திங்கள், 22 மே, 2023

பெற்றோருக்குப் பகை

பெற்றோருக்குப் பகை









மாலினால் இருவரு மருவி மாசிலாப்,
பாலனைப் பயந்தபின் படிப்பி யாது(உ)யர்,
தாலமேற் செல்வமா வளர்த்தல் தங்கட்கோர்,
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமால்.


தாய்தந்தையர் இருவரும் விரும்பி சேர்ந்து நல்ல குழந்தையை பெற்றபின், அவனைப் பள்ளிக்கு அனுப்பி படிக்கச் செய்யாமல், மண்ணில் (சிறந்த உணவு, ஆடை, ஆபரணங்களைக் மட்டும் கொடுத்துச்) செல்வச் செழிப்பில் வளர்ப்பது, தங்களுக்கு ஓர் எமனை அவர்களே வளர்த்துக் கொள்வது போலாகும்.

#விவேக் சிந்தாமணி#பூர்ணயோகம்#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள