்கை தேயிலை உற்பத்தி

நூற்றைம்பது வருட பூர்த்தியில் இலங்கை தேயிலை உற்பத்தி

 தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு பொருந்தும். அந்தளவுக்கு மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ள, அன்றாட வாழ்க்கையில் பங்களிப்பு செலுத்தி வருகின்ற தேயிலை இலங்கையில் அறிமுகமாகி 2017ஆம் ஆண்டுடன் 150 வருடங்கள் பூர்தியடைந்துள்ளன.
கமிலியா சைனேசிஸ் Camillia Sinensis Camillia Sinensis என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தேயிலை 1867ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தேயிலையை உலகில் பயன்படுத்த ஆரம்பித்து பல ஆயிரம் வருடங்களாகின்றன. புத்தப் பெருமான் பிறப்பதற்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலை கண்டறியப்பட்டதாக வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
வரலாற்றுக் குறிப்புக்களின் படி தேயிலையை சீன பேரரசனான சென்நுன் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளான். சீனாவில் திக்விஜயம் மேற்கொண்டிருந்த சென்நுன், களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து வெந்நீர் பருகிக்கொண்டிருந்த வே
Tea
ளையில் மரமொன்றில் இருந்த காற்றில் அசைந்தாடி பறந்து வந்த மலரொன்று அவ்வெந்நீர் கோப்பையில் விழுந்ததாகவும் அதன் பின்னர் வெந்நீரில் ஏற்பட்ட சுவை மாற்றத்திற்கு பேரசன் அடிமையாகி அதனை சீனாவில் பிரபலமடையச் செய்தான் என்றும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
 இலங்கையின் பண்டைய வரலாறுகளை நோக்கும் போது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விடயங்கள் இன்று போலவே  அன்றும் பிரபலமடைந்திருந்தமையை காணலாம். பல தசாப்தங்களுக்கு முன்னர் தேயிலையை 'லிப்டனின் தேயிலைத் தோட்டம்' என்ற பெயரில் உலகில் பிரபலமடைந்திருந்த ஒரு யுகமும் காணப்பட்டது. எது எவ்வாறாயிருப்பினும் இந்தியாவுக்கு தேயிலை அறிமுகமாகி மிக நீண்டகாலத்திற்குப் பின்னரே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இலங்கையில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடர்பில் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 1782ஆம் ஆண்டில் தேயிலைத் தொடர்பாக எழுதப்பட்ட குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஒல்லாந்தரான கிரனஸ்டியன் புல்ப் என்பவர் எழுதிய குறிப்புக்களிலேயே தேயிலைத் தொடர்பான குறிப்புகள் காணப்பட்டன. அக்குறிப்பில் ''தேயிலை அல்லது அது சார்ந்த தாவரங்கள் இங்கு காணக்கிடைக்கவில்லை. அதனை வளர்ப்பதற்கு நாம் முயற்சித்த போதும் வெற்றி கிடைக்கவில்லை'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அக்குறிப்பு தவிர அதற்கு முன்னர் தேயிலை தொடர்பாக எழுதப்பட்ட குறிப்புகள் கிடைக்கவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள.
  
இலங்கையில் தேயிலையை பயிரிட ஒல்லாந்தர் முயன்றபோதிலும வெற்றியளிக்கவில்லை என்று 1802ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி வெளியான 'லண்டன் டைம்ஸ்'  பத்திரிகையில் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இலங்கையில் தேயிலைப் பயிர் 19ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க சான்றுகள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.
  
அதற்குப் பின்னரான வரலாற்றுக் குறிப்புகளில் இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கை மற்றும் அதன் ஆரம்பம் தொடர்பாக பல சான்றுகள் கிடைத்துள்ளன. வர்த்தகப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பி ஒரு காலத்தில் மிகவும் முன்னேற்றமடைந்து காணப்பட்டது. எனினும் சில காலத்தின் பின்னர் கோப்பிப் பயிர்களில் ஏற்பட்ட இலை வெளிறல் நோய் (Hemileiavastatrix -coffee leaf rust) காரணமாக பயிர்கள் பாதிப்படைந்தன. இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை முழுமையாக நாசமடைந்தது.
 
Lule kandura 1
 
இக்காலக்கட்டத்தில் கோப்பிக்கு மாற்றீடான பயிரின் அவசியம் காணப்பட்டது. இதேகாலகட்டத்தில் இந்தியாவில் தேயிலை தொடர்பில் மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் 1867ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் பணிநிமித்தம் இலங்கை வந்த அவர்,  பேராதனை தாவரவியல் பூங்காவில் இருந்து பெறப்பட்ட தேயிலை விதைகளை பெற்று அவர் பணிபுரிந்த கண்டி, பஹல ஹேவாஹெட்ட பிரதேசத்தில் உள்ள லூல்கந்து தோட்டத்தில் பயிர்செய்கைக்கு தயார் நிலையில் இருந்த 19 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வு செய்வதற்காக பயிர் செய்தார். இலங்கையில் பிரதான வர்த்தகப் பயிர்களில் ஒன்றான தேயிலைப் பயிர்செய்கையின் ஆரம்பம் இதுவாகும். பின்னைய காலத்தில் குறித்த தோட்டத்தில் சுமார் 100 ஏக்கர் அளவில் தேயிலை பயிர் செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன (மூலம்- 20th century tea research in Sri Lanka by the Tea Research Institute of Sri Lanka)
 
 இலங்கையில் தேயிலை பயிர்  செய்யப்பட்டுள்ளன பிரதேசங்கள் -  கண்டி, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை
  
லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ஜேம்ஸ் டெய்லர் பயிர் செய்த தேயிலை சிறந்த விலைக்கு சென்றமை இலங்கை முழுவதும் தேயிலை பயிச்செய்கையை மேற்கொள்ள காரணமாக அமைந்தது.
 
இன்று நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுகொடுக்கும் பல்வேறு துறைகள் உள்ளன. எனினும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கு உற்பத்திகளில் தேயிலை நான்காம் இடத்தில் உள்ளமை தேயிலையின் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்தியம்புகிறது. மொத்த தேசிய வருமானத்தில் 2 வீதத்திற்கும் அதிகமாக தேயிலை ஏற்றுமதியினூடாக கிடைக்கிறது. 
 
சிறந்த சுவையும் தரமும் வாய்ந்த இலங்கைத் தேயிலை 2015ஆம் ஆண்டில் உலக தேயிலைத்  தேவையின் 6.2 வீதத்தை பூர்த்தி செய்துள்ளதுடன் சிறந்த தேயிலை உற்பத்தியில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. உலகின் சிறந்த தேயிலை ஏற்றுமதி நாடுகளில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது.
 
புவியல் அடிப்படையில் இலங்கை தேயிலை மலைநாட்டுத் தேயிலை, மத்திய நாட்டுத் தேயிலை மற்றும் கீழ் நாட்டுத் தேயிலை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அதற்கமைய நாடு பூராவும் பரவிய தேயிலை உற்பத்தியானது இன்று இலங்கையின் 187,309 ஹெக்டேயரில் பயிரிடப்பட்டுள்ளது.  இந்நாட்டு தேயிலை உற்பத்திக்கு 71 வீதமான பங்களிப்பை சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களே பெற்றுத் தருகின்றனர்.
 
ஒரு நாட்டுக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் உற்பத்திகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும். தனது பொறுப்பை உணர்ந்துள்ள தற்போதைய அரசாங்கம் தேயிலை உற்பத்தியை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் மேற்கொண்டுள்ள பல பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையை காணக்கூடியதாக இருக்கிறது.
 
Tea estateகடந்த சில ஆண்டுகளாக தேயிலை வர்த்தகத்தில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டமை கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. அதில் உலக சந்தையில் தேயிலை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி தேயிலை உற்பத்திக்கு பெரும் சவாலாக  அமைந்திருந்தது. குறிப்பாக ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையில் தேயிலையின் கேள்வி குறைவடைந்தமை எமது ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்நிலை மாறி வருவதை காணக்கூடியதாக உள்ளது என இலங்கை தேயிலைச்சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட தெரிவித்துள்ளார். கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பச்சை தேயிலை கொழுந்து ஒரு கிலோவின் விலை 360 ரூபாவாக காணப்பட்டதாகவும் இன்றைய சூழ்நிலையில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கொழுந்தின் விலை 590 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  
இதுவரைக் காலமும் தேயிலை உற்பத்தித்துறையில் நிலவிய குறைப்பாட்டை கவனத்தில் எடுத்து தற்போது நாட்டில் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தேயிலை பயிர் செய்யப்பட்டுள்ள காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை எழுத்து மூலமாக பதிவு செய்யப்படாத தேயிலை உற்பத்தி காணிகளை பதிவு செய்து தேயிலை உற்பத்தியில் அடையாளங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
Ceylon teaதேயிலைக் காணிகள் தொடர்பாக தற்போதுள்ள சான்றுகள் என்று பார்க்கும் போது 1970ஆம் ஆண்டு எழுதப்பட்ட குறிப்பையே கூறலாம். எனினும் அதை எழுத்து மூலமான சான்றாக கொள்ள முடியாது. குறித்த பதிவு நடவடிக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் அனைத்து தேயிலைக் காணிகளும் பதிவு செய்யப்படும். அதனூடாக எதிர்காலத்தில் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மானியச் :சேவைகளும் இந்தக் காணிப்பதிவினூடாக வழங்கப்படும் இலக்கத்தினூடாகவே நடைபெறும். எதிர்காலத்தில் பச்சை தேயிலைக் கொழுந்தும் பெற்றுக்கொள்வதும் இப்பதிவினூடாகவே நடைபெறும். இதனூடாக நாடு முழுவதும் சுமார் ஐந்து இலட்சம் காணிகளை வரை பதிவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேயிலை பயிர்ச் செய்கையாளர்களின் பதிவுக்கான விண்ணப்பப்படிவங்கள் நாட்டின் அனைத்து கிராம சேவகர் அலுவலகங்களினூடாக விநியோகிக்கப்படும். குறித்த விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த கிராமசேவர் அலுவலகங்களில் கையளிக்க வேண்டும்.
 
New Tea Board Chairman 2உள்விவகார அமைச்சின் அனுமதியுடன் இப்பதிவு நடவடிக்கை  மேற்கொள்ளப்படுவதாக இலங்கை  தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
 
''இலங்கையில் தேயிலையினால் லாபம் இல்லை' என்பது சர்வதேசத்தினால் பொய்யாக பரப்பப்படும் வதந்தியாகும். உண்மை நிலை அதுவல்ல. உலக சனத்தொகை வளர்ச்சியடையும் அதேவேளை தேநீர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் வளர்ச்சியடைந்த வண்ணமேயுள்ளது. அதனால் இலங்கை தேயிலைக்குள்ள கேள்வியில் இன்னும் மாற்றமேற்படவில்லை என்பதே உண்மை. சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி இன்னும் அதிகரித்தே காணப்படுகிறது. அதனால் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.
 
 இன்று உலக சந்தையில் கென்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருந்தாலும் இலங்கைத் தேயிலை தரம் மற்றும் சுவை நிறைந்ததாக காணப்படுகின்றமையினால் உலக சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுவதுடன் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி உலக சந்தையில் 50 வீதத்திற்கும்  அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் 30 வீதமான தேயிலை ஏற்றுமதி வர்த்தகப் பெயர் மற்றும் பொதியிடலுடனேயே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் போன்று தேயிலை மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படுவது மிகவும் குறைவடைந்துள்ளது. இன்று நாட்டில் தேயிலை ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையை 5 அமெ.டொலருக்கு கொள்வனவு செய்தாலும் அதன் பெறுமதி சேர்க்கப்படுவதனால் ஒரு கிலோ தேயிலைக்கு பத்து அமெ. டொலர் வரை சேர்கிறது. அதனால் தேயிலை விலை அதிகரித்து சர்வதேச சந்தையில் உயர்ந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.
 
tea factoryஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தேயிலை உற்பத்திக்கு நவீன உற்பத்தி முறைகள் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் இலங்கையின் பாராம்பரிய முறைக்கே முதலிடம் வழங்கப்படுகிறது. தேயிலை உற்பத்தி நீண்டகாலமாக நிலைத்திருப்பதற்கு அந்த பாரம்பரிய முறையே பிரதான காரணமாகிறது. அதனால் அதிக எண்ணிக்கையான மனித வளம் தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. நாம்  அருந்தும் தேநீரின் வாசனையை இயந்திரத்தினால் நிர்ணயிக்க முடியாது. அதனல் இலங்கையில் மனித வள பங்களிப்புக்கென மதிப்பு காணப்படுகிறது. மனிதால் தீர்மானிக்கப்படுத்தும் தேயிலைத் தூளின் வாசனையும் சுவையும் சிங்க இலச்சினையுடன் சிலோன் டீ என்ற நாமத்துடன் உலக சந்தையில் வளம் வருவதற்கு பாரம்பரிய முறையே காரணம்.
 
இதுவரை காலமும் தேயிலைக் கொழுந்து மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. கொழுந்து விலையை வழங்குவதற்கு உரிய பலமான பொறிமுறையொன்று இன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கிடைக்கும் பணத்தல் 68 வீதம் விவசாயிக்கு செல்லக்கூடிய பொறிமுறையும் இன்று பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு உற்பத்தியாளருக்கும் தனது உற்பத்திக்கான உரிய விலையை பெற்றுக்கொள்ள முடியாது போகும்பட்சத்தில் அப்பணத்தை ஏலத்தினூடாக உற்பத்தியாளருக்கு பெற்றுக்கொடுக்கும் அதிகாரம் இன்று இலங்கை தேயிலை சபைக்குள்ளது. இதனூடாக இன்று தேயிலை உற்பத்தித் துறை பாதுகாப்பானதாக உள்ளது என்பதை ஆணித்தரமாக கூறலாம்.
  
நாட்டுக்குள் தேயிலை உற்பத்தித்துறைக்கு பாதுகாப்பிருந்தபோதிலும் சர்வதேச சந்தையில் நாம் போட்டிக்கு முகங்கொடுத்தேயாகவேண்டியுள்ளது. அந்நிலை முகங்கொடுக்கும் வகையில் இலங்கைத் தேயிலைசபை உலக அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இன்று உலகின் சுமார் 20 நாடுகளில் சிலோன் டீ குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சர்வதேச கண்காட்சிகள், இலங்கை தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிறுவனங்களினூடாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும்  இப்பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சர்வதேச போட்டித்தன்மைக்கு முகங்கொடுக்கும் வகையில் தயார் செய்வது எவ்வாறு என்பது குறித்தும் தொடர்ச்சியாக கலந்துரையாடப்படுகிறது.
 
Ceylon Tea Typesதற்போதைக்கு சிங்க இலச்சினையுடனான தேயிலையின் பெயர் சுமார் 100 நாடுகளில் பதிவு செய்தாகிவிட்டது. பறிக்கப்படும்  கொழுந்துகள் தேயிலைத் தோட்டங்களில் இருந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லப்படும் கொழுந்து தொழிற்சாலையினுல்  நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
 
பச்சைத் தேயிலை (Green Tea)
பதப்படுத்தாத தேயிலை (Unfermented Tea)
கறுப்புத் தேயிலை (Black tea)
அரைப்பதம் மிக்க தேயிலை (Semi Unfermented tea)
 
என தேயிலை நான்காக வகைப்படுத்தப்படுகிறது. அண்மைக்காலமாக ''உடனடித் தேநீர்'' என்ற ஐந்தாம் வகைத் தேயிலையும் தயாரிக்கப்படுகிறது.
  
சுவையான தேயிலையை அனைவரும் விரும்பினாலும் போலிகளையும் கழிவுகளையும் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம் இருந்துக்கொண்டுதான் இருக்கும். கலிவுத் தேயிலை மாபியா தொடர்பில் எமது ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. 'கழிவுத் தேயிலை' என்ற பெயரால்தான் இந்த பிரச்சினை நிலவுகிறது. கழிவுத் தேயிலை என்பதற்கான அர்த்தம் நீங்கள் நினைப்பது போன்று கழிவு என்பது அர்த்தமல்ல.
 
waste teaதேயிலை கொழுந்தின் முற்றிய காம்புதான் கழிவுத் தேயிலை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. தொழிற்சாலையில் தேயிலை கொழுந்து சுத்தப்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட அளவுதான் சுத்தப்படுத்த முடியும். அதை விடவும் சுத்தப்படுத்த வேண்டியிருப்பின் அதற்கு புதிய முறையை கையாள வேண்டும். அதற்கு அனைத்து இயந்திரங்களையும் மாற்ற வேண்டும். இதற்கு சரியான சந்தை வாய்ப்பு கிடையாது. இதனை ஒழித்து மறைத்து விற்பனைச் செய்யப்படுவதாகவே மக்கள் மத்தியில்  கருத்து நிலவுகிறது. எமது தேயிலையை ஐஎஸ்ஓ தரமின்றி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
 
தொழிற்சாலைகளில் மிகுதியாகும் கறுப்பு நிற துண்டுகளுடன் கபில நிற காம்புகளுடன் உள்ள தேயிலைத்தூளை சுத்தப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் இந்த தேயிலையை வேறுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளது. அதற்கே உரிய தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். சிலர் இக்கறுப்பு நிற தேயிலையை ஒதுக்க விரும்புவதில்லை. அதனை அப்படியே விற்க முயற்சிப்பர். இதுதான் ஊடகங்களில் கூறப்படும் கழிவுத் தேயிலை மாபியாவாகும்.
 
உலகில், குறிப்பாக சூடான் போன்ற நாடுகளில் இத்தகைய தேயிலையை கிலோ ஒன்றரை டொலர் அளவு (225 ரூபாவரை) விலை கொடுத்து வாங்குவர்.  இலங்கையில் கழிவுத் தேயிலை ஒரு கிலோவின்  விலை 80 ரூபா.  இதில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு காணப்படுகிறது. இக்கழிவுத் தேயிலைக்கான சந்தை வாய்ப்பு காணப்பட்டாலும் ஐஎஸ்ஓ தரமின்றி  தேயிலையை ஏலத்தில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
 
கறுப்பு தேயிலைக்கான சந்தைவாய்ப்பு காணப்படுகின்றமை இன்று ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் இலங்கை தேயிலைச்சபை இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் எடுத்துள்ளது. குறிப்பாக கழிவுத் தேயிலை என்ற பெயரில் உள்ள அசுத்தமான தேயிலை என்ற பொருளைத் தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த தேயிலையை களஞ்சியப்படுத்தல் முதல் அனைத்து விடயம் தொடர்பிலும் கவனமாயிருப்பதுடன் அது தொடர்பான சுற்றுநிரூபமும் வௌியிட்டுள்ளது.
 
அத்துடன் குறித்த தேயிலைத் தொழிற்சாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான 10 தொழிற்சாலைகள் ஏற்கனவே பதிவு செய்யபட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தேயிலையை சிறந்த சந்தை வாய்ப்பு உபாயத்தைப் பயன்படுத்தி ஏலத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். அதனால் எமது ஏற்றுமதி இன்னும் இலகுவாக்கப்படுவதுடன் சிறந்த விலையுடன் கூடிய மாற்று சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேலும் சட்டரீதியான சந்தை வாய்ப்பை தவிர்த்து மேற்கொள்ளப்படும் விற்பனை நடவடிக்கைகளையும் தடை செய்யலாம் என்றும் தேயிலைச்சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
 
இலங்கையில் தற்போது சுமார் 4 இலட்சம் சிறு தேயிலைத் தோட்ட பயிரீட்டாளர்கள் காணப்படுவதுடன் 10 ஏக்கருக்கும் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் 2500 காணப்படுகிறது.
 
பசளைக்காக வழங்கப்படும் மாணிய நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படாமை காணக்கூடிய பாரிய பிரச்சினையாகும் என்று சுட்டிக்காட்டிய தேயிலைச் சபையின் தலைவர் எதிர்காலத்தில் நிதிக்குப் பதிலாக பசளைக்கான வவுச்சர்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இவ்வாறு பல்வேறு தீர்வுகள், தீர்மானங்களுக்கு மத்தியில் வளர்ச்சியடைந்த தேயிலை உற்பத்தி எங்களை விடவும் வயதில் மூத்ததாக காணப்படுகிறது. அடுத்த ஆண்டாகும் போது எமது தேயிலைச் செடிக்கு 150 வயதாகிறது. அது தொடர்பில் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். 
 
விசேடவிதமாக 150 வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய 150 வருட பூர்த்தியை கீழ் மட்ட தொழிலாளர்களையும் மேல் மட்டத்தில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளை இணைத்து நாம் கொண்டாடவுள்ளோம். அதற்கமைய சர்வதேசரீதியில் சிங்க இலச்சினையை கொண்ட எமது தேயிலை தொடர்பில் விளம்பரப்படுத்துவதுடன் உலகளவில் இலங்கைத் தேயிலைக்குள்ள கேள்வியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம். இலங்கை தேயிலை வர்த்தகர்களுடன் இணைந்து இலங்கைத் தேயிலை சபை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிறக்கும் 2017 ஆம் ஆண்டு முழுவதும் 150 வருட பூர்த்தி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
150 வருட பூர்த்தியின் முதலாவது செயற்பாடாக ஜனவரி மாதம் 19ஆம் திகதி இலங்கை தேயிலை சபையின் பிரதான அலுவலகத்தில் ஜேம்ஸ் டெய்லரின் உருவச்சிலை திறந்து வைக்கப்படுவதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கடித உரை மற்றும் முத்திரை வௌியிடப்படவுள்ளது. ஓகஸ்ட் மாதமளவில் 10 ரூபா நாணயக்குற்றி வௌியிடப்படவுள்ளது.
 
2017ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் ஏழு தேயிலை உற்பத்தி வலயங்கள் உள்வாங்கும் வகையில் கல்விக் கண்காட்சிகள் மற்றும் விளம்பரப்படுத்தல்கள் நடத்தப்படவுள்ளன. நாட்டின் அபிவிருத்திக்கு தேயிலை உற்பத்தியின் பங்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் தொழில்வாய்ப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவின் முக்கியத்துவம் பற்றியும் மக்கள் தௌிவடையும் வகையில் இக்கண்காட்சி மற்றும் விளம்பரப்படுத்தல்களின் நோக்கமாகும்.
 
உலகம் முழுவதிலும் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அமைப்புக்களினால் இலங்கை தேநீர் உபசாரம் Global Ceylon Tea Party  2017 எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி உலகின் பல்வேறு பிரதேசங்களில் மாலை 5.00 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரமான இலங்கை தேயிலையுடன் இலங்கையின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட பிஸ்கட் உற்பத்தியாளர்களான மெலிபன் பிஸ்கட் நிறுவனம் விசேட பங்களிப்பு வழங்கவுள்ளது. அந்நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் விசேட பிஸ்கட்டை ருசி பார்க்கவும் இத்தேநீர் விருந்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
 tea22 
The 150 years of Ceylon Tea  என்ற பெயரில் இலங்கை தேயிலை உற்பத்தி தொடர்பான நினைவேடு ஒன்றும் வௌியிடப்படவுள்ளதுடன் தேயிலை உற்பத்தித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்மைப்பயக்கும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட தேயிலை ஏலம் (Grand Charity Tea Auction) ஒன்றும் எதிர்வரும் ஜூன் மாதம் 14  நடத்தப்படவுள்ளது. 
 
சுற்றுலாப்பிரயாணிகள் மற்றும் இலங்கையர் மத்தியில் சிலோன் தேயிலையில் உள்ள தனித்தன்மை மற்றும் தேயிலையுடன் கட்டியெழுப்பப்பட்ட கலாசாரத்தை சர்வதேச ரீதியில் ​மேம்படுத்தும் வகையிலான  தேநீர் விழாவொன்றை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் தேநீருடன் தொடர்புபட்ட விடயங்களை வெளிகாட்டும் வகையில் வீதி பிரசார நடவடிக்கைகள், தேநீர் கூடாரங்கள், உணவு மற்றும் விற்பனை நிலையங்கள் மற்றும் களியாட்டங்களும் நடத்தப்படவுள்ளன. எதிர்காலத்தில் வருடாந்த விழாவாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தேயிலை மாநாட்டில் சுமார் 300 வெளிநாட்டு உள்நாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஓகஸ்ட் மாதம 8ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டை தேயிலை வர்த்தகம் தொடர்பில் சர்வதேச அளவில் புகழ் மற்றும் அனுபவம் மிக்க நிபுணர்கள் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்புக்களும் பங்குபற்றுனர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
 
 Plantation Sri Lanka 2017”  கண்காட்சி 2017 ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை  சிரிமாவோ பண்டாரநாயக்க மண்டபத்தில் நடைபெற்றது . இக்கண்காட்சியில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை தொழிற்றுறையில் பங்களிப்பு வழங்குவோர் தமது பொருட்களை காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டது .
 
அனைத்து வலயங்களையும் உள்வாங்கும் வகையில் தேயிலை தேயிலை உற்பத்தியில் விசேட திறமையுடன் செயற்பட்டோர் அடையாளங் காணப்பட்டு கௌரவப்படுத்தப்படுவத்தற்காக விருது வழங்கும் விழாவொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கல் விழாவில் கொழுந்து பறித்தல், தேயிலை சுவைப்பார்த்தல், சிறந்த உற்பத்தி முறை, தேயிலை கலவை தயாரித்தல், புத்தாக்க கண்டுபிடிப்பு என பல துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
 
இலங்கைத்  தேயிலை உற்பத்தித் துறை முக்கியத்துவம் வாய்ந்த கண்டி நகரில் அமைந்துள்ள 'சிலோன் தேயிலை' நூதனசாலையும் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று இலங்கை தேயிலைசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
 
தமிழில்- ஆர்த்தி பாக்கியநாதன்

வியாழன், 3 அக்டோபர், 2019

வியாதி நீங்காத பலன்.

வியாதி நீங்காத பலன் 




எனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு,திடீரென  சுகயீனம் ஏற்பட்டதாக அறிந்து,அருகிலிருக்கும் அவர்களது வீட்டிற்கு சென்றோம், அங்கு சென்றபோது, கொஞ்சம் வயதானவர்கள்தான் ,   சுகயீனப் பட்டவரின் மனைவி  ஆசுவாசமாக பஞ்சாங்கத்தைப்
புரட்டிக் கொண்டிருந்தார். போன நாங்கள்தான் என்னையும் சேர்த்து  செம டென்ஷனில் இருந்தோம். ஒரு வழியாக அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு .ஆறுதலாக அவர் மனைவியிடம்  வினவியதில்  கிடைத்த செய்திதான்  இன்றைய பதிவு.

ஆயில்முப் பூரஞ் சோதி  யாதிரை பரணி கேட்டை
ஏயுநற் சதையும் பக்க மீராறு நான்காறொன்பான்
 காய் கதிர் செவ்வாய் காரி வாரங்கள் கலந்த நாளில்
நோய்கொளில் மரணம் என்று நவின்றனர் நூல்கள்வல்லோர்

நட்சத்திரம்: ஆயில்யம்,  முப்பூரஞ்,  சோதி,  ஆதிரை,  பரணி,  கேட்டை,  சதையம்.

திதி: துவாதசி,  சதுர்த்தி,  சஷ்டி,   நவமி.

கிழமை: ஞாயிறு,  செவ்வாய்,  சனி.

உதாரணம் ஞாயிற்றுக் கிழமை,திதி துவாதசி , நட்சத்திரம் ஆயில்யம்

இப்படி அமைப்புள்ள நாள்களில்  வியாதிவரில்  மரணம் ஏற்படும் என்று
சூடாமணி உள்ளமுடையான் என்ற சோதிட நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது    

புதன், 2 அக்டோபர், 2019

‘மகாத்மா காந்தி


‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: அக்டோபர் 02, 1869
இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 
இறப்பு: ஜனவரி 30, 1948
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
காந்தியின் தண்டி யாத்திரை
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
இறப்பு
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.
மகாத்மா காந்தியின்  150 வது பிறந்த  நாள் இன்று.

நன்றி  itstamil 
இலங்கையில் தமிழில் வெளியான முதல் தமிழ் நூல்






இலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுருவாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது.

இலங்கையில் தமிழில் வெளியான முதல் தமிழ் நூல்.படிப்பதற்கு   
.இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.
நன்றி ; நமது மலையகம்