வியாழன், 13 ஏப்ரல், 2017

ஏவிளம்பி வ்ருஷப் பலன் 2017/2018


ஏவிளம்பி  வ்ருஷப்  பலன் 2017/2018 (திருக்  கணிதம் )

ஏவிளம்பி மாரியற்ப  மெங்கும் விலைகுறைவாம் 
பூவில் விளைவரிதாம்  போர்மிகுதி -சாவதிகம் 
ஆகுமே வேந்த ரநியாய மேபுரிவார் 
வேகுமே மேதினிதீ மேல்.
 
துர்முகி வருஷம் பங்குனி மாதம் 31ந் திகதி {14-04-2017}வியாழக்கிழமை பின்னிரவு உதயாதி நாழிகை 50-04இல் {மணி 02.04இல்} ஏவிளம்பி  என்னும்
பெயருடைய புத்தாண்டு உதயமாகின்றது.அன்று நட்சத்திரம் விசாகம் 3ம் பாதம்,திதி அபரபட்ஷ திரிதியை.இது 60வருட சுற்று வட்டத்தில் 31வது வருஷமாகும். பங்குனி 31ந் திகதி இரவு நாழிகை 40-04 (மணி இரவு 10-04)
முதல் மறு  நாள் காலை நாழிகை 00-04 (மணி காலை 06-04) வரை மேட  சங்கிரமண  புண்ணிய காலமாகும். புது வருடம்  பிறக்கும் போது உதய
லக்கினம் "மகரம் " ஆக அமைகிறது.

இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மருத்து நீர் தேய்த்து
தலையில் கொன்றையிலையும், காலில் புங்கமிலையும் வைத்து ஸ்நானம்
செய்து மஞ்சள் நிறப்பட்டாயினும் , அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளைப் புது வஸ்த்திரமாயினும் தரித்து,விநாயகர் முதலிய இஷ்டகுல தெய்வங்களைத் தரிசனம் செய்து  இயன்ற தானாதிகள் வழங்கி குரு ,பெற்றோர் முதலியோரை வணங்கி, ஆசி பெற்று விருந்தினர்களை உபசரித்து சுற்றத்தாருடன் இணைந்து பால்,தயிர்,தேன் ,வேப்பம் பூ,முதலியவற்றுடன் அறுசுவைபி பதார்த்தங்களையும் போஜனம் செய்து, தாம்பூலம் அருந்தி சுகந்த சந்தண புஸ்பாதிகளை அணிந்து புது வருடத்தில் ஆற்றக்கூடிய நற்கருமங்களைச்  செய்து  புதுப் பஞ்சாங்க பலன்களை அறிந்து சயானிப்பீர்களாக.நவநாயகர் பலன் 

இராஜா  செவ்வாய் பலன் .

இவ்வருடம் செவ்வாய் இராஜாவாக ஆட்சி செய்வதால் ஆட்ச்சியாளர்கள் தனது பலத்தை பிரயோகிக்க எத்தனிப்பர். உலக நாடுகளில் ஆயுதபலம் அதிகரிக்கும். அணு உற்பத்தியில் கவனம் கூடுதலாக இருக்கும். நாட்டின்  உஷ்ணம்  மிகுந்திருக்கும். விபத்துக்கள்  ஏற்படுதலைத் தவிர்க்க முடியாது.
விவசாயத்துறை விருத்தி பெறும்.

மந்திரி வியாழன் பலன்.

மரங்கள் , செடிகள்  கொடிகள் செழித்து வளரும் மக்களுக்கு ஓரளவு நீதி நியாயம் கிடைக்கும் மதகுருமார் கௌரவிக்கப்படுவார்கள் பசுக்கள் விருத்தியாகும்.

சேனாதிபதி புதன் பலன்.
கல்வித்துறை மேம்பாடடையும் பல்கலைக் கழகங்கள் கல்விச் சாலைகள்
சிறந்து விளங்கும்.

ஸஸ்யாதிபதி சூரியன் பலன்.


நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்,நிலவளங்கள் குன்றும்,பயிர்கள் நோயினால் பீடிக்கப்படும் சிறு தான்ய விருத்தி உண்டாகும் பூவகை பலிதமாகும்.


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் 
உரித்தாகட்டும்.
ஏவிளம்பிப் பலன் விபரமாக  தொடரும்.........     

அன்புடன்,
கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா