சனி, 24 டிசம்பர், 2016

ஜெனிவா யோசனை தொடர்பான ட்ரம்பின் தீர்மானம் பெப்ரவரியில்!!


ஜெனிவா யோசனை தொடர்பான ட்ரம்பின் தீர்மானம் பெப்ரவரியில்!!இலங்கைக்கு எதிராக போர் குற்றம் சுமத்தப்பட்ட ஜெனிவா யோசனை தொடர்பாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
யோசனையை திரும்ப பெறும் அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதிக்கு உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உலக இலங்கையர் பேரவை என்ற சிங்கள அமைப்பும் யோசனையை திரும்பபெறுமாறு டொனால்ட் ட்ரம்பிடம் கோரியுள்ளதாக சிங்கள வார பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜெனிவா யோசனையை அமெரிக்க ராஜாங்க திணைக்களமே மனித உரிமை பேரவையில் முன்வைத்தது.
ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், யோசனையை கொண்டு வர காரணமாக இருந்த ஹிலரி கிளின்டனுக்கு சார்பான அதிகாரிகளின் அதிகாரம் குறையும் என தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படி இருந்த போதிலும் ஜெனிவா யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
நமது தமிழ் தலைமைகள் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள்?.முள்ளிவாய்க்காலில் மொத்தமாக இறந்தவர்கள் எத்தனைபேர் என்பதே தெரியாத தமிழ் தலைமைகள்.இவர்களை நம்பி இருக்கும் தமிழ் மக்களின் நிலைமை என்னவாகப் போகிறது? இன்னமும் தீர்வு தீர்வு என்று தமிழ் மக்களை திசை திருப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் 

குடிசன மதிப்பீடு  வட கிழக்கு


1921ஆண்டு .      கிழக்கு                          வடக்கு

தமிழர்                 103251          53.55%           353801       95.19%

சிங்களர்                3794            1.97%            8794            1.02%

முஸ்லீம்               75992          39.41%           13095           3.49%         


ஏனையோர்        9784            05.07%            1139           0.3%


மொத்தம்          192821          100.%           374829        100%


இன்றைய நிலைமை என்னவென்று நம் எல்லோருக்கும் தெரியும்.ஒன்று ஏதாவது செய்யுங்கள் இல்லாவிட்டால் ..............................