K.V.Rudra is a blog dedicated to exploring the spiritual, psychological and philosophical aspects of Hinduism and its various forms. The blog is written by K.V.Rudra, a Hindu spiritual teacher and practitioner who has been studying Hinduism for over 25 years. The blog is a platform for sharing his thoughts, insights and advice on various aspects of Hinduism, including its spiritual, psychological and philosophical aspects. K.V.Rudra also shares his personal experiences and insights on various topics related to Hinduism, such as meditation, yoga, mantra chanting, and other forms of spiritual practice. The blog also provides resources for those interested in learning more about Hinduism and its various forms.
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
திங்கள், 22 மே, 2023
K.V.Rudra is a blog dedicated to exploring the spiritual, psychological and philosophical aspects of Hinduism and its various forms. The blog is written by K.V.Rudra, a Hindu spiritual teacher and practitioner who has been studying Hinduism for over 25 years. The blog is a platform for sharing his thoughts, insights and advice on various aspects of Hinduism, including its spiritual, psychological and philosophical aspects. K.V.Rudra also shares his personal experiences and insights on various topics related to Hinduism, such as meditation, yoga, mantra chanting, and other forms of spiritual practice. The blog also provides resources for those interested in learning more about Hinduism and its various forms.
இம்மொழியிலிருந்து மொழிபெயர்: ஆங்கிலம்
கே.வி.ருத்ரா என்பது இந்து மதத்தின் ஆன்மீக, உளவியல் மற்றும் தத்துவ அம்சங்களையும் அதன் பல்வேறு வடிவங்களையும் ஆராய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பதிவு ஆகும். இந்த வலைப்பதிவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து மதத்தைப் படித்து வரும் இந்து ஆன்மீக ஆசிரியரும் பயிற்சியாளருமான கே.வி.ருத்ரா எழுதியுள்ளார். இந்த வலைப்பதிவு இந்து மதத்தின் ஆன்மீக, உளவியல் மற்றும் தத்துவ அம்சங்கள் உட்பட பல்வேறு அம்சங்களைப் பற்றிய அவரது எண்ணங்கள், நுண்ணறிவுகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாகும். K.V. ருத்ரா தியானம், யோகா, மந்திரம் உச்சரித்தல் மற்றும் பிற ஆன்மீக பயிற்சிகள் போன்ற இந்து மதம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்கிறார். இந்த வலைப்பதிவு இந்து மதம் மற்றும் அதன் பல்வேறு வடிவங்களைப் பற்றி மேலும் அறிய
பெற்றோருக்குப் பகை
பெற்றோருக்குப் பகை
மாலினால் இருவரு மருவி மாசிலாப்,
பாலனைப் பயந்தபின் படிப்பி யாது(உ)யர்,
தாலமேற் செல்வமா வளர்த்தல் தங்கட்கோர்,
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமால்.
தாய்தந்தையர் இருவரும் விரும்பி சேர்ந்து நல்ல குழந்தையை பெற்றபின், அவனைப் பள்ளிக்கு அனுப்பி படிக்கச் செய்யாமல், மண்ணில் (சிறந்த உணவு, ஆடை, ஆபரணங்களைக் மட்டும் கொடுத்துச்) செல்வச் செழிப்பில் வளர்ப்பது, தங்களுக்கு ஓர் எமனை அவர்களே வளர்த்துக் கொள்வது போலாகும்.
#விவேக் சிந்தாமணி#பூர்ணயோகம்#
லேபிள்கள்:
சிந்தாமணி,
பெற்றோருக்குப் பகை,
விவேக
ஞாயிறு, 21 மே, 2023
எதற்கும் பயன்படாதவன்
எதற்கும் பயன்படாதவன்
கல்லாலயமாம் தேவருமாம், கழுதை கசடர் பொதி சுமக்கும்,
கடாவோ உழுது பயிரிடற்காம், காட்டம் பன்றிக்கிரையாகும்,
புல்லேறு ஈசர் வாகனமாம் பொதியுஞ்சுமக்கும், பிணமதுவும்
பூசிமுடித்து மறையோர்க்கும் பொருளையீந்து புகழெய்தும்,
மல்லார் குட்டிச்சுவர் தானும் மறைவா(ம்) மாடுதேய்த்திடற்காம்,
மதியாத் துடைப்பம் தினந்தோறு(ம்) மாடகூடங்களை விளக்கும்,
அல்லார் உலுத்தன் எதற்குதவும்? அவனுக்கிணை இங்கெதுவுமிலை, அவனைக்குறித்துக் கூறுமிடத்தவனுக்கவனே சரிதானே.
கல்லானது ஆலயம் கட்டப் பயன்படும், தெய்வச் சிலைகளையும் செய்யலாம்; கழுதை பொதி சுமக்கப் பயன்படும்; எருமைக்கடா உழுது பயிரிடப் பயன்படும்; மலமும் பன்றிக்கு உணவாகும். எருது ஈஸ்வரனுக்கு வாகனமாகும், பொதி சுமக்கப் பயன்படும்; செத்த பிணமும்கூட சந்தனம் முதலியவை பூசி மலர்சூடி அந்தணருக்கு பொருளை தன்பொருட்டு தானமாகக் கொடுத்து (கொடுக்கச் செய்து) புகழ் எய்தும்; வலிமையுடைய குட்டிச் சுவரும் மறைவிடமாகும், மாடு முதுகு தேய்த்துத் தினவு தீர்க்க உதவியாகும்; உயர்வாக மதிக்கப்படாத துடைப்பமும் நாள்தோறும் வீடுவாசல் கூட்டப் பயன்படும்; ஆனால் மனதில் இருள் பொருந்திய லோபகுணமுடையவன் (உலுத்தன், லோபி, கருமி, கஞ்சன் = பொருளைத் தானும் அனுபவிக்காமல் மற்றவருக்கும் கொடுக்காமல் பதுக்கி வைத்திருப்பவன்) எந்தக் காரியத்திற்கு உபயோகமாவான்? (எதற்கும் உபயோகப் படமாட்டான்.) அந்தக் கஞ்சனுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் எதுவும் இணை இல்லை. அவனுக்கு அவனே சமானமாவான்.
லேபிள்கள்:
எதற்கும் பயன்படாதவன்,
விவேக்,
விவேக சிந்தாமணி
புதன், 17 மே, 2023
அநித்ய சுகம்.
அநித்ய சுகம்
கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்,
விண்ட நாகத்தின் வாயினில் வெருண்ட வன் தேரை,
மண்டு தேரையின் வாயினில் அகப்படு தும்பி,
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.
ஒரு கருடன் தன் வாயில் நாகத்தை இரையாகக் கொண்டு பறந்தது. அந்த நாகத்தின் வாயில் தவளையும், தவளையின் வாயில் தும்பியும் இருந்தன. தும்பிவண்டு நாவில் விழுந்த ஒருதுளி தேனை ருசித்து அனுபவித்தது. இதைப் போன்றதே (மரணதேவனின் வாயில் இருக்கும்) மனிதர் அனுபவிக்கும் இன்பம்.
(ஆகவே அற்பமான உலக இன்பத்தை விடுத்து நிலையான பேரின்பத்தை தேடு.)
லேபிள்கள்:
விவேக் .சிந்தாமணி.
விலகியே இருத்தல் நலம்.
விலகியே இருத்தல் நலம்.
மடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்,
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்,
தடவரை முலைமா தேயித் தரணியில் உள்ளோர்க் கெல்லாம்,
மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.
இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்) ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும் வலியவன் வதைப்பான். அவ்வலியவனை எமன் கொல்வான். இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!
#விவேக் சிந்தாமணி#
சொல்லுவார்,வார்த்தை கேட்டு.
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை யிகழ்வார் புல்லர்
நல்லவர் விசாரி யாமற் செய்வரோ நரிசொற் கேட்டு
வல்லியம் பசுவுங் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லிய ரொருவ ராலே போகுமே யாவும் நாசம். (45)
- கேட்பார் சொல்லைக் கேட்டுத் தன் தோழனை இகழ்வாகக் கருதுபவர் ‘புல்லர்’.
- நல்லவர்களை விசாரிக்காமல் தோழனை இழப்பார்களோ?
- நரியின் சொல்லைக் கேட்டுப் புலியும் பசுவும் கூடி வாழ்ந்த கதை போல் புல்லியன் ஒருவனால் நல்லவன் வாழ்வு முடிந்துவிடும்.
லேபிள்கள்:
கேட்டு,
கேட்பார்,
சொல்,
சொல்லுவார்,
வார்த்தை,
விவேக சிந்தாமணி
# பட்டினத்தார் பாடல்#
மாலைப்பொழுதில் நறுமஞ்சல் அரைத்தே குளித்து
வேலை மினுக்கிட்டு விழித்திருந்து- சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்.
# பட்டினத்தார் பாடல்#
லேபிள்கள்:
# பட்டினத்தார் #____ பாடல்#
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)