புதன், 25 ஜனவரி, 2017

கூட்டு எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி..! சபையில் போட்டுடைத்த சம்பந்தன்

கூட்டு எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி..! சபையில் போட்டுடைத்த சம்பந்தன்



கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஊழல் செய்பவர்களை சிறை வைப்பதையும் ஐக்கிய தேசிய கட்சி தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஊழல் செய்தமைக்காக எந்தவொருவரும் இதுவரை குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லை.
அத்துடன் ஊழல் செய்தமை தொடர்பில் எந்தவொரு நபரும் இதுவரை சிறை வைக்கப்படவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலரும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊழலில் ஈடுபடுவதாக தாம் கூறவில்லை.
எனினும் ஊழல் செய்வதை இருவரும் அனுமதிக்கின்றனர். இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் செயற்பாடுகள் குறித்து மக்கள் சோர்வு அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள