புதன், 4 ஜனவரி, 2017

சிறப்பு போக்குவரத்து ஒழுங்­குகள் அமு­ல் (எம்.எப்.எம்.பஸீர்)




சிறப்பு போக்குவரத்து ஒழுங்­குகள் அமு­ல்
 (எம்.எப்.எம்.பஸீர்)
கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தின் ஓடு பாதை நவீன மயப்­ப­டுத்­தப்­படும் புனர் நிர்­மாணப் பணிகள் இம்­மாதம் 6 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் நிலையில் அதனை மையப்­ப­டுத்தி பொது மக்­க­ளுக்கு ஏற்­படும் சிர­மத்தைக் குறைக்க நேற்று முதல் உடன் அமு­லுக்கு வரும் வகை­யி­லான சிறப்பு போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­களை பொலிஸார் நடைமுறைப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
ஓடு பாதை நவீன மயப்­ப­டுத்­தப்­படும் நட­வ­டிக்­கைகள் எதிர்­வரும் 6 ஆம் திகதி முதல் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திக­தி­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இக்­கா­லப்­ப­கு­தியின் ஒவ்­வொரு நாளும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் இந்த நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­படும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.
இந்­நி­லையில் இக்­கா­லப்­ப­கு­தியில் விமான நிலை­யத்தை நோக்கி அதி­க­மான பய­ணி­களும் வாக­னங்­களும் வருகை தர உள்ள நிலையில், இதன் போது ஏற்­படும் சிர­மங்­களைக் குறைக்க நேற்று முதல் இப்­ப­ணிகள் நிறை­வுறும் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரையில் பிற்­பகல் 3.00 மணி முதல் மறு நாள் காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த சிறப்பு போக்குவரத்து திட்டம் அமு­லுக்கு வரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
பிர­தா­ன­மாக நான்கு பாதைகள் ஊடாக கட்­டு­நா­யக்­க­வுக்குள் வரு­வோரை இலக்­காக கொண்டே இந்த சிறப்பு திட்டம் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.
கொழும்பு மற்றும் சிலாபம் பகு­தி­களில் இருந்து விமான நிலையம் நோக்கி வரும் வாக­னங்கள் விமான நிலை­யத்தின் பிர­தான வாயில்­களில் 40 ஆம் இலக்க வாயில் ஊடாக உள் நுழைந்து பழைய பீ.வீ.ஜி. வளாகம் ஊடாக விமான நிலை­யத்தின் உள் நுழையும் மற்றும் வெளிச் செல்லும் பகு­தியை அடைய முடியும்.
இதன் போது அதி­வேக பாதை ஊடாக 18 ஆம் கட்டை முதல் மினு­வாங்­கொட மற்றும் குரு­ணாகல் நோக்கி பய­ணிப்­போ­ருக்கும் விசேட பாதை ஒழுங்குகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இதன் போது கட்­டு­நா­யக்க - நாயக்­கந்த பாதை­யூ­டாக பய­ணிக்க அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என தெரி­விக்கும் பொலிஸார் மினு­வாங்­கொடை, குரு­ணாகல் பகுதி நோக்கி பய­ணிப்போர், கே - 2 சந்தி ஊடாக எவ­ரி­வத்தகர பகு­திக்கு திரும்பி மல்கஸ் சந்தி, கோவிந்த வீதி ஊடாக ஆடி அம்­ப­லம கிறிஸ்­தவ ஆலயம் அமைந்­துள்ள சந்­தி­வரை பய­ணித்து மினு­வாங்­கொடை நோக்­கியோ அல்­லது ஹின­டி­யன யாகொ­ட­முல்ல ஊடாக மினு­வாங்­கொடை பாதைக்குள் நுழைந்தோ பய­ணிக்க முடியும் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
இத­னி­டையே விமான நிலை­யத்தில் இருந்து அதி­வேக பாதை, 18 ஆம் கட்டை ஊடாக வெளிச் செல்லும் வாக­னங்கள் விமான நிலைய பிர­தான வாயில் ஊடா­கவே வெளிச் செல்ல முடியும் என பொலிஸார் தெரி­வித்­தனர். அத்­துடன் விமான நிலை­யத்தில் இருந்து மினு­வாங்­கொடை நோக்கி பய­ணிப்போர் முதலாம், இரண்டாம் இலக்க வெளிச் செல்லும் வாயில்கள் ஊடாக நாயக்­கந்த வீதி­யூ­டாக மினு­வாங்­கொடை நோக்கி செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பணிப்­பாளர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.
 மினு­வாங்­கொடை, கம்­பஹா மற்றும் குரு­ணாகல் பகு­தியில் இருந்து விமான நிலை­யத்­துக்கு மட்டும் வருவோர், ஆண்டி அம்­ப­லம முதல் நாயக்­கந்த வீதி ஊடாக பய­ணித்து விமான நிலை­யத்தின் 37 ஆம் இலக்க உள் நுழையும் பாதை ஊடாக விமான நிலை­யத்தின் உள் நுழையும் மற்றும் வெளிச் செல்லும் பகு­தியை அடைய முடியும் என பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
இதனை விட, கம்­பஹா, குரு­ணாகல் பகு­தி­களில் இருந்து அதி­வேக பாதை நோக்கி பய­ணிப்போர், குரு­ணாகல் - கொழும்பு வீதியின் யாகொ­ட­முல்ல சந்தி ஊடா­கவோ, பீவத்த சிலுவை சந்­தியால் திரும்பி மாதவ மல்கஸ் சந்தி வரை பய­ணித்து ஆண்டி அம்­ப­லம ஊடாக கோவிந்த மல்கஸ் வீதிக்குள் நுழைந்து எவ­ரி­வத்த நகர் ஊடாக அதி­வேக பாதைக்குள் பிர­வே­சிக்க முடியும்.
அத்­துடன் கட்­டு­நா­யக்க முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்­துக்கு அமந்­தொ­ழுவ பகு­தியில் இருந்து வருவோர், கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலையம் முன்­பாக உள்ள பிர­தான வாயில் ஊடா­கவும் முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்தின் 3 ஆம் இலக்க வாயில் ஊட­ாகவும் உள் நுழைய முடியும்.
இதனை விட மினு­வாங்­கொடை, கம்­பஹா மற்றும் குரு­ணாகல் பகு­தி­களில் இருந்து முத­லீட்டு ஊக்குவிப்பு வலயம் நோக்கி பய­ணிப்போர், குரு­ணாகல் - கொழும்பு பிர­தான வீதியின் யாகொ­ட­முல்ல சந்தி ஊடாக, பீல்­வத்த சிலுவை சந்தி, மாது மல்கஸ் சந்தி ஊடாக ஆண்டி அம்­ப­லம சந்­தியால் திரும்பி கோவிந்த வீதி, எவ­ரி­வத்த வரை பய­ணித்து கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலையம் முன்­பாக உள்ள பிர­தான வாயில் ஊடா­கவோ, கே - 2 சந்­தி­யூ­டாக தொரண சந்தி வரை பய­ணித்து முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்தின் முதலாம் இலக்க வாயில் ஊடா­கவோ உள் நுழைய முடியும்.
அத்­துடன் முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்­தி­லி­ருந்து வெளி­யேறும் வாகனங்கள் தொடர்­பிலும் தனி­யான போக்கு வரத்து ஒழுங்கு அமுல் செய்­யப்­பட்­டுள்­ளது.
 அதன்­படி அங்­கி­ருந்து வெளிச் செல்லும் வாக­னங்கள், எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாயக்­கந்த வீதி ஊடாக மினு­வாங்­கொடை நோக்கி பய­ணிக்க அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது என பொலிஸார் தெரி­வித்­தனர். அதன்­படி வெளி­யேறும் வாக­னங்கள் மல்கஸ் சந்தி, கோவிந்த சந்தி ஊடாக ஆடி அம்­பலம் வரை பய­ணித்தோ அல்­லது ஹீன­டி­யன, யாகொ­ட­முல்ல சந்தி ஊடாக மினு­வாங்­கொ­டைக்கும் கொட்­டு­கொடை சந்தி ஊடாக கம்­பஹா மற்றும் ஜா எல நோக்­கியும் பய­ணிக்க முடியும் என பொலிஸார் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
எவ்­வா­றா­யினும் இந்த சிறப்பு போக்கு வரத்து திட்­டத்தின் பிர­காரம் நாயக்­கந்த வீதி ஊடாக விமான நிலை­யத்­துக்கு வருவோர் மட்டும் அனு­ம­திக்­கப்­ப­டுவர் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள போதும், பெரும் வாகன நெரிசல் விமான நிலைய பகு­தியில் ஏற்­ப­டு­மாயின் ஆண்டி அம்­ப­லம முதல் கே - 2 சந்தி வரை­யி­லான பகுதி மூடப்பட்டு கட்டுநாயக்க - மினுவாங்கொடை வீதி முற்றாக மூடப்படும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறான நிலை ஒன்று ஏற்படும் பட்சத்தில் அதிவேக பாதை, விமான நிலையம் நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் கோவிந்த மல்கஸ் சந்தி ஊடாக எவரிவத்த நகருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சீதுவை ஊடாக அதிவேக பாதை மற்றும் விமான நிலையம் நோக்கி பயணிக்க அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள