முஸ்லிம் தேசம் உருவாக்க அணிதிரளுமாறு பகிரங்க அழைப்பு!
வடக்கு கிழக்கில் முஸ்லிம் மாவட்டமும் மாகாணமும் உருவாக்க ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் விடுதலை பாடிகள் அமைப்பு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.அதில் யாரும் முஸ்லிம் மாவட்டத்திலும் முஸ்லிம் மாநிலத்திலும் வாழலாம். ஆனால் ஆளும் உரிமை முஸ்லிம்களுக்கே என தெரிவிக்கப்பட்டுள்ளது..
அறிக்கையின் முழுவிபரம்
அம்பாறை மாவட்டம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினரைக் கொண்ட பூர்வீக பிரதேசம். சம்மாந்துறைத் தொகுதி, கல்முனைத் தொகுதி, பொத்துவில் தொகுதிகளை உள்ளடக்கி முஸ்லிம் மாவட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இது முஸ்லிம் தேசமாக அடையாளம் கொள்ளப்படும்.
இதனை தளமாகக் கொண்டு முஸ்லிம் மாகாணம் அமைக்கப்பட வேண்டும்
அதன் எல்லைகள் கிழக்கில் பொத்துவிலிருந்து – புல்மோட்டை வரையும் வடக்கில் எருக்கலம்பிட்டியிலிருந்து மறிச்சிக்கட்டிவரை வரையுமாகும். இத்தேசம் நிலத்தொடர்பற்றதாக காணப்படும்.
இப்பபிரதேசங்கள் முஸ்லிம்களின் தாயகமாகவும் முஸ்லிம் மாநிலமாகவும் இருப்பதுடன் அம்பாறை முஸ்லிம் மாவட்டம் அதன் தலைமையமாக இருக்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அமைக்க உறுதிபூண்டுள்ள முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டத்தின் (முஸ்லிம் தேசத்தின்) தலைமையிடமாக ஒலுவில் இருக்கும். அதன் நிர்வாக கட்டிடங்கள் மேற்கு நோக்கிய குடியேற்றங்களாக அமைக்கப்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டம் என்பது 1961இல் இரவோடு இரவாக உருவாக்கப்பட்ட எல்லைகளும் அல்ல. சனத்தொகையும் அல்ல.
பிந்தன பற்று, மகா ஓயா, உஹன, அம்பாறை பிரதேசங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை சேர்த்து முஸ்லிம்களின் முஸ்லிம் மாவட்டம் (தேசம் ) வரவேண்டும்.
இவைகள் சிங்கள மக்களின் பிரதேசம் அல்ல. முஸ்லிம்களின் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் மற்றும் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு சிங்கள அரசியல்வாதிகள் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள்.
இதனால் காணிகள் அனைத்தும் சிங்களவர்களினதும் தமிழர்களினதும் ஆதிக்கங்களில் உள்ளன. முஸ்லிம்களிடமிருந்து தமிழர்களாலும் சிங்களவர்களாலும் பறித்தெடுக்கப்பட்ட மற்றும் பறித்தெடுப்பதற்கு எல்லைகள் இடப்பட்டுள்ள காணிகள் மீட்கப்பட வேண்டும்.
இதில் ஒரு துளியளவும் அரசுடனும் அருகில் உள்ள மாநில அரசுகளுடனும் சமரசம் கிடையாது. இதில் ஒரு துளியளவும் விட்டுக்கொடுப்பும் கிடையாது.
இதற்கு ஒரே வழி முஸ்லிம் சமுகத்தை வைத்து வியாபாரம் செய்யும் தலைமைகளை அகற்றி இளைஞர்கள் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் அரசியலை கையில் எடுப்பதுதான்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் கரையோரமாக 63 வீதமான முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். தமிழர்கள் 22 வீதம் இருக்கின்றார்கள். 85 வீதமான தமிழ் பேசும் மக்கள் இங்கு வாழுகின்றார்கள். யாரும் முஸ்லிம் மாவட்டத்திலும் முஸ்லிம் மாநிலத்திலும் வாழலாம். ஆனால் ஆளும் உரிமை முஸ்லிம்களுக்கே.
முஸ்லிம்களின் உரிமை அரசியலை வடக்கு கிழக்கில் விசேடமாக அம்பாறை மாவட்டத்தில், இன்னும் சில நாட்களில் முஸ்லிம் இளைஞர்கள் தங்களது கையில் தூக்கிப் பிடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். பாதையை தேடாமல் நமக்கான பாதையை உருவாக்குவோம்.
அன்று தான் முஸ்லிம்களின் கௌரவம் மீட்கப்படும்
ஊடகப் பிரிவு
விடுதலை பாடிகள் அமைப்பு
விடுதலை பாடிகள் அமைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள