போகிற போக்கைப் பார்த்தால்,மெல்லத் தமிழ்,இனிச் சாகும் என்பதை மீண்டும் ஒரு முறை,நினைவுபடுத்த வேண்டியுள்ளதே என்பதையே இந்த முடிவுகள் வெளிக் காட்டுகிறது.
தமிழ் பதிப்புகளை, இணையத்தில் வெளியிடும்,நிறுவனங்களின் தரவுகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில்,தமிழ் வாசகர்களின் வாசிப்புத் தன்மை குறைவடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடத்தில் மட்டும்,தினசரிப் பதிப்புகளின் வாசகர்கள் 7.62 லட்சம்
பேர் சென்ற ஆண்டைவிட தினசரிப் பதிப்புக்களின் பக்கம் காலடி எடுத்து வைக்காமல்,இப் பதிப்புகளின் வாசகர்களின் வரவு குறைவடைந்து உள்ளதாக,புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் முதல் இடத்திலிருக்கும் பத்திரிகையில்,தினத்தந்தி முதலிடத்தில் இருந்தாலும் முந்திய காலங்களில்,முதல் மூன்று தவணைகளில் இருந்த இணைய வாசகர்களை,இழந்துள்ளது
இணைய வாசகர்களின் வாரப் பத்திரிகைகளான, குமுதம்,ஆனந்த விகடன்,
குங்குமம்,போன்றவைகளின் இணைய வாசகர்களின் வாசிப்புப் போக்கும்,
குறைவடைந்து செல்வதாக,இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எல்லாவற்றையும் இலவசமாக்க நினைக்கும் தமிழக அரசு, இதற்கு ஒரு இலவச திட்டம் கொண்டு வந்து,ஆமா லப்டப் மூலம் தமிழ் வாசிப்புப் பழக்கத்தை கொண்டுவந்து இன்னும் ஓர் நான்கு வருடம் ஆட்சியைத் தக்க வைக்கலாம்
முழுமையாக வாசிக்க இங்கே செல்லுங்கள்.
இதற்க்கு காரணம் இவைகளின் மேல் இந்த ஏடுகளின் மேல் உள்ள நம்பிக்கைதன்மை குறைந்து போனாதவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குஇவர்கள் அனைவரும் ஒரு குழு சார்ந்த செய்திகளயே தருவதால் உண்மையான நிலையை அறிய முற்படும் வாசகர்கள் இவைகளை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறியே அன்றி கவலைப்பட ஒன்றுமில்லை.இவைகள் அனைத்தும் "வெறும் குப்பைகள் " என்ற உண்மை தெரிய வந்துள்ளது பாராட்டதக்கது அல்லவா?
இந்தப் பத்திரிகைகளை இங்கு தலையில தூக்கிவைத்துக் கொண்டாடிகிறோம்,நபர் கக்கு-மாணிக்கம் இப்படிச் சொல்லுகிறார். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பதிலளிநீக்குhttp;//akarathiyaar.blogspot.com/