திங்கள், 12 டிசம்பர், 2016

இனியகார்த்திகைத் தீபத்திருநாள்இனியகார்த்திகைத் தீபத்திருநாள்/கார்த்திகை விளக்கீட்டு வாழ்த்துக்கள்-
கார்த்திகை மாதம் தமிழ் மக்களின் வாழ்வியலில் கலாசார பண்பாடுகளில் சிறப்புக்குரிய மாதம்.கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று கொண்டாடப்படும் கார்த்திகைத் தீபத்திருநாள்சங்க காலம் தொட்டே தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வந்து ள்ளது என்பதை பல சங்க இலக்கியங்களின் மூலம் காணலாம்.
தொல்காப்பியம் ‘வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்’ என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது .கார்த்திகை விளக்கிட்டனன் என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது இந்தத்
தீபத் திருநாளில் வீடுகளில், ஆலயங்களில் தீபங் களை ஏற்றி வழிபடுவது தொன்றுதொட்டுப் பேணப்ப ட்டு வரும் தமிழர்களின் மரபு.
கார்மேகம் சூழ்ந்து மழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவதன் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு தொழில்நுட்பம்,விஞ்ஞான விளக்கம் தான் மாலையில் வீடுகளில் எண்ணை
 விளக்கு ஏற்றுதல்
தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர்கள் இந்த கார்த்திகை மாதத்தில தான் பெரிதும் பரவும்.இதில் இருந்து நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீப திருநாள் வழி வகை செய்கிறது.எப்படி என்றால் கார்த்திகை தீபத்தில் பயன் படுத்த படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து வரும் நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது.
இந்த உண்மை அறியாமல், பழைய வழக்கம் நமக்கு எதற்கு, சாஸ்திரத்துக்கு ரெண்டு விளக்கு ஏற்றுவோம் என்று இல்லாமல் இல்லம் நிறைய விளக்கு ஏற்றி
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்..குலம் விளங்க
விளக்கு வைப்போம்....