வாகன விபத்துக்களைத் தடுக்க!
1987/03/13ந் திகதி அரசாங்க அதி விசேட வர்த்தக மாணியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 237ம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்கு விதிகள்,சைகைகள் என்பவற்றின் சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு விள ங்கக் கூடியவாறு வெளியிடப்பட்ட பெருந் தெருக் கோவையில் இருந்து...
01.சிறுவர்களை வீதிகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.சிறுவர்களுடன் பாதையை கடக்கும்போது எப்பொழுதும் வாகனங்கள் வரும் வழியிலிருந்து
அவர்களை விளத்தூண்கள்.சிறுவயதிலிருந்தே வீதிப் பாதுகாப்புப்பற்றி அறிவுறுத்தி,எப்பொழுதும் அவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழுங்கள்.
02.பக்க நடைபாதை அல்லது ஒற்றையடிப்பாதை இருப்பின் எப்பொழுதும் அதனையே உபயோகியுங்கள்.நடை பாதையில்லாதிருப்பின் வாகனப் போக்குவரத்தை எதிர் நோக்கி வீதியின் வலது பக்கமாக நடவுங்கள்.
03.இயன்றளவு வீதியின் பாவனையை வாகனப் போக்குவரத்திற்கென ஒதுக்குங்கள்.அத்துடன் நடக்கும்பொழுது ஒருவர் பின் ஒருவராக நடத்தல் உசிதமானது.ஆனால் பாதசாரிக் கடவைகளிலும் பக்க நடை பாதைகளிலும்
தவிர இருவருக்கு மேல் பக்கம் பக்கமாக நடக்காதீர்கள்.பாதசாரிகள், வாகனப் போக்குவரத்திற்க்கு வழிவிடல் வேண்டும். என்பதை நினைவில் வைத்திருங்கள்.
04.இரவில் விசேடமாக ஒற்றையடிப்பாதை இல்லாதவிடத்து மென்னிற ஆடை அணியுங்கள் அல்லது வெள்ளை நிற பொருளொன்றினை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் இது வெளிச்ச்ம் குறைவான சமயங்களில் சாரதிகள் தாங்கள் வீதியில் இருப்பதை உணர்ந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
05.வீதியைக் கடக்க வேண்டுமாயின் பாதசாரிக் கடவையை உபயோகியுங்கள்
அல்லது வீதியின் மேம்பாலம் அல்லது கீழ்ப்பாலம் பாதசாரிக் கடவைகளை
உபயோகியுங்கள் இவற்றின் ஒண்றினைத் தெரிவு செய்யுங்கள். பிரதான வீதியில் மேற் கூறியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து வீதியைக் கடப்பது விபத்துக்களைத் தடுக்கும்.
06.ஒதுக்கப்பட்டுள்ள பாதசாரிக் கடவை இல்லாத பட்சத்தில் வாகனப் போக்குவரத்தில் நிலை பற்றி தெளிவாக விளங்கிக் கொண்டு கடக்குமுன் போக்குவரத்தில் பாதுகாப்பான இடைவெளியொன்று வரும்வரை காத்திருங்கள் வலது பக்கம் பார்க்கவும் இடது பக்கம் பார்க்கவும் மீண்டும்
வலது பக்கம் பார்க்கவும் இப்பொழுது கடப்பது ஊசிதமானது என அறிந்ததும்
வீதியின் குறுக்கே நேராக விரைவில் கடவுங்கள்.நிறுத்தப்பட்ட வாகனமொன்றின் பின்னே அல்லது முன்னே கடக்காதீர்கள். பாதுகாப்புக் கம்பி வேலிகள் போடப்பட்டிருக்கும் இடங்களில் வழங்கப்பட்டுள்ள இடைவெளிகளில் மட்டுமே வீதியைக் கடவுங்கள்.கம்பி வேலிக்கு மேலால் ஏறவோ அல்லது அவற்றுக்கு வெளியே நடக்க வேண்டாம்.
07ஒற்றைவழிப் பாதைகள் ஒடுங்கலாயுள்ள அல்லது இல்லாமலுள்ள சந்தியின் மூலையில் நடக்கையில் விசேடமாக நீண்ட வாகனமொன்று மூலையிலிருந்து வரும்பொழுது கவனமாக இருங்கள் .
08.பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க தாங்கள் முயற்சிக்குமுன் வாகனச்சாரதி தங்களைக் கண்டு வேகத்தை குறைத்து வாகனத்தை நிறுத்துவதற்கு போதுமான கால அவகாசத்தை கொடுங்கள் கடவையில் பாதத்தை வைத்தாலன்றி சாரதி வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவையில்லை.வெளிச்சம் குறைவாக இருந்தால் பாதை ஈரமாக இருப்பின் மேலதிக கவனம் செலுத்துங்கள்.
09.வாகனப் போக்குவரத்தையும் பாத சாரிகளையும் கட்டுப்படுத்தும் பொலிகன் கடவையில் சிவப்பு மனிதன் சைகைக் குறியீடு இருக்கும்பொழுது
கடவாதீர்கள், இயக்குவதற்கான பொத்தானை அழுத்தி பச்சை மனிதன் சைகை ஒளியூட்டப் படும்வரை காத்திருங்கள். இப்பொழுது கவனமாகக் கடவுங்கள்
ஏனெனில் ஒளிச் சைகைகளின் பிரகாரம் வாகனப் போக்குவரத்து இயங்க போதிய நேரம் தேவை. சற்று நேரத்தில் பச்சை மனிதன் ஒளிச்சமிக்சை
விட்டு விட்டு எரியத்தொடங்கும் ஒளிச்சமிக்ஞை "சிவப்பு மனிதனுக்கு விரைவில் மாறப்போகிறது என்பது இதன் கருத்து ."பச்சை "மனிதன் "விட்டு
விட்டெரியத் தொடங்கும் போது நீங்கள் கடக்கத் தொடங்க வேண்டாம்.ஆனால். ஏற்கனவே கடந்து கொண்டிருப்பவர்கள் அடுத்த பக்கத்திற்குச் செல்ல அவர்களுக்குப் போதிய அவகாசம் வளங்கப்படும்.
இருந்தும் விரைவாகக் கடக்க முயற்சி செய்யுங்கள்.
10.பிராயாணிகள் பேருந்து ஒன்றில் ஏறத் தாங்கள் விரும்பினால் மேல்
காட்டப்பட்டுள்ள அடையாளமுள்ள மிக கிட்டிய நிறுத்தும் இடத்திற்க்குச்
சென்று தங்களுக்குரிய வரிசையில் நில்லுங்கள் வரிசையை மீறுதல் மிகப்
பெரிய குற்றமாகும்.பேருந்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் தரிப்பிடத்தில் பேருந்து தகையுமட்டும் பொறுமை கொள்ளுங்கள்.
இலங்கையில் நடக்கும் விபத்துக்கள் கவலையீனங்களாலும்,வீதிப் போக்குவரத்தை தெரிந்து கொள்ளாமையினாலுமமே ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது,வீதி போக்கு வ ரத்தில் .சம்பந்தப் பட்டவர்களின் பொறுப்பின்மையும் முக்கிய காரணமே.எவராவது இதை வாசித்து விபத்தை தடுக்க முற்பட்டால் இந்தப் பதிவின் நோக்கம் நிறைவடையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள