புதன், 21 டிசம்பர், 2016

தாயை நினை தொலையும் வினை.!!





தாயை நினை தொலையும் வினை.!!

அன்னை சாரதா தேவியின் 150 ஆண்டு நினைவுச் சிறப்பு மலருக்கு  2003ஆம் ஆண்டு கவிஞர் வாலி எழுதியது.இன்று 163ஆம் ஆண்டு நினைவு தினம்








உள்ளமே !
உனக்கொரு வார்த்தை !!
செவிமடு!
சீர் படும் வாழ்க்கை!!

"ஜனனி என,
ஜகம் வாழ்த்த
ஜயராம்பாடியில்
ஜனித்தவளின் நாமத்தை ஐபி:
அடிக்கடி அலைபாய்தலை
அறவே விடுத்து
அடங்கிடும் அகமெனும் கபி !

இசைமிகு  வேதியர்
இராமச் சந்திர முகர்ஜிக்கும்;
சீலம் மிகு
சியாமா சுந்தரி தேவிக்கும் ;

வையம் உய்ய
வையத்தார் வெய்ய வினை கொய்ய
வந்து பிறந்த
வண்ணப் பூவிழிகள் திறந்த.

சீமந்த புத்திரி ஸ்ரீ சாரதா தேவி;
நல்ல இல்லாளாய்;
உலக இன்பங்களில் பற்றுதல் இல்லாளாய்;
பிறங்கினாள் இராம கிருஷ்ணரை மேவி!

ஆக்கைக்கும்;
ஆன்மாவிற்கும்:
வராசக்தியை
வரவழைத்துத் தரும்
பரா சக்தியை
பார்த்தார்.....

குரு தேவர் -தான்
கொண்டவளிடம்;
ஓம்பும்
ஒழுக்கத்தால் -தன்
உயிரை உணர்வை
உண்டவளிடம்!

உள்ளமே! ஒன்று
உரைப்பேன் கேள்!
அவ்வன்னைதான்-உன்
ஆன்மாவிற்கு
அணுக்கமான கேள்!


அம்புலி வாழ்
அனைவர்க்கும்
அவள்தான்

அவரவர்....
அனை  அனைய
ஆணை;
ஓவாது-அவனை
ஒவ்வொரு நொடியும்
நினை;

நினைக்க
நினைக்க
நீங்கும்
நெடு நாளைய வினை!

அவள் கருங்கண் -நீல
ஆகாயம் போன்ற இருங்கண்;
வேண்டுவார்க்கு
வேண்டியதைத் தருங்கண்;
தண்ணளி என்னும்
தன் புனல் வெள்ளம்
சதா சுரக்கும் அருங்கண்;

கை  தொழுவார்
கவலைகளைக்
 களை கண்;அவளது
கண்ணலால் நமக்கேது
காளை கண்?

பாவம் எனும்
பெரு விருட்சத்தின் ....
வேரதை
விழுத்த வல்லது -அன்னை
சாரதை
சேவடிக் கமலம்;

அதை
ஆசித்து நிற்பாரின்
அகமும் புறமும்
அழுக்கற்று ஆகும் அமலம்!




Image result

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள