புதன், 12 ஜனவரி, 2011

தமிழில் வலைப்பதிவைத் தொடங்க...


தமிழில்  வலைப்பதிவைத் தொடங்க முதலில் ஒரு கணக்கை கூகுளுடன் ஆரம்பிக்கவேண்டும்.அதற்கு உங்கள் முழுப்பெயர்,பிறந்த திகதி ஒரு கடவுச் சொல்,அதில் ஆங்கில எழுத்துக்கள்,இலக்கங்கள் கலந்திருந்தால் முதல் தரத்திலேயே ஒகே ஆகிவிடும்,
பயனர் பெயர் ஒன்றையும் தயார் படுத்தி வைத்துக்  கொண்டு,உங்கள் கடவுச் சொல் மறந்தால்,அதைத் திரும்ப பெற்றுக்கொள்ள,நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு நல்ல கேள்வியும் பதிலும்,இவ்வளவையும் தயார் படுத்திக் கொண்டு கூகுலாரைச் சந்தித்தால்,உங்கள் தமிழ் வலைப் பதிவுக்கு சாவியைக் கட்டாயம் அவர் வழங்குவார்.

இதில் திறந்தவுடன் வலைப்பதிவின் பெயர்,என்பதை நீங்கள் நிரப்பவேண்டும்.
உதாரணத்திற்கு,எனது வலைப்பதிவைப் பாருங்கள் அதில் "பத்தும் பலதும்" என்றிருக்கும்.அதைப்போல் ஒரு தலைப்பை அதில் இடுங்கள்.இதற்குமுதல் யாரும்,
பயன் படுத்தாத வார்த்தைகள் என்றால்,முதல் தரத்திலே ஒகே யாகிவிடும்,
இல்லையேல்,வேறுவேறு வார்த்தைகளை தொடர்ந்து கொடுங்கள்,ஏதாவது ஒன்று 
ஒகேயாகிவிடும்.இதை தமிழில் கொடுத்தால் தொடர்ந்து தமிழிலே எல்லா இடங்களிலும் காணக்கூடியதாக இருக்கும்,அதையே ஆங்கிலத்தில் எழுதி இரண்டாவது இடத்தையும் 
நிரப்பினால் உங்கள் தமிழ் வலைப் பதிவுக்கு URL  (Uniform (or universal) resource locator, the address of a Web page ) தயார்.இதுதான் உங்கள் பிளாக்கரின் 
தலை எழுத்து.இதைவைத்துத்தான் நீங்கள் எதிர் காலத்தில் சாதிக்கப் போகிறீர்கள்.
நல்லநேரம் பார்த்து,நல்லசுப வேளையில் ஆரம்பியுங்கள் .ஆரம்பிக்க இங்கே செல்லுங்கள்.   முடிவில் நான் மனிதன் தான்என்பதையும் நிருபியுங்கள்.தொடருங்கள்.
உங்கள் புகைப் படமும் உங்கள்  வலைப்பதிவில், ஜி.மெயில் போன்றவற்றில் தோன்ற
வேண்டுமென்றால்.முதலில் உங்கள் படத்தை உங்கள் கணனியில் சேமித்து விட்டு ஜி மெயிலில் அப் லோட் பண்ணிச் சேர்க்கலாம். 


அதற்கு முதல் உங்கள் வலைப்பூவை அலங்கரிக்கத்தேவையான முறைகளை நீல எழுத்துக்களால் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும்.இடுகையிடத் தொடங்கலாம்.
அல்லது, உங்கள் வலைப்பதிவு எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும்,என்பதை வடிவமைக்கலாம்.நீங்கள்  வலைப்பதிவை  வடிவமைப்பதை தேர்ந்தெடுத்து,உங்கள் 
கை வண்ணங்களைக்    காட்டலாம்.திகதி என்ன கலரில்,வரவேண்டும் தலையங்கம்,
எப்படி இருக்கவேண்டும்.தலையங்கத்தின் கீழ் ஏதாவது அடிக்குறிப்புகள் எழுத விரும்பினால் (அதுதாங்க பஞ்ச் டயலாக்கு).நீங்கள் எழுதும் எழுத்துக்கள்,எப்படி வரவேண்டும்.என்று சகலதும்,அதில் அடக்கம்.புகுந்து விளையாடுங்க,நீங்க எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யலாம்.ஆடி முடித்து ஆயாசமாக வலைப்பதிவைப் பார் என்பதைக் கிளிக் பண்ணினால் உங்கள் வலைப்பதிவு
 தயாராக இருக்கும்.


இப்பொழுது உங்களுக்கான வலைப்பூவின் அழகான முகப்புப் பக்கங்கள் பல தெரியும்,
அதில் உங்களுக்கு விருப்பமானதைத் தெரிவு செய்யுங்கள்.பின்னர் கீழ காணப்படும் அம்புக்குறியைத் தொடர்வதற்கு அழுத்துங்கள்.உங்கள் வலைப்பூவிரிந்து இடுகையிடத் தயாராக இருக்கும். 

இடுகையிடல் என்பதற்குச் செல்ல  சுலபமான வழி.உங்கள் வலைப்பதிவு  பக்கம் திரையில் தோன்றும்போது.மேலே பாருங்கள் பகிர்,முறைகேடுஎனப்புகாரளி,அடுத்தவலைப்பதிவு,உங்கள் ஜிமெயில்,புதிய இடுகை,வடிவமைப்பு வெளியேறு.தமிழில் . அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் அதில் 
எதைத் தெரிவு செய்கிறீர்களோ,அங்கே உங்களை அழைத்துச் செல்லும்.பொதுக் கணனி என்றால் உங்கள் கணக்கின் மூலம் உள்ளே நுழைய வேண்டும்.உங்கள் சொந்தக் கணனி 
என்றால் நேரடியாக  நீங்கள் உள்ளே செல்லலாம்.

எல்லாம் சரி முதலில் தமிழில் எழுத,உங்கள் கணனியில் வசதிகள் இருக்கிறதா என்று 
பாருங்கள்.இல்லாவிட்டால் முதலில் தமிழை கூகுள் இன்டிக் றான்சிலிறேற்றரை   இறக்கிக் கொள்ளுங்கள், இதன் மூலம் ஆங்கிலத்தை தமிழ் ஆக்கிக் கொள்ளலாம்  அதற்கு இங்கே செல்லுங்கள் இந்தப் பக்கம் வந்த்தவுடன் இதை புக் மார்க்
செய்து கொள்ளுங்கள்.இல்லாவிட்டால்,இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும்,தமிழை 
அடிக்கடி தேடவேண்டிவரும்.இதன் மூலம் பல வேலைகளை இலகுவாகச்  செய்யலாம்,
பிளாக்கருக்கு, கருத்துரையிட,கடிதம் எழுத என்று ஏகப்பட்ட தமிழ் எழுத்து வேலைகள் 
பண்ணலாம்.ஆங்கிலத்தில் ammaa  என்று எழுதி ஸ்பேஸ் பட்டனை அழுத்தினால் "அம்மா"
என்று அழகாக தமிழ் சிரிக்கும்.இதில் எதையும் சேவ் செய்து பதிந்து வைக்க முடியாது.
உடனே கொப்பி பண்ணி,தேவைக்கேற்ப பேஸ்ட் பண்ணலாம்.
  
முதலில் கூறியவாறு,நீங்கள் இனி சில அடிப்படை அமைப்பு வேலைகளைச் செய்யவேண்டும். அமைப்புக்கள் என்பதைக் கிளிக் பண்ணி வலைப்பதிவின் அமைப்புக்களைச் சீர் படுத்தி,அதாவது உங்கள் ஊர்,பெயர்,வலைப்பதிவின் நோக்கம்,
கருத்துரை வழங்கலை வளம்படுத்தல்,இப்படி உங்களுக்குத் தெரிந்தது தெரியாதது
எல்லாவற்றையும் நிரப்பி இடுகையிடலுக்குச் செல்லுங்கள்,அ என்று இருப்பதைக் கிளிக் பண்ணித் தமிழை செலக்பன்னிவிட்டு,ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஷ்பாரைத்  தட்டினால்
தமிழ் அருவியாகக் கொட்டும்.இது ஒவ்வொரு வார்த்தையையும் தமிழ் படுத்தத் தேவையான நடை முறையாகும்.

நீங்கள் படங்களைச் சேர்க்க வேண்டுமானால் இடுகைகக் கருவிப்பட்டையில் இருக்கும்
படத்தைச் சொடுக்கினால்,படத்தைச் சேமித்து வைத்துள்ள இடத்தை கேட்கும்.நீங்கள்
படத்தைச் சேமித்து வைத்துள்ள பைலைத்திறந்து,படத்தை தெரிவு செய்து கொடுத்தால்
படம் உங்கள் வலைப்பூவில் வந்து அமரும்.வீடியோவிற்கும் இதே முறையைக் கையாளவும்.

சகலதும் நிறைவேற்றப் பட்டவுடன் இடுகைக் கருவிப் படையின் கீழ் காணப்படும் ,
முன்னோட்டத்தை அமத்தினால் உங்கள் இடுகை சரியாக இருக்கிறதா என்பதை நீங்கள் மட்டும் பார்க்கலாம்.சரியாக இருந்தால் முன்னோட்டத்தை குளோஸ் பண்ணிவிட்டு
இடுகையை வெளியிடலாம்.அல்லது திருத்தத்தை மேற் கொண்டு முன்னோட்டம் பார்த்து சரியாக இருக்கும் என்றால் இடுகையை வெளியிடு என்பதை அழுத்தி உங்கள்
ஆக்கத்தை இந்த உலகத்தின் கண்களுக்கு விருந்து வைக்கலாம்.

வடிவமைப்புக்கள் என்பதில் உங்கள் வலைப்பதிவை அலங்கரிப்பதைத்தான் குறிக்கும்,
இதில் கவுண்டர்கள்,கருவிப் பட்டைகள்,ஓட்டுப் பட்டைகள்,உங்களுக்குப் பிடித்த
வலைப் பதிவுகள் போன்றவற்றைச் சேர்க்கலாம். இது உங்கள் விருப்பம்.அளவுக்கு அதிகமானால் அசிங்கமாகவும் போகாக் கூடும்.

வலைப் பூவைத் தெரிவு செய்யும்போது,மொழி தமிழ் என்பதையும் தெரிவு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் எல்லாம் ஆங்கிலமயமாகவே காணப்படும்.இதை அமைப்புகளில் சென்றும் மாற்றிக் கொள்ளலாம்.

இது சம்பந்தமாக இன்னும் எவ்வளவோ  எழுதலாம்,எழுதிக்கொண்டே இருக்கல்லாம் .
நீங்களும் முயற்சி செய்யுங்கள்,முயற்சி திருவினையாக்கும், எனக்கும் கணனிக்கும்
எந்த சம்பந்தமும் கிடையாது,நான் படித்தது வர்த்தகத்துறை,நாங்கள் படிக்கும் போது
கணனியை, கோவிலிலுள்ள சுவாமியைத் தரிசிப்பது போலத்தான்,எட்டி நின்று தரிசித்து
விட்டு வந்தோம்,இப்போது அப்படியல்ல எல்லார் வீட்டிலும் கணனி விளையாட்டுப் பொருளுக்கு நிகர்றாயிற்று.

இது சம்பந்த்தமான கேள்விகளைப் பின்னூட்டத்தில் கேளுங்கள் நிற்சயமாக விளக்கமாக
பதிலளிப்பேன் அல்லது பதிவாக இடுவேன்.இன்னும் வலைப்பூக்களை அலங்கரிப்பது.
வலைப்பூவால் வருமானத்தை எப்படிப் பெறுவது, என்பதையும் தமிழில் கொடுக்க நினைத்துள்ளேன்.அதுதான் AdSenseஅட்சென்ஸ்.கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு
விளம்பர தாரராக நமது வலைப் பூக்களை ஈடுபடுத்துவது.இன்னும் பல தமிழில் இருக்கிறது. ஆனால் நேரம்தான் இருபத்து நான்கு மணித்தியாலமாக இருக்கிறது.

"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் கேட்க(பரவ ) வழிசமைப்போம்" .

3 கருத்துகள்:

  1. புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. பதிவு ஆரம்பிக்கும் எண்ணத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றமாதிரியான தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அப்படியே இந்த ஓட்டுப்போடுவது எப்படி அதன் அரசியல் என்ன என்பதுபற்றியும் தெரிந்தால் சொல்லுங்கள் என்னைப்போன்ற பலருக்கும் கூட அது பயனுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல விஷயம் இன்னும் படங்களோட எழுதுங்க :)

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள