ஐந்தாவது ஆண்டு திருமண நன்நாள்.(27-07-1917).
எனது இளைய மகளும் மருமகனும், பேரப்பிள்ளைகளும் அமெரிக்கா பூஸ்டனில்
வாழ்கிறாரகள்,அவர்களின், ஐந்தாவது ஆண்டு திருமண நன்நாள் இன்று.
வாழ்க்கை வானில் சேர்ந்து பறக்க
சிறகை விரிக்கும் வானம்பாடி பறவைகள் நீங்கள்...
வரும் காலமும், வரப்போகும் காலமும் ச
சுற்றத்தோடும் நட்போடும் அமைய...
நம்பிக்கை சிறகுகள் முளைத்து
வானம் தாண்டி பறந்து செல்லும்
வெற்றி பறவைகள் நீங்கள்...
வெயில், மழை, புயல்
என எத்துனை இடர் வரினும்
இன்முறுவல் மாறாத இன்முகத்தோடு
எளிமையும் வளமையையும்
சேர்த்து வாழ்வீராக...
உனக்காக உன்னவளும்
உனக்காக உன்னவனும்
என்று தொடங்கி...
நமக்காக நாங்கள்
என்று நினைவுக்கூறும்
இன்னாள்...
நன்னாள், பொன்னாள்...
ஆம்.
இது உங்கள் திருமண நாள்...
என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...!!
அன்புடன்,
அம்மா,அப்பா.
https://goo.gl/pk9rXe
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள